ஸ்பெஷல்
Published:Updated:

'கார்'களம்!

ஜி.வி.யின் ஜாக்குவாரை ஆசீர்வதித்த பாடிகார்டு முனீஸ்வரன்

'கார்'களம்!
 ##~##

வி.பிரகாஷின் லேட்டஸ்ட் காதல்... ஜாகுவார். 'யாத்தே... யாத்தே’ இசையால் இதயங்களைக் கரைத்த ஜி.வி.பிரகாஷ் ஐபோன், ஐபாட் என மார்க்கெட்டுக்கு என்ன புதுசாக வந்தாலும் உடனே வாங்கிவிடுவார். ஜூன் 13-ம் தேதி ஜி.வி.பி-யின் 25-வது பிறந்த நாள். பரிசு... ஜாகுவார் எக்ஸ்ஜே கார். 

''சின்ன வயசில இருந்தே எனக்கும் கார்கள் மேல ரொம்ப ஆசை. முதன்முதல்ல எங்க அப்பா வாங்கின கார் மாருதி 800. நான் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பிச்ச பிறகு, ஹோண்டா சிவிக் கார் வாங்கினேன். அடுத்து ஒரு சூப்பர் கார் வாங்கணும்னு ரொம்ப நாளா பிளான் பண்ணிட்டே இருந்தேன். முதல் சாய்ஸ் ஒரு எஸ்யூவி வாங்கணும்கிறதுதான். ஆடி க்யூ-7 வாங்கலாம்னு பார்த்தா, சினிமா இண்டஸ்ட்ரியில் முக்கால்வாசி பேர் அந்த கார் வெச்சிருக்காங்க. பிஎம்டபிள்யூ வாங்கலாம்னு யோசிச்சேன். அதுவும் நிறையப் பேர்கிட்ட இருந்தது. யுனிக்கா ஒரு கார் வாங்கணும்னு யோசிச்சப்ப... ஜாகுவார் நினைவுக்கு வந்தது.

'கார்'களம்!

இது பிரிட்டிஷ் மேக்! இப்போ அந்த கம்பெனிக்கே ஓனர் நம்ம டாடா தான். அதுவும் சென்னையிலேயே ஷோ-ரூம் இருக்கு. காரை நேரில் பார்க்கப் போனேன். அங்கே எக்ஸ்கே மாடலைக் காண்பிச்சாங்க. டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்த்தேன். என்னவோ எனக்கு முழுத் திருப்தி இல்லை. ஷோ-ரூமைவிட்டு வெளியே வரும்போதுதான் எக்ஸ்ஜே மாடலைப் பார்த்தேன். அதில் டெஸ்ட் டிரைவ் போகலாம்னு ஏறி உட்கார்ந்தேன். ஒரு சில விநாடிகளில் சூப்பர் ட்யூன் உதிப்பதுபோல, இதுதான் என்னோட கார்னு உள்ளே உட்கார்ந்ததுமே முடிவு பண்ணிட்டேன்'' என்றவரிடம், ''சிவப்பு வண்ணத்தில் புது கார்... உங்களுடைய சிவப்புக் கலர் டேஸ்ட்டுக்கு எதுவும் காரணம் இருக்கிறதா?'' என்றால், சிரிக்கிறார்.

'கார்'களம்!

''ஜாகுவார்ல இந்த கலர் சூப்பர் ஸ்பெஷல். உலகம் முழுக்க, இந்த மெட்டாலிக் ரெட் கலர் நிறைய விற்பனையாகும். நம்ம ஊர்ல எல்லோரும் சில்வர், பிளாக் இல்லைன்னா வெள்ளை நிற கார்தான் வாங்குவாங்க. இந்த ரெட் ரொம்ப யுனிக். அதனால்தான் வாங்கினேன்.'' என்றவரிடம், ''காரை வாங்கியதும் எங்கே முதலில் சென்றீர்கள்?'' என்று கேட்டால், பக்திமயமாகப் பதில் சொல்கிறார்... ''காரை எடுத்ததும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கிற பாடிகார்டு முனீஸ்வரர் கோயிலுக்குப் போனேன். சாமியிடம் காண்பிச்சுட்டு, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர்னு ஆசை தீர ரவுண்டு அடிச்சேன். இந்த கார்ல

'கார்'களம்!

மணிக்கு 240 கி.மீ வேகத்தை ஈஸியாத் தொடலாம். ஆனால், இது வரைக்கும் என்னுடைய டாப் ஸ்பீடு மணிக்கு 180 கி.மீதான். மும்பை - புனே ஹைவேஸ் பத்தி நண்பர்கள் நிறையச் சொல்லுவாங்க. ஒருநாள், அந்த ஹைவேஸ்ல இந்த காரோட டாப் ஸ்பீடை செக் பண்ணணும்!''

''நீங்க இசையமைப்பாளர் என்பதால், காருக்குள் சூப்பர் ஸ்பெஷல் ஆடியோ சிஸ்டம் எதுவும் பொருத்தி இருக்கிறீர்களா?''

''ஜாகுவார்ல இருக்கிறதே சூப்பரான, 'போவர்ஸ் அண்டு வில்கின்ஸ்’ மியூசிக் சிஸ்டம்தான். மசாஜ் சீட், வென்டிலேட்டட் சீட், முன் பக்க சீட்டின் பின்னால் டிவிடி ஸ்கிரீன், 4-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி... இப்படி இதில் எல்லாமும் இருக்கு. சேஃப்ட்டிக்காக கார் முழுக்க ஏர் பேக்ஸ் இருக்கு; பவர்ஃபுல் பிரேக்ஸ் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்?'' என்கிறார் உற்சாகமாக.

விலை என்னவாம்?

''ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் சேர்த்து 1.4 கோடி ரூபாய் ஆச்சு. கொடுக்கும் காசுக்கு சரியான கார் ஜாகுவார்'' என்றவரின் கால் ஆக்ஸிலரேட்டரை முத்தமிட... புயலெனப் புறப்படுகிறது ஜாகுவார்!