Published:Updated:

`போடா டேய்!' தமிழ்ல திட்டுற அளவு கெட்ட வார்த்தை தெரியும் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டும் பின்னணியும்

ஆனந்த் மஹிந்திரா

– பொங்கல் திருநாள் அன்று தமிழ்மொழி பற்றி மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா செய்த ட்வீட், செம வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.

`போடா டேய்!' தமிழ்ல திட்டுற அளவு கெட்ட வார்த்தை தெரியும் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டும் பின்னணியும்

– பொங்கல் திருநாள் அன்று தமிழ்மொழி பற்றி மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா செய்த ட்வீட், செம வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.

Published:Updated:
ஆனந்த் மஹிந்திரா

இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெளன ராகம்’ படத்தில் பஞ்சாபைச் சேர்ந்த சிங் ஒருவர் தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதுபோல் ஒரு காட்சி வரும். ‘‘டேய்… போடா டேய்..’’ என்று அந்த சிங் அழகு தமிழில் பேசுவதற்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது.

இந்தக் காட்சிதான் நினைவுக்கு வந்தது – ஆனந்த் மஹிந்திராவின் தமிழ்மொழி பற்றிய ட்வீட்டைப் படித்ததும். மஹிந்திரா குழுத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவுக்கு ட்விட்டரில் மட்டும் சுமார் 87 லட்சம்ஃபாலோயேர்கள் இருக்கிறார்கள். ட்விட்டர் வலைதளத்தில் செம ஆக்டிவ்வாக இருக்கும் மும்பையைச் சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா, தமிழர் திருநாள் அன்று நம் தமிழ்மொழி பற்றி ஒரு ட்வீட் செய்ததுதான் இப்போது செம வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.

‘‘நான் தமிழ்நாட்டில்தான் என் பள்ளிக்கல்வியை முடித்தேன். நான் பள்ளியில் சேர்ந்ததும் முதன் முதலில் ஒரு வார்த்தையைக் கற்றுக் கொண்டேன். அந்த வார்த்தையைத்தான் நான் இப்போதுவரை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறேன். சில சமயங்களில் சத்தமாக… சில சமயங்களில் ரொம்பவும் மூச்சை அடக்கி.. அந்த வார்த்தை இதுதான் – போடா… டேய்!’’ என்று அவர் ட்வீட் செய்திருப்பதை, ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் தாண்டி பலரும் ரசித்து வருகிறார்கள்.

ஆனந்த் மஹிந்திரா ட்வீட்
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

வாட்ஸ்–அப்பில் ஆங்கிலத்தில் மிகப் பெரிதாக வலம் வரும் ஒரு போட்டோ கார்டு ஒன்றையும் அவர் அப்லோடு செய்து, அதற்கு விளக்கம் கொடுத்திருப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ‘‘தமிழ் – வீணாக வார்த்தைகளை விரயம் செய்யாமல், ஆற்றலைச் சேமிக்கும் ஒரு மொழி’’ என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

1955-ல் மும்பையில் பிறந்த ஆனந்த் கோபால் மஹிந்திரா, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தவர். விவசாயம், ஏரோஸ்பேஸ், ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், ஐடி, இன்ஷூரன்ஸ், ஆஃப்டர் மார்க்கெட் என்று ஏகப்பட்ட தொழில்களைக் கைவசம் வைத்திருக்கும் ஆனந்த் மஹிந்திராவின் சொத்து மதிப்பு, 2020 வரை கிட்டத்தட்ட 1.6பில்லியன் டாலர்களாம். இவர் 1996–ல் ஒரு அரசு சாரா அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண் குழந்தைகளுக்குப் படிப்பறிவு வழங்கியதில் ஆனந்த் மஹிந்திராவுக்கு நல்ல பெயர் உண்டு. இவர் ஊட்டியில் உள்ள லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் மிலிட்டரி பள்ளியில்தான் தனது பள்ளிப் படிப்பைப் படித்தார். அப்போதுதான் இந்த ‘போடா… டேய்’ எனும் வார்த்தையைக் கற்றுக் கொண்டாராம். தமிழ்நாட்டில் தான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தையும் இதுதானாம்.

ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, சமீபகாலமாக தமிழ்நாட்டைப் பற்றி அதிக ட்வீட் செய்து வருவது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அண்மையில் இவர் நாமக்கல்லில் உள்ள கொல்லிமலையைப் பற்றிப் புகழ்ந்து இப்படி ட்வீட் செய்திருந்தார். ‘‘ச்சே… எனது நாட்டில் இப்படி ஓர் அற்புத இடமா! இந்தக் கொல்லிமலையில் உள்ள 70 ஹேர்பின் பெண்டு மலைச்சாலையை யார் போட்டது… இதில் என் தார் ஜீப்பில் ஏற வேண்டும்!’’ என்று அவர் சொல்லியிருந்தது செம வைரல் ஆகியது.

இப்போது ‘போடா… டேய்’ பற்றிய அதே தமிழ்மொழி பற்றிய ட்வீட்டுக்குப் பலர் ரீ–ட்வீட் செய்து தங்கள் கமென்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

‘‘கனியன் பூங்குன்றனார் பற்றித் தெரியுமா…

அப்துல் கலாம் ஐயா பேசினதைக் கேளுங்கள்...

‘போடா டேய்’–ஐ கோபத்துக்கும் பயன்படுத்தலாம்; பாசத்துக்கும் பயன்படுத்தலாம்!’’ என்று பலர் உற்சாகமாக ட்வீட் செய்து வருகின்றனர். அதில் பலரின் கேள்விகளுக்க்குப் பதில் சொல்லி ரீ–ட்வீட் செய்து வருவது, ஆனந்த் மஹிந்திரா செம ஜாலி மனிதர் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனந்த் மஹிந்திரா ட்வீட்
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

‘‘புது மொழியைக் கற்கும்போது, சில கெட்ட வார்த்தைகளையும் கற்றுக் கொள்ள நேரிடுமே… நீங்கள் தமிழில் சில கெட்ட வார்த்தைகளையும் கற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்…’’ என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘‘வேறு வழி. நான் சென்னையில் எனது மஹிந்திரா தாரில் பயணிக்கும்போது, என் தார் ஜீப்பை யாராவது இடித்துவிட்டால்… அவர்களைத் திட்டுவதற்குத் தமிழில் நிறைய கெட்ட வார்த்தைகளைக் கற்று வைத்துள்ளேன்!’’ என்று தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

அப்படியே தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம்னு வடசென்னைப் பக்கம் தாரில் வந்தீங்கன்னா… முழு சென்னைத் தமிழையும் கத்துக்கலாம் ஆனந்த் சார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism