தொழில்நுட்பம்
Published:Updated:

ஸ்டீம் கார் வாஷ்

நீருக்குப் பதில் நீராவி!

>>கா.பாலமுருகன்  >> பொன்.காசிராஜன் 

 ##~##

தைப் பயன்படுத்தி, பொறுமையாகச் சுத்தம் செய்ய பலருக்கு நேரமிருக்காது என்பதுதான் எதார்த்தம். காரை சர்வீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லக்கூட நேரமில்லாதவர்களின் வசதிக்காக, வீட்டுக்கே வந்து காரைச் சுத்தம் செய்து தருகிறவர்கள் இப்போது ஏராளாக இருக்கிறார்கள்.

இவர்கள், காரை முழுமையாகச் சுத்தம் செய்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது. காரிலேயே கம்ப்ரஸர் பொருத்தப்பட்ட, மொபைல் சர்வீஸ் சென்டர்களை அழைக்கலாம் என்றால், அதற்குத் தேவையான நீர், மின்சாரம் வழங்குவதற்கு அப்பார்ட்மென்டில் வசிப்பவர்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்தத் தடைகளை எல்லாம் களைந்து, புதுமையான முறையில் மொபைல் கார் வாஷ் சர்வீஸ் சென்டரைத் துவக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார்.

ஸ்டீம் கார் வாஷ்

அப்படி என்ன புதுமை என்கிறீர்களா? நம் வீடு தேடி வரும் இவருக்கு தண்ணீரோ, மின்சாரமோ தர வேண்டியது இல்லை. முழுக்க முழுக்க காரை நீராவியாலேயே (ஸ்டீம்) சுத்தம் செய்துவிடுகிறார். இந்த ஐடியா எப்படித் தோன்றியது என செந்திலைச் சந்தித்துக் கேட்டோம்.

''ஐடி நிறுவனங்களுக்குப் பேருந்துகளை இயக்கும் நிறுவனத்தில் இணைப்பாளராக வேலையில் இருந்தேன். ஐடி நிறுவனப் பணியாளர்களின் கார்கள் பெரும்பாலும் அழுக்காக, தூசு படிந்துதான் காணப்படும். ஏனென்றால், காரைச் சுத்தம் செய்வதற்கு அவர்களுக்குப் பெரும்பாலும் நேரம் இருக்காது. கார் கிளீனிங் சம்பந்தமாக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வெகுநாட்களாக இருந்து வந்தது. மொபைல் சர்வீஸ் சென்டர்கள் ஏற்கெனவே இருப்பதால், இதில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை இணையத்தில் தேட வைத்தது.

ஸ்டீம் கார் வாஷ்

வெளிநாடுகளில் காரைச் சுத்தம் செய்ய, தண்ணீருக்குப் பதிலாக நீராவியைப் பயன்படுத்துவதை அறிந்தேன். நீராவியைப் பயன்படுத்துவதால், மிகக் குறைவான நீர்தான் செலவாகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். மேலும், காரில் அமர்ந்து நாம் உண்ட உணவுப் பொருட்கள் சிந்துவதாலும், பல்வேறு காரணங்களாலும் பாக்டீரியாக்கள் உருவாகும். இது சிலருக்கு அலர்ஜியை  உருவாக்கும். நீராவியைப் பயன்படுத்தினால், பாக்டீரியாக்கள் கொல்லப்படுகிறது என்பதையும் தெரிந்து கொண்டேன்.

நீராவியால் இயங்கும் இந்த இயந்திரத்தை கொரியாவில் தயாரிக்கிறார்கள். அதை கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. அங்கிருந்து இந்த சாதனத்தை வாங்கிய பிறகு தான்  நீராவியால் காரைச் சுத்தம் செய்யும் முதல் மொபைல் சர்வீஸ் சென்டராக என் வாகனம் உருவானது!'' என்றார்.

நீராவியைத் தயாரிக்கும் இயந்திரம் பற்றிக் கேட்டபோது, ''எல்பிஜி எரிவாயு மூலம் இயங்கும் இந்த இயந்திரத்தின் விலை மூன்றரை லட்சம். இதை ஆம்னி வேனில் பொருத்தியுள்ளேன். காருக்கும் இந்த இயந்திரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு காரைச் சுத்தம் செய்ய அதிகபட்சம் பத்து லிட்டர் தண்ணீர்தான் தேவைப்படும். ஒரே சமயத்தில் இரண்டு கார்களைக்கூட சர்வீஸ் செய்ய முடியும். சின்ன வகை கார்களுக்கு வாஷ், பாலீஷ், வாக்யூம் கிளீனிங் அனைத்தும் சேர்த்து 500 ரூபாயும், பெரிய வகை கார்களுக்கு 650 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறேன்!'' என்றார் செந்தில்.