பிரீமியம் ஸ்டோரி

ச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மூன்று ஆண்டுகளில், BS-4 லிருந்து BS-6 க்கு மாற வேண்டிய கட்டாயத்தில் ஆட்டோமொபைல்  நிறுவனங்கள் உள்ளன. ஐரோப்பிய மாசு விதிகளை அடிப்படையாகக் கொண்டே, இந்நாள் வரை பாரத் ஸ்டேஜ் மாசு விதிகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, யூரோ- 6 மற்றும் BS-6 மாசு விதிகளிடையே பெரிய வித்தியாசமில்லை என்றே சொல்லலாம்.

டிக்‌ஷ்னரி

BS-4 மற்றும் BS-6 எரிபொருளுக்கு இடையே என்ன வித்தியாசம்?

BS-4 எரிபொருளுடன் ஒப்பிடும்போது, BS-6 எரிபொருளில் Sulphur அளவு குறைக்கப்பட்டுள்ளது (50ppm-ல் இருந்து 10ppm). BS-6 எரிபொருளை பெட்ரோல் கார்களில் பயன்படுத்தும்போது, NOx அளவு 25% குறைந்திருக்கிறது. இதுவே டீசல் கார்கள் என்றால், NOx அளவு தடாலடியாக 70% குறைந்துள்ளது. மேலும், புற்றுநோய் வருவதற்குக் காரணமான Particulate Matter (PM 2.5 & PM 10), BS-6 எரிபொருளைப் பயன்படுத்தும்போது, முன்பைவிட டீசல் கார்கள் 80% குறைவான PM-யை வெளியிடும்.

நிறுவனங்கள் மற்றும் மக்கள், இதை எப்படி அணுகுவார்கள்?

ஏப்ரல் 1, 2017 அன்று இந்தியா முழுக்க BS-4 விதிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, விற்பனையாகாமல் தேங்கி இருந்த BS-3 வாகனங்களின் எண்ணிக்கை 8.24 லட்சம்! BS-3 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலகட்டத்தை நீட்டிக் காமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கடைசி இரண்டு நாளில் ஷோரூம்களில் ஒரே அடிதடிதான்! இதில் 6 லட்சம் டூ-வீலர்கள், 96,000 கமர்ஷியல் வாகனங்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் அடக்கம். எனவே, இந்தமுறை அப்படி நடக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில் டூ-வீலர் செக்மென்ட்டில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் i-ஸ்மார்ட் மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஆகிய வாகனங்கள், BS-6 சான்றிதழ் பெற்றுவிட்டன. கார்களில் மாருதி சுஸூகியின் பெலினோ மற்றும் ஆல்ட்டோ தவிர, மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ் LWB மற்றும் பிஎம்டபிள்யூ X1 ஆகிய கார்களும் BS-6 விதிகளுக்கு உட்பட்ட மாற்றங்களுடன் வந்துவிட்டன. புத்தம் புதிய கார்களை BS-6 விதிகளுக்கு அப்டேட் செய்வது பெரிய காரியமாக இருக்காது. ஆனால், நீண்டநாள்களாக வெற்றிகரமாக விற்பனையாகும் கார்களுக்குத்தான் சிக்கல். அதிகப்படியான முதலீடும் நேரமும் இதற்குத் தேவைப்படும்.

டிக்‌ஷ்னரி

BS-4 காரில் BS-6 எரிபொருள் பயன்படுத்தினால் என்னவாகும்?

முன்னே சொன்ன விஷயம், பெட்ரோல் கார்களுக்கு பெரிய இடர்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், டீசல் கார்களுக்கு இது Slow Poisonதான். அதாவது BS-4 டீசலில் இருக்கும் Sulphur, ஃப்யூல் இன்ஜெக்‌டர்களின் சீரான இயக்கத்துக்குத் துணை நிற்கிறது. எனவே, BS-6 எரிபொருளை BS-4 டீசல் இன்ஜினில் பயன்படுத்தும்போது, அது ஆரம்பத்தில் இன்ஜினை ஸ்மூத்தான இயக்கத்துக்கும் - குறைவான மாசு வெளிப்பாடுக்கும் வழிவகுக்கும். ஆனால், இது நீண்டகாலத்துக்குத் தொடர்ச்சியாக நிகழும்போது, ஃப்யூல் இன்ஜெக்டர்கள் மற்றும் இன்ஜின் பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிவர இயங்காமல் பிறகு செயலிழக்கத் தொடங்கிவிடும்! இதன் வெளிப்பாடாக இன்ஜின் பர்ஃபாமன்ஸ் குறைந்து, மாசு வெளிப்பாடு அதிகரிக்கும். ஆனால், இவை எதுவுமே உடனடியாகத் தெரியாது என்றாலும், இது முந்தைய BS-3 to BS-4 Transition போதும் ஆங்காங்கே அரங்கேறியிருக்கிறது.

டிக்‌ஷ்னரி

BS-4 காருக்குப் பதில், BS-6 காரை வாங்குவதால்...?

• BS-6 கார்கள் வெளியிடும் மாசு அளவுகளில், சுற்றுச்சூழலுக்கு உகந்தபடியான முன்னேற்றம் இருக்கும். மேலும், அதற்கேற்ற தொழில்நுட்பங்கள் (DPF, SCR, DOC, 3 Stage Catalytic Converter, ASC, OBD) காரில் இடம்பெற்றிருப்பதால், ஓட்டுதல் அனுபவமும் சிறப்பாக இருக்கலாம்.

• BS-6 எரிபொருளில் Sulphur அளவு குறைவதால், இன்ஜின் ஆயிலின் ஆயுள் கூடும். இதனால் பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜிலும் சிறிய வித்தியாசம் தெரியலாம். மேலும் காரின் NVH (Noise, Vibration, Harshness) அளவுகள் குறைந்து, ஸ்மூத்தான பயணம் கிடைக்கும்.

• 2022-ம் ஆண்டில் CAFE விதிகள் (Corporate Average Fuel Economy) அமலுக்கு வருகின்றன. அதன்படி கார்கள் தற்போதைய சூழ்நிலையைவிட 30% அதிக மைலேஜைத் தரவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகும். மேலும், கார்கள் வெளியிடும் CO2 மாசு அளவு, 130g/km-லிருந்து 113g/km ஆக இருத்தல் அவசியம்.

 

• BS-6 காரின் கட்டுமானம், முன்பைவிட சிறப்பாக இருக்கும் (உபயம்: க்ராஷ் டெஸ்ட்). மேலும் காற்றுப்பைகள், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் Pretensioner & Warning, ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் காரில் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். எனவே, எல்லோரும் BS-6-க்கு ரெடியாகுங்க!

 - ராகுல் சிவகுரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு