Published:Updated:

ஆட்டோமொபைல் பற்றி A to Z தெரிந்து கொள்ள... 5 நாள் வொர்க்‌ஷாப்!

மஹிந்திரா & மஹிந்திரா: வொர்க்‌ஷாப்

பிரீமியம் ஸ்டோரி

75 mahindra Rise

ண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இப்படி ஒரு வரவேற்பை மோட்டார் விகடனின் ஆசிரியர் குழு எதிர்பார்க்கவில்லை. மோட்டார் விகடன் நடத்தும் பயிலரங்கங்களுக்கு வாசகர்கள் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கில் மோட்டார் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளி மாணவர்கள்கூட பெரும்திரளாக வருவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், மஹிந்திராவோடு இணைந்து மோட்டார் விகடன் நடத்தும், Automotive R & D Design என்கிற ஐந்து நாள் பயிலரங்கத்திற்கு மாநில எல்லைகளைத்தாண்டி... ஏன் நாட்டின் எல்லைகளை எல்லாம்கூடத் தாண்டி பங்கேற்பாளர்கள் வருவது இது போன்ற பயிலரங்கங்களுக்கான தேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிய வைத்திருக்கிறது.
பா.சீனிவாசன்
பா.சீனிவாசன்

பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலருக்கும் பயிற்று மொழி ஆங்கிலமாக இருப்பதால், பயிலரங்கங்களை ஆங்கிலத்திலும் மோட்டார் விகடன் நடத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட அறிஞர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பு வகிப்பவர்களும் நம் பயிலரங்குகளில் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதும்கூட, நாம் ஆங்கிலத்தில் பயிலரங்கங்களை நடத்துவதற்கு முக்கியமான காரணம்.

ஆட்டோமொபைல் பற்றி A to Z தெரிந்து கொள்ள... 5 நாள் வொர்க்‌ஷாப்!

தற்போது நடைபெற்று வரும் ‘ஆட்டோமோட்டீவ் R&D டிசைன்’ என்கிற ஐந்து நாள் பயிலரங்கமும் ஆங்கிலத்தில்தான் நடைபெற்று வருகிறது. இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு என்பது நம்மைத் திக்குமுக்காட வைக்கிறது. இந்தப் பயிலரங்கம் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களில் பல்லாயிரம்பேர் இதில் கலந்து கொள்ளப் பதிவு செய்தார்கள். தமிழ்நாட்டைத் தாண்டி ஐஐடி போன்று நாட்டின் பல்வேறு முக்கியமான புகழ்பெற்ற கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களும் இதில் அடக்கம்.

வேலுசாமி
வேலுசாமி

இந்தப் பயிலரங்கத்தின் ஆரம்ப நாளான ஜனவரி 13-ம் தேதி அன்று, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஸ்மித் (Chief Platform Head - Platform 7, Mahindra & Mahindra Ltd), e-Mobilities and future பற்றிப் பேசப் பேச... அவர் பயிலரங்கத்தையே முடிக்க முடியாத அளவுக்கு சாட் பாக்ஸில் கேள்விகளாகக் கொட்டிக் கொண்டிருந்தார்கள் அந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மாணவர்கள். காரணம், மைக்கேல் ஸ்மித் கொடுத்த ஒன்றரை மணி நேர பிரசன்டேஷன். எதிர்காலத்தின் வரப்போகும் கார்கள் மின்சாரக் கார்களாக மட்டும் இருக்குமா... அல்லது அதையும் தாண்டி பல்வேறு தொழில்நுட்பங்களையும் சார்ந்ததாக இருக்குமா என்பதை - தன் பரந்துபட்ட அனுபவத்தின் வாயிலாக அவர் விளக்கிச் சொன்னதே.

மைக்கேல் ஸ்மித்
மைக்கேல் ஸ்மித்
நவீன் சோப்ரா
நவீன் சோப்ரா
அகிலா ஷர்மா
அகிலா ஷர்மா

இந்த ஐந்து நாள் பயிலரங்கத்தைத் துவங்கி வைத்துப் பேசிய மஹிந்திராவின் ஆர்.வேலுசாமி, விஞ்ஞானம் எந்த அளவுக்கு வியக்கத்தக்கது என்பதைத் தனக்குக் கொடுக்கப்பட்ட ஐந்தே நிமிடங்களில் அற்புதமான விளக்கினார்.

சங்கர் வேணுகோபால்
சங்கர் வேணுகோபால்

ஐசக் நியூட்டனாக இருந்தாலும் சரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக இருந்தாலும் சரி... கண்டுபிடிப்புகளில் அவர்கள் தொட்ட உச்சங்களைத் தாண்டி... அவர்களுக்குப் புலப்படாத உண்மைகளை அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கண்டுபிடித்த கதையை, சுவாரஸ்யமாக உரிய உதாரணங்களோடு எடுத்துச் சொன்னபோது மாணவர்கள், ‘அட, ஆமால்ல!’ என்று சாட் பாக்ஸில் உணர்ச்சிகளைக் காட்டினார்கள்.

சமீர்
சமீர்

டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் நாள் பயிலரங்கமும் முதல் நாள் பயிலரங்கத்துக்குக் குறைவில்லாத சுவாரஸ்யத்தோடு நடைபெற்றது. அன்றைய தினம் உரை நிகழ்த்தியது நவின் சோப்ரா, இவர் மஹிந்திராவில் Chief Platform Head என்ற உயர் பொறுப்பில் இருப்பவர். Co-creating Automotive Product Development through Platform, People and Process என்பது பற்றித்தான் அவரது உரை அமைந்திருந்தது. ஆட்டோமொபைல் துறையில் முப்பது ஆண்டு கால அனுபவம் பெற்றவர் இவர். மஹிந்திராவின் வெற்றிக்குத் துணை நிற்கும் முக்கியமான வாகனங்களின் உருவாக்கத்துக்கு ஆரம்ப நாட்கள் தொட்டு தோள் கொடுத்தவர். ஒரு வாகனத்துக்கு மக்களிடம் இருக்கும் தேவைகளை மார்க்கெட் ரிஸர்ச் வாயிலாக எப்படித் திரட்டுவது, அதை அடிப்படையாகக் கொண்டு வாகனத்தை எப்படி வடிவமைப்பது, வடிவமைத்த வாகனத்தை எப்படி உருவாக்குவது, உருவாக்கிய வாகனத்தை எப்படி விற்பனை செய்வது, விற்பனை செய்த வாகனத்தை எப்படி சர்வீஸ் செய்வது... என்று ஆதி முதல் அந்தம்வரை ஒரு வாகனத்தின் லைஃப் சைக்கிளையே விறுவிறுப்பான குறும்படம் போல பவர் பாய்ன்ட்டில் போட்டுக் காட்டி வியக்க வைத்தார்.

ஆட்டோமொபைல் பற்றி A to Z தெரிந்து கொள்ள... 5 நாள் வொர்க்‌ஷாப்!

இந்தப் பயிலரங்கங்கள் அனைத்துக்குமே துணை நின்றதோடு, தூண்டுகோலாக இருந்து மாணவர்கள் சாட் பாக்ஸில் கேட்கும் கேள்விகளை பயிலரங்கின் பேச்சாளர்களுக்கு எடுத்துச் சொல்லி, பதில் வாங்கிக் கொடுக்கும் பணியைச் நேர்த்தியாக செய்தவர் மஹிந்திரா நிறுவனத்தின் மனித வளத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் சாம்சன் ஜோஸ். மஹிந்திராவுக்கு என்று மட்டுமல்லாது, ஒரு பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனத்துக்கு, 'இன்ஜினியர் டிரெய்னி' வேலைக்கு நேர்காணலுக்கு வருகிற மாணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்? அவை அவர்களுக்கு இருக்கிறதா என்பதை எப்படி நேர்காணல் நடத்தும் அதிகாரிகள் தெரிந்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அவர் ஒளிவுமறைவு இல்லாமல் டிப்ஸ் போலக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, மஹிந்திராவின் சீஃப் இன்ஜினியராகப் பொறுப்பு வகிக்கும் டாக்டர் அகிலா ஷர்மா, Importance of Simulation in Automotive Product Development (Crash, light weight, NVH etc) என்ற தலைப்பில் பயிலரங்கத்தை நடத்தி முடித்திருப்பார். இதையடுத்து ஃபிப்ரவரி 6-ம் தேதி, சனிக்கிழமை அன்று மஹிந்திராவின் வைஸ் பிரெஸிடெண்ட் டாக்டர் சங்கர் வேணுகோபால், Innovation and Creativity for Automotive Engineers என்பது பற்றிப் பேச இருக்கிறார். பொறியாளர்களுக்கு எந்த அளவுக்கு நுண்ணறிவும், கற்பனை சக்தியும் தேவை என்று ஆரம்ப நாள் அன்றே வேலுசாமி கோடிட்டுக் காட்டி, இந்த சப்ஜெக்ட் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார் என்பதால், அன்றைய தினம் அட்டண்டென்ஸ் அமோகமாக இருக்கும்.

பயிலரங்கின் இறுதி நாளான ஃபிப்ரவரி 13-ம் தேதி அன்று மஹிந்திராவின் சீஃப் இன்ஜினியரான சமீர், Automotive Advance Engineering and Platform Strategies என்பது பற்றிப் பேச இருக்கிறார். தலைப்பே சொல்வதைப்போல இது ஆட்டொமொபைலின் அடுத்த கட்டத் தொழில்நுட்பத்தைப் பற்றியும், வரும் காலங்களில் வாகனங்கள் உருவாக இருக்கும் முறை பற்றியும் வெளிச்சம் பாய்ச்சும்.

விகடன் குழுமத்தின் மேலான் இயக்குனர் பா.சீனிவாசன் வரவேற்புரையில் சொன்னதைப் போல மாணவர்களின் அறிவியல் தேடல்களை விரிவுப்படுத்த மஹிந்திரா போன்ற 'நாலெட்ஜ் லீடர்ஸு'டன் மோட்டார் விகடன் கைகோத்து இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தும்.

உங்கள் நண்பர்கள் யாராவது இந்தப் பயிலரங்கங்களை மிஸ் செய்திருந்தால்... மோட்டார் விகடனின் யூ டியூப் சேனலில் கண்டு பயன்பெறலாம்.

இந்தப் பயிலரங்கத்துக்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள், பிப்ரவரி 6 மற்றும் 13-ம் தேதி நடைபெறும் பயிலரங்கில் கலந்து கொள்ள இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

ஆட்டோமொபைல் பற்றி A to Z தெரிந்து கொள்ள... 5 நாள் வொர்க்‌ஷாப்!

அல்லது இந்த பிட்லி லிங்கை https://bit.ly/2KZwb3D க்ளிக் செய்தும் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தொடர்புக்கு: 73388 26999 / 97909 90404

ஆட்டோமொபைல் பற்றி A to Z தெரிந்து கொள்ள... 5 நாள் வொர்க்‌ஷாப்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு