>>க.நாகப்பன் >>சொ.பாலசுப்பிரமணியன்

கார் வடிவமைப்பு என்பது ஒரு தனித் துறை. அதில், நம் நாட்டில் பிரபலமானவர் திலீப் சாப்ரியா. ஆட்டோமோடிவ் ரிசர்ச் அண்டு ஸ்டடீஸ் சென்டர் (DYP-DC) என்ற பெயரில் புனேயில் கல்லூரி நடத்தி வருகிறார். அவ்வப்போது இந்தியாவெங்கும் ஆட்டோமொபைல் துறை ஆர்வலர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதும் உண்டு. சமீபத்தில் சென்னையில் ஆட்டோமொபைல் ஸ்கெட்சிங் பற்றி ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை நடத்தியது இந்தக் கல்லூரி.

இதில் மொத்தம் 23 பேர் கலந்து கொண்டனர். ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் இவர்கள் ஸ்கெட்ச் செய்த வடிவமைப்புகள் மிகப் புதுமையாக இருந்தன. இவர்கள் ஸ்கெட்சிங்கில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் கூறிய பயிற்சியாளர் ஜக்பிரீட் சிங், கார் வரைவதற்கான அடிப்படை ஸ்கெட்சிங் குறித்துக் கற்றுத் தந்தார்.

பொலிடிக்கல் சயின்ஸ் படித்துவிட்டு, அனிமேஷனில் புகுந்து கலக்கும் தீலீபன் இதில் ஒரு பங்கேற்பாளர். லண்டனில் சசக்ஸ் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்.சி. ஆட்டோமொபைல் படிக்க விரும்பும் இவர், ''3டி கார் டைமென்ஷன்ஸ் அளவு சொல்லித் தந்தாங்க. ஒரு காரை வரையணும்னா முதல்ல டயரை வரையணும். டயரை வெச்சுத்தான் ஒட்டுமொத்த காரோட பகுதிகளை வரையணும்.

கார்ல சன் லைட் எங்க விழும், பிரதிபலிப்பு எப்படி இருக்கும், வளைவான இடங்கள், வளைவு குறைவான இடங்கள்ல பிரதிபலிப்பு எப்படி இருக்கும்னு வரையுறதைப் பத்தி சொல்லித் தந்தாங்க. நான் வரைஞ்ச ஸ்கெட்சிங்ல டயரோட இடைவெளி ரொம்ப அதிகமா இருந்துச்சு. உயரம் குறைவா இருந்துச்சு. இதையெல்லாம் சுட்டிக் காட்டினாங்க. இப்போ நிறைய டெக்னிக்குகளைக் கத்துக்கிட்டேன். டிசைனிங்ல ஸ்பெஷலிஸ்டாகி கலக்கப் போகிறேன்!'' என்று சந்தோஷமாகப் பேசினார்.