Published:Updated:

Benz Maybach S650: மோடியின் 12 கோடி ரூபாய் பென்ஸ் காரில் இம்புட்டு பாதுகாப்பு அம்சங்களா?

மோடியின் கார் Benz Maybach S650
News
மோடியின் கார் Benz Maybach S650

பீரங்கிக் கட்டுமானம்... டயர் பஞ்சர் ஆகாது… கண்ணாடியில் குண்டு துளைக்காது… இன்னும் என்ன?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விராட் கோலிக்குப் போட்டியாக இருந்தவர் யார் தெரியுமா? நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் ஏதும் டெஸ்ட் போட்டியில் விளையாடி ரன்கள் குவித்தாரா என்று நினைத்து விடாதீர்கள். 2017–ல் ஆரம்பித்து தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை, கூகுளில் உலகம் முழுதும் அதிகம் தேடப்பட்ட செலிபிரிட்டி வரிசையில் பிரதமர் மோடிதான் விராட் கோலியை முந்தி முதலிடத்தில் இருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போது மோடியை முந்திக் கொள்ளப் பார்க்கிறது மோடியின் மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் (Mercedes-Benz Maybach Pullman Guard S650) கார். கூகுளில் இப்போதெல்லாம் Prime minister Modi என்று டைப் செய்தாலே, சட்டென Modi Car என்றுதான் டிராப் டெளன் லிஸ்ட்டில் வருகிறது. அந்தளவு பிரபலமாகிப் போன மெர்சிடீஸ் பென்ஸில் அப்படி என்ன ஸ்பெஷல்னு பார்க்கலாமா?

வானச் சுற்றுப் பயணங்கள் என்றால் தனி விமானம்… சாலைச் சுற்றுப் பயணங்கள் என்றால்… ‘எட்றா பென்ஸை’ என்றுதான் கிளப்புவாராம் பிரதமர். அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கும்போதுதான், இந்த மேபேக் சொகுசு லிமோசின், சோஷியல் மீடியாக்களின் வெளிச்சத்துக்கு வந்தது. தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் புதினை வரவேற்க வந்தபோது, இரு நாட்டுத் தலைவர்களைவிட அதிகம் ஃப்ளாஷ் ஆனது அந்த மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொதுவாக – அரசியல் ஜயன்ட்கள் சாதாரண காரையெல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். அப்படியே பயன்படுத்தினாலும் அந்தக் காரை லிமோசின் டைப் ஆக்கி, புல்லட் புரூஃப் ஆக்கி என்று பல கோடிகளுக்குக் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அப்படித்தான் இந்த பென்ஸின் விலை 12 கோடி ரூபாய்க்கு வந்து நிற்கிறது. (நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் டொயோட்டா லேண்ட் க்ரூஸரும் புல்லட் ப்ரூஃப்தான்.) முன்னாள் பிரதமர்கள் பயன்படுத்திய ரேஞ்ச்ரோவர் வோக், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற வாகனங்களுக்கெல்லாம் வேற லெவலில் இருக்கிறது மோடியின் பென்ஸ் மேபேக் S650. பிரதமர்கள் பயன்படுத்திய கார்களிலேயே இப்போது இந்த பென்ஸ்தான் செம காஸ்ட்லி!

Benz Maybach S650
Benz Maybach S650

பென்ஸில் ஹைரேஞ்ச் கார்கள் மேபேக் சீரிஸில்தான் வரும். அதேபோல் மெர்சிடீஸிலேயே விலை அதிகமான டாப் க்ளாஸ் கார் என்றால் S க்ளாஸ்தான். நீங்கள் சாதாரண ஒரு தனவானாக இருந்து இந்த காரை புக் செய்தால், இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 2.80 கோடி லட்சம். கூட்டிக் கூட்டிக் கணக்குப் போட்டால் இதன் ஆன்ரோடு விலை சுமார் 3.35 கோடி ரூபாய் வருகிறது. ஆனால், அரசியல்வாதிகளுக்கென்றே பாதுகாப்பில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் மெர்சிடீஸ் வகையைச் சேர்ந்தது என்பதால் இந்த விலை.

மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் S600 என்றொரு மாடல், கடந்த ஆண்டு 10.5 கோடிக்கு லாஞ்ச் செய்யப்பட்டது. இந்த S650, அதைவிட ஒரு படி மேலே. அதனால்தான் இந்த 12 கோடி விலை. பிரதமர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘ஸ்பெஷல் ப்ரொட்டக்ஷன் குரூப்’ கான்வாய் பாதுகாப்பு அதிகாரிகள்தான் மோடிக்கு இந்த மேபேக் S650 உயர் ரக பாதுகாப்புக் காரை ரெக்கமண்ட் செய்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, எலெக்ட்ரிக் கார்கள் தண்ணீர்/சேறு சகதிகளில் பயணித்தாலும் ஒன்றும் ஆகாது என்பதை நிரூபிக்க – அதன் பேட்டரிக்கு IP (Ingress Protection) என்றொரு ரேட்டிங் கொடுப்பார்கள். அதேபோல் நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் கார்களுக்கு (Explosion Proof Vehicle) EPV ரேட்டிங் என்றொரு விஷயம் உண்டு. அதாவது, இது புல்லட் ப்ரூஃபுக்கான ரேட்டிங். இது சாதாரண புல்லட் ப்ரூஃப் மட்டும் இல்லை. பாம் வெடித்தாலும் பெரிய சேதாரம் ஏற்படாத அளவு இதன் பில்டு குவாலிட்டி இருக்கிறது. ஹெலிகாப்டர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உலோகத்தால் இதை வடிவமைத்திருக்கிறார்கள். பெரிய பேரழிவை ஏற்படுத்தும் (TriNitroToluene) TNT எக்ஸ்ப்ளோஷன் என்று சொல்லக்கூடிய 15 கிலோ டைனமைட் வெடி வெடித்தாலும் பிரதமருக்கு ஒன்றும் ஆகாதாம். ஆனால், இது 2 மீட்டர் தொலைவோ – அதற்கும் மேலேயே இருந்தால்தான் இதன் தாக்கத்தைத் தாங்கும். காரின் அண்டர்பாடியிலும் பீரங்கியில் உள்ள பாதுகாப்புத் தன்மை உண்டாம். இது நேரடிக் குண்டுவெடிப்பில் இருந்து, உள்ளே உள்ள பயணிகளைக் காக்கும்.

Benz Maybach S650
Benz Maybach S650

இதன் கதவுக் கண்ணாடிகளுக்கு உள்ளே பாலி கார்பேனட் எனும் கோட்டிங் செய்திருக்கிறார்கள். இது ஏகே 47, பிகே 47 என்று எந்தத் துப்பாக்கிகளின் தோட்டாக்களாக இருந்தாலும் – தெலுங்கு நடிகர் பாலய்யா மாதிரி கடித்துத் துப்பி ரிட்டர்ன் தள்ளிவிடும் என்பது ஸ்பெஷல்.

பொதுவாக கார்கள் வெடிப்பதற்கு முக்கியக் காரணம் – பெட்ரோல் டேங்க்தான். கண்ணாடிக்கே கோட்டிங் இருக்கும்போது டேங்க்குக்கு இருக்காதா என்ன? இந்த எரிபொருள் டேங்க்கில் குண்டு துளைத்தால்கூட, அந்த ஓட்டைகள் தானாகவே மூடிக் கொள்ளும் தன்மை கொண்டதாம்.

அதேபோல், இதன் கேபினுக்குள்ளும் ஒரு சிறப்பம்சம் உண்டு. வாயுத் தாக்குதலின்போது உள்ளே இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க, தனித் தனி ஆக்ஸிஜன் சப்ளை நடக்குமாம். காரின் டயர்கள்தான் காரைத் தாக்கும் முக்கிய அம்சம். அதை மட்டும் விடுவார்களா என்ன… இது ஏதேனும் தாக்குதலில் பழுதடைந்தாலும் பஞ்சர் என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது. கார் நிற்காமல் தொடர்ந்து பறக்குமாம்.

Benz Maybach S650
Benz Maybach S650

இது ஒரு பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார். இதன் இன்ஜின் டிஸ்ப்ளேஸ்மென்ட் 6,000 சிசி. இதிலுள்ள சிலிண்டர்களின் எண்ணிக்கை 12. அதுதான் V12. சாதாரண கார்களில் 6 சிலிண்டர் வரை இருக்கும். இதன் பவர் 630bhp. இதன் டார்க் 100kgm. சிக்னலில் இருந்து வெறும் 4 விநாடிகளில் 100 கிமீ வேகத்துக்குச் சிக்கெனச் சீறும் இது சுமார் 230 கிமீ வேகம் வரை பறக்கும். அது சரி – பிரதமர் எந்த சிக்னல்ல நிற்கப் போறாரு; இதோட மைலேஜ் என்னனுலாம் கேட்கப்புடாது!