Published:Updated:

இந்தியாவின் முதல் சிவிக் Type R

ஹோண்டா சிவிக் TypeR
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா சிவிக் TypeR

ஆஃப்ட்ர் மார்க்கெட் - ஹோண்டா சிவிக் TypeR

இந்தியாவின் முதல் சிவிக் Type R

ஆஃப்ட்ர் மார்க்கெட் - ஹோண்டா சிவிக் TypeR

Published:Updated:
ஹோண்டா சிவிக் TypeR
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா சிவிக் TypeR

``ஹோண்டா இதை விற்பனை செய்யவில்லை... அதனால் நானே உருவாக்கிட்டேன்! முன்னொரு காலத்தில் என்றெல்லாம் கதையை ஆரம்பிக்காமல் நேராக உரையாடலுக்குச் செல்வோம்.’’ - ராயபுரத்தில் இருக்கும் டாக்டர் பிரஷாந்த் என்பவருக்கும் எனக்கும் இடையே நடைபெற்ற ஒரு மணிநேர உரையாடல் இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பிரதர், இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டதா?’’

``இல்லை. ஒரிஜினல் பார்ட்ஸ் வச்சு நாங்களே ரெடி பண்ணது. இது ஒரு லுக்-அலைக். சரி, சரி, காரில் ஏறுங்க. போயிட்டே பேசுவோம்’’ என்றபடி பிரஷாந்த் அழைக்க, ஆர்வமாக அந்த 2019 சிவிக் TypeR காரில் ஏறினேன். உள்ளே பார்த்தால்... அது இந்த ஆண்டு விற்பனைக்கு வந்த சிவிக் 10-ம் தலைமுறை மாடல்.

``ரொம்ப நல்லா ரெடி பண்ணிருக்கீங்க. இப்போ வெளிநாட்டில் ஓடிட்டு இருக்கிற கரன்ட் ஜென் TypeR போலவே இருக்கு. ஜப்பான்காரன் கண்டுபிடிச்சதுலேயே ரெண்டு கார் ரொம்ப வித்தியாசமானது. ஒண்ணு நிஸான் GTR. இன்னொண்ணு இந்த TypeR. சரிதானே?’’

``இருக்கலாம். ஆனால், எப்பவும் ஹோண்டாதான் என்னுடைய சாய்ஸ். சரி, கொஞ்ச நேரம் குறுக்கப் பேசாதீங்க. பிளாஷ்பேக் செல்லப்போறேன். (சில நொடி அமைதிக்குப் பிறகு) 2008-ல் ஒரு ஹோண்டா சிட்டி வாங்கினேன்.

இந்தியாவின் முதல் சிவிக் Type R

என்னுடைய முதல் கார் அது. 10 வருஷத்துக்கு மேல அதைப் பயன்படுத்தியதில் ஹோண்டா ரசிகனா மாறிட்டேன். அதை மாத்திட்டு வேற ஏதாவது ஒரு கார் வாங்கலாம்னு யோசிச்சப்போதான், ஹோண்டா சிவிக் வந்தது. உடனே வாங்கிட்டேன். எனக்கு ரொம்ப நாட்களாகவே சிவிக் TypeR மேல ஒரு கண்ணு. இந்த முறையும் ஹோண்டா சிவிக் TypeR காரைக் கொண்டு வரமாட்டாங்கனு தெரிஞ்சதும், நானே ஒரு TypeR உருவாக்கிட்டேன். இதுதான் இந்தியாவின் முதல் 10th Gen சிவிக் TypeR. இதுபோல இந்தியாவில் வேற ஒரு மாடலைப் பார்க்கவே முடியாது.”

``டெல்லிப் பக்கம் ஒரு TypeR மாடல் சுத்திட்டு இருக்கிறதா ஃபோட்டோலாம் போடுறாங்களே. அதென்ன சும்மாவா?’’

``சும்மா இல்லைங்க. நிஜம்தான். நானும் பார்த்திருக்கேன். நீங்க இப்போ உட்கார்ந்து வர்ற இதே கார்தான் அந்த கார். சந்தேகம் இருந்தா நம்பர் பிளேட்டைப் பாருங்க; உங்களுக்கே புரிஞ்சிடும்.”

``அட, ஆமாம் ப்ரோ... அதே கார்தான். ஆனால், இந்த கார்பன் ஃபைபர் பானெட், சைடு மிரர் எல்லாம் அதில் இல்லையே?”

``இது தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செஞ்சு, இப்போதான் மாட்டியது. என் காரில் இருக்கிறது ஒரிஜினல் TypeR கிட். ஃபிரன்ட் பம்ப்பர், சைடு ஸ்கர்ட், ரியர் பம்ப்பர், ஸ்பாய்லர், ஏர்வென்ட் இருக்கும் மெட்டல் ஃபென்டர், ரியர் வீல் ஆர்ச், TypeR கிரில் - இதெல்லாம் இந்த கிட்டில் வரும். கார்பன் ஃபைபர் பானெட், சைடு மிரர் ரெண்டும் பாடி கிட்டில் வராது. ஹோண்டா இதை வெளிநாட்டில்கூட ஆக்ஸசரிஸாத்தான் தராங்க. நாங்க தாய்லாந்து ஹோண்டாவில் இருந்து இதை வாங்கி மாட்டியிருக்கோம்.”

இந்தியாவின் முதல் சிவிக் Type R

``தாய்லாந்து போய் வாங்கிட்டு வந்தீங்களா?”

``ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. டெல்லியில் இருக்கிற ஹோண்டா டீலரிடமிருந்,து சோளிங்கநல்லூர் API Cars வாங்கிக் கொடுத்தாங்க. கார்பன் ஃபைபர் பார்ட்ஸ் எல்லாம் அண்ணா நகர் ஃபென்டாஸ்ட்டிக் கார் ஸோன் மூலமா வாங்கினோம்.”

``சிவிக் எடை அதிகமானது. அதுவும் ஃபிரன்ட் டிரைவ். ஆக்ஸிலரேஷனும்கூட அவ்வளவு அதிரடியா இருக்காது. இது எப்படி?”

``சாதாரண சிவிக் பாடி பார்ட்ஸ் எல்லாம் ஃபைபர் பிளாஸ்டிக்கில் வரும். ஆனால், இந்த கிட் ABS (Acrylonitrile Butadiene Styrene) பிளாஸ்டிக்கில் வரும். பழைய பாடியைவிட இது எடை குறைவாகவும், வலுவாகவும் இருக்கும். கார்பன் ஃபைர், ABS பிளாஸ்டிக்கைவிட எடை குறைவு. இரும்பைவிட வலுவானது. ஒரிஜினல் மாடல் 20 இன்ச் வீல் வரும். தினமும் பயன்படுத்த அது செட் ஆகாது. அதனால், 18 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் போட்டிருக்கேன். இதுவும் சாதாரணமா வர வீலை விட எடை குறைவானது. TypeR மாடல் போலவே முன்னாடி 235/40 டயர்ஸ், பின்னாடி கொஞ்சம் பெரிய 245/40 டயர்ஸ் போட்டிருக்கிறேன். இது சொகுசுக்குக் குறை வைக்காமல் கிரிப்பை அதிகப்படுத்தும்.”

``எல்லாம் ஓகே... ஆனால் தேவையில்லாத பாகங்கள் பாதுகாப்பைப் பாதிக்காதா?”

``ஹோண்டா சிவிக், அமெரிக்காவின் NHTSA (National Highway Traffic Safety Administration) க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய கார். காரின் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கலில் ஒரு சின்ன மாற்றம்கூடs செய்யவில்லை. காரின் எடை அதிகமாகவும் இல்லை, குறையவும் இல்லை. 2 மணிநேரத்தில் எல்லாத்தையும் மாட்டிட்டோம். இந்த மாடலில் OBD (On Board Diagnostics) லாக் பண்ணியிருப்பாங்க.

இந்தியாவின் முதல் சிவிக் Type R

ஹோண்டா அனுமதி இல்லாமல் இந்த காரை ட்யூன் பண்ண முடியாது. அதனால பர்ஃபாமன்ஸில் எந்த மாற்றமும் கிடையாது. இந்த கார் வாங்கி 4 மாசம்தான் ஆகுது. ஹோண்டாவில் பேசினோம். எங்க வாரன்ட்டி, ஃப்ரீ சர்வீஸ் எல்லாம் அப்படியேதான் இருக்குனு சொல்லிட்டாங்க. இந்த மாடிஃபிகேஷன் சட்டப்படி சரியானதுதானானு விசாரிச்சோம். சட்டச்சிக்கலும் எதுவும் இல்லைனு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன பாதுகாப்புக் குறை இருக்கு?’’

``இதுக்கெல்லாம் கண்டிப்பா அதிகமா செலவாகியிருக்குமே?’’

``இந்த கார் ஆக்டேவியா அளவுக்கு பர்ஃபாமன்ஸ் இருக்காதுதான். ஆனால், ஆக்டேவியாவைவிட டபுள் மடங்கு மைலேஜ் கொடுக்கும். சொகுசும் இதில் அதிகம். இவ்வளவு மாடிஃபிகேஷன் பண்ண பிறகும் ஹோண்டா கம்பெனியோட சப்போர்ட் இருக்கு. அதனால் இதற்கு நான் செலவு செய்தது எதுவும் வீண் கிடையாது.’’