Published:Updated:

வெட்டல் அட்டகாசம்!

வெட்டல் அட்டகாசம்!

வெட்டல் அட்டகாசம்!

வெட்டல் அட்டகாசம்!

Published:Updated:

-சார்லஸ்

 ##~##

டப்பு சாம்பியனுக்கும், முன்னாள் உலக சாம்பியன்களுக்கும் இடையே கடும்போட்டியாக மாறியிருக்கிறது 2013 ஃபார்முலா-1 சீஸன். நடப்பு சாம்பியனான செபாஸ்ட்டியன் வெட்டலின் வெற்றியைப் பறிக்க, முன்னாள் சாம்பியன்கள் ஃபெர்னாண்டோ அலான்சோ, கிமி ராய்க்கோனன், லூயிஸ் ஹாமில்ட்டன் என மும்முனைப் போட்டி நடக்கிறது. வெற்றி யாருக்கு? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிலாந்து

ஃபார்முலா-1 ரேஸுக்குத் தலைநகரான இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மைதானத்தில், ஜூன் 30-ம் தேதி ஃபார்முலா-1 ரேஸின் எட்டாவது சுற்று நடைபெற்றது. ஃபார்முலா-1 ரேஸில் கலந்துகொள்ளும் 11 அணிகளில், 8 அணிகள் இங்கிலாந்தை தலைமை இடமாகக்கொண்டவை. அதனால், இந்த ரேஸில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதில், ஒவ்வொரு அணிகளுக்குமே பலத்த போட்டி இருக்கும். அணிகளுக்கு இடையே நடக்கும் இந்த கௌரவப் போட்டியில், யார் வெல்வார் என்ற த்ரில்லுடன் ரேஸ் துவங்கியது.

வெட்டல் அட்டகாசம்!

இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்ட்டன் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதால், ரேஸைக் காண ஆயிரக்கணக்கில் இங்கிலாந்து ரசிகர்கள் குவிந்திருந்தனர். மெர்சிடீஸ் அணியின் மற்றொரு வீரர் நிக்கோ ராஸ்பர்க் இரண்டாவது இடத்தில் இருந்தும், செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ஆரம்பத்தில் அதிரடி காட்டிவிட்டு, அதன் பிறகு பம்மிவிடும் லூயிஸ் ஹாமில்ட்டனின் மெர்சிடீஸ் கார், இந்த ரேஸிலும் சொதப்பியது. எட்டாவது லேப்பின்போது ஹாமில்ட்டனின் கார் டயர், டிஸ்க்கை விட்டு முழுவதுமாகக் கழன்று வெளியே வந்தது. ஹாமில்ட்டனின் டயர் சொதப்பிய சிறிது நேரத்தில் ஃபிலிப் மாஸாவின் கார் டயரும் பஞ்சரானது. இதற்கிடையே, முதல் இடத்தில் சென்றுகொண்டிருந்த செபாஸ்ட்டியன் வெட்டலையும் துரதிர்ஷ்டம் துரத்தியது. 41-வது லேப்பின்போது, கியர்பாக்ஸ் கோளாறு காரணமாக வெட்டலின் கார் ரேஸ் டிராக்கைவிட்டு ஒதுங்கியது.

தொடர்ந்து பல கார்களின் டயர் பஞ்சராகிக்கொண்டே இருந்ததால், இங்கிலாந்து ரேஸுக்கு 'பஞ்சர் ரேஸ்’ என்றே ரசிகர்கள் பெயர் வைத்துவிட்டார்கள். 46-வது லேப்பின்போது மெக்லாரன் அணியின் செர்ஜியோ பெரேஸ் கார் டயரும் பஞ்சரானது. மொத்தம் 52 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில் ஜெர்மனி வீரரும், மெர்சிடீஸ் அணியைச் சேர்ந்தவருமான நிக்கோ ராஸ்பார்க், மார்க் வெப்பரின் ரெனோ காரை 0.7 விநாடிகளில் முந்தி முதல் இடம் பிடித்தார். ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ மூன்றாம் இடம் பிடித்தார்.

வெட்டல் அட்டகாசம்!

ஜெர்மனி

ரேஸ் வீரர்களுக்கு மிகவும் சவாலான ஜெர்மனியின் நர்பர்கிரிங் மைதானத்தில், ஜூலை 7-ம் தேதி ஃபார்முலா-1 ரேஸின் ஒன்பதாவது சுற்று நடைபெற்றது. செபாஸ்ட்டியன் வெட்டல், நிக்கோ ராஸ்பர்க், ஆட்ரியான் சுட்டில், நிக்கோ ஹல்க்கன்பர்க் ஆகிய நான்கு முக்கிய ரேஸ் வீரர்களும் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ரசிகர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.

தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன், முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, ரெட்புல் அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல் இரண்டாம் இடத்தில் இருந்தும், மார்க் வெப்பர் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ரேஸில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் ஹாமில்ட்டன், முதல் லேப்பிலேயே சொதப்பினார். வளைவில் சட்டென வழுக்கிய ஹாமில்ட்டனின் கார், ரேஸ் டிராக்கைவிட்டு விலக... சமயம் பார்த்துக் காத்திருந்த செபாஸ்ட்டியன் வெட்டல் முந்தினார். இறுதிவரை வெட்டலை யாராலும் முந்த முடியவில்லை. 24-வது சுற்றின் போது மரூசியா காஸ்வொர்த் அணியின் ஜூல்ஸ் கார், இன்ஜின் கோளாறு காரணமாக திடீரென தீப்பிடித்துக்கொள்ள... ரேஸ் பரபரப்பானது. ஜூல்ஸ், காயம் இன்றி காரில் இருந்து வெளியே குதித்துத் தப்பித்தார்.

வெட்டல் அட்டகாசம்!

சொந்த மண்ணில் நடைபெறும் ரேஸ் என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன் ரேஸ் ஓட்டிய செபாஸ்ட்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். லோட்டஸ் ரெனோ அணியின் கிமி ராய்க்கோனன் இரண்டாம் இடமும், அதே அணியின் ரொமெய்ன் க்ராஸின் மூன்றாவது இடமும் பிடித்தனர். ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கிய முன்னாள் சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டனால் ஐந்தாம் இடமே பிடிக்க முடிந்தது!

இதுவரை 9 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், நடப்பு சாம்பியனும் ரெட்புல் ரெனோ அணி வீரருமான செபாஸ்ட்டியன் வெட்டல் 157 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ 123 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், லோட்டஸ் ரெனோ அணியின் கிமி ராய்க்கோனன் 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நடப்பு சாம்பியனை இந்த முன்னாள் உலக சாம்பியன்கள் முந்துவார்களா என்பது, இன்னும் சில ரேஸ்களில் உறுதியாகிவிடும்!

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன்பு, ஃபார்முலா-1 ரேஸ் போட்டியின் 10-வது சுற்று ஹங்கேரியில் ஜூலை 28-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்.