Published:Updated:

ஆடியின் புது அல்ட்ரா சொகுசு கார்!

Audi A8 L
பிரீமியம் ஸ்டோரி
Audi A8 L

அறிமுகம்: ஆடி A8 L செடான்

ஆடியின் புது அல்ட்ரா சொகுசு கார்!

அறிமுகம்: ஆடி A8 L செடான்

Published:Updated:
Audi A8 L
பிரீமியம் ஸ்டோரி
Audi A8 L
ஆடியின் புது அல்ட்ரா சொகுசு கார்!

டிவியில் அந்த விளம்பரத்தைப் பார்க்கும்போதே ஜிவ்வென்று இருக்கிறது. அது, ஆடியின்

A8 L விளம்பரம்… டிவியிலேயே சொகுசை உணர முடிகிறது ஆம், சாஃபர் டிரைவன் காராக வந்திருக்கும் இந்த A8 L காரை சொகுசை முன்னிறுத்தியே கொண்டு வந்திருக்கிறது ஆடி.

தற்போது விற்பனையில் இருந்த ஆடி A8 காரின் அப்டேட்டட் வெர்ஷனாக இதைக் கொண்டு வந்திருக்கும் ஆடி, A8 காரை மாதிரியே இதையும் CBU (Completely Built Unit) ஆகத்தான் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. அதனால், இதன் விலை எகிறுமோ என்று நினைத்திருந்தாலும், நல்ல மதிப்பான விலையிலேயே வந்திருக்கிறது A8 L.

Celebration Edition, Technology என மொத்தம் 2 வேரியன்ட்களில் வந்திருக்கும் A8 L, சுமார் 1.29 கோடியில் இருந்து 1.57 கோடி வரை எக்ஸ் ஷோரூம் விலையில் வந்திருக்கிறது. இதன் போட்டியாளர்களை விட இது விலை மிகக் குறைவு. மெர்சிடீஸ் பென்ஸ் S–க்ளாஸைவிட சுமார் 31 லட்சம்; பிஎம்டபிள்யூ 7 சீரிஸைவிட சுமார் 11 லட்சம்; அட, லெக்ஸஸ் LS மாடலைவிட சுமார் 62 லட்சம் குறைவாக வந்திருக்கிறது A8 L. ஆடியின் இந்த அதிரடி அல்ட்ரா சொகுசு காரின் நறுக் சுறுக் ஃபர்ஸ்ட் லுக்!

பீய்ச்சியடிக்கும் மேட்ரிக்ஸ் HD எல்இடி ஹெட்லைட்ஸ், (Technology வேரியன்ட்டில் இதுவே டிஜிட்டல் மேட்ரிக்ஸ்), 19 இன்ச் பெரிய அலாய் வீல்கள், பின் பக்கம் OLED டெயில் லைட்ஸ், முழுவதும் ரீ–ப்ரொஃபைல்டு செய்யப்பட்ட பானெட் என்று 4.75 மீட்டருக்கு மேல் பெரிய சொகுசுப் படகுபோல் இருக்கிறது A8 L. கிரில்லைச் சுற்றியிருக்கும் அந்த மெஷ் பேட்டர்ன் போல்டு. ஆடி A8–ல் இருந்து இன்னொரு மாற்றம் – ஃபாக் லேம்ப்ஸ்களுக்குப் பக்கத்தில் உள்ள அந்த ஏர் இன்டேக்குகள்.

பழைய A8–ல் 4 சீட்டர் மட்டும்தான். ஆனால், A8 L–ன் Celebration Edition–ல் 5 சீட்டர் வருகிறது. Technology மாடலில் 4 மற்றும் 5 சீட்டர் என ஆப்ஷன்களுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் 4 சீட்டர் என்பது, சொகுசின் உச்சம்.

பின் சீட் ரெக்லைனருடன், ஒவ்வொரு சீட்களுக்கும் 10.1 இன்ச் டிவி இருக்கிறது. குளோபல் மாடல்களில் இருப்பதுபோல், MIB 3 சாஃப்ட்வேர் மூலம் இது இயங்குகிறது. இந்த காஸ்ட்லியான Valcona லெதர் அப்ஹோல்சரி சீட்களை ரிமோட் மூலம் இயக்கிக் கொள்ளலாம். வென்டிலேட்டட் வசதியும் உண்டு. கூடவே பின் பக்கப் பயணிக்கு கால்களுக்கான 8 மசாஜ் ஃபங்ஷன்கள் இருக்கின்றன. 4 ஸோன் ஏசி க்ளைமேட் கன்ட்ரோலும் உண்டு.

ஆடியின் புது அல்ட்ரா சொகுசு கார்!

வழக்கம்போல், ஆடியின் விர்ச்சுவல் காக்பிட், ஹெட்அப் டிஸ்ப்ளே, MMI நேவிகேஷன் ஆப்ஷன் கொண்ட பெரிய ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஆடி ஸ்மார்ட்போன் இன்டர்ஃபேஸ், 30 வகையான ஆம்பியன்ட் கலர் லைட்டிங் செட்டிங், Bang & Olufsen 3D முன்/பின் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்துடன் 23 ஸ்பீக்கர்கள் என்று கலக்குகிறது ஆடி A8 L. இந்த இன்டீரியர் கலரையே 4 விதங்களில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஆடி A8 L இன்ஜினைப் பொருத்தவரை டீசல் இதில் கிடையாது. விற்பனையில் இருக்கும் A8 காரின் அதே 3.0 லிட்டர் TFSI பெட்ரோல் இன்ஜின்தான் இந்த A8 L–லும் இருக்கிறது. இது 48V மைல்டு ஹைபிரிட் இன்ஜின். இதில் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கிறது. இதன் பவர் 340bhp மற்றும் 500Nm டார்க். இது 0–100 கிமீ–யை வெறும் 5.7 விநாடிகளில் கடக்கும் என்கிறது ஆடி. இதன் டாப் ஸ்பீடு 250 கிமீ.

வழக்கம்போல், ஆடியின் ஃபேவரைட்டான Quattro ஆல்வீல் டிரைவ் டெக்னாலஜி, இந்த A8 L–ல் உண்டு. இதன் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், சொகுசின் அடுத்த லெவலாக இருக்கும். இதில் பாதைகளுக்கு ஏற்றபடி முன் பக்க கேமரா வழியாக சென்ஸார் செய்து, ஆட்டோமேட்டிக்காக சஸ்பென்ஷனை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இதில் பார்க்கிங் அசிஸ்ட்டுடன் 360 டிகிரி கேமரா, 8 காற்றுப்பைகள், (10 காற்றுப்பைகள் ஆப்ஷனலாகவும் உண்டு).

லெக்ஸஸ், பிஎம்டபிள்யூ, பென்ஸ் என்று எல்லா சொகுசு சுமோக்களுடனும் போட்டி போட வருகிறது A8 L எனும் இந்த சொகுசு லிமோ.