பி.ஆண்டனிராஜ் >>எல்.ராஜேந்திரன்

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள வடகரை என்ற ஊரைச் சேர்ந்த டாக்டர் ரஜப்

. முகமதுவுக்கு, வாகனங்களைப் பற்றி படிப்பதில்தான் அதிக ஈர்ப்பு. அதுவே அவரை 'மோட்டார் விகடன் முதல் சந்தாதாரர்’ ஆக்கியது..
மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை... குற்றாலத்தின் இதமான சாரல் என இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் வசிக்கிறார் ரஜப் முகமது. ''ஸ்கூலில் படிக்கும்போதே எனக்கு வாகனங்கள் மீது ஆர்வம் வந்துவிட்டது. சிறுவனாக இருக்கும்போதே சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளை ஆர்வத்துடன் கவனித்து, அதன் வடிவமைப்பைப் பற்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விவாதிப்பேன். பிறகு, கல்லூரி காலத்தில் ஆங்கிலத்தில் வெளியாகும் ஆட்டோமொபைல் சம்பந்தமான புத்தகங்கள் படிக்கத் தொடங்கினேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'ஆனந்த விகடன்’ இதழில் ஆட்டோமொபைல் சம்பந்தமான தகவல்களுடன் ஒரு பகுதி வந்துகொண்டு இருந்தது. தமிழில் ஆட்டோமொபைல் பற்றிய கட்டுரைகளுடன் வந்த அந்த புத்தகங்கள் என்னை ரொம்பவுமே கவர்ந்து விட்டது. இதையே தனி இதழாக தமிழில் வெளியிடுவதற்கு, விகடன் குழுமத்தை விட்டால் வேறு யாருக்குத் துணிச்சல் இருக்கும்? அதனால், அந்த ஆட்டோமொபைல் பகுதியைப் படித்ததும், 'இந்த இதழைப் படித்த போது ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்ததை விடவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால், தயவுசெய்து ஆட்டோமொபைல் பற்றிய கட்டுரைகள் மட்டும் வெளிவருவதற்கு, தனியாக ஒரு இதழைத் தொடங்குங்கள்’ என்று ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு அவர் எனக்கு ஒரு பதில் கடிதம் எழுதினார். அதை என் வீட்டில் ஃபிரேம் செய்து வைத்திருக்கிறேன்'' என்று பெருமிதப்பட்டார்.

தொடர்ந்து பேசிய அவரது மனைவி ஃபாத்திமா, ''விகடனில் இருந்து வெளியாகும் அத்தனை இதழ்களையும் இவர் படித்துவிடுவார். 'மோட்டார் விகடன்’ தனி இதழாக வெளிவருவதற்கு முன்பே, அதற்கான டிராப்ட் எடுத்து அனுப்பி வைத்தார். அதனால்தான் அவரால் 'மோட்டார் விகடனின் முதல் சந்தாதாரர்’ என்ற பெருமையைப் பிடிக்க முடிந்தது. அந்த அளவுக்கு அவருக்கு வாகனங்கள் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு மாதமும் 'மோட்டார் விகடன்’ படித்து விட்டு, அதில் வெளியாகி இருக்கும் கட்டுரைகள் பற்றி நிறையப் பேசுவார். இவரைப் பார்த்து எங்கள் மகன் அப்துல்லா தானிஷ், மகள் ஜாஸ்ரா மஹ்தோ ஆகியோருக்கும் கார்கள், பைக்குகள் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டில் நான்கு கார்கள் இருந்தாலும், பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்பது தான் இவருடைய கனவு. அது இப்போது நிறைவேறி விட்டது. அவருடன் இந்த கனவு காரில் குடும்பத்தோடு பயணம் செய்யும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது!'' என்றார் நெகிழ்வாக.

'முதல் கனவு நிறைவேடுச்சு... அடுத்த கனவு?'' என்று ரஜப் முகமதுவிடம் கேட்டால், ''சீக்கிரமே ஆடி ஏ-6 வாங்கணும்னு நினச்சிருக்கேன்!'' என்று சொல்லும் இவர் மருத்துவம், கட்டடம் கட்டுதல், ரியல் எஸ்டேட் என்று ஒரே நேரத்தில் பல துறைகளில் பிஸியாக இருப்பவர்!