டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

கண்களைக் கவர்ந்த கான்செப்ட் கார்கள்!

கண்களைக் கவர்ந்த கான்செப்ட் கார்கள்!

கண்களைக் கவர்ந்த கான்செப்ட் கார்கள்!

சஃபாரி ஸ்டார்ம் காரைத் தவிர, டாடா காட்சிக்கு வைத்த அத்தனை கார்களுமே கான்செப்ட்தான். டாடா அரங்கத்துக்குள் வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது டாடா பிக்ஸல் கான்செப்ட் கார். சிஸர் கதவுகள், பெரிய வீல்களை எடுத்துவிட்டு பார்த்தால்... இதுதான் அடுத்த தலைமுறை நானோ என்பது புரிந்துவிடும்! டாடாவின் இந்த கான்செப்ட் காருக்குள் 74 bhp சக்தி கொண்ட 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய நானோவிலேயே இன்னும் டீசல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், அடுத்த தலைமுறை காரான இது, எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் எதுவும் இல்லை. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு முன்பு, இந்த கார் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் விற்பனைக்கு வரும் என்கிறார்கள் சர்வதேச ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்கள்.

கண்களைக் கவர்ந்த கான்செப்ட் கார்கள்!

இண்டிகா விஸ்டா கான்செப்ட் காரையும் காட்சிக்கு வைத்திருந்தது டாடா. பெரிய கிரில், காற்று இன்ஜின் பகுதிக்குச் செல்ல வசதியாக பெரிய ஏர் டேம், பக்கெட் சீட்ஸ் என ஹை-டெக் விஷயங்களுடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது புதிய இண்டிகா விஸ்டா. 138 bhp சக்தி கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரை வைத்து, ரேஸ் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறது டாடா.

கான்செப்ட் கார்கள் வரிசையில்... மான்ஸா ஹை-பிரிட் கான்செப்ட் காரையும் காட்சிக்கு வைத்திருந்த டாடா நிறுவனம், இதில் புதிய 3 சிலிண்டர் டைகார் டீசல் இன்ஜினையும், எலெக்ட்ரிக் மோட்டாரையும் பொருத்தியிருக்கிறது. லித்தியம் ஐயான் பேட்டரிகளோடு காரின் மேற்கூரையில் சோலார் பேனல்களைப் பொருத்தியிருக்கிறது. இதன் மூலம், காரின் பேட்டரிகளை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஸெனான் ஹெட் லைட், நீளமான கிரில் என ஸ்டைலிலும் குறையில்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது மான்ஸா கான்செப்ட். இந்த கார் விற்பனைக்கு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும்!