நரேன் கார்த்திகேயன் ரிட்டர்ன்ஸ்! இந்தச் செய்தி இந்திய ரேஸ் வட்டாரத்தை மட்டுமல்ல... சர்வதேச

ரேஸ் அரங்கையும் பரபரப்பாக்கி இருக்கிறது. 'ஃபார்முலா-1 ரேஸில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் மீண்டும் நுழைவது (வெற்றி பெறாமல்) இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் ஃபார்முலா-1 ரேஸ் நிபுணர்கள்!

கடந்த ஆண்டு, கரூண் சந்தோக் கலந்துகொண்டு ரேஸ் ஓட்டிய ஹிஸ்பானியா ரேஸிங் அணியில் இணைந்திருக்கிறார் நரேன் கார்த்திகேயன். ''33 வயதாகும் நரேன் கார்த்திகேயனுக்கு இரண்டாவது சான்ஸ் கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமானது. இந்தியாவில் இந்த ஆண்டு ஃபார்முலா-1 ரேஸ்

நடைபெற இருக்கும் நிலையில், இந்திய வீரர் ஒருவர் ஃபார்முலா-1 ரேஸில் கலந்துகொள்வது நம் நாட்டு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும்'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஃபோர்ஸ் இந்தியா அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா.

ஃபோர்ஸ் இந்தியா அணியில் நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக்

என இரண்டு இந்திய வீரர்களுக்குமே விஜய் மல்லையா, ரேஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

இதற்கிடையே ஹிஸ்பானியா ரேஸிங் அணி, கரூண் சந்தோக் மீது வழக்கு போட திட்டமிட்டு வருகிறது. ஹிஸ்பானியா ரேஸிங் அணியில் இணைவதற்கு முன்பு, 58 கோடி ரூபாயை ஸ்பான்ஸர்கள் மூலம் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார் கரூண் சந்தோக். ஆனால், அவரால் 15 கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்தது.

இதனால்தான் அதிரடியாக கரூண் சந்தோக், பாதி சீசனிலேயே ஹிஸ்பானியா அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டு பாதிப் பணம் தராமலேயே வெளியேறியதால், கரூண் சந்தோக் மீது வழக்குப் பதிவு செய்ய ஹிஸ்பானியா நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவுகிறது.

கரூண் சந்தோக்கைப் போல் நரேன் கார்த்திகேயனுக்கு ஸ்பான்ஸர் பிரச்னைகள் இல்லை. டாடா நிறுவனத்தின் முழு ஆதரவோடு மீண்டும் ஃபார்முலா-1 ரேஸுக்குள் நுழைந்திருக்கிறார் நரேன் கார்த்திகேயன்.

நரேன் கார்த்திகேயனின் பார்ஃமுலா-1 மறு பிரவேசம் குறித்து நம்முடைய ரேஸ் வீரர் ஒருவர் கருத்து

தெரிவிக்கையில், ''நரேன் கார்த்திகேயன் மீண்டும் ஃபார்முலா-1 ரேஸுக்குப் போயிருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இதில் கசப்பான உண்மை என்னவென்றால், இவரது பிரவேசம், 'இந்தியர் ஒருவர் ஃபார்முலா-1 ரேஸில் இருக்கிறார்’ என்று நினைத்து, திருப்திப்பட்டுக் கொள்ள மட்டுமே உதவும்.

காரணம், நரேன் கார்த்திகேயனின் ஃபிட்னஸ் பழைய அளவுக்கு இல்லை என்பதோடு, ஹிஸ்பானியா அணியை சிறந்த அணி என்று சொல்ல முடியாது. 2005-ம் ஆண்டு நரேன் கார்த்திகேயன் கலந்துகொண்டு ரேஸ் ஓட்டிய ஜோர்டான் அணியும், ஹிஸ்பானியா போலவே இரண்டாம் அடுக்கில் இருக்கும் அணிதான்.

ரேஸிங் அணி தொழில்நுட்பத்தில் சிறந்த அணியாக இருந்தால் மட்டுமே ரேஸ் வீரரால் வெற்றி பெற முடியும். அதனால், நரேன் கார்த்திகேயனிடம் இருந்து வெற்றிகளை எதிர்பார்க்க முடியாது. இதுதான் நிதர்சனம்!'' என்றவர் அதற்கான காரணங்களையும் தர்க்க ரீதியாக விளக்க முற்பட்டார்.

''நரேன் கார்த்திகேயன் 2005-ம் ஆண்டு ஃபார்முலா-1 ரேஸில் கலந்துகொண்டபோது அமெரிக்க ஜீபி ரேஸில் நான்காவது இடம் பிடித்தார். அந்த ரேஸில் மொத்தமே 6 ரேஸர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மற்ற ரேஸ்களில் அவரால் முதல் பத்து இடங்களுக்குள் வர முடியவில்லை!’

ஆருடங்கள், கணிப்புகள், நிபுணர்களின் அலசல்கள் எல்லாம் நரேனுக்கு எதிராக இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் அவர் பக்கம் இருக்கிறார்கள். நரேன் வெற்றிக் கோட்டை தொட உளமார வாழ்த்துவோம்!