கார்ஸ்
Published:Updated:

கார் சிறுத்தாலும் வேகம் குறையாது!

ஆர்சி கார் ரேஸ்

எஸ்.ஷக்தி  >>  கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

 ##~##

ட்டோமொபைல் விஷயத்தைப் பொறுத்தவரையில், கோவை எப்போதும் சில படிகள் முன்னேதான்! சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ரேஸில் ஆரம்பித்து, ஸ்கேல் மாடல் கார்கள் வரை அத்தனைக்கும் இங்கே ரெட் கார்பெட் வரவேற்பு உண்டு. லேட்டஸ்டாக 'ஆர்சி’ எனப்படும் 'ரேடியோ கன்ட்ரோல்’ கார்களுக்கான ரேஸையும் நடத்தி காலரை உயர்த்திக் கொள்கிறது கோவை.

'கோவை மாடலர்ஸ் கிளப்’ சார்பில், கடந்த கடந்த மாதம் ரேடியோ கன்ட்ரோல் கார்களுக்கான பந்தயம் ஈச்சனாரி அருகிலிருக்கும் ஜி.டி ஓட்டுனர் பயிற்சி மைதானத்தில் நடந்தது.

ஒரு சாதாரண காருக்கான அத்தனை அம்சங்களும் ஆர்.சி கார்களுக்கும் இருக்கும். 2 ஸ்ட்ரோக் இன்ஜின்களைக் கொண்டவை இவை. ஆனால், கியர்கள் கிடையாது. பெட்ரோல் அல்லது மெத்தனால் மூலம் இயங்கும் இதன் இன்ஜின் ஜெர்மனி, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. இன்ஜின் சிறப்பம்சத்தைப் பொறுத்து

கார் சிறுத்தாலும் வேகம் குறையாது!

15,000-த்தில் இருந்து 2 லட்சம் வரை விலை கொண்டவை!

கார் சிறுத்தாலும் வேகம் குறையாது!

அதிகபட்சம் மணிக்கு 120 கி.மீ வேகம் வரை தொடும் திறன் கொண்ட இந்த கார்கள், 0-100 வேகத்தை ஜஸ்ட் மூன்றே விநாடிகளில் எட்டிவிடும் கார்களும் உண்டாம். (தரமான தயாரிப்பாக இருந்தால் இது சாத்தியம்!)

ஆர்.சி கார்களை இயக்குவதொன்றும் சிறு பிள்ளைத்தனமான விஷயமில்லை. ஒவ்வொரு நொடியையும் சரியாக ஜட்ஜ் செய்து மூவ் பண்ண வேண்டும். கண்களும், கைகளும் பக்காவாக கோ-ஆர்டினேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் டிராக்கில் கார் டான்ஸ் ஆடி விடும் அல்லது கவிழ்த்திப் போடப்பட்ட கரப்பான்பூச்சி போல் கவிழ்ந்துவிடும். மிகப் பெரிய ரேஸர்களுக்குக்கூட ஆர்.சி கார் இயக்கம் என்பது இலகுவான விஷயமில்லை!

''கோவையில இனி இந்த ரேஸை சீரான இடைவெளியில நடத்தலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். இந்த மாதிரியான விஷயத்துல கவனம் செலுத்துற சின்ன குழந்தைகளுக்கு ஆட்டோமொபைல் ஃபீல்டு மேலே மிகப் பெரிய ஆர்வமும், மரியாதையும் உருவாகும். அதுதான் எங்களோட நோக்கம்!'' என்கிறார்கள் மாடலர்ஸ் கிளப் நிர்வாகிகள்.