Published:Updated:

4.5 லட்சத்துக்கு மாருதி கார் வாங்கப் போறீங்களா; புது ஆல்ட்டோ K10 -ல் ஏகப்பட்ட ஸ்பெஷல் இருக்கு!

New Maruti Suzuki Alto K10 ( Autocar India )

டாப்–10 விற்பனையில் டாப்பில் இருக்கும் ஆல்ட்டோ K10 பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய டாப்–10 விஷயங்கள் இவை!

4.5 லட்சத்துக்கு மாருதி கார் வாங்கப் போறீங்களா; புது ஆல்ட்டோ K10 -ல் ஏகப்பட்ட ஸ்பெஷல் இருக்கு!

டாப்–10 விற்பனையில் டாப்பில் இருக்கும் ஆல்ட்டோ K10 பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய டாப்–10 விஷயங்கள் இவை!

Published:Updated:
New Maruti Suzuki Alto K10 ( Autocar India )
நீங்கள் ஒவ்வொரு மாதத்தின் டாப்–10 கார் சேல்ஸ் சார்ட்டை எடுத்துப் பார்த்தால்… அதில் மாருதிதான் டாப்பில் இருக்கும். அட, அதிலும் ஆல்ட்டோதான் டாப்பில் இருக்கும். இந்தியா முழுக்க மாதம் 2 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனையாகும் கார் என்றால், அது ஆல்ட்டோ! அப்படிப்பட்ட ஆல்ட்டோவில் K10 மாடலை இந்த ஆகஸ்ட்டில் புத்தம் புதுசாக விற்பனைக் கொண்டு வரவிருக்கிறது மாருதி. டாப்–10 விற்பனையில் டாப்பில் இருக்கும் புது ஆல்ட்டோ K10 பற்றி டாப்–10 விஷயம்!

1. ஆல்ட்டோ 800 காரைவிடப் பெருசு! அகலம் அதே!

என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் என்பதால், எப்போதுமே கிச்சென… ஒரு தீப்பெட்டி சைஸில்தான் ஆல்ட்டோ இருக்கும். இந்தப் புது ஆல்ட்டோ, நடப்பில் இருக்கும் 800 காரைவிடக் கொஞ்சம் அகலத்தில் பெருசுபடுத்தி இருக்கிறார்கள். ஆல்ட்டோ 800–ன் நீளம் 3,445 மிமீ. இந்த K10 காரின் நீளம் 3,530 மிமீ. 800–யை விடப் பெருசாக இருந்தாலும், இதன் முக்கியப் போட்டியாளரான ரெனோ க்விட் காரைவிட இது சுமார் 201 மிமீ சிறுசு. 800–யை விட வீல்பேஸும் 20 மிமீ அதிகமாக்கி இருக்கிறார்கள். இதனால், பின் சீட்டில் லேசாக கால் வைக்க இடம் கிடைக்கலாம். ஆனாலும், க்விட்டின் வீல்பேஸ் – இதைவிட செம! (2,422 மிமீ). ஆனால் புது ஆல்ட்டோதான் மற்ற கார்களைவிட உயரம் அதிகம். 1,520 மிமீ என்பதால், வயதானவர்கள், உயரமானவர்கள் எளிதாக ஏறி இறங்கலாம். ஆனால், 800–ன் அதே 1,490 மிமீ அகலம்தான் இதிலும்.


2. மாருதியின் ஹார்ட்டெக்ட் ப்ளாட்ஃபார்மில் ரெடியாகும் K10…

மாருதியின் மற்ற ஹேட்ச்பேக்குகள் தயாராகும் Heartect என்ற ஸ்டைலான ப்ளாட்ஃபார்மில்தான் இந்த K10–ம் ரெடியாகிறது. அதனால், இதன் எடை ஒரு காம்பேக்ட் ஹேட்ச்பேக்குக்கு இணையாக இருக்கிறது. அதாவது, 1,150 கிலோவுக்குக் குறையாமல் இந்த ஆல்ட்டோ இருக்கும். இதனால், வேகமாகப் போகும்போது, நெடுஞ்சாலைகளில் கொஞ்சம் நிலைத்தன்மை கிடைக்கும். எல்லாம் ஓகே… ஆனால், குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் இந்த ஆல்ட்டோ K10 எத்தனை ஸ்டார் வாங்கும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்!

New Maruti Suzuki Alto K10
New Maruti Suzuki Alto K10
Autocar India

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3. டிசைன் மொழி

பழைய ஆல்ட்டோவில் இருந்து முற்றிலும் வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, இதன் டிசைன் மொழியையே மாற்றியிருக்கிறது மாருதி. அந்த Heartect ப்ளாட்ஃபார்ம்தான் முதல் படி. அதைத் தாண்டி இரண்டாவது ஜென் செலெரியோவின் டிசைன் தீமை அங்கங்கே இன்ஸ்பயர் செய்திருக்கிறது மாருதி. பார்ப்பதற்கு செலெரியோவின் தம்பி மாதிரிதான் இருக்கிறது புது ஆல்ட்டோ K10.


4.புது ஆல்ட்டோவுக்குப் புது இன்ஜினா?

புது வண்டி என்பதற்காக, இதில் புது இன்ஜின் இல்லை; இதிலிருப்பது செலெரியோ, எஸ்–ப்ரெஸ்ஸோவில் இருக்கும் அதே இன்ஜின்தான். K10 என்பதற்கேற்ப இதில் 1.0லிட்டர் இன்ஜின்… அதாவது 1,000 சிசி பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இதற்குப் பெயர் K10C Dual Jet இன்ஜின். அதே கார்களின் அதே பவர் 67bhp மற்றும் 89Nm டார்க்தான் இதில் இருக்கிறது. ஆல்ட்டோ என்றால், AMT (Automated Manual Transmission) கியர்பாக்ஸ் இல்லாமல் இருக்குமா? இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸோடு, ஏஎம்டி கியர்பாக்ஸும் உண்டு. இது மைலேஜுக்குப் பெயர் பெற்றது. புதிதாய் கார் ஓட்டுபவர்களுக்கும், பெண்களுக்கும் எளிதாக இருக்கும் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ்.


5.இம்புட்டு வசதிகளா!

பொதுவாக, மாருதி கார்களில் வசதிகளைப் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த ஆல்ட்டோ அப்படியில்லை. 7 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆரம்பிக்கிறது இதன் ப்ரீமியமான வசதி. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ORVMs (Outside Rear View Mirrors), ஸ்டீயரிங்கிலேயே மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், இரட்டைக் காற்றுப்பைகள், ரியர் பார்க்கிங் சென்ஸார்கள், ஏபிஎஸ், ESP போன்ற வசதிகள் உண்டு. ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டுக்கு, மலையேற்றங்களில் கீழிறங்காமல் இருக்க உதவும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் வசதி உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Alto K10 Interior
Alto K10 Interior
Autocar India

6. ஆல்ட்டோ 800 காரோடு, இதுவும் விற்பனையில் கிடைக்கும்!

ஏப்ரல் 2020–ல் இதற்கு முந்தைய ஆல்ட்டோ K10 மாடலின் தயாரிப்பை நிறுத்தியது மாருதி. ஆனால், மாருதி 800 காரின் விற்பனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்ட்ரி லெவல் மார்க்கெட்டில் 800தான் மாருதிக்குக் கைகொடுக்கும் கார். அதனால், 800 காரின் விற்பனையை நிறுத்தாது மாருதி. எனவே, ஆல்ட்டோ 800 காரோடு சேர்ந்து இந்தப் புது ஆல்ட்டோ K10 விற்பனையில் கிடைக்கும். எனவே, 800 சிசியா… 1000 சிசி ஆல்ட்டோ வேணுமா என்பதைப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

7. வதவதனெ 12 வேரியன்ட்களில் வருது!

புது ஆல்ட்டோ K10, சுமார் 12 வேரியன்ட்களில் வரலாம். STD, STD(O), LXI, LXI(O), VXI, VXI(O), VXI+ and VXI+(O) இப்படி 8 வேரியன்ட்கள் மேனுவல் கியர்பாக்ஸில் கிடைக்கும். VXI, VXI(O), VXI+, and VXI+(O) போன்ற 4 மாடல்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் கிடைக்கும். அதனால், வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உண்டு.

8. சிஎன்ஜியில் வருமா?

இப்போதைக்கு மாருதியின் யுஎஸ்பியே, சிஎன்ஜி மாடல்தான். அதனால், இந்தப் புது ஆல்ட்டோ K10 காரிலும் சிஎன்ஜி மாடலைக் கொண்டு வரலாம் மாருதி. ஆனால், அது பற்றிய தகவல்களை இன்னும் சொல்லவில்லை.

9. மைலேஜ் எப்படி இருக்கும்?

பழைய ஜென் ஆல்ட்டோ K10 வைத்திருப்பவர்களிடம் விசாரித்தபோது, நகரத்துக்குள் சுமார் 17 – 18 கிமீ கிடைப்பதாகவும், நெடுஞ்சாலைகளில் சுமார் 20 – 21 கிமீ கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தப் புது ஆல்ட்டோவின் முழுமையான டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட், மோட்டார் விகடனில் வரக் காத்திருக்கிறது. நீங்கள் ஆல்ட்டோ வைத்திருந்தால், உங்கள் மைலேஜை கமென்ட் பாக்ஸில் சொல்லுங்களேன்!


10. புது ஆல்ட்டோ எவ்வளவு விலை இருக்கும்?

இந்தியாவில் விலை குறைந்த என்ட்ரி லெவல் காம்பேக்ட் கார் ஆல்ட்டோதான். 800–ன் எக்ஸ் ஷோரூம் விலை 3.39 – 5.03 லட்சம் வரை வருகிறது. இந்தப் புது ஆல்ட்டோ K10–ன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 3.9 லட்சம் முதல் 5.5 லட்சம் வரை வர வாய்ப்பு இருக்கிறது. உங்கள் கணிப்பு என்ன என்பதையும் சொல்லுங்கள்! புது மாருதி கார் வாங்கப் போகிறவர்கள், இந்த மாதம் வரை காத்திருங்கள்!