Published:Updated:

டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!
டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!

தற்போது விற்பனையில் இருக்கும் 5 சீட்டரான டிகுவான், விலை ரீதியில் எண்டேவர் - MU-X - ஃபார்ச்சூனர் - பஜேரோ ஸ்போர்ட் - ஆல்ட்டுராஸ் - கோடியாக் போன்ற 7 சீட்டர்களுடன் போட்டியிடுவது தெரிந்ததே.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

போட்டிமிகுந்த இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், எஸ்யூவிகளைக் களமிறக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன் நிறுவனம். சர்வதேச சந்தையில் தான் வைத்திருக்கும் 10 மாடல்கள், அங்கே பெற்றிருக்கும் அதிரடியான வெற்றியே இதற்கான காரணங்களுள் ஒன்று; எனவே அதே திட்டத்தை இந்தியாவிலும் முயற்சி செய்துபார்க்க உள்ளது இந்த நிறுவனம். அதே நேரத்தில் காம்பேக்ட், க்ராஸ் ஓவர், ஆஃப் ரோடர், மிட்சைஸ் என நம் நாட்டில் எஸ்யூவிகள் மீதான வரவேற்பு அதிகமாக இருப்பதும் தெரிகிறது. இங்கே ஃபோக்ஸ்வாகன் ஏற்கெனவே டிகுவானை விற்பனை செய்கிறது; இது சிறப்பான மாடல்தான் என்றாலும், அதே விலையில் கிடைக்கக்கூடிய லேடர் ஃப்ரேம் எஸ்யூவிகள்தான் அந்தப் பிரிவில் டாப் செல்லர்களாக உள்ளன.

டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!

இதைத் தொடர்ந்து டி-ரொக் (T-Roc), டிகுவான் AllSpace (லாங் வீல்பேஸ் மாடல்), டொரெக் (Touareg), டி-க்ராஸ் (T-Cross) ஆகியவற்றை 2020-2021 வாக்கில் நம் நாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இதில் போலோவை அடிப்படையாகக் கொண்டு 'Make In India' வழியில் உள்நாட்டு உதிரிபாகங்களுடன் சக்கனில் தயாரிக்கப்படும் டி-க்ராஸ் தவிர, மற்ற 3 மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டே நம் ஊர்ச் சாலைகளில் டயர் பதிக்க உள்ளன. இங்கிருக்கும் கார் உற்பத்தியாளர்கள், வருடத்துக்கு 2,500 கார்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி இருப்பது தெரிந்ததே. இதனால் உயர்தரமான கேபின், மிகச் சிறப்பான ஓட்டுதல், பிரிமியம் டிசைன், அதிகப்படியான வசதிகள் ஆகியவை அதன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்பது பெரிய ப்ளஸ்.

ஃபோக்ஸ்வாகன் டி-ரொக் (T-Roc)

டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!

எப்படி போலோவிலிருந்து டி-க்ராஸ் வரப்போகிறதோ, அதே பாணியில் கோல்ஃப் காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கார்தான் டி-ரொக் (4,234மிமீ). எனவே இது எதிர்பார்த்தபடியே டிகுவானைவிட குறைவான நீளத்தைக் (252மிமீ) கொண்டிருக்கிறது. இதனுடன் அதிக அகலம் மற்றும் குறைவான உயரம் சேரும்போது, ஸ்போர்ட்டியான லுக் கிடைக்கிறது. தவிர காரின் டிசைனும், மற்ற ஃபோக்ஸ்வாகன் கார்களைவிட ஃப்ரெஷ்ஷாக அமைந்திருக்கிறது எனலாம். பெரிய வீல் ஆர்ச் - கிரில் - அலாய் வீல்கள் - ரூஃப் ரெயில் ஆகியவை, டி-ரொக்கின் க்ராஸ்ஓவர் தோற்றத்துக்கு வலுசேர்க்கின்றன. கேபினில் உள்ள டேஷ்போர்டு செங்குத்தாக பொசிஷன் செய்யப்பட்டிருப்பது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் இதுதான் காரின் சைஸுடன் ஒப்பிடும்போது அதிக இடவசதிக்குத் துணைநிற்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் ஸ்டைலான டேஷ்போர்டு ஆகியவை, இது டிரைவர்களின் கார் என்பதைப் பிரதிபலிக்கிறது. இதில் முதற்கட்டமாக 150bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் (TSI) டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். 20-25 லட்சத்தில் வரப்போகு டி-ரொக், ஹேட்ச்பேக் - எஸ்யூவிகளுக்கு இடையேயான இடைவெளியைக் கச்சிதமாக நிரப்ப உள்ளது.

ஃபோக்ஸ்வாகன் டிகுவான் AllSpace

டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!

தற்போது விற்பனையில் இருக்கும் 5 சீட்டரான டிகுவான், விலை ரீதியில் எண்டேவர் - MU-X - ஃபார்ச்சூனர் - பஜேரோ ஸ்போர்ட் - ஆல்ட்டுராஸ் - கோடியாக் போன்ற 7 சீட்டர்களுடன் போட்டியிடுவது தெரிந்ததே. எனவே இதற்கான தீர்வாகக் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டதுதான் டிகுவான் AllSpace. இது வழக்கமான மாடலைவிட 215மிமீ அதிக நீளத்தில் இருந்தாலும், முன்பக்கத் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. முன்பைவிட காரின் வீல்பேஸ் 110மிமீ அதிகரித்திருப்பதால், கூடுதலாக 3-வது வரிசை இருக்கைக்கு வழி கிடைத்திருக்கிறது. 7 சீட்களும் பயன்பாட்டில் இருக்கும்போது, 115 லிட்டர் பூட் ஸ்பேஸ் மட்டுமே உள்ளது. முன்னே சொன்ன மாற்றங்களால், டிகுவானைவிட டிகுவான் AllSpace-ன் விலை அதிகமாகவே இருக்கும் (32-35 லட்சம்); இதிலும் 143bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் (TDi) டர்போ டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 4Motion ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கூட்டணியே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபோக்ஸ்வாகன் டொரெக் (Touareg)

டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!

இந்த நிறுவனத்தின் காஸ்ட்லி எஸ்யூவியான இது, ஒரு காலத்தில் டிகுவான் போலவே நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டது (2008-2013). ஃபோக்ஸ்வாகன் குழும நிறுவனங்களின் (ஆடி, போர்ஷெ, பென்ட்லி, லம்போர்கினி) கார்கள் கட்டமைக்கப்படும் MLB Evo ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் டொரெக், சொகுசு மற்றும் லக்ஸூரி அம்சங்களில் தலைநிமிர்ந்து நிற்கிறது. 5 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் உள்ள இதன் க்ரில் தொடங்கி பின்பக்கம் வரை எல்லாமே XL சைஸில் உள்ளது. இதுஒன்றே இந்தியாவில் இந்த எஸ்யூவிக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தரும் எனத் தோன்றுகிறது. இரட்டை ஸ்க்ரீன்களைக் கொண்ட இன்டீரியர் (15 இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்), லக்ஸூரி விஷயத்தில் வேற லெவல். மேலும் கடைசி வரிசை இருக்கையில் தேவையான இடவசதி இருப்பது வரவேற்கத்தக்கது. 65-70 லட்ச ரூபாய்க்கு வரப்போகும் டொரெக், இறக்குமதி செய்யப்பட்டே இந்தியாவுக்கு வரும். ஏறக்குறைய இதே விலையில் கிடைக்கக்கூடிய இதன் ஜெர்மானிய போட்டியாளர்கள் இங்கேயே அசெம்பிள் செய்யப்படும் நிலையில், இந்த எஸ்யூவிக்கு எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பது இனிமேல்தான் தெரியும். 

ஃபோக்ஸ்வாகன் டி-க்ராஸ் (T-Cross)

டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் டி-க்ராஸ், புதிய போலோவைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் ஹைடெக்கான MQB A0 ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டுக்குக் கொண்டு வரும்போது இதன் விலை அதிகரித்துவிடும் என்பதால், MQB A0 IN என நம் நாட்டுக்கேற்ற விதத்தில் ப்ளாட்ஃபார்மை மாற்றியமைத்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இதனால் இந்தியாவின் டி-க்ராஸின் விலை குறைவாக இருக்கும் என்பதுடன், அது அதிக நீளம் மற்றும் இடவசதியைக் கொண்டிருக்கும். அதன்படி பெரிய 2,651மிமீ வீல்பேஸ் - 100மிமீ அதிக உயரம் என இருப்பதால், பெரிய கதவுகள் மற்றும் அதிக இடவசதியுடன் கூடிய கேபின் கிடைத்திருக்கிறது. ஃப்ளாட் ஃப்ளோர் இருப்பதால், பின் இருக்கையில் 3 பேருக்கான இடம் நிச்சயம் எனலாம். மேலும் நம் ஊர் கரடுமுரடான சாலைகளைச் சமாளிக்கும் வகையில், இந்திய டி-க்ராஸ் 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கும்; இதனுடன் பாடி ரோலைக் குறைத்து, ஓட்டுதல் அனுபவத்தைச் சிறப்பாக்கும் விதத்தில், அளவில் பெரிய Solid ஆன்டி ரோல் பார்கள் - இறுக்கமான பின்பக்க Axle ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டி-ரொக், டொரெக், டி-க்ராஸ்... இந்தியாவுக்கு வரும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகள்!

குறைவான விலையில் இந்த காரைக் களமிறக்க ஏதுவாக, விலை அதிகமான Hot-Stamped ஸ்டீல் - முன்பக்க ஆன்டி ரோல் பாரில் உள்ள Vulcanised ரப்பர் புஷ்ஷிங் - ஐரோப்பிய கார்களைப் போன்ற தரமான சீட்கள் - Sliding வசதியுடன் கூடிய நடுவரிசை இருக்கை - மாடர்ன்னான Sealed-in Bearing மற்றும் Hubs  ஆகியவை இருக்காது எனத் தெரிய வந்துள்ளது. டி-க்ராஸின் பானெட்டுக்கு அடியே, 130bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் (EVO TSI) டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும். நம் நாட்டில் மைலேஜ் முக்கியம் என்பதால், இந்த 4 சிலிண்டர் இன்ஜின் Cylinder-Deactivation தொழில்நுட்பம் இருக்கும்; மேலும் டீசல் இன்ஜினுக்கு மாற்றாக, 115bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் (TSI) டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும். இந்த 3 சிலிண்டர் இன்ஜினில் Mild ஹைபிரிட்/CNG பின்னாளில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. க்ரெட்டா, ஹேரியர், ஹெக்டர், செல்ட்டோஸ் ஆகிய கார்களுடன் இது போட்டியிடும். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு