Published:Updated:

பெரிய டயர், பெரிய பிரச்னை!

கார்களில் மைலேஜ் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சிறிய டயர்களையும், ரோடு கிரிப்புக்காக பெரிய டயர்களையும் சிலர் பொருத்துவார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

`பெரிய டயர் பொருத்தலாம்’ என்ற எண்ணம் இருந்தால் சரியான வீல் மற்றும் டயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் காரின் கையாளுமை பாதிக்கப்படும். சில சமயங்களில் இதனால் விபத்துகள்கூட நேரலாம். அழகு, கையாளுமை மற்றும் பாதுகாப்பு இந்த மூன்றையும் பேலன்ஸ் செய்யும்படியான பெரிய டயர்களைப் பொருத்துவது எப்படி என்று பார்ப்போம்.

ஸ்டாக் டயரில் இருந்து புதிய டயர்களுக்கு மாறும்போது புதிய டயரின் மொத்த விட்டம் (diameter) தற்போது இருப்பதைவிட 3 சதவிகிதத்துக்கு அதிகமாகக்கூடாது. டயரின் அகலமும் வீல் ஆர்ச்சைத் தாண்டிவிடக் கூடாது. அப்படியிருந்தால், காரில் அதிக லோடு ஏறும் பட்சத்தில் டயர் திரும்பும்போது, வீல் ஆர்ச்சில் உரசும். இதனால் விபத்துகள் ஏற்படலாம். அகலமான டயர்கள் பொருத்துவதால் காரின் கிரிப் மற்றும் ஸ்டெபிலிட்டி அதிகரிக்கும். ஆனால் வேகம் மற்றும் மைலேஜ் இதனால் குறைத்துவிடும். ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸும் குறைவாகவே இருக்கும்.

டயரின் பக்கவாட்டுப் பகுதியை Sidewall என்பார்கள். வீல் திரும்பும்போது இந்த சைடுவாலும் வளையும். காரின் ரிம் பெரிதாகவும், சைடுவால் சிறியதாகவும் இருந்தால் திருப்பங்களின்போது சைடுவால் குறைவாகவே வளையும். இதனால் செம கிரிப் கிடைக்கும். ஆனால் சொகுசான டிரைவிங் கிடைக்காது. பொதுவாக டயரின் அகலம் அதிகரிக்கும்போது சைடுவால் அளவு குறையும்.

Tire
Tire

ஸ்விஃப்ட்டின் Z வேரியன்ட் காரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். இதில் தற்போது 185/65/R15 டயர்கள் வருகின்றன. 185(mm) என்பது டயரின் அகலம். 65(%) என்பது சைடுவாலின் உயரம். இதை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்பார்கள். அதாவது டயரின் அகலத்தில் 65 சதவிகிதம் சைடுவாலின் உயரம். 15 இன்ச் என்பது ரிம்மின் விட்டம்.

டயரின் மொத்த விட்டம் கணக்கிடும் முறை = (ஆஸ்பெக்ட் ரேஷியோX2)+ ரிம் விட்டம் = (65/100x185) x 2 + (15x25.4) = 621.5 (25.4மிமீ = 1 இன்ச்)

இந்த காரின் மொத்த விட்டம் 621.5மிமீ, இதில் 3 சதவிகித க்ளியரன்ஸ் 18.6மிமீ-க்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும் டயர்களை பொருத்தக்கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டயர் மாற்றுவதால் பிரச்சனை வருமா...? விமல்நாத் பதில் என்ன?

வழக்கமாக கிரிப் மற்றும் ஸ்டெபிலிட்டியை அதிகப்படுத்தத்தான் டயரை மாற்றுவார்கள். பெரிய டயர்களைப் பொருத்திவிட்டு, கார் வாங்கிய ஒரே ஆண்டில் சஸ்பென்ஷன் உடைந்து போய் வாரன்ட்டி கேட்டு வருபவர்களைப் பார்த்திருக்கிறேன். டயர் மாற்றும்போது, அழகுக்காகச் சிறிய சைடுவால் கொண்ட டயரை பொருத்தக்கூடாது.

பெரிய டயர், பெரிய பிரச்னை!

இதனால் சஸ்பென்ஷன் சேதமாகும். சிலரிடம் காரின் ஒரிஜினல் ஸ்பெக்கில் இருக்கும் டயர்களை மட்டுமே பொருத்தச் சொல்வோம். சிலர் வற்புறுத்திக் கேட்பார்கள். அவர்களுக்கு வீல்களை மாற்றாமல், அதே வீலில் கொஞ்சம் அகலமான டயர்களை மாற்றுங்கள் என அறிவுரை கொடுப்போம். அதே அளவு சைடுவால் இருந்தால் நல்லது. வீல்களை மாற்றினால் காரின் டர்னிங் ரேடியஸ் மாறும். சில டயர்கள், வீல் ஆர்ச்சில் இடிக்கும். காரின் வாரன்ட்டி முடியும் வரை பெரிய டயர்கள் மாற்றாமல் இருப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு