Published:Updated:

ஆட்டோ எக்ஸ்போ... என்ன பார்க்க வேண்டும்?

ஆட்டோ எக்ஸ்போ 2020- ட்ரெய்லர்/கார்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

`இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ' (Auto Expo) கடந்த 2016, 2018–ம் ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும், கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் India Expo Mart-ல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 7, 2020 தொடங்கி பிப்ரவரி 12 வரை நடக்கும் 15–வது ஆட்டோ ஷோவில் - BS-6 விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட வாகனங்களும், எலெக்ட்ரிக் வாகனங்களும் அதிக அளவில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போ 2020
ஆட்டோ எக்ஸ்போ 2020

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகமாகப் போகும் கார், பைக், ஸ்கூட்டர்கள் அல்லாது கான்செப்ட் வாகனங்களும் ஆட்டோமொபைல் ஆர்வலர்களைக் கவரும். சீனாவைச் சேர்ந்த Great Wall Motors நிறுவனம், நம் நாட்டில் முதன்முறையாகத் தமது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் என்னனென்ன கார் மற்றும் இருசக்கர வாகனங்களைத் தவறாமல் பார்க்க வேண்டும்... அதற்கான கையேடுதான் இது!

MORRIS GARAGES
MORRIS GARAGES

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு முன்பாகவே, தனது எலெக்ட்ரிக் எஸ்யூவியான ZS EV-யை எம்ஜி அறிமுகப்படுத்திவிட்டது. எனவே அந்த காரை இங்கே பார்க்கலாம். இது தவிர 3 வரிசை இருக்கை கொண்ட ஹெக்டர், Maxus D90 எஸ்யூவி, i-Vision எம்பிவி கான்செப்ட் (2019 Shanghai Motor Show-ல் Roewe Vision-i கான்செப்ட்டாக இருந்தது) ஆகிய வாகனங்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஹெக்டர் 6 சீட்டர், Maxus D90
ஹெக்டர் 6 சீட்டர், Maxus D90

6 சீட்களைக் கொண்ட ஹெக்டர், தற்போது சீனாவில் விற்பனை செய்யப்படும் Baojun 530 Facelift மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும். எனவே காரின் முன்பக்க (ஹெட்லைட் - DRL, கிரில், பம்பர்) மற்றும் பின்பக்க (டெயில் லைட், பம்பர், அலாய் வீல்கள்) டிசைனில் சில மாறுதல்கள் இருக்கும்.

கேபினின் நடுவரிசையில் பெஞ்ச் சீட்டுக்குப் பதிலாக இரு Captain சீட்கள் இருக்கும். மூன்றாவது வரிசை பெஞ்ச் சீட்டில் இருவருக்கு இடமிருக்கும். அநேகமாக உட்புறம் டூயல் டோன் ஃபினிஷில் இருக்கலாம். இதைத் தவிர இன்டீரியரில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால், முன்பைப் போலவே அதிக வசதிகள் (இன்டர்நெட் வசதியுடன் கூடிய டச் ஸ்க்ரீன், பனோரமிக் சன்ரூஃப்) தொடரும் என்பது ப்ளஸ்.

வேறு பெயரில் தனி மாடலாக பொசிஷன் செய்யப்படவிருக்கும் இந்த எஸ்யூவியில், ஹெக்டரில் இருக்கும் அதே டர்போ பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்களே பொருத்தப்படும். மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் அதேதான் என்றாலும், இந்த கூட்டணி BS-6 அவதாரத்தில் வரும். மார்ச் 2020 மாதத்தில் இது Gravitas (7 சீட் ஹேரியர்), புதிய XUV 5OO மற்றும் க்ரெட்டா ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக விற்பனைக்கு வரலாம்.

 i-Vision எம்பிவி கான்செப்ட்
i-Vision எம்பிவி கான்செப்ட்

இதற்கு அடுத்தபடியாக, ஃபார்ச்சூனர் - எண்டேவர் - அல்ட்டுராஸ் G4 - பஜேரோ ஸ்போர்ட் - MU-X ஆகிய XL சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, 27-35 லட்ச ரூபாயில் Maxus D90 காரை தீபாவளிவாக்கில் எம்ஜி இந்தியாவுக்குக் கொண்டு வரவிருக்கிறது. 5,005மிமீ நீளம்/1,932மிமீ அகலம்/1,875மிமீ உயரம்/2,950மிமீ வீல்பேஸ்/210மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என லேடர் ஃபிரேமில் பல்க்காக இருக்கும் இந்த எஸ்யூவியில், 3 வரிசை இருக்கைகள் (7/8 சீட் ஆப்ஷன்) உள்ளன. எனவே 17/19/21 இன்ச் அலாய் வீல்கள் ஆப்ஷன்கள் மூன்றுமே, ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்ட Maxus D90-க்குப் பொருத்தமாகவே இருக்கின்றன.

சீனாவில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும் இது, 224bhp பவர் மற்றும் 36kgm டார்க்கைத் தருகிறது. 6 ஸ்பீடு MT/AT தவிர 7 டிரைவிங் மோடுகள் (Automatic, Economy, Motion, Snow, Sandy, Mud, Rock), Low Range Transfer Case உடனான 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் எஸ்யூவிகளைப் பொறுத்தவரை டீசல் இன்ஜின் அவசியம் என்பதால், 2.4 டன் எடையுள்ள இந்த XL சைஸ் எஸ்யூவிக்கெனப் பிரத்யேகமாக, 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜினைத் தயாரித்துள்ளது எம்ஜி. ஹெக்டரில் இருக்கும் 2.0 லிட்டர் Multijet II (170bhp/35kgm) டீசல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இது, சீனாவில் நடைபெற்ற Guangzhou Motor Show-வில் வெளியிடப்பட்டது. 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், MID உடனான 8 இன்ச் டிஜிட்டல் மீட்டர், 3 Zone கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், Cool / Heat / Massage / Electric Adjust கொண்ட சீட்கள், LED DRL உடனான Adaptive LED ஹெட்லைட்ஸ், Ambient லைட்டிங், Heated ரியர்வியூ மிரர்கள், Gesture Controlled டெயில் கேட், லெதர் அப்ஹோல்சரி என வசதிகளின் பட்டியல் காரைப் போலவே நீளமாக இருக்கிறது.

எம்ஜியின் ப்ரீமியம் தயாரிப்பாக வரப்போகும் இதில் 360 டிகிரி கேமரா, 6 காற்றுப்பைகள், ABS, EBD, ISOFIX, பிரேக் அசிஸ்ட், ESP, Hill Hold & Hill Descent அசிஸ்ட், TPMS, முன்பக்க-பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், Lane Keep அசிஸ்ட், AEB, ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

TATA MOTORS
TATA MOTORS

தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது, அல்ட்ராஸ் - நெக்ஸான் EV ஆகியவற்றின் விலைகளும், டியாகோ - டிகோர் - நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் குறித்த விபரங்களும் வெளிவந்திருக்கும்.

எனவே இவை தவிர அல்ட்ராஸ் EV/AT, JTP மாடல்களின் அப்டேட்களும் வரலாம். நெக்ஸானுக்குக் கீழே, ஒரு மைக்ரோ எஸ்யூவியை டாடா களமிறக்க உள்ளது தெரிந்ததே! கடந்த 2018 எக்ஸ்போவில் இதுதான் H2X கான்செப்ட்டாக இருந்தது.

டாடா கிராவிடாஸ், டாடா அல்ட்ராஸ் EV
டாடா கிராவிடாஸ், டாடா அல்ட்ராஸ் EV

எனவே அதன் பெயர் மற்றும் Prototype வெர்ஷன், 2020 எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம். அல்ட்ராஸைத் தொடர்ந்து ALFA பிளாட்ஃபார்மில் தயாராகும் இது, டியாகோவில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வரும் என்பது கவனிக்கத்தக்கது.

H2X மைக்ரோ எஸ்யூவி
H2X மைக்ரோ எஸ்யூவி

Gravitas (7 சீட் ஹேரியர்) பொறுத்தவரை, அது 170bhp பவர் மற்றும் 35kgm டார்க்கைத் தரும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வரும்.

பனோரமிக் சன்ரூஃப் தவிர, பெரிய 18/19 இன்ச் அலாய் வீல்களும் இதில் இருக்கும். BS-6 ஹேரியர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வரலாம்.

இதிலும் Gravitas-ல் உள்ள அதே பவர்ஃபுல் டீசல் இன்ஜின் இடம்பெறலாம். டாடாவிடம் இப்போது இல்லாத மாடல்களான மிட்சைஸ் செடான் - எஸ்யூவி - எம்பிவி ரகத்தில், கான்செப்ட்களை வைத்து அந்த நிறுவனம் வியப்பளிக்கலாம்.

HYUNDAI
HYUNDAI

டந்தமுறை நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் i20 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது தெரிந்ததே. இம்முறை அடுத்த தலைமுறை i20 காரைக் களமிறக்க இருக்கிறது ஹூண்டாய். இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் கோட்பாடுகள் (Cascading கிரில்), அதிகப்படியான வசதிகள் (BlueLink சிஸ்டம், டிஜிட்டல் மீட்டர்), லேட்டஸ்ட் இன்ஜின்கள் (1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல்) என இது அசத்தத் தயாராக உள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட், ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்
ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட், ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்

இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, ஆரா காம்பேக்ட் செடான் அறிமுகமாகியிருக்கும். தற்போது விற்பனையில் உள்ள வெர்னா, i20, சான்ட்ரோ ஆகியவற்றின் BS-6 பெட்ரோல் மாடல்கள் வெளியிடப்படலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா

BS-6 வெர்னாவில், கியா செல்ட்டோஸில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கும். கிராண்ட் i10 காரைப் போலவே, BS-6 i20 பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வரும். இந்த கார்களை BS-6 டீசல் இன்ஜினுடன் வாங்குவதற்கு, அதன் ஃபேஸ்லிஃப்ட்/அடுத்த மாடல்களையே வாங்க நேரிடும்! இதனுடன் டூஸான் மற்றும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் தவிர, இரண்டாம் தலைமுறை க்ரெட்டாவும் காட்சிபடுத்தப்படும்.

எப்படி 2018 எக்ஸ்போவில் ioniq EV மற்றும் i20N இருந்ததோ, அதேபோல 2020 எக்ஸ்போவில் Nexo FCEV மற்றும் RM19 கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்படலாம். Genesis பிராண்டின் வருகை குறித்தும் பேச்சுகள் எழுவதால், ஒருவேளை அதற்கான பதிலாக GV70 கான்செப்ட் வெளியிடப்படலாம்.

GREAT WALL MOTORS
GREAT WALL MOTORS

சீனாவில் எஸ்யூவிகளுக்கும் பிக்-அப் டிரக்குக்கும் பெயர்பெற்ற கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவிற்கு வருகிறது. Haval, Wey, Ora, Great Wall Pickup எனும் நான்கு பிராண்ட்களில் கார்களை சீனாவில் இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது.

நம் நாட்டில் எஸ்யூவிகள் ட்ரெண்டிங்காக இருப்பதால், பிரபலமான Haval பிராண்டில் இருக்கக்கூடிய H2, H4, H6, H9 ஆகிய கார்களை Great Wall Motors டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிப்படுத்தலாம்.

ஹவால் H9, ஹவால் R1, H9, H2
ஹவால் H9, ஹவால் R1, H9, H2

இதில் H4, க்ரெட்டாவை விடப் பெரிதாக இருக்கிறது (4.4 மீட்டர்). சீனாவில் அதிகளவில் விற்பனையாகக் கூடிய 4.6 மீட்டர் நீள H6, ஐரோப்பிய கார்களுக்குச் சவால்விடக்கூடிய அளவில் டிசைன், தரம், வசதிகள், இன்ஜின் ஆப்ஷன்களில் சொல்லி அடிக்கிறது. எண்டேவர் மற்றும் ஃபார்ச்சூனரைப் போலவே லேடர் ஃபிரேமைக் கொண்டிருக்கும் H9, 2.2 டன் எடை - 4.8 மீட்டர் நீளம் - 206மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் கட்டுமஸ்தாக இருக்கிறது.

ஹவால் H4
ஹவால் H4

இது இடவசதி தவிர, ஆஃப் ரோடு திறனிலும் எகிறி அடிக்கும் என நம்பலாம். எலெக்ட்ரிக் கார்களுக்கான Ora பிராண்டில் உள்ள R1 ஹேட்ச்பேக் இங்கே வரலாம். இந்த நிலையில், ஜெனரல் மோட்டார்ஸுக்குச் சொந்தமாக Talegaon-ல் இருந்த கார் உற்பத்தி தொழிற்சாலையை, Great Wall Motors கையகப்படுத்தியிருக்கிறது. இது வருடத்துக்கு 1.3 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது.

HAIMA AUTOMOBILE
HAIMA AUTOMOBILE

Great Wall Motors நிறுவனத்தைத் தொடர்ந்து, மற்றுமொரு சீன நிறுவனம் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. சீனாவில் 30 ஆண்டுகாலம் கார் உற்பத்தியில் இருக்கும் Haima Automobile தான் அது! அந்த நாட்டில் எஸ்யூவி மற்றும் எம்பிவிகளைத் தாண்டி, Aishang 360 (ஹேட்ச்பேக்) - E3 (மிட்சைஸ் செடான்) - E5 (எஸ்யூவி) - E7 (எம்பிவி) போன்ற எலெக்ட்ரிக் கார்களையும் தயாரிக்கிறது Haima. இந்த நிறுவனப் பெயரில் இருப்பது (Haikou City - Mazda Car Company).

ஹைமா 7X, ஹைமா 8S
ஹைமா 7X, ஹைமா 8S

ஒரு காலத்தில் ஜப்பானிய நிறுவனமான மஸ்டாவின் தயாரிப்புகளைச் சீனாவில் விற்பனை செய்ததாலேயே இந்த பெயர் நீடித்திருக்கிறது. ஆனால் தற்போது மஸ்டாவின் பிளாட்ஃபார்ம்களைத் தவிர்த்துவிட்டு, Haima Global Architecture எனும் தனது சொந்த பிளாட்ஃபார்மிலேயே இந்த நிறுவனம் கார்களை உற்பத்தி செய்கிறது.

இருப்பினும் தற்போது சீன நாட்டுக்குச் சொந்தமான First Automobile Works குழுமம்தான் Haima-வின் உரிமையாளர்கள். எந்த கார்களை இங்கே காட்சிப்படுத்துவார்கள் என்பதில் தெளிவில்லை. கடந்த ஆண்டில், இரு புதிய கார்களை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது Haima.

8S எனும் மிட்சைஸ் எஸ்யூவி, கியா செல்ட்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவற்றுக்கு இடையேயான சைஸில் இருக்கிறது. இதிலிருக்கும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, 193bhp பவர் மற்றும் 29.3kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

இதனால் 0 - 100கிமீ வேகத்தை வெறும் 8 விநாடிகளிலேயே எட்டிவிடுகிறது 8S. இதே T-GDI இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்புடன், 7X எனும் 7 சீட்டர் எம்பிவியைக் கடந்த 2019 Guangzhou Auto Show-வில் காட்சிபடுத்தியது Haima.

இனோவாவைவிட அளவில் பெரிதாக இருக்கும் இதில், இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி உடனான டச் ஸ்க்ரீன் இருக்கிறது. மேலும் இந்த எம்பிவியின் பெரிய கிரில், மஸராட்டி கார்களை நினைவுபடுத்துகிறது. பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களை டெல்லியில் விற்பனை செய்யும் Bird குழுமம், Haima-வின் டீலர் உரிமையைப் பெற்றுள்ளது.

MERCEDES BENZ
MERCEDES BENZ

டந்த ஆண்டில் G 350d, V-க்ளாஸ் மற்றும் V-க்ளாஸ் Elite, C-க்ளாஸ்/AMG மற்றும் GLC ஃபேஸ்லிஃப்ட் எனக் குறைவான தயாரிப்புகளையே வெளியிட்டிருந்தாலும், `2019-ல் அதிக கார்களை விற்பனை செய்த லக்ஸுரி கார் நிறுவனம்' என்ற பெருமையைத் தன்வசப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்.

 பென்ஸ் GLE கூபே, பென்ஸ் GLA, பென்ஸ் AMG-GT, பென்ஸ் EQC
பென்ஸ் GLE கூபே, பென்ஸ் GLA, பென்ஸ் AMG-GT, பென்ஸ் EQC

எனவே வாடிக்கையாளர்கள் தனக்கு வழங்கிய மதிப்பைக் கவுரவிக்கும் விதமாக, 2020-ல் பல புதிய மாடல்களை இந்த நிறுவனம் வரிசையாகக் களமிறக்க முடிவெடுத்துள்ளது. இந்தச் செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது, ஆடி Q7 மற்றும் பிஎம்டபிள்யூ X5 ஆகியவற்றுக்குப் போட்டியாக, புதிய GLE எஸ்யூவி அறிமுகமாகி இருக்கும். இதனைத் தொடர்ந்து A-க்ளாஸ் Limousine, GLA, GLS, GLB (New Gen) - GLE கூபே - 4 கதவுகளைக் கொண்ட AMG GT - EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி - E-க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் - Maybach GLS 600 என ஒவ்வொரு செக்மென்ட்டிலும் புதிய கார்களை அணிவகுக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்.

ஏற்கெனவே நம் நாட்டில் விற்பனை செய்யும் மாடல்கள் அனைத்தையும் BS-6 விதிகளுக்கு இந்த நிறுவனம் மேம்படுத்திவிட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

MARUTI SUZUKI
MARUTI SUZUKI

ர்வதேச அளவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போக்களில் ஸ்பெஷல் எடிஷன் ஸ்விஃப்ட்களை சுஸூகி காட்சிப்படுத்தும் சூழலில், அது இங்கேயும் தொடரலாம். அதேபோல எலெக்ட்ரிக் கார்கள் பக்கமும் கவனம் திரும்புவதால், Futuro-E எனும் எஸ்யூவி கூபே கான்செப்ட்டை மாருதி சுஸூகி காட்சிக்கு வைக்கவுள்ளது.

 XL-7 (7 சீட்டர்), விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்,  Futuro-E கான்செப்ட்
XL-7 (7 சீட்டர்), விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட், Futuro-E கான்செப்ட்

போட்டி நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திரா வசம் ஏற்கெனவே எலெக்ட்ரிக் எஸ்யூவிகள் இருப்பதாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 1.5 லிட்டர் BS-6 SHVS பெட்ரோல் இன்ஜின் கொண்ட விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்டையும் அறிமுகப்படுத்த உள்ளது. இது முன்பைவிடக் கூடுதல் வசதிகளுடன் வரும் என்றாலும், டீசல் இன்ஜின் இருக்காது என்பது மைனஸ். கூடவே, ஜிம்னி ஜீப்பையும் எதிர்பார்க்கலாம்.

மற்றபடி ASEAN சந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் XL-7 (7 சீட் மாடல்), வேகன்-ஆர் EV, இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட், 1.5 லிட்டர் DDiS 225 டீசல் இன்ஜினின் BS-6 வெர்ஷன், சுஸூகியின் புதிய 48V ஹைபிரிட் சிஸ்டம், 1.5 லிட்டர் BS-6 SHVS பெட்ரோல் இன்ஜின் கொண்ட எஸ்-க்ராஸ் ஆகியவை காட்சிப்படுத்தப்படலாம்.

KIA MOTORS
KIA MOTORS

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மீடியா நாளான ஃபிப்ரவரி 5, 2020 அன்று, கார்னிவல் எம்பிவியை வெளியிட உள்ளது கியா மோட்டார்ஸ். Premium, Prestige, Limousine எனும் 3 வேரியன்ட்கள் - 7/8/9 சீட் ஆப்ஷன்களில் வரும் கார்னிவலில் இருப்பது, 200bhp பவர் மற்றும் 44kgm டார்க்கைத் தரும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் - 8 ஸ்பீடு 'Sportsmatic' ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி. உத்தேசமாக 26-30 லட்ச ரூபாய்க்கு வரப்போகும் இந்த எம்பிவி, இனோவா க்ரிஸ்டாவுக்குப் போட்டியாகக் களமிறங்கும். 'இந்தியாவின் பவர்ஃபுல் எம்பிவி' என்ற பெருமை, கார்னிவல் வசம் வந்திருக்கிறது. மேலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது புதிய லோகோவை கியா அறிமுகப்படுத்தலாம். வெள்ளை Background - கறுப்பு சிவப்பு Fontsகளில், KIA எனும் மூன்றெழுத்துகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.

கியா கார்னிவல், QYI காம்பேக்ட் எஸ்யூவி
கியா கார்னிவல், QYI காம்பேக்ட் எஸ்யூவி

Los Angeles Auto Show 2019-ல், AWD செல்ட்டோஸ் காட்சிக்கு வைக்கப்பட்டது தெரிந்ததே. இதில் கூடுதலாக கியாவின் Drive Wise Safety Package சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இது இந்தியாவுக்கு வருமா என்பதில் தெளிவில்லை. ஆனால் கியாவிடமிருந்து ஒரு காம்பேக்ட் எஸ்யூவி வரும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். QYI என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட இது, வென்யூவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும்.

இதன் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, காரில் கியா தயாரிப்புகளுக்கு உரித்தான `Tiger Nose’ கிரில் இருந்தாலும், ஹெட்லைட்கள் வழக்கமான பாணியிலேயே அமைந்திருக்கின்றன. வெளிப்புற டிசைனைப் பொறுத்தவரை, Window லைன் வேறுமாதிரி இருக்கிறது. ஆனால் வென்யூவைப் போலவே இங்கும் 16 இன்ச் அலாய் வீல்கள்தான். கேபினில் UVO டச் ஸ்க்ரீன் சிஸ்டம் தவிர பல வசதிகள் சேர்க்கப்படும். இதன் வடிவமைப்பு வெளிப்புறத்தைப்போல வித்தியாசமாகவே இருக்கும். வென்யூவில் இருக்கும் அதே பெட்ரோல்/டீசல் இன்ஜின், மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இங்கும் தொடரும். செல்ட்டோஸ்போலவே இந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கும் ‘Tech Line’ மற்றும் ‘GT Line’ போன்றே வேரியன்ட்கள் வரலாம். 2020-ம் ஆண்டில் பிற்பாதியில் 7-12 லட்ச ரூபாயில் வரப்போகும் இது, விட்டாரா பிரெஸ்ஸா - நெக்ஸான் - எக்கோஸ்போர்ட் - XUV3OO - ரெனோவின் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

FORCE MOTORS
FORCE MOTORS

தாருக்குப் போட்டியாக இருப்பது, கூர்க்கா என்பது பலரும் அறிந்ததே. எனவே, மஹிந்திரா போலவே ஃபோர்ஸும் தனது ஆஃப் ரோடு எஸ்யூவியின் இரண்டாம் தலைமுறை மாடலின் டெஸ்ட்டிங்கில் நீண்ட காலம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எனவே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் இது காட்சிப்படுத்தப்படுவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் Gurkha Xtreme-ன் பிளாட்ஃபார்ம் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களைக் (Multi-Link சஸ்பென்ஷன், Low-Range Transfer Case) கொண்டே இதுவும் தயாரிக்கப்படும். இதனால் தற்போதைய கூர்க்காவைவிடப் புதிய கூர்க்கா, சிறப்பான Approach - Departure Angle மற்றும் அதிக Water Wading Capacity உடன் வரும் எனத் தெரிகிறது.

ஃபோர்ஸ் கூர்க்கா,
ஃபோர்ஸ் கூர்க்கா,

மேலும் முன்பக்க ஆக்ஸிலுக்கு Hub Lock ஆப்ஷனலாகக் கொடுக்கப்படலாம். க்ராஷ் டெஸ்ட் மற்றும் Pedestrian Safety விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பாடியின் வடிவமைப்பு முன்பைப் போலவே இருந்தாலும், முன்பக்கக் கதவுகளைத் தவிர பின்பக்கத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிகிறது (Dual Pane விண்டோவுக்குப் பதில் பெரிய ஒற்றை விண்டோ). ஹெட்லைட், பம்பர்கள், கிரில், டெயில் லைட் ஆகியவற்றில் சிற்சில மாற்றம் இருக்கலாம்.

கேபினில் முன்பைவிட அதிக வசதிகள் இடம்பெறலாம். டாப் வேரியன்ட்டில் அலாய் வீல்கள், சொகுசான சீட்கள் வரலாம். Gurkha Xtreme-ல் இருக்கும் அதே 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்தான் இங்கேயும் என்றாலும், அது BS-6 அவதாரத்தில் வரும். 140bhp பவரைத் தரக்கூடிய இதனுடன், Dual Mass Flywheel கொண்ட G32 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படும் (உபயம்: மெர்சிடீஸ் பென்ஸ்). 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இதில் இடம்பெறாமல் போகலாம்.

SKODA
SKODA

த்தனை நாட்களாக பதுங்கியிருந்த ஸ்கோடா இப்போது பாயத் தயாராக இருக்கிறது. இந்தியாவில் ரேபிட்டின் BS-6 வெர்ஷனில், 1.0 லிட்டர் EA211 TSi இன்ஜின் (115bhp பவர்/20kgm டார்க்) இடம்பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, CBU முறையில் கரோக் எஸ்யூவி, இந்தியச் சாலைகளை எட்டிப்பிடிக்க உள்ளது. இது ஜீப் காம்பஸுக்கு இணையான விலையில் வரலாம். இதில் 1.5 லிட்டர் TSi இன்ஜின் - 6 ஸ்பீடு MT / 7 ஸ்பீடு DCT கூட்டணி, 150bhp பவர் உண்டு.

ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட், ஸ்கோடா ஆக்டேவியா RS 245
ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட், ஸ்கோடா ஆக்டேவியா RS 245

Euro NCAP க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய ஆக்டேவியா காட்சிபடுத்தப்படுவதற்கான சாத்தியம் குறைவுதான். அதற்குப் பதிலாக, ஆக்டேவியா RS 245 கம்பேக் கொடுக்க உள்ளது.

இது ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கக்கூடிய அதே Specification-ல் கிடைக்கும் என்பது, கார் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்திதான் (2 லிட்டர் TSi: 245bhp பவர் & 37kgm டார்க்)! ஆனால் இறக்குமதி செய்யப்படும் இதன் விலை 40 லட்ச ரூபாயாக இருக்கலாம் என்பதுதான் பகீர்!

ஸ்கோடா Vision IN
ஸ்கோடா Vision IN

2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (190bhp பவர்/32kgm டார்க்) - 7 ஸ்பீடு DCT அமைப்பு பொருத்தப்பட்ட கோடியாக் மற்றும் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்படலாம். எல்லாமே BS-6 வாகனங்கள்தான்; ஆனால் எதிலுமே டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. தற்போது பரபரப்பாக இருக்கும்.

மிட்சைஸ் செக்மென்ட்டில் Vision IN கான்செப்ட் வாயிலாகக் குதிக்கிறது ஸ்கோடா. க்ரெட்டாவுக்குப் போட்டியாக வரப்போகும் இது, ஏறக்குறைய பார்ப்பதற்கு Kamiq போல இருப்பதற்கான சாத்தியம் அதிகம். பிப்ரவரி 5, 2020 அன்று இது வெளியாக இருக்கிறது. அடுத்த தலைமுறை ரேபிட் போலவே, இந்த எஸ்யூவியும் MQB A0 IN பிளாட்ஃபார்மில்தான் தயாராகப் போகிறது.

RENAULT
RENAULT

லாஜியின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதால், அதன் BS-6 வெர்ஷனை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் பார்க்க முடியாது. அதற்கான மாற்று எம்பிவியாக வந்திருக்கும் ட்ரைபரின் வெற்றி, ரெனோவை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. எனவே அதன் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (குறியீட்டுப் பெயர்: HR10) மற்றும் AMT கொண்ட வெர்ஷன்களை, அந்த நிறுவனம் இங்கே காட்சிபடுத்தலாம்.

 ரெனோ ZOE EV, ரெனோ HBC காம்பேக்ட் எஸ்யூவி
ரெனோ ZOE EV, ரெனோ HBC காம்பேக்ட் எஸ்யூவி

மேலும் ட்ரைபரின் CMF-A+ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட உள்ள காம்பேக்ட் எஸ்யூவியும் வெளியாகலாம் (குறியீட்டுப் பெயர்: HBC). நெக்ஸான், விட்டாரா பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட், வென்யூ, XUV3OO ஆகியவற்றுக்குப் போட்டியாக வரப்போகும் இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மட்டுமே வரும் (டீசல் கிடையாது).

ரெனோ ட்ரைபர் டர்போ
ரெனோ ட்ரைபர் டர்போ

இது எஸ்யூவி என்பதால், ட்ரைபரை விட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பெரிய வீல்கள் இடம்பெறலாம் (16 இன்ச்). ஆனால் இது 5 இருக்கைகளுடன் மட்டுமே வரும். அதேபோல கேப்ச்சர் மற்றும் டஸ்ட்டரின் BS-6 வெர்ஷன்களில், அதன் புகழ்பெற்ற 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இருக்காது.

அதற்குப் பதிலாக 1.3 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும் (குறியீட்டுப் பெயர்: HR13). 2018 எக்ஸ்போவில் Zoe E-ஸ்போர்ட் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், 2020 எக்ஸ்போவில் அதன் Production வெர்ஷன் வரலாம்.

41kWh பேட்டரி Pack - 90bhp பவரைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டார் சேர்ந்து, 1.5 டன் எடையுள்ள Zoe EV காரை, சிங்கிள் சார்ஜில் 300-350 கிமீ தூரம் வரை கொண்டு செல்லும். பார்க்க 4 மீட்டருக்குட்பட்ட ஹேட்ச்பேக்குகளைப்போலவே இருந்தாலும், அதைவிட இருமடங்கு விலையில்தான் இந்த எலெக்ட்ரிக் கார் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

VOLKSWAGEN
VOLKSWAGEN

மோட்டார் ஷோ 2019-ல் தனது புதிய லோகோவை காட்சிபடுத்தியதைத் தொடர்ந்து, ஃபோக்ஸ்வாகன் புத்துணர்ச்சியுடன் இயங்கி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும்விதமாக, புதிய கார்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் இந்த நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளது. இது அனைத்துமே எஸ்யூவிகள் என்பதுதான், கார் ஆர்வலர்களுக்கான போனஸ்.

VW T-Cross, VW T-Roc
VW T-Cross, VW T-Roc

இந்தியாவுக்கான கார்களைக் கட்டமைக்கும் விதமாக, India 2.0 கோட்பாட்டின்படி தகவமைக்கப்பட்டிருக்கும் MQB A0 IN பிளாட்ஃபார்மிலிருந்து T-க்ராஸ் எஸ்யூவி (குறியிட்டுப் பெயர்: AO) வரும். க்ரெட்டாவுக்குப் போட்டியாக வரப்போகும் இந்த மிட்சைஸ் எஸ்யூவியில், 130bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய EVO TSI பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும்.

VW I.D. Crozz
VW I.D. Crozz

இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் ஃபோக்ஸ்வாகன் கவனமாக இருக்கும் என நம்பலாம். 3 வரிசை இருக்கைகளுடன் கூடிய மாடலாக, டிகுவான் All Space இருக்கப் போகிறது. எனவே இதன் டிசைனில் பெரிய மாற்றம் தெரியாவிட்டாலும், எதிர்பார்த்தபடியே நீளம் (215மிமீ அதிகம்) மற்றும் கேபினில் வித்தியாசம் இருக்கும். டிகுவானில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு DCT - 4Motion சிஸ்டம் இங்கும் தொடரும்.

VW கோல்ஃப் GTI,  VW போலோ RX
VW கோல்ஃப் GTI, VW போலோ RX

ஸ்கோடாவுக்கு கரோக் எப்படியோ, ஃபோக்ஸ்வாகனுக்கு T-Roc அப்படி. எனவே ஏறக்குறைய அதே CBU பாணியில், இந்த எஸ்யூவியை இந்தியாவுக்குக் கொண்டு வரவுள்ளது ஃபோக்ஸ்வாகன். டிகுவானைப்போலவே, இதுவும் MQB பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. கரோக்கைப் போலவே, T-Roc-லும் 1.5 லிட்டர் TSi இன்ஜின் - 7 ஸ்பீடு DCT கூட்டணியே இருக்கும் (150bhp பவர்). இதன் விலை சுமார் 20 லட்ச ரூபாய் இருக்கலாம்.

ஸ்கோடா ஆக்டேவியா RS 245 காரைக் கொண்டு வருவதுபோல, ஃபோக்ஸ்வாகன் தன் பங்குக்கு Golf GTI காரை நம் நாட்டுக்குக் குறைவான எண்ணிக்கையில் களமிறக்க உள்ளது. CBU முறையில் வருவதால், இதன் விலை 40 லட்சத்தை நெருங்கும்.

VW டிகுவான் All-Space
VW டிகுவான் All-Space

இதனைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார்களுக்கான MEB பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட I.D. Crozz காரையும் 2020 எக்ஸ்போவில் எதிர்பார்க்கலாம். இதிலிருக்கும் 83kWh லித்தியம் ஐயன் பேட்டரி - 306bhp பவர் மற்றும் 45kgm டார்க்கைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணி சேர்ந்து, சிங்கிள் சார்ஜில் 500 கி.மீ தூரத்துக்குக் காரை இயக்கும் எனத் தெரியவந்துள்ளது.

I.D. Crozz-ன் முன்பக்க சக்கரங்களுக்கான 102bhp/14kgm எலெக்ட்ரிக் மோட்டார் - பின்பக்கச் சக்கரங்களுக்கான 204bhp/31kgm எலெக்ட்ரிக் மோட்டார் இருப்பதுதான் ஹைலைட். 180கிமீ டாப் ஸ்பீடு கொண்ட இந்த எஸ்யூவி, பிராக்டிக்கலாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் ஏமியோ கப்புக்குப் பதிலாக, போலோ கப்பை மீட்டெடுக்கிறது ஃபோக்ஸ்வாகன். அதில் இருக்கப்போகும் Polo RX காரை, அந்த நிறுவனம் இங்கே காட்சிப்படுத்தலாம். இதிலிருக்கும் 1.8 லிட்டர் TSi இன்ஜின் - 6 ஸ்பீடு Sequential கியர்பாக்ஸ் அமைப்பு, 240bhp பவர் மற்றும் 34.5kgm டார்க்கைத் தருகிறது. ரியர் வீல் டிரைவ் என்பது செம!

MAHINDRA
MAHINDRA

ம்முறையும் எலெக்ட்ரிக் வாகனங்கள், புதிய கார்கள் மற்றும் கான்செப்ட்கள் எனக் கவனத்தை ஈர்க்கவுள்ளது மஹிந்திரா.

'இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்' என்ற பெருமையுடன் eKUV1OO-ம், நெக்ஸான் EV-க்குப் போட்டியாக XUV1OO EV (குறியீட்டுப் பெயர் - S210), 2018 எக்ஸ்போவில் கான்செப்ட்டாக இருந்த Atom Quadricycle-ன் Production வெர்ஷன் ஆகியவை அதற்கான உதாரணம். மோ.வி வாசகரின் ஸ்பை படம் பார்த்திருப்பீர்கள்.

மஹிந்திரா eKUV 100, மஹிந்திரா XUV4OO
மஹிந்திரா eKUV 100, மஹிந்திரா XUV4OO

மேலும் TUV 3OO மற்றும் TUV 3OO ப்ளஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட்கள், தற்போது விற்பனை செய்யப்படும் XUV 5OO-ன் BS-6 டீசல் மாடல் (பெட்ரோல் மாடலின் விற்பனை 2019-லேயே நிறுத்தப்பட்டுவிட்டது), ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் BS-6 டீசல் இன்ஜினுடன் கூடிய மராத்ஸோ ஆகியவை அப்டேட்களுடன் கூடிய மாடல்களாக வருகின்றன.

Pininfarina பட்டிஸ்ட்டா
Pininfarina பட்டிஸ்ட்டா

க்ரெட்டாவுக்குப் போட்டியாக 7 இருக்கைகளைக் கொண்ட XUV4OO (குறியீட்டுப் பெயர் - S204), கான்செப்ட் ரூபத்தில் காட்சி தரலாம். அதேநேரத்தில் இரண்டாம் தலைமுறை XUV5OO, இங்கே காட்சிக்கு வைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. Pininfarina தயாரிப்புகள், கார் ஆர்வலர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைத் தரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு