Published:Updated:

பழைய கார் மார்க்கெட் - டாடா சஃபாரி

பார்த்து வாங்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

ம் நாட்டில் முதன்முதலாக அறிமுகமான எஸ்யூவி டாடா சஃபாரி. 1998-ம் ஆண்டு அறிமுகமான காலம் துவங்கி, இப்போது வரை பலவிதமான இன்ஜின்களைப் பார்த்துவிட்டது சஃபாரி. பலவிதமான வேரியன்ட்டுகளும் இதில் உண்டு. ஆனால், மாறாத ஒரே விஷயம்... தாராளமான கேபின் ஸ்பேஸ். இதுதான் இந்த காரின் யுஎஸ்பி. பழைய கார் சந்தையில் டாடா சஃபாரி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அனைத்து சிறப்பு உபகரணங்களையும்கொண்ட டாப் வேரியன்ட் மாடலை வாங்குவதே நல்லது. ஒரு சமயத்தில் பெட்ரோல் இன்ஜினோடும் இந்த கார் விற்பனையானது. ஆனால், டீசல் இன்ஜின் கார்தான் ரைட் சாய்ஸ்! 

இன்ஜின்கள்

2005-ம் ஆண்டு, 3 லிட்டர் இன்ஜின் கொண்ட டைகார் இன்ஜினுடன் வெளிவந்த சஃபாரியின் பெர்ஃபாமென்ஸ், நன்றாக இருக்கும். 2007-ம் ஆண்டு, 2.2 லிட்டர் திறன் கொண்ட டைகார் இன்ஜினுடன் வெளிவந்ததும், பெர்ஃபாமென்ஸில் சிறப்பாக இருந்தது. அது வெளிப்படுத்தும் புகையும் குறைவாக இருந்தது. அதனால், அதுவும் ஒரு நல்ல சாய்ஸ். மேலே சொன்ன இரண்டு இன்ஜின்களில், எந்த இன்ஜினுடன் இருக்கும் காராக இருந்தாலும் அவை ஐந்து கியர்களில் இயங்கக் கூடியவைதான். டாடா சஃபாரி ஸ்மூத்தாகவே செல்லும் வாகனம். எனவே, இதில் பயணம் செய்வது சௌகரியமாக இருக்கும்.

பழைய கார் மார்க்கெட் - டாடா சஃபாரி

கவனிக்க வேண்டியவை!

30,000 கி.மீ-க்கு மேல் ஓடிய காராக இருந்தால், சஸ்பென்ஷன் நிச்சயம் அடி வாங்கி இருக்கும். அதனால், இடது பக்க டயர்களும், வலது பக்க டயர்களும் ஒரே சீராகத் தேயாமல், வெவ்வேறு மாதிரி தேய்ந்திருக்கும். இந்த சஸ்பென்ஷன் பிரச்னையைச் சரிசெய்ய 2,000 ரூபாய் வரை செலவாகும். எலெக்ட்ரிக் ரியர் வியூ மிரரின் ஆயுளும் முடிந்திருக்கும். இதை மாற்றுவதற்கு 4,500 ரூபாய் ஆகும். வேகமாக ஓட்டும்போது, இதன் கதவுகளில் இருந்து உதறல் சத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி ஏதும் பிரச்னை இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். காரை ஸ்டார்ட் செய்யும்போது, ஏபிஎஸ் பிரேக் இண்டிகேட்டர் ஒளிர்ந்து அணைகிறதா என்பதையும் கவனியுங்கள்.

பழைய கார் மார்க்கெட் - டாடா சஃபாரி
பழைய கார் மார்க்கெட் - டாடா சஃபாரி

3 லிட்டர் இன்ஜினில் இருக்கும் பிரஷர் பம்ப் பற்றி புகார்கள் உண்டு. அதனால், அதையும் கவனியுங்கள். இது ரிப்பேர் எனில், மாற்றுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஒரு லட்சம் கி.மீ-க்கு மேல் ஓடிய வாகனமாக இருந்தால், டைமிங் பெல்ட்டை மாற்ற வேண்டும். இன்ஜினில் கரும் புகை வந்தால், இதன் டர்போ சார்ஜர் அவுட்டாகிவிட்டதா என்பதை செக் செய்ய வேண்டும். காரை

பழைய கார் மார்க்கெட் - டாடா சஃபாரி

ஓட்டிப் பார்க்கும்போது சக்தி போதுமானதாக இல்லை என்று உணர்ந்தாலோ அல்லது டர்போ சார்ஜரில் இருந்து சத்தம் அதிகமாக வந்தாலோ, இதில் பிரச்னை இருக்க வாய்ப்பு உண்டு. இதில் இப்படிப் பல பிரச்னைகள் இருப்பதால், முறையான சர்வீஸ் ரெக்கார்டு இல்லாத வாகனங்களை வாங்குவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

செலவு

3 லிட்டர் டைகார் இன்ஜின் கொண்ட காராக இருந்தால், நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 8.9 கி.மீ மைலேஜ் கொடுக்கும். நெடுஞ்சாலையில் 12 கி.மீ அளிக்கும். இதுவே 2.2 லிட்டர் இன்ஜின் கொண்ட காராக இருந்தால், நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 8.7 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 13.1 கி.மீ-யும் மைலேஜ் கொடுக்கும். 15,000 கி.மீ-க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். இதற்கு சுமார் 2,600 ரூபாய் செலவாகும். ஆயில் ஃபில்ட்டர் 190 ரூபாய். 45,000 கி.மீ-க்கு ஒருமுறை ஏர்-ஃபில்ட்டரை மாற்றினால் போதுமானது. அதற்கு 750 ரூபாய் செலவாகும். ஃப்யூல் ஃபில்ட்டரை ஆண்டுக்கு ஒருமுறை மாற்ற வேண்டி இருக்கும். இதற்கு 1,770 ரூபாய் செலவாகும். பிரேக் பேடு தேய்ந்திருந்தால், அதை மாற்ற 550 ரூபாய் ஆகும். கிளட்ச்சை மாற்ற, 9,600 ரூபாய் ஆகும். முன்னால் இருக்கும் இரண்டு ஷாக் அப்ஸார்பர்களையும் மாற்ற நேர்ந்தால், 1,665 ரூபாய் செலவாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு