Published:Updated:

ஸ்டேட்டஸ் கார்கள்!

ஸ்டேட்டஸ் கார்கள்!

பிரீமியம் ஸ்டோரி
ஸ்டேட்டஸ் கார்கள்!
 ##~##

''நான் கார் ஃபீரிக் கிடையாது. காதலன்; கார்களை உயிராக நேசிப்பவன்'' என்று ஆரம்பத்திலேயே டாப் கியரில் ஆரம்பித்தார் சிட்டி பாபு. ''நான் வாங்கும் கார் என்னுடைய குணத்தை, என்னுடைய பண்புகளை, என் மனதைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். 'ஸ்டைலா இருக்கு. காரின் விலை 3 கோடி ரூபாய். இதுதான் காஸ்ட்லி கார்’ என்பதற்காக நான் எந்த காரையும் வாங்க மாட்டேன். ஒரு காரை வாங்குவதற்கு முன்பு, அந்த காருக்குப் போட்டியாக இருக்கும் அத்தனை கார்களையும் அலசி ஆராய்ந்து, என் தேவைகளுக்கு எது சரியாக வருமோ, அதைத்தான் வாங்குவேன்!'' என்று கார் தேர்ந்தெடுப்பதைப் பற்றித் தெளிவாகப் பேசினார்.

 ''இப்போதைக்கு என்னிடம் ஏழு கார்கள் இருக்கின்றன. இதில், சின்ன கார்களை விட்டுவிட்டு மற்ற கார்களைப் பற்றி பேசுகிறேன். என்னுடைய எல்லா கார்களுக்குமே தனி ஸ்டைல்; அடையாளம் இருக்கும். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மிகச் சிறந்த சொகுசு கார். திருமணம், கோயில், பிசினஸ் சந்திப்புகள் என்று செல்ல, சரியான சாய்ஸ் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்தான். சொகுசாக, மிகவும் பாதுகாப்பான இடத்துக்குள் இருப்பதுபோன்ற ஃபிலீங்கை நிச்சயம் பிஎம்டபிள்யூவைத் தவிர எதுவும் தர முடியாது. பயணத்தில் ஒரு சின்ன டிஸ்டர்பன்ஸ்கூட இருக்காது.  

ஸ்டேட்டஸ் கார்கள்!

ஆடி ஏ-7 ஸ்டைலான கார். கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம்கொண்ட பெரிய கார். ஆனால், பார்ப்பதற்குப் பெரிய கார் போன்ற தோற்றம் இருக்காது. ஆடி கார்களின் டிசைன் மிகவும் எலிகன்ட்டாக இருக்கும். அதாவது, ஒரு நாகரீகமான மாடர்ன் லுக்கில் இருக்கும். ஷார்ப்பான கோடுகளை காரில் எங்கேயும் பார்க்க முடியாது. ஆடி கார்களை அதன் டிசைனுக்காகவே வாங்கலாம். முக்கியமான விஷயம், பெண்கள் ஓட்டுவதற்கு இது மிக வசதியான கார். ஷார்ப் ஹேண்ட்லிங், ரிவர்ஸ் கேமரா, நீங்கள் எவ்வளவு வேகத்தில் செல்கிறீர்கள் என்பதை விண்ட் ஸ்கிரீனிலேயே பார்க்கும் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதி, கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் சமாளிக்கும் 4-ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, இசையைத் துல்லியமாக ரசிப்பதற்கு பேங் அண்டு ஆலிஃப்ஸன் மியூசிக் சிஸ்டம், மூடுக்கு ஏற்ற மாதிரி டிரைவிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ளும் ஆடி டிரைவ் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் இருப்பதால், ஆடி ஏ-7 பெண்களுக்கு மிகவும் பிடித்த காராக இருக்கும். என்னுடைய மனைவி டிரைவ் செய்ய விரும்பும் காரும் ஆடி ஏ-7.

அடுத்தது போர்ஷே பேன்மெரா. ரியல் ஸ்போர்ட்ஸ் கார். என்னுடைய வேக வெறியைத் தீர்க்கும் கார் இதுதான். இதை ஹை-வேயில் அமேஸிங் கார் என்றுதான் சொல்வேன். 250 கி.மீ வேகத்தைத் தாண்டிவிட்டால், விமானத்தில் பறப்பதுபோன்ற அனுபவத்தைத் தருவதில் போர்ஷேவை மிஞ்ச முடியாது. அதே சமயம், பாதுகாப்பிலும் குறை இல்லை. எந்த இடத்தில் நீங்கள் பிரேக்கை அழுத்துகிறீர்களோ, அந்த இடத்தில் வீல் ஸ்பின் இல்லாமல், ஆடாமல் அசையாமல் நிற்கும். அதேபோல், நம் ஊரின் கரடுமுரடான சாலைகளைத் தாங்கும் வகையில் சஸ்பென்ஷன் செம ஸ்மூத். காருக்குள் எந்த அலுங்கல் குலுங்கலும் தெரியாது. நான் இந்த காரை ஆர்டர் செய்யும்போது, இதன் விலை 1.5 கோடி ரூபாய். போர்ஷேவில் கஸ்டமைஸேஷன் வசதி இருக்கிறது. அதாவது, உங்களுக்குப் பிடித்தவாறு காரின் இன்டீரீயர் மற்ற வசதிகளை நீங்களே வடிவமைக்க முடியும். இதற்கென கூடுதலாக 60 லட்சம் ரூபாய் செலவழித்து, மொத்தம் 2.1 கோடி ரூபாய்க்கு போர்ஷேவை வாங்கினேன். இந்த கஸ்டமைசேஷனுக்காக ஒன்றரை ஆண்டுகள் வெயிட் செய்தேன். அந்த வெயிட்டிங் டைம் வேஸ்ட் இல்லை என்பது கார் வாங்கியதும் புரிந்தது.

ஸ்டேட்டஸ் கார்கள்!

நான் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பதால், என்னுடைய நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நகரின் வெவ்வேறு மூலைகளில் நடக்கும். தினமும் 200 - 300 கி.மீ சுற்ற வேண்டியது இருக்கும். அதற்காகவே நான் வாங்கியிருக்கும் கார்தான் ரேஞ்ச் ரோவர் வோக். எப்படிப்பட்ட சாலையாக இருந்தாலும் சரி, இந்த ரேஞ்ச் ரோவரில் ஏறி நம்பிக்கையாகப் பயணம் செய்யலாம். எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பே தெரியாது'' என்றவரின் கனவு கார் என்னவாம்?

''இதுவரை 35 கார்கள் வாங்கி இருக்கிறேன். ஆனால், இதுவரை என்னுடைய கனவு காரை வாங்கவே இல்லை. காலம் மாற மாற கார்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனால், என்னுடைய கனவு கார் இஸ் யெட் டு கம்!'' என்றவரிடம், ''ஓகே. உங்களின் அடுத்த கார் எது?'' என்று கேட்டால் சிரிக்கிறார்.

ஸ்டேட்டஸ் கார்கள்!

''இவ்வளவு கார்கள் வைத்திருக்கிறார். போர் அடித்தால் ஒரு கார் வாங்குவார்போல என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தொழிலில் என்னுடைய வளர்ச்சியை என் கார்களே சொல்லும். நான் முதலில் வாங்கிய கார் மாருதி 800. நான் தொழிலில் வளர வளர என்னுடைய கார்களை மாற்றினேன். ஒரு நல்ல புராஜெக்ட் முடித்தேன் என்றால், ஒரு கார் வாங்கி, எனக்கு நானே பரிசளித்துப் பாராட்டிக்கொள்வேன். கார் என்று இல்லை; நீங்கள் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும், அந்தப் பொருளை வாங்கும் அளவுக்கு நீங்கள் உங்களுடைய வேலையில், தொழிலில் வளர்ந்திருக்க வேண்டும். சரியான கணக்கு, புரிதல் இல்லாமல் எதையும் வாங்கக் கூடாது. என்னுடைய அடுத்த கார் எது என்பது என்னுடைய தொழிலில் நான் என்ன சாதிக்கிறேன் என்பதைப் பொருத்தே இருக்கிறது'' - பளிச்சென சொல்லிவிட்டு, ரேஞ்ச் ரோவர் வோக்கில் ஏறிப் பறந்தார் சிட்டி பாபு!

- சார்லஸ், சுரேன்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு