காசி.வேம்பையன் >>செ.சிவபாலன்

பைக் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க... அது சார்ந்த குற்றங்களும் அதிகமாகிக் கொண்டேதான்

. போகின்றன. எப்படிப்பட்ட பூட்டு போட்டுப் பூட்டினாலும் அதைத் தகர்த்தெறியும் பைக் திருடர்களிடமிருந்து நம் பைக்கைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?.
பைக் திருட்டு பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாவிக்குப் பதில் விரல் ரேகை (Finger Print Sensor)மற்றும் ரகசிய எண் (Numeric Password System) பயன்படுத்தி இயங்கக்கூடிய

(Automatic locking system) தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த விவேக்ராஜ்.

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்திருக்கும் விவேக்ராஜ், இறுதியாண்டு புராஜெக்ட்டாக இந்த வித்தியாசமான கருவியை உருவாக்கி உள்ளார். கார்பரேட் நிறுவனங்களில் வருகைப் பதிவுக்கும், கதவு திறப்பதற்கும் பயன்படுத்தப்படும் 'விரல் ரேகை சென்ஸார்’ தொழில்நுட்பத்தை பைக்கிலும் பயன்படுத்த முடியும் என்று இவர் நிரூபித்துள்ளார். அதாவது, பைக்கின் இக்னீஷியனை ஆன் செய்ய, சாவிக்குப் பதில் டேஷ் போர்டில் உள்ள சென்ஸாரின் மீது விரல் ரேகையைப் பதித்தால் போதும். அதேபோல், ஏடிஎம்-மில் பணம் எடுக்க ரகசிய எண்ணைப் பயன்படுத்துவது போல, டேஷ் போர்டில் நம்பர் பேனல் அமைத்திருக்கிறார். அதில், அந்த பைக்குக்கான ரகசிய எண்ணை அழுத்தினால்தான் பைக் இயங்கும். இந்த நவீன தொழில்நுட்பத்தை தனது பைக்கில் பொருத்தி, அதை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார் விவேக்ராஜ். இதற்காக தனது பைக்கின் டேஷ் போர்டை வித்தியாசமாக அவரே வடிவமைத்துள்ளார். பைக்கைத் திறப்பதற்கு மட்டுமல்ல, பூட்டுவதற்கும் விரல் ரேகை அல்லது ரகசிய எண் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலே போதுமானது.

''பைக் திருட்டு என்பது சாதாரணமாகிவிட்டது. என்னதான் ஃபோர்க் லாக், வீல் லாக் என பூட்டி வைத்தாலும், மக்கள் கூட்டம் அதிகம் இடங்களிலேயே கள்ளச் சாவி போட்டோ அல்லது லாக்கை உடைத்தோ திருடிக்கொண்டு போய் விடுகிறார்கள். இத்தகைய குற்றங்களைத் தடுக்க இப்படி ஒரு கருவி அவசியமாகிறது.

முதலில் 'ஃபோர்க் லாக்’ ஆட்டோமேட்டிக்காகப் பூட்டிக்கொள்வது போன்றும், பெட்ரோல் திருட்டைத் தடுக்க பெட்ரோல் கட்-ஆப் லாக்கையும் உருவாக்கினேன். வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக நினைத்து ஒரு மெக்கானிக் நண்பரிடம் காண்பித்தேன். அவர், ''ஃபோர்க் லாக் பகுதியை ஓங்கி அடித்துத் திருப்பினாலே உடைந்து விடும். பின்னர் பைக்கை எளிதாக உருட்டிக் கொண்டு போய்விடுவார்களே...?'' என்று கேள்வி எழுப்பினார். அதனால், பைக்கின் பின் பக்கச் சக்கரத்துக்கும் லாக் ஒன்றை உருவாக்கி, அதை வெளியே தெரியாமல் பொருத்தி இருக்கிறேன்'' என்றார் விவேக்ராஜ்.

வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழகம் மற்றும் ஐ.ஐ.டி-யும் இணைந்து நடத்திய 'மை ஐடியா’ எனும் போட்டியில் 76 கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் இவரது கண்டுபிடிப்பு மூன்றாம் பரிசை வென்றிருக்கிறது!