ஸ்பெஷல்
Published:Updated:

''ஃபோக்ஸ்வாகன் காஸ்ட்லி கார் இல்லை!''

''ஃபோக்ஸ்வாகன் காஸ்ட்லி கார் இல்லை!''

 ##~##

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் கார் விலை உயர்வு, வட்டி விகித உயர்வு போன்ற பிரச்னைகளால் கார் மார்க்கெட் சரிவைச் சந்தித்துக்கொண்டு இருந்தாலும், ஃபோக்ஸ்வாகன் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்திவருகிறது. தொழிற்சாலை துவங்கி 5 ஆண்டுகளுக்குள் இந்தியா முழுக்க வியாபித்துவிட்டது ஃபோக்ஸ்வாகன். ஆடி, போர்ஷே, ஸ்கோடா ஆகிய நிறுவனங்களும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் அங்கம்தான். டீசல் கார்களின் டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில், ஃபோக்ஸ்வாகன் குழும உறுப்பினரும், பயணிகள் கார் பிரிவின் இயக்குனருமான நீரஜ் கார்கிடம் பேசினேன். 

''கடந்த ஆண்டு ஃபோக்ஸ்வாகன் பற்றிய செய்திகளும், விளம்பரங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. இதற்குத் தகுந்த பலன் கிடைத்ததா? கடந்த

''ஃபோக்ஸ்வாகன் காஸ்ட்லி கார் இல்லை!''

ஆண்டு ஃபோக்ஸ்வாகன் கார்களின் விற்பனை எவ்வளவு?''

''நிச்சயமாக இருந்தது. கடந்த ஆண்டு மட்டும் 78,408 கார்கள் விற்பனை செய்து இருக்கிறோம். இது, பல ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சில நிறுவனங்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.''

''ஃபோக்ஸ்வாகன் என்றாலே விலை உயர்ந்த கார்கள் என்ற இமேஜ் வந்துவிட்டது. நீங்கள் 5 லட்ச ரூபாய்க்கு போலோவை விற்பனை செய்தாலும், 'காஸ்ட்லி கார்’ என்றே மக்கள் மத்தியில் பேச்சு இருக்கிறது. இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?''

''நாங்கள் அதிகப்படியான கார்களை விற்பனை செய்யும் பிரீமியம் தயாரிப்பாளர். காஸ்ட்லி பிராண்டு என்பது எங்களைப் பொறுத்தவரை சவால் இல்லை. எல்லா விதமான பட்ஜெட்டிலும் கார்கள் வைத்திருக்கிறோம். நாங்கள் விற்பனை செய்யும் விலைக்கு ஏற்ற தரத்துடன் கார்கள் இருக்கும். அது மட்டுமல்ல, நாங்கள் இப்போது புதிதாக 'மொபிலிட்டி மேக்ஸ் ப்ளான்’ என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்தத் திட்டத்தின்படி போலோ, வென்ட்டோ வாடிக்கையாளர்கள் கார் வாங்க குறைந்த தவணையில் கடன் தருவது தான் இந்தத் திட்டம். எல்லா நிறுவனங்களுமே கடன் தரும். ஆனால், எந்த நிறுவனமும் இன்ஷூரன்ஸ், எக்ஸன்டட் வாரன்டி, மூன்று வருட இலவச பராமரிப்பு போன்ற சலுகைகளையும் சேர்த்துத் தராது. மொபிலிட்டி மேக்ஸ் திட்டத்தில் குறைந்த தவணை இருக்கும் என்பதோடு, மேலே சொன்ன சலுகைகளும் இந்தத் திட்டத்தின்படி கிடைக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் கடன் கேட்டு எங்கேயும் அலைய வேண்டியது இருக்காது. இன்ஷூரன்ஸ், பராமரிப்புப் பற்றி கவலைப்படாமல், வாடிக்கையாளர்கள் எரிபொருளுக்கு மட்டும் செலவு செய்தால் போதும்'' என்று நம்பிக்கையோடு பேசுகிறார் நீரஜ்.

சார்லஸ்