Published:Updated:

இது பாண்ட் கார்!

இது பாண்ட் கார்!

இது பாண்ட் கார்!

இது பாண்ட் கார்!

Published:Updated:

ஜேம்ஸ்பாண்டுக்கு வியர்ப்பதே ஆச்சரியம்! ஆனால், 'ஸ்கை ஃபால்’ படத்தில் அவருக்கு ரத்தம் வருகிறது. உலகை, அநீதிக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவது இரண்டாம்பட்சம்தான். முதலில் தன் சக தோழர்களின் உயிரைக் காப்பதே ஜேம்ஸ்பாண்டுக்கு பிரம்மப் பிரயத்தனம். டேனியல் கிரெய்க், ஜேம்ஸ்பாண்ட் ஆனதில் இருந்து இந்த உளவாளியின் முகம் மாறிவிட்டது. காயத்தையும் கண்ணீரையும் இவர் மறைத்ததே இல்லை. பாண்டும் நம்மைப்போல ரத்தமும் சதையுமான மனிதன்தான் என உலக ரசிகர்களை நம்ப வைத்தது இவரின் வெற்றி ரகசியம். ஜேம்ஸ்பாண்டின் பொன்விழா ஆண்டில் வெளிவந்து இருக்கும் 'ஸ்கை ஃபால்,’ எல்லாவிதத்திலும் புது யுக பாண்டை கண் முன் நிறுத்த... உளவாளிக்கான கார் மட்டும் ஜேம்ஸ்பாண்ட் மியூசியத்தில் இருந்து இறக்குமதி ஆகியிருக்கிறது.

இது பாண்ட் கார்!
இது பாண்ட் கார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஸ்டன் மார்ட்டின் டிபி-5 - ஐம்பது ஆண்டு கால ஜேம்ஸ்பாண்ட் வரலாற்றில் மிக அரிய பொக்கிஷம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கார். 1964-ம் ஆண்டு வெளிவந்த 'கோல்டு ஃபிங்கர்’ எனும் படத்தில், அப்போது ஜேம்ஸ்பாண்டாக நடித்த சீன் கானரி முதன் முதலில் பயன்படுத்திய கார் இது. ஸ்கை ஃபால் படத்தோடு சேர்த்து இதுவரை ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தோன்றி இருக்கிறது இந்த கார். அப்படியானால், இந்த காருக்கான மவுசை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

4000 சிசி இன்ஜினும் 282 bhp சக்தியும் கொண்ட இந்த கார், மணிக்கு 230 கி.மீ வேகத்தில் பறக்கும். பட்டனைத் தட்டியதும் வெளிவரும் மெஷின் கன், பின்னால் துரத்திக்கொண்டு வரும் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் ஆயில் ஸ்பில்லர் எல்லாம் பாண்ட் ஸ்பெஷல். ஆனால், விற்பனைக்கு வரும் கார்களில் இந்த அம்சங்கள் இருக்காது!

ஒரிஜினல் காரில் சின்ன கீறல்கூட விழுந்துவிடாதவாறு, நவீன 3டி பிரின்ட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதன் அச்சு அசல் ஜெராக்ஸாக மூன்று டம்மி கார்களை உருவாக்கித் தான் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாண்டை அச்சுறுத்தும் கொடூர வில்லனாக, நடிப்பில் கோட்டை கட்டியிருக்கும் சேவியர் பதாம், உலகப் புகழ் பெற்ற ஸ்பானிஷ் நடிகர்.

''ஜேம்ஸ்பாண்டை அடித்து துவைத்ததைக்கூட லண்டன் காரர்கள் மன்னித்து விடுவர். ஆனால், படத்தின் கிளைமாக்ஸில் அந்த காரை சல்லடையாக துளைத்து விட்டேன். இங்கிலாந்துக்குச் செல்லவே பயமாக இருக்கிறது'' என பொய் பயம் காட்டிச் சிரிக்கிறார் சேவியர் பதாம்!