கனடாவிலிருந்து ச.கணேஷ்ராம்

புத்தாண்டு பிறந்ததுமே டக்கார் ராலி (Dakar Rally) களை கட்டிவிட்டது. நீண்ட தூர என்ட்யூரன்ஸ் வகை

ராலியான இந்தப் போட்டியின் தூரம் மொத்தம் 9000 கி.மீ! மொத்தம் இரண்டு வாரங்கள் நடக்கும் இந்த ராலியில் நான்கு வகை வாகனங்கள் கலந்து கொள்ளும். இந்த நான்கு பிரிவுக்கும் ஒரே சமயத்தில்தான் போட்டி நடக்கும். மொத்தம் சுமார் 500 அணிகள் வரை பங்கேற்கும் இந்த ராலியில் 2,000 பேர் வரை கலந்து கொள்வார்கள்.

மிக நீண்ட தூரமும், வித்தியாசமான வெவ்வேறு சூழலும் கொண்ட பாதைகளில் நடக்கும் இந்தப் போட்டி. அதாவது, இந்த ராலியின் பாதை... கல்லும் மண்ணும் கொண்ட ஆஃப் ரோடு, பாலைவனம், சேறும் சகதியும் கொண்ட வயல்வெளிகள், இடுப்பளவுக்கு புற்கள் வளர்ந்த காடு, பாறைகள், குன்றுகள், உயரமாக ஏறி இறங்கும் சாலைகள், கடற்கரை மணல்வெளி என வித்தியாச வித்தியாசமாக மாறிக்கொண்டே இருக்கும். இதில்தான் பயணிக்க வேண்டும். மழை பெய்தாலும், பனி விழுந்தாலும், மணல் சூறாவளி அடித்தாலும், மண்டையைப் பிளக்கும் வெயில் இருந்தாலும் வாகனத்தை ஓட்டித்தான் ஆக வேண்டும்.

இந்த ஆண்டு எப்போதும் போல டக்கார் ராலி தொடங்கியது. ஜனவரி முதல் தேதியன்று அர்ஜென்டினாவில் பியுனஸ் ஏர்ஸில் (Buenos aires) துவங்கி, சிலியில் உள்ள ஆன்டோஃபகாஸ்தா நகர் வரை சென்றுவிட்டு, மீண்டும் அர்ஜென்டினா திரும்பி பியுனஸ் ஏர்ஸ் நகரில் 16-ம் தேதி வந்து முடிந்தது டக்கார் ராலி.

வழக்கம்போல கார், பைக், ட்ரக், ஏடிவி என நான்கு வகை வாகனங்களும் இந்த ராலியில் பங்குபெற்றன. கேடிஎம், ஏப்ரில்லா, யமஹா, ஹோண்டா, பிஎம்டபிள்யூ ஆகிய பைக் அணிகள் கலந்துகொண்டன. கடந்த ஆண்டு கேடிஎம் சார்பாக வெற்றி பெற்ற சிரல் டிப்ரஸ், இந்த ஆண்டு இரண்டாவது இடம்தான் பிடிக்க முடிந்தது. முதலிடத்தை கேடிஎம் அணியைச் சேர்ந்த ஸ்பானிஷ் வீரரான மார்க்கோமா பெற்றார். யமஹாவுக்கு இதில் மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

கார்களுக்கான போட்டியில் ஃபோக்ஸ்வாகன், மிட்சுபிஷி, பிஎம்டபிள்யூ, டொயோட்டா ஆகிய அணிகள் பங்கு பெற்றன. இதில், முதல் மூன்று இடங்களையும் ஃபோக்ஸ்வாகனே பிடித்து, மற்ற அணிகளுக்கு டெர்ரர் காட்டியது! கடந்த முறை வெற்றி பெற்ற கார்லோஸுக்கு இந்த முறை டஃப் ஃபைட் கொடுத்து முன்னேறியவர் நஸீர் அல் ஹத்தியா என்பவர். அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் டக்கார் ராலியில் வெற்றி பெறுவது இதுதான் முதன்முறை!

ட்ரக் போட்டியில் கமாஸ், மான், பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. எப்போதும் போல கமாஸ் அணியின் விளாடிமீர் ஷகிர் ஏழாவது முறையாக வெற்றி பெற்றதுடன், முதல் மூன்று இடங்களையும் கமாஸ் அணியே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏடிவி போட்டியில் யமஹா அணியைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா பெட்ரோனலி வெற்றி பெற்றார்!