Published:Updated:

டிரைவிங் கொடுத்த சன்மானம்!

மம்முட்டி

டிரைவிங் கொடுத்த சன்மானம்!

மம்முட்டி

Published:Updated:

>> எஸ்.ஷக்தி  >>எம்.விஜயகுமார்

 ##~##

''மனிதர்கள் அற்ற சாலையில், காற்றைக் கிழித்துக் கொண்டு காரை ஓட்டும் சந்தோஷம், ஆயிரம் தேசிய விருதுகளுக்குச் சமம். எவ்வளவு வேகம் போனாலும் காரின் முழு பலத்தையும் என்னோட கட்டுப்பாட்டுல வைத்திருப்பதில்தான் என்னோட ஹீரோயிஸம் இருக்கு. ஐ லவ் மை கார்ஸ் லைக் எனிதிங்!'' - தனது புது ஆடி காரை வருடியபடி பேசுகிறார் மெகா ஸ்டார் மம்முட்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்முட்டியின் சினிமாக்களைப் போலவே அவரது கார் கலெக்ஷனும் செம ஹாட் அண்டு ஹிட்! ஜாகுவார், லேண்ட் க்ரூஸர், பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வாகன் பஸாத் என இவரது கலெக்ஷனில் இல்லாத கார்களே இல்லை. எந்த புது ரக காரையும் அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வைத்திருப்பார். எப்போதுமே செல்ஃப் டிரைவிங்தான். பயணத்தின்போது பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்கும். தமிழ், மலையாளம் என கலவையான மெல்லிசைகள் மம்முட்டியின் கலெக்ஷனில் இருக்கின்றன. மம்முட்டியின் கார் கலெக்ஷனில் விரைவில் பென்ட்லி ஒன்றும் விரைவில் இணைய இருக்கிறது. ''ஆர்டர் கொடுத்தாச்சு, கொடுத்தாச்சு!'' என்று குதூகலிக்கிறார்கள் அவரது உதவியாளர்கள்.

டிரைவிங் கொடுத்த சன்மானம்!

மிகச் சமீபத்தில் கொச்சினில் 'ஃபேஸ் டு ஃபேஸ்’ படப்பிடிப்பில் மம்முட்டியைச் சந்தித்தபோது அவரிடம், ''அப்படியென்ன கார் மீது உங்களுக்கு மோகம்?'' என்று கேட்டோம்.

''வெளிப்படையா சொல்றதுன்னா, கார்களைப் பார்க்கிறப்போ குழந்தை மாதிரி ஆயிடுவேன். நடிச்சு ஓரளவு காசு வந்த பிறகு ஏற்பட்ட காதலில்லை இது. ரொம்ப நாளாவே நானொரு கார் ப்ரியன்!''

''உங்களோட முதல் கார்?''

ஓ... நிச்சயம் மறக்க முடியாத ஃபியட் கார் அது. அதோட ஃபர்ஸ்ட் டிரைவ் செய்த நாள் முதல் எல்லாமே நினைவிலேயே இருக்குது.''

''பெரும்பாலும் நீங்களேதான் கார் ஓட்டுறீங்க. ஏன்?''

'காரை நானே ஓட்டுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ்வளவு பெரிய மோட்டாரைக் கட்டுப்படுத்துற அதிகாரம் நம்ம கையில் இருக்கிற பெருமை; எங்கும் எதிலும் இடிச்சுடாம வளைஞ்சு, நெளிஞ்சு போகக்கூடிய ஜாக்கிரதை உணர்வு; நம்மைக் கடந்து போகக்கூடிய மனிதர்கள், நிலைக்காட்சிகள் முதலான அத்தனை காட்சிகளையும் லைவ்வா பார்த்து ரசிக்கக் கூடிய வாய்ப்பு; இதையெல்லாம் தாண்டி நான் ரொம்ப விரும்பக் கூடிய அம்சமான வேகம்! நெடுஞ்சாலைகள்லதான் வேகம் தரும் சுகத்தை அனுபவிப்பேனே தவிர, நெருக்கடியான சாலைகள்ல எப்பவுமே விதிமுறைகளுக்குட்பட்ட வேகம்தான். ஆனா, இதுவரை எந்த ஒரு நொடியும் என்னோட கட்டுப்பாட்டை மீறி கார் போனது இல்லை. ஆனா ஒண்ணு தெரியுமா? என்னோட கார் வேகம் ரெண்டு உயிர்களைக் காப்பாற்றி இருக்குது. ஒரு தடவை மஞ்ஞேரிக்குப் போயிட்டு இருக்கிறப்ப ரோட்டோரத்துல பிரசவ வலியில துடிச்சிட்டிருந்த பெண்ணை என் கார்ல கூட்டிட்டுப் போயி சரியான நேரத்துல ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். அந்த பொண்ணோட தாத்தா நன்றிப் பெருக்கோட, தன் முண்டு மடிப்பிலிருந்து ஒரு கசங்குன ரெண்டு ரூபாய் தாளை எடுத்து எனக்குக் கொடுத்தார். என்னோட சாமர்த்தியமான டிரைவிங்குக்கான சன்மானம் அது!''

''மம்மூக்காவுக்கு பைக் பிடிக்குமா?''

''பின்னே! அதிலேயும் ஜாவா, ராயல் என்ஃபீல்டு, தண்டர்பேர்டுன்னா ரவுண்ட்ஸ்லேயேதான் இருக்கத் தோணும். இன்னைக்குகூட ஒரு புல்லட் ஷாட் இருக்கு. பின்னி எடுத்துடமாட்டேன்!''