கார்ஸ்
Published:Updated:

கார்களை உடைப்பது எப்படி?

கற்றுத் தருகிறது கவர்மென்ட்!

  சு.சுரேஷ்குமார்   ப.சரவணகுமார் 

 ##~##

ம்பாஸடர், பிரீமியர் பத்மினி, மாருதி தவிர வேறொன்றையும் பார்த்தறியாத இந்தியச் சாலைகள், தாராளமயமாக்கல் கொள்கையின் புண்ணியத்தால் இன்று தினம் ஒரு புது வகையான காரோடு உறவாடுகின்றன. இன்று இந்தியாவில் வாகனங்களின் வகைகளும் எண்ணிக்கையும் பெருகி வரும் அதே தருணத்தில், உபயோகம் முடிந்துபோன வாகனங்களும் அதிகரித்துவிட்டன. இவையெல்லாம் எங்கே செல்லும், என்ன ஆகும்? நீங்கள் அரதப் பழசு என்று விற்கும் உங்கள் பழைய கார்கள், பெரும்பாலும் முதலில் உதிரி பாக சந்தைக்கும், பின்னர் உலோகங்களைப் பிரித்தெடுக்கும் பட்டறைகளுக்கும் செல்கிறது. சென்னையில் புதுப்பேட்டை போன்ற

கார்களை உடைப்பது எப்படி?

வாகன உதிரி பாக சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பாகங்கள் பழைய வாகனங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதுதான்.

பல கோடிகள் புழங்கும் இது போன்ற சந்தைகளால் மக்கள் பயனடைந்தாலும், பழைய வாகனங்களை தொழில்நுட்ப உதவியின்றி உடைத்துப் பிரிப்பதில் பல்வேறு பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சுற்றுச் சூழல் சீர்கேடு, நிலத்தடி நீர் மற்றும் மண் நஞ்சாதல், வாகனங்களில் இருந்து மறு சுழற்சி செய்யப்படும் பொருட்களின் தரம், இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஈயம் போன்ற உலோகங்களால் ஏற்படும் நோய்கள் ஆகியவையும் இதில் அடக்கம்.

ஆட்டோமொபைல் தயாரிப்பில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் உபயோகம் முடிந்த மோட்டார் வாகனங்களின் மறு சுழற்சி மற்றும் மறு உபயோகத்திற்கு தெளிவான, கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நடைமுறையில் நமது நாட்டில் இதுவரை அப்படிப்பட்ட எந்த விதிமுறைகளும் இல்லை.

கார்களை உடைப்பது எப்படி?

இந்த நிலையில், இந்தத் தொழிலை முறைப்படுத்த ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசின் கன ரகத் தொழில்துறை அமைச்சகமும், இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கமும் (ஷிமிகிவி) சேர்ந்து  ழிகிஜிஸிவீறி  எனும் திட்டத்தின் கீழ் உபயோகம் முடிந்த மோட்டார் வாகனங்களின் மறு சுழற்சிக்கான மாதிரி தொழிற்கூடம் ஒன்றை, சென்னை ஒரகடம் சிப்காட்டில் உள்ள உலகளாவிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மைய (நிகிஸிசி) வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 2 அன்று துவக்கி வைத்தனர்.

கார்களை உடைப்பது எப்படி?

மோட்டார் வாகனங்களின் மறு சுழற்சிக்கான மாதிரி தொழிற்கூடமாக சிறிய அளவில் இது தொடங்கப்பட்டாலும், இதன் முக்கியத்துவம் மிக அதிகம். இந்தத் தொழிற்கூடம் அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், மோட்டார் வாகன மறு சுழற்சியில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி, தற்போது கிடைக்கும் மூலப்பொருட்களைவிட இன்னும் 20 சதவிகிதத்துக்கும் மேலாக அதிகப்படுத்துவதும், இந்தத் தொழிலில் உள்ள மற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த தொழிநுட்ப மேம்பாடுகளைப் பற்றி கற்றுத் தருவதும், அதன் மூலம் உற்பத்தியைப் பெருக்குவதும் ஆகும். இதன் மூலம் தற்போது இந்த தொழிலை நம்பியிருக்கும் 30,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவதுடன் சுற்றுச் சூழலும் பெரிதளவு பாதுகாக்கப்படும்.

இந்தியாவில் மோட்டார் வாகன மறு சுழற்சியின் மூலம் மட்டும் 2020-ம் ஆண்டு வாக்கில் ஒன்றரை மில்லியன் டன் உலோகங்களும், ஒரு லட்சத்து எண்பதாயிரம் டன் அலுமினியமும், சுமார் எழுபத்தைந்தாயிரம் டன் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களையும் திரும்பப் பெறலாம் என்றும், மோட்டார் வாகனத் துறையின் வளர்ச்சிக்கேற்ப இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள். இதன் விளைவாக மோட்டார் வாகன மறு சுழற்சித் துறையில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, சுரங்கம் தோண்டுதல் போன்றவை குறைக்கப்பட்டு இந்தியாவின் காடுகள் மற்றும் பிற  இயற்கை வளங்களுக்கு ஏற்படும் கெடுதல் குறைக்கப்படும்.

''இது அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த தொழிற் கூடத்தின் ஆரம்பகால பரிசோதனைகள் மற்றும் செயல்பாட்டிற்காக, பல்வேறு மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் உபயோகம் முடிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் இருபதுக்கும் மேற்பட்ட கார்களையும் தந்தது சிரப்பான தொடக்கம்!'' என்று கனரக தொழில்துறையின் செயலர் சுந்தரேசன் ஐஏஎஸ் பாராட்டினார்.

இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடு சிறப்பான முறையில் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் 'ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் சென்னையில், இது போன்ற ஒரு தொழில்நுட்பக் கூடம் அமைக்கப்பட்டது பொருத்தமானதே!