Published:Updated:

`நியூக்ளியர் பாம் இருந்தால்தான் நொறுக்க முடியும்!’ - கிண்ணுனு வரும் புது ஸ்கார்ப்பியோ ஹைலைட்ஸ்!

Scorpio-N #BigDaddyOfSUVs

ஆனந்த் மஹிந்திரா, இந்த ஸ்கார்ப்பியோவைப் பற்றிச் சொல்லியிருப்பதற்குக் காரணம், இதன் கட்டுமானத்தின் மேலுள்ள நம்பிக்கையில். இதை #BigDaddyOfSUVs எனும் ஹேஷ்டேக்கில் பிரபலப்படுத்தி வருகிறது மஹிந்திரா.

`நியூக்ளியர் பாம் இருந்தால்தான் நொறுக்க முடியும்!’ - கிண்ணுனு வரும் புது ஸ்கார்ப்பியோ ஹைலைட்ஸ்!

ஆனந்த் மஹிந்திரா, இந்த ஸ்கார்ப்பியோவைப் பற்றிச் சொல்லியிருப்பதற்குக் காரணம், இதன் கட்டுமானத்தின் மேலுள்ள நம்பிக்கையில். இதை #BigDaddyOfSUVs எனும் ஹேஷ்டேக்கில் பிரபலப்படுத்தி வருகிறது மஹிந்திரா.

Published:Updated:
Scorpio-N #BigDaddyOfSUVs

தமிழ் சினிமாவில் ஸ்கார்ப்பியோ என்றாலே வில்லன்களின் கார் என்றுதான் அர்த்தம். ஸ்கார்ப்பியோ காரில் வில்லன் வரும்போது, பயம் கலந்த மரியாதை தருவார்கள் ஊர்க்காரர்கள்; வில்லன் குரூப்புக்குக் கோபம் வந்தால்… ‘எட்றா வண்டியை’ என்று மஹிந்திரா ஸ்கார்ப்பியோவைத்தான் அதிக ஆர்பிஎம்–ல் எகிற விடுவார்கள்; 7 சீட்டர் ஸ்கார்ப்பியோவில் 14 பேர் ஃபுட்போர்டு அடிப்பார்கள்; டூர் அடிக்க லக்கேஜ் வைக்க வேண்டிய பூட் ஸ்பேஸில் கத்தி கடப்பாறை அரிவாள்களை வைத்திருப்பார்கள்; கோபம் உச்சமானால் ஸ்கார்ப்பியோவுக்கு பாம் வைத்துப் பறக்க வைப்பார்கள். (அப்படியே ஹீரோ போலீஸ் அதிகாரியாக ஸ்கார்ப்பியோவில் வந்து பெருமை தேடித் தந்தாலும், வில்லன்களின் வெடிகுண்டுக்கு ஸ்கார்ப்பியோவைப் பறி கொடுத்து விடுவார்!)

இதைப் பற்றி மஹிந்திராவின் டிசைன் டீம் தலைவர் வேலுசாமி வருத்தப்பட்டுக் கூடப் பேட்டி கொடுத்திருக்கிறார்.

Old Scorpio
Old Scorpio

நீங்கள் பாலிவுட் சினிமாவில் இயக்குநர் ரோஹித் ஷெட்டி படங்களைப் பார்த்தீர்கள் என்றால்… அங்கேயும் இந்தக் காட்சிகளில் கொஞ்சம்கூட மாற்றம் இருக்காது. சிங்கம் சீரிஸ் படங்கள், தில்வாலே, சென்னை எக்ஸ்ப்ரஸ், சிம்பா, சூரியவன்சி போன்ற படங்களை எடுத்த ரோஹித் ஷெட்டி, கிட்டத்தட்ட தன் எல்லாப் படங்களிலும் பாம் வைத்து மஹிந்திரா கார்களை, அதுவும் ஸ்கார்ப்பியோக்களைப் பறக்க விட்டிருப்பார்.

‘‘இனிமேல் அது எடுபடாது; புது மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை வெடிக்க வைக்க நியூக்ளியர் பாம் இருந்தால்தான் முடியும்!’’ என்று இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு ட்விட்டரில் காமெடியாய் ரிப்ளை செய்திருக்கிறார், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Anand Mahindra
Anand Mahindra

ஆம்! மஹிந்திரா, தனது புது ஸ்கார்ப்பியோவின் நெக்ஸ்ட் ஜென் மாடலைக் கொண்டு வரவிருக்கிறது. அதன் பெயர், ஸ்கார்ப்பியோ–N. புத்தம் புது டிசைனுடன், அந்த இரட்டைக் கோபுர லோகோவுடன் செம ஃப்ரெஷ்ஷாக வரவிருக்கிறது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ–N. ஜூன் 27–ம் தேதி லாஞ்ச் ஆக இருக்கும் புது ஸ்கார்ப்பியோ பற்றி சில ஹைலைட்ஸ்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
#BigDaddyOfSUVs
#BigDaddyOfSUVs
  • கிண்ணென்ற கட்டுமானத்துக்கும், ஆஃப்ரோடையும் சமாளிக்கும் அதே லேடர் ஆன் ஃப்ரேம் சேஸியில் தயாராக இருக்கிறது ஸ்கார்ப்பியோ. இது தார் ஜீப் ரெடியான அதே ப்ளாட்ஃபார்ம்.

  • இப்போதிருக்கும் ஸ்கார்ப்பியோவைவிட படா சைஸில், எக்ஸ்யூவி700–ல் இருக்கும் அதே 7 ஸ்லாட் கிரில்லுடன், புத்தம் புது லோகோவில், புது டிசைன் மொழியுடன், ஒரு பெரிய 7 சீட்டராக வருகிறது ஸ்கார்ப்பியோ–N. இது பார்ப்பதற்கு ஆல்ட்டுராஸ் G4 மாதிரியே பெருசாக இருக்கிறது.

  • ஹெட்லைட்ஸ்/டிஆர்எல் என முழுக்க முழுக்க எல்இடி மயம்; ஸ்போர்ட்டியான டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெரிய டச் ஸ்க்ரீன், 360 டிகிரி கேமரா, ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பெரிய பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது ஸ்கார்ப்பியோ–N.

  • இது ஒரு கனெக்டட் எஸ்யூவி. இதில் Adrenox எனும் கனெக்டட் வசதியைக் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் மொபைல் மூலமாகவே காரின் கதவைத் திறப்பது, ஸ்டார்ட் செய்வது, ஏசி ஆன் செய்வது, காரை ட்ராக் செய்வது என பல வேலைகளைச் செய்து கொள்ளலாம்.

  • இது பெட்ரோல்/டீசல் என இரண்டு ஆப்ஷன்களுடனும் வருகிறது. 2.0லிட்டர் 4 சிலிண்டர் டீசல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் என மஹிந்திராவின் தார் மற்றும் எக்ஸ்யூவி700 காரில் இருக்கும் அதே இன்ஜின்களுடன் வரும்.

  • இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு.

மற்றபடி, மஹிந்திரா இந்த ஸ்கார்ப்பியோவின் பின்பக்கத்தைக்கூட தனது அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிடவில்லை. இதன் டெயில் லைட்ஸ், வால்வோ ஸ்டைலில் சிக்னேச்சர் LED லைட்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

ஆனந்த் மஹிந்திரா, இந்த ஸ்கார்ப்பியோவைப் பற்றிச் சொல்லியிருப்பதற்குக் காரணம், இதன் கட்டுமானத்தின் மேலுள்ள நம்பிக்கையில். இதை #BigDaddyOfSUVs எனும் ஹேஷ்டேக்கில் பிரபலப்படுத்தி வருகிறது மஹிந்திரா. ஏற்கெனவே எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி700 இரண்டும் குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார்கள். தார் ஜீப், 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார். அந்த ப்ளாட்ஃபார்மில்தான் இதுவும் ரெடியாகி இருக்கிறது. அதனால், இது குளோபல் ரேட்டிங்கில் 5 ஸ்டார் வாங்குமா… அல்லது தார் மாதிரியே 4 ஸ்டார் வாங்குமா என்று தெரியவில்லை.

இருந்தாலும், ஆனந்த் மஹிந்திரா காமெடியாக ட்வீட் செய்திருப்பது, இப்போது வைரலாகி வருகிறது. இது பிக் டாடியா… இல்லை ஸ்மால் டாடியா என்பது க்ராஷ் டெஸ்ட்டில் தெரிந்துவிடும்.

ஹலோ டைரக்டர்ஸ், இந்தப் புது ஸ்கார்ப்பியோவில் ஹீரோவுக்கு ஒரு லவ் சீன் வைக்கக் கூடாதா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism