Published:Updated:

சென்னையில் சர்வீஸ் செய்து பலனில்லை!

சென்னையில் சர்வீஸ் செய்து பலனில்லை!

சென்னையில் சர்வீஸ் செய்து பலனில்லை!

சென்னையில் சர்வீஸ் செய்து பலனில்லை!

Published:Updated:

தமிழ்  பா.கார்த்திக் 

 ##~##

இந்த மாதம் ஃபோக்ஸ்வாகனின் சென்னை சர்வீஸ் சென்டரில் தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறார் பெரம்பூர் வாசகர் சிவக்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்னோட பொழுதுபோக்கே... மூணு வருஷத்துக்கு ஒரு தடவை கார் மாத்துறதுதான். மாருதி, ஹூண்டாய், டாடா-னு நான் பயன்படுத்தின கார்கள் எல்லாமே அப்படித்தான். 'ஒரு சேஞ்சுக்கு ஜெர்மன் கம்பெனிக்குப் போடா மச்சான்’னு என் ஃப்ரெண்ட் சொன்னதால், ஃபோக்ஸ்வாகன் அல்லது ஸ்கோடா கார் வாங்கலாம்னு பிளான் போட்டேன்.

ரெண்டுமே ஜெர்மன் கம்பெனி; கிட்டத்தட்ட ஒரே விலை; சொகுசா இருக்கும்; பில்டு குவாலிட்டி சூப்பர்னு எல்லாப் பக்கம் இருந்தும் நல்லபடியாவே கருத்து வந்துச்சு. போலோவை டிக் பண்ணினோம். சென்னையில விசாரிச்சப்போ 6 மாசம் வெயிட்டிங் பீரியட்னு சொல்லிட்டாங்க. அதனால், கோவை ரமணி மோட்டார்ஸில் 2010 டிசம்பர் மாசம் என் மனைவி முத்துலட்சுமி பெயரில் போலோவை புக் பண்ணினேன். புகுந்த வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை மாதிரி நல்ல மரியாதையோடு, ஒரே வாரத்தில் காரை டெலிவரி செஞ்சாங்க!

சென்னையில் சர்வீஸ் செய்து பலனில்லை!

கார் வாங்குவது சந்தோஷம்தான். ஆனா, சர்வீஸ், செலவுனு வர்றப்போதான், 'டவுசர் கழண்டுச்சே’னு பாட்டு சிச்சுவேஷன் ஞாபகத்துக்கு வரும். எனக்கும் அப்படித்தான். ஒவ்வொரு முறை சர்வீஸ் விடும்போதும் பெரிய போராட்டமா இருக்கும். 'நாளைக்கு போன் பண்றோம்’பாங்க. போன் வரவே வராது. ரெண்டு நாள் கழிச்சு நாமளாதான் போய் விசாரிச்சுக்கணும். அப்ரா மோட்டார்ஸ் சர்வீஸ் சென்டர் ரொம்ப மோசம்னு, சுந்தரம் மோட்டார்ஸ்க்குப் போனா அங்கேயும் இதே கதிதான். பவர் விண்டோஸ் பிரச்னைனு ரெண்டு பேர்கிட்டேயும் மாறி மாறி அலைஞ்சதுதான் மிச்சம். 'எல்லாம் சரியாத்தான் இருக்கு’னு சொல்றாங்களே தவிர, அதே பிரச்னை அப்படியேதான் இருக்கு!

சரி; பவர் விண்டோஸ் ப்ராப்ளம்தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு மனசைத் தேத்திக்கிட்டேன். ஆனா, போலோவோட ஹேண்ட்லிங், டிரைவிங் கம்ஃபர்ட் எனக்குப் பிடிச்சிருந்தது. புது கார் எடுத்தா, நாலு மாசத்துக்கு ஒரு தடவை டூர் அடிக்கிறது என்னோட வழக்கம்.

போன டிசம்பர், வயநாடு (கேரளா) வரைக்கும் ஃபேமிலி டூர் போனோம். கார் வாங்கும்போது, மோட்டார் விகடன்லயே சொன்னாங்க... போலோவில் இருக்கிற மிகப் பெரிய பிரச்னை - கிரவுண்ட் கிளியரன்ஸ்தான் (168 மிமீ). இது வென்ட்டோ காருக்குச் சமமானதுதான். ஆனா, சின்ன கார், சாஃப்ட் சஸ்பென்ஷன்ங்கிறதால பின்னால மூணு பேரு உக்காந்துட்டா, ஸ்பீடு பிரேக்கர்ல செம அடி வாங்குது. ஊருக்கு வந்து காரை பார்க் பண்ணும் போதுதான் தெரிஞ்சது... ஸ்பீட் பிரேக்கர்ஸ்ல அடி வாங்கி காரோட ஆயில் சம்ப் உடைஞ்சு, ஆயில் லீக் ஆகிட்டு இருந்திருக்கு!

உடனே காரை அப்ரா மோட்டார்ஸ் சர்வீஸ் சென்டர்ல விட்டேன். கார் வாங்கும்போது, நல்லாக் கனிவா பேசுறவங்க, சர்வீஸ்னு போனா ஏன் மாறிடுறாங்கனு தெரியலை. 'இப்போ ரேம்ப்ல காரை ஏத்தி செக் பண்ண முடியாது... நாளைக்கு, கால் பண்ணின பிறகு வாங்க’னு அனுப்பிட்டாங்க. மறுநாள் கால் பண்ணவே இல்லை. அதுக்கடுத்த நாள் நானா போனப்போ, 'ஆயில் சம்ப் மட்டுமில்லை; ஆயில் சீலும் சேர்த்து மாத்தணும். 25,000 ஆகும்... இன்ஷூரன்ஸ் கவர் பண்ணிடறீங்களா?’னு கேட்டாங்க. மறுநாளே இன்ஷூரன்ஸ் ஆஃபீஸில் இருந்து ஆட்கள் வந்துட்டாங்க. ஆனா, அவங்ககிட்டேயும் அதே பதில்தான் சொன்னாங்க: 'மெக்கானிக் ஷார்ட்டேஜ். ரெண்டு நாள் கழிச்சு போன் பண்றோம்’னு அவரையும் அனுப்பிச்சுட்டாங்க. வழக்கம்போல போன் பண்ணவே இல்லை.

நான் போன் பண்ணிக் கேட்டப்போ, 'இன்ஷூரன்ஸ் சர்வே எடுத்தாச்சு. நாலு நாள்ல உங்க கார்

சென்னையில் சர்வீஸ் செய்து பலனில்லை!

ரெடியாகிடும்’னு சொன்னாங்க. ஆனா, இன்ஷூரன்ஸ் ஆஃபீஸர்கிட்ட கேட்டப்போ, 'எங்ககிட்ட காரைக் காண்பிச்சாதானே, நாங்க காரை சர்வே பண்ண முடியும்’னு கடுப்பாயிட்டாங்க. அப்புறம் சர்வீஸ் சென்டர் போய், 'எனக்கு இன்ஷூரன்ஸ் அமௌன்ட்கூட வேணாம். என் சொந்தச் செலவிலேயே பண்ணிடுறேன். தயவுசெஞ்சு எனக்குச் சரிபண்ணிக் கொடுங்க...’னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டேன். 'இப்போ ஆயில் சம்ப் ஸ்டாக் இல்ல... வந்தவுடனே நிச்சயமா பண்ணிடுறோம்’னு சொன்னாரு அந்த நல்லவரு!

அடுத்த வாரம் போனப்போ, 'ஆயில் சம்ப் மாத்தியாச்சு சார்’னு அவர் சொன்னவுடன் சந்தோஷமா ஆயிடுச்சு. 'எங்கே காட்டுங்க?’னு சொன்னதும், ரேம்ப்ல காரை ஏத்திக் காண்பிச்சாங்க. ஆனா, ஆயில் லீக் ஆகிட்டுதான் இருந்துச்சு. 'சம்ப் மாத்தியாச்சுனு சொன்னீங்க. இன்னும் லீக் ஆகுதே’னு கோபப்பட்டேன். 'ஃப்ரன்ட் அண்டு ரியர் ஆயில் சீல் இன்னும் பிராப்ளமா இருக்குங்க. அதான்’னு அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார் சர்வீஸ் மேனேஜர்.

அப்புறம் கஸ்டமர் கேர் சர்வீஸுக்கு காட்டமா போன் பண்ண பிறகு, 'இன்னும் நாலு நாள்ல உங்க கார் ரெடியாயிடும் சார்’னு ஒருத்தர் பண்பாப் பேசினார். ஒரு வழியா, சுமார் 20,000 செலவழிச்ச பிறகு, 25 நாளுக்குப் பிறகுதான் சார் என் கார் வீட்டுக்கு வந்துச்சு. கார்ல இடியே விழுந்தாலும், இனிமே அந்தப் பக்கமே போகவே கூடாதுன்னு முடிவெடுத்து, இப்போ என் காரை புதுச்சேரி போய் சர்வீஸ் செய்துட்டு வர்றேன். இப்போ என் கார்ல பவர் விண்டோஸ், ஆயில் லீக்னு எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா, முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ, அதேமாதிரி என் முதல் சர்வீஸ் டார்ச்சர்களை என்னால மறக்க முடியலை.

ஜெர்மன் மொழியில், 'ஃபோக்ஸ்வாகன்’ என்றால், 'மக்கள் கார்’னு அர்த்தமாம். இந்த காருக்கு இப்படி ஒரு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் ஃபோக்ஸ்வாகன் சர்வீஸ் அதிகாரிகள்!'' -  என்றார் ஆவேசமாக.