Published:Updated:

“கொல்லிமலையில்கூட லாரி ஓட்ட பயிற்சி கொடுக்கிறோம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கொல்லிமலையில்கூட லாரி ஓட்ட பயிற்சி கொடுக்கிறோம்!”
“கொல்லிமலையில்கூட லாரி ஓட்ட பயிற்சி கொடுக்கிறோம்!”

விசிட்: டிரைவர் ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்

பிரீமியம் ஸ்டோரி

ரூர்-நாமக்கல் சாலையில், அசோக் லேலாண்டு டிரைவர் ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட் (DTI) என ஒரு பேருந்து நிறுத்தமே உள்ளது. அசோக் லேலண்டின் இந்த ஓட்டுநர் பயிற்சி மையத்துக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்? வாகனம் ஓட்டுதல் பயிற்சியளிக்க ஏன் அரசு 25 ஏக்கர் இடம் கொடுக்க வேண்டும்? அப்படி உள்ளே என்னதான் இருக்கிறது? ஒரு விசிட் அடித்தேன்.

“கொல்லிமலையில்கூட லாரி ஓட்ட பயிற்சி கொடுக்கிறோம்!”

அசோக் லேலாண்டு நிறுவனத்தினரால், 1995-ம் ஆண்டு முதன் முதலில் இந்தப் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 9 பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்கு குறைந்தபட்சம் ஒரு நாளிலிருந்து அதிகபட்சம் 45 நாள் வரை வெவ்வேறுவிதமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், இந்திய ராணுவம், ஏர்ஃபோர்ஸ், RTO, பாரத் பெட்ரோலியம், HP பெட்ரோல் லிமிடெட் போன்ற  மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இங்குதான் பயிற்சியளிக்கப்படுகிறது.
 அசோக் லேலாண்டு நிறுவனத்தில் Graduate Engineering Trainee (GET)-யாகச் சேர்பவர்களுக்குக்கூட கனரக வாகனங்களைப் பற்றிய அடிப்படைப் பயிற்சி இங்குதான் தொடங்குகிறது.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இங்கே 4 டன் கேப்டன் ட்ரக்கிலிருந்து சிறிய தோஸ்த் வாகனம், ஜீப் வரை எல்லாவிதமான வாகனங் களிலும் மாணவர்கள் பயிற்சி பெறுவதைப் பார்க்க முடிந்தது. 25 ஏக்கர் இடத்தில் 35 விதமான சாலைகள் உள்ளன. ரயில்வே ட்ராக், மலையேற்றம் மற்றும் இறக்கம், சுரங்கம், மணல் பாதை, கருங்கல் பாதை, கல் குவாரி, ஒரு லேன் முதல் 8 லேன் வரை விதவிதமான சாலைகள், முட்டுச்சந்து, ட்ராஃபிக், 4 வழிச்சாலை இரண்டு வழிச்சாலையாக மாறும் சந்திப்பு, 8 போல இருக்கும் சாலை, பிளைண்ட் ஸ்பாட், ரிவர்ஸ் எடுப்பது என, ஒரு கனரக வாகன ஓட்டுநர் தினமும் என்னென்ன சவால்களைச் சந்திப்பாரோ, அதற்கேற்ப எல்லாவிதமான சாலைகளிலும் பயிற்சிகள் தரப்படுகின்றன.

“கொல்லிமலையில்கூட லாரி ஓட்ட பயிற்சி கொடுக்கிறோம்!”

``ஓர் ஓட்டுநருக்கு, எந்த வாகனத்தை ஓட்டுகிறோம்... சூழ்நிலைக்கேற்ப அது எப்படி ரியாக்ட் செய்யும் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். அதனால், வெறும் பிராக்டிக்கல் பாடம் மட்டுமல்லாமல் தியரி, சிமுலேட்டர், மெக்கானிக்கல் பயிற்சியை முதலில் கொடுக்கிறோம். பயிற்சிக்குப் பிறகு கொல்லிமலைக்கு அழைத்துச் சென்று மலையில் வாகனத்தை ஓட்டச் சொல்வோம். இந்த அனைத்துவிதமான பயிற்சிகளிலும், அவர் ஒருமுறைகூட சாலை விதிகளை மீறாமல் இருந்தால் அவர் தேர்ச்சி பெறுவார். அதன் பிறகே அவருக்குச் சான்றிதழ் தரப்படும்! ஓட்டுநர் உரிமமும் பெற அவருக்குப் பரிந்துரை வழங்கப்படும்’’ என்கிறார் சுரேஷ்.

இது தவிர, மத்திய மற்றும் மாநில அரசுகளின் `ஸ்கில் டெவலப்மென்ட் ட்ரெய்னிங்’ மூலம் டிரைவிங் கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு, இலவசமாக வாகனப் பயிற்சியளித்து பேட்ஜ் போட்டு கமர்ஷியல் ஓட்டுநர் உரிமமும் வாங்க வழி செய்து கொடுக்கிறார்கள். பயிற்சி நடைபெறும் காலம்வரை நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

உணவு இலவசம். ஆனால், தங்கும் விடுதி கிடையாது.  இங்கு பெண்களுக்கும் திருநங்கை களுக்கும்கூட கமர்ஷியல் வாகனத்துக்கான ஓட்டுநர் பயிற்சியும் உரிமமும் வழங்கப் படுகின்றன. சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வருபவர்களுக்கும் சிறைக் கைதிகளுக்கும்கூட பயிற்றுவிக்கும் முயற்சிகளை தற்போது எடுத்துவருகிறார்கள்.

ஓட்டுநர் பயிற்சி வழங்குவது என்பது சவாலான விஷயமாக இருந்தாலும், அதை சர்வசாதாரணமாகச் செய்கிறது நாமக்கல் ஓட்டுநர் பயிற்சி மையம்.

-  ரஞ்சித் ரூஸோ படங்கள்:  க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு