‘பைக் ஸ்பெஷல்' என் போன்ற பைக் பிரியர்களுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது. ஜிக்ஸரில் எல்லாமே ஓகே! ஸ்லிப்பர் க்ளட்ச்சும் லிக்விட் கூலிங்கும் மிஸ் ஆகிறதே!
- க்ரிஷ் அருண், திருவான்மியூர்.

கடிதங்கள்

ஹீரோவின் முதல் Fi ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ எட்ஜ் ரிப்போர்ட்டை... Fi ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்களுக்குச் சரியான விதத்தில் விளக்கி இருந்தீர்கள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ந்த முறை அதிசயமாக கமர்ஷியல் வாகன ரிப்போர்ட்டும் கொடுத்து அசத்தி விட்டீர்களே! குட்டி யானை மாதிரி குட்டிக் குதிரையும் (டாடா இன்ட்ரா) பிரபலமானால், எல்லாப் பெருமையும் மோட்டார் விகடனுக்கே!
- துரைச்சாமி, திருச்செந்தூர்.

‘யார் யாரிடம் என்னென்ன டீசல் கார்கள் இருக்கு’ என்கிற லிஸ்ட் அற்புதம். ஆரம்பத்தில் ஹோண்டாவிடம் டீசலே இல்லாமல் இருந்தது. இப்போ சிட்டி, சிவிக், CR-V, ஜாஸ் என்று எத்தனை மாடல்கள்?
- மாரி விஜய், மேல்மருவத்தூர்.

கன்களின் பைக்குகளுக்கு அப்பாக்கள்தான் மெக்கானிக்குகளா? ஆச்சரியமா இருக்கு! மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியாவிலும் இந்த நிலைமை வர வேண்டும்.
- அஸ்வின், கோவை.

நெக்ஸானின் லாங் டெர்ம் ரிவ்யூ, கார் வாங்கு பவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைத் தெளிவாகச் சொல்லியது. உங்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்னை தான் வாசகர்களுக்கும் ஏற்படுகிறது என்றால், ஆச்சரியம்தான்!
-  வெஸ்லிதாஸ், வேளாங்கண்ணி.

பைக் ஸ்பெஷல்தான். அதேநேரம் சத்தமில்லாமல் எலெக்ட்ரிக்  கார் ஸ்பெஷலாகவும் இந்த இதழ் மாறியிருக்கிறதே! கவனித்தீர்களா?
-  சக்திமோகன், வேலூர்.

மூணார் போகும் வழியில் தூவானம் என்றொரு அருவி இருப்பதை உங்களால்தான் தெரிந்து கொண்டேன். மிகவும் த்ரில்லிங்காக இருந்தது பயணம். தூவானத்துக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டுட வேண்டியதுதான்.
- சுந்தர், கம்பம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு