சரோஜ் கண்பத்,  சு.சுரேஷ்குமார்  சுபாஷ் பரோலியா 

##~##

ம் நாட்டில் ஆட்டோமொபைல் துறை வளர வளர... வின்டேஜ் கார்களின் ரசிகர்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். உலகில் ஆட்டோமொபைல் துறையின் பரிணாம வளர்ச்சியை, கடந்து வந்த பாதையை, எதிர்கொண்ட சவால்களை வின்டேஜ் கார்களின் கால வரிசையை வைத்தே எளிமையாக விளங்கிக் கொள்ள முடியும்.

டெல்லியில் உள்ள 'ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் ஆஃப் இந்தியா’ எனும் அமைப்பில், நம் நாடெங்கிலும் சுமார் 187 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில், நம் ஊர் மணி சங்கர ஐயரும் அடக்கம்! இந்த உறுப்பினர்களிடம், அபூர்வத்திலும் அபூர்வமான கார் வகைகள் இருப்பதுதான் இந்த கிளப்பின் ஹைலைட்! அதுவும், 1929-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார்கூட இப்போதுதான் ஷோரூமில் இருந்து எடுத்து வரப்பட்டதுபோல பளபளப்புடன் பராமரிப்பது இந்த கிளப் உறுப்பினர்களின் பலம்.

மஹாராஜாக்களின் கார்கள்!

இந்த கிளப், கடந்த ஆண்டு டெல்லியில் நடத்திய 'கிரவுன் ஹெரிடேஜ் கிராண்ட் கிளாசிக் ஆட்டோமொபைல் கண்காட்சி’ பலரது கவனத்தை ஈர்த்ததுடன், வின்டேஜ் கார் ஆர்வலர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.

காரணம், பல வருடங்களாக வின்டேஜ் கார்களின் அருமை தெரியாமல் ஷெட்டுக்குள் முடங்கிக் கிடந்த வடநாட்டு மஹாராஜாக்களின் வாகனங்கள் எல்லாம், அப்போதுதான் முதல் முதலாக வெளியே வர ஆரம்பித்தன. சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் புதிய உறுப்பினர்களின் சில அபூர்வ வகை கார்களுடன், டெல்லி அருகே உள்ள ஃபரிதாபாத்தில் இருக்கும் கிரவுன் மால் வளாகத்தில் வின்டேஜ் கார் கண்காட்சியை பிரம்மாண்டமாக நடத்தியது ஹெரிடேஜ் கிளப்.

மஹாராஜாக்களின் கார்கள்!

ஹரியானாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான தீபீந்தர் சிங் ஹூடா துவக்கி வைத்த அந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கார்கள், 1928-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரையிலான ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றை எடுத்துக் காட்டுவது போல இருந்தது. காண்பதற்கே அரிய வின்டேஜ் கார்களான 1928-ம் ஆண்டு மாடல் ஆஸ்டின், 1929-ம் ஆண்டு மாடல் எஸ்ஸெக்ஸ், 1930-ல் வெளிவந்த செவர்லே பேட்டர்ன், 1934 மோரீஸ் மேஜர், ரோல்ஸ் ராய்ஸ், ஹார்லே, மெர்சிடீஸ், ஃபோக்ஸ்வாகன் பீட்டில், டுயூக் போன்ற கிளாஸிக் ஸ்டார்களுடன் டிரையம்ப் ஸ்பிட்ஃபயர் (1963), டிரையம்ப் ஸ்பிட்ஃபயர் மார்க் ஒன் (1970) போன்ற பைக்குகளும் கண்காட்சியில் கவனம் ஈர்த்தன.

மஹாராஜாக்களின் கார்கள்!

''நாங்கள் கடந்த ஆண்டு நடத்திய கண்காட்சிக்குக் கிடைத்த வெற்றியே, இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்தத் தூண்டுதலாக அமைந்தது. மேலும், புதிய உறுப்பினர்கள் இந்த ஆண்டில் கலந்து கொண்டுள்ளதால் இந்த நிகழ்வு, உறுப்பினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த நிச்சயம் இது பெரிய உந்துகோலோக இருக்கும். கார்கள் மட்டும் அல்ல; பைக்குகளும் இதில் கலந்து கொள்வதால் இளைஞர்களையும் ஈர்க்க முடிகிறது'' என்றார் கிரவுன் மோட்டாரிங் கிளப்பின் தலைவரான எம்.டி.எஸ்.துளசி.

மஹாராஜாக்களின் கார்கள்!

பழமையின் தனித்துவத்தை பறை சாற்ற காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் அணிவகுப்பில், சிறந்த கார்களை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு நடுவர் குழு மூலம் பரிசுகளும் வழங்கி கவுரவப்படுத்தினர்.

பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்றோரின் அதீத உற்சாகம் நிகழ்ச்சி நடந்த இடத்தை திருவிழாவாகவே மாற்றி இருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு