வருடா வருடம் கடும் வெயிலில் புழுதி பறக்க நடக்கும் ‘பாஹா’ (Baja) போட்டிகள், இந்த வருடம் சத்தமே இல்லாமல் ஆன்லைன் ஈவென்ட்டாக நடந்து முடிந்திருக்கின்றன. இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், படிக்கும்போதே தங்கள் திறமையை வெளிப்படுத்த மஹிந்திரா மற்றும் SAE India இணைந்து இந்த பாஹா போட்டியை நடத்துகின்றன.
இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் அனைத்திலிருந்தும் மாணவர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், ஆல் டெரெய்ன் வெஹிக்கிள் (All-Terrain Vehicle) எனப்படும் ஆஃப் ரோடு வாகனங்களைத் தங்கள் சொந்த முயற்சியில் மாணவர்கள் உருவாக்கி, அதனைக் கொண்டு ஆஃப் ரோடு ரேஸிங்கில் பங்கேற்க வேண்டும். கொரோனாவால் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது எனத் தடை இருப்பதால், ஆன்லைன் நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியிருக்கிறார்கள் பாஹா குழுவினர்.282 குழுக்கள் பதிவு செய்து 200 குழுக்கள் மட்டும் போட்டிக்குத் தேர்வாகியிருந்தன இந்த வருடா பாஹா போட்டிகளுக்கு. எலெக்ட்ரிக் வாகனங்கள் (e-baja) மற்றும் பெட்ரோல் டீசலில் இயங்கும் வாகனங்கள் (m-baja) என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஆன்லைனில் எப்படி ரேஸிங் போட்டிகள் என்ற சந்தேகம் எழுகிறதா? மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த வாகனங்களின் ஸ்பெசிபிகேஷன்களைக் கொண்டு, விர்ச்சுவலாக அதே கார்களை உருவாக்க புதிய சாப்ட்வேர்களை வடிவமைத்திருந்தனர் பாஹா குழுவினர். இதன் மூலம் விர்ச்சுவலாகவே, கடந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. பிரேக் பெர்ஃபாமன்ஸ், ஆக்ஸிலரேஷன், கிரேடபிலிட்டி, மேனுவரபிலிட்டி, சஸ்பென்ஷன் அண்ட் ட்ராக்ஷன் ஆல் டெரெய்ன் பெர்ஃபாமன்ஸ் மற்றும் ஓவரால் டைனமிக் பெர்ஃபாமன்ஸ் என ஏழு பிரிவுகளின் கீழ் m-baja மற்றும் e-baja என இரண்டு பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போட்டியில் தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி என்ஐடி-யைச் சேர்ந்த மாணவர்கள் குழு, m-baja-வின் கிரேடபிலிட்டி மற்றும் மேனுவரபிலிட்டி ஆகிய பிரிவுகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.ஆன்லைன் ரேஸ்...