Published:Updated:

"அப்பா, இந்த கார் செமயா இருக்கில்ல!" - உங்க வீட்ல இப்படிச் சொல்லும் குழந்தைகள் இருக்காங்களா?!

Clay Modelling

வெறும் கார் டிசைனிங் மட்டுமில்லை; அவர்களின் வரையும் ஆர்வத்தையும் மேம்படுத்த இருக்கிறது இந்தப் பயிலரங்கம். இந்த வகுப்பில், அழிப்பானைப் பயன்படுத்தாமலே வெறும் பென்சிலை மட்டுமே வைத்து, ஒரு வரைபடத்தை எப்படி வரைவது எனும்போது நமக்கே ‘அட’ போடச் சொல்கிறதுதானே!

"அப்பா, இந்த கார் செமயா இருக்கில்ல!" - உங்க வீட்ல இப்படிச் சொல்லும் குழந்தைகள் இருக்காங்களா?!

வெறும் கார் டிசைனிங் மட்டுமில்லை; அவர்களின் வரையும் ஆர்வத்தையும் மேம்படுத்த இருக்கிறது இந்தப் பயிலரங்கம். இந்த வகுப்பில், அழிப்பானைப் பயன்படுத்தாமலே வெறும் பென்சிலை மட்டுமே வைத்து, ஒரு வரைபடத்தை எப்படி வரைவது எனும்போது நமக்கே ‘அட’ போடச் சொல்கிறதுதானே!

Published:Updated:
Clay Modelling
ஒரு சம்பவம். அந்தச் சிறுவனுக்கு 6 வயது இருக்கும். 3–ம் வகுப்புதான் படிக்கிறான். கார்/பைக் என்றால், அவனுக்கு உயிர். முதன் முதலில் கார் வாங்கப் போகும் மகிழ்ச்சியில் இருந்தான் அவன். ஒவ்வொரு கார் ஷோரூம்களாகச் சென்று கார்களை டெஸ்ட் டிரைவ் செய்கிறார் அவன் தந்தை. சில கார்களின் தோற்றத்தைப் பற்றி அவன் சொன்ன விதம்…

‘‘அப்பா, இந்த காரைப் பார்த்தா சுறா மீன் கடல்ல போற மாதிரியே இருக்குப்பா!’’

‘‘அப்பா, இந்த கார் வாங்கலாம்ப்பா! டைகரோட நோஸ் (புலி மூக்கு) மாதிரியே இதோட முன்பக்கம் இருக்குப்பா!’’

‘‘அப்பா, இந்த டிஜிட்டல் மீட்டரைப் பாருங்களேன்! பட்டர்ஃப்ளை மாதிரியே இருக்குல்ல!’’

இது அவன் தந்தைக்கு/உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம்! ஆனால், ஆட்டோமொபைல் டிசைனர்களுக்கு அவன் சொன்ன உதாரணம், ஒரு வாவ் ஃபேக்டர்!

Car Design Workshop
Car Design Workshop

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுல என்ன ‘வாவ் ஃபேக்டர்’ என்கிறீர்களா! அவன் சொன்ன எல்லா உதாரணங்களுமே மிகச் சரியானவை! அந்தச் சுறா மீன் கார், மஹிந்திரா மராத்ஸோ. அந்த புலி மூக்கு கார், கியா செல்ட்டோஸ். அந்த பட்டர்ஃப்ளை சென்டர் கன்சோல் கொண்ட கார், கியா காரன்ஸ். அந்தச் சிறுவன் சொன்னதுபோலவே, சுறா மீனையும் – புலியின் மூக்கையும் – பட்டாம்பூச்சியின் சிறகையும் இன்ஸ்பயர் செய்துதான் அந்த கார்களின் டிசைனர்கள் அதை வடிவமைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கார் ஆர்வம் கொண்ட புத்திசாலிக் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால்… அவர்களின் கனவையும் குறிக்கோளையும் மாற்றி விடாதீர்கள். ஆட்டோமொபைல் ஆர்வம் அந்தக் குழந்தைகளிடம் அதிகம் இருக்க வேண்டும். அவர்களுக்காகவே மோட்டார் விகடன் ஒரு பயிலரங்கத்தை நடத்துகிறது. ஒரு காரை எப்படி டிசைன் செய்வது… அதை களிமண்ணில் மாடலிங் செய்து எப்படி ப்ரோட்டோ டைப் ஆக்குவது… அந்த ப்ரோட்டோ டைப் மாடலை எப்படி புரொடக்ஷன் மாடலாக்கி சாலையில் ஓட விடுவது என்பதுவரை இந்தப் பயிலரங்கத்தில் எல்லாமே பயிற்றுவிக்கப் போகிறார்கள்.

வெறும் கார் டிசைனிங் மட்டுமில்லை; அவர்களின் வரையும் ஆர்வத்தையும் மேம்படுத்த இருக்கிறது இந்தப் பயிலரங்கம். இந்த வகுப்பில், அழிரப்பரையே பயன்படுத்தாமல்… வெறும் பென்சிலை மட்டுமே வைத்து, ஒரு வரைபடத்தை எப்படி வரைவது எனும்போதே… நமக்கே ‘அட’ போடச் சொல்கிறதுதானே!

இப்படி குழந்தைகளுக்கு வரையும் திறனையும், கார் டிசைன் கலையையும் உங்கள் குழந்தை கற்றுத் தேர்ந்தால்… எப்படி ‘அட’ போடலாம்!

குழந்தைகளுக்கு இந்தக் கலையைச் சொல்லித் தருவது சாதாரணமில்லை. அதற்கு, குழந்தைகளின் மனசைப் படிக்கத் தெரிந்த… கார் டிசைனிங்கைக் கரைத்துக் குடித்த ஓர் ஆசான் வேண்டுமே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படிப்பட்ட ஓர் ஆசான்தான் சத்தியசீலன். இவர் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர். நாம் சாலையில் பார்க்கும்… அடிக்கடி பயணிக்கும் பேருந்துகள்… கார்கள்/பைக்குகள்/ஆட்டோக்கள் என்று ஏகப்பட்ட வாகனங்கள் இவரின் கை வண்ணத்தில் வந்தவையே!

இதில் க்ளே மாடலிங் (Clay Modelling) என்பது மிகவும் முக்கியமான ஓர் அம்சம். ஒரு காரை கான்செப்ட் மாடலாக்குவதற்கு முன்பு, காகிதத்தில் வரைந்த பின்பு… அது நிறுவனங்களுக்குப் பிடித்து ஓகே செய்யப்பட்டால்… அதை க்ளே மாடலிங் செய்வது வழக்கம. இந்த முறையில் காரை வடிவமைக்கும்போது… ‘ஓ.. ஒரு கார் இப்படித்தான் இருக்கணுமா’ என்கிற அத்தனை விஷயங்களும் உங்கள் குழந்தைகளுக்கு அத்துப்படியாகி இருக்கும்.

சத்தியசீலன்
சத்தியசீலன்

இது குழந்தைகள் விளையாடும் களிமண் இல்லை; ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்பு வகை களிமண்ணைத்தான் இதில் பயன்படுத்த இருக்கிறார் சத்தியசீலன். பெரிய பெரிய கார் நிறுவனங்களின் R&D சென்டர்களில் செய்வதுபோல், குழந்தைகளுக்கு இந்த க்ளே மாடலிங் எனும் அற்புதமான வித்தையைப் பயிற்றுவிக்க இருக்கிறார் சத்தியசீலன்.

Imported Clay for Car Desigining
Imported Clay for Car Desigining

இந்தப் பயிலரங்கம் புதிதில்லை; ஏற்கெனவே இதில் கலந்து கொண்ட மாணவர்கள், இப்போது பெரிய பெரிய கல்லூரிகளில் டிசைனுக்கான மேற்படிப்பு படித்து… பல நிறுவனங்களில் பணியில் இருக்கிறார்கள் என்பது பெருமை வாய்ந்த விஷயம்!

அழிரப்பர் பயன்படுத்தாமலேயே ஒரு காரையோ… உங்களையோ… உங்கள் குழந்தை வரைந்தால் உங்களுக்குப் பெருமைதானே! அவர்கள் கார் டிசைன் மேற்படிப்பு படித்து… அவர்கள் செய்த ஒரு கார் சாலையில் ஓடினால் உங்களுக்குப் பெருமைதானே!

வரும் ஜூலை 9 மற்றும் 10–ம் தேதிகளில் நமது விகடன் அலுவலகத்திலேயே இந்த ஒர்க்ஷாப்பின் கதவு, உங்கள் வீட்டு கார் ஆர்வலச் செல்லங்களுக்காகத் திறந்தே காத்திருக்கிறது.