Published:Updated:

800 கோடி ரூபாய் செலவில் உருவான பாஷின் ஸ்மார்ட் கேம்பஸ்!

பாஷ்
பிரீமியம் ஸ்டோரி
பாஷ்

கேம்பஸ் விசிட்: பாஷ், பெங்களூரு

800 கோடி ரூபாய் செலவில் உருவான பாஷின் ஸ்மார்ட் கேம்பஸ்!

கேம்பஸ் விசிட்: பாஷ், பெங்களூரு

Published:Updated:
பாஷ்
பிரீமியம் ஸ்டோரி
பாஷ்

ஆட்டோமொபைலில் பாஷின் பங்கு ரொம்ப முக்கியமானது. ஆரம்பத்தில் மைக்கோ பாஷ் ஆக இருந்து, இப்போது பாஷ் ஆக உயர்ந்திருக்கும், இந்த ஆட்டோமொபைலின் பாஸுக்கு வயது எத்தனை தெரியுமா? 100.

ஆம், 1922–ல்தான் முதன் முதலில் இந்தியாவில் கொல்கத்தாவில் ஒரு சேல்ஸ் ஏஜென்ஸியாக தன் பாதம் பதித்தது. 1951–ல் மைக்கோ பாஷ் மோட்டார் இண்டஸ்ட்ரி தொடங்கி… சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், நாகநாதபுரா என்று இந்தியா முழுக்க தனது ப்ளான்ட்களை வைத்திருக்கிறது.

இப்போது பாஷின் உதிரிபாகங்களில்தான் பல வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. 2010–ல் RBIC-ல் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்துக்கான அசெம்பிளியை (ABS) அறிமுகப்படுத்தியது பாஷ்தான். ஸ்பார்க் ப்ளக், டீசல் அசெம்பிளி சிஸ்டம், டீசல்களுக்கான இன்ஜெக்டர், ஃப்யூல் பம்ப், நாஸில் ஹோல்டர்கள், டிஸ்க்குகள், பேடுகள் என்று எலெக்ட்ரானிக், மெக்கானிக் சம்பந்தமான எத்தனை உதிரிபாகங்கள்! ஆட்டோமொபைல் தாண்டி செக்யூரிட்டி கேமராக்கள், வீட்டு உபயோகப் பொருட்களையும் பாஷ் விட்டு வைக்கவில்லை.

2015–ல் ஒரு டீசல் சிஸ்டத்துக்கான ப்ளான்ட்டை பெங்களூருவில் உள்ள பிடதி எனும் இடத்தில் நிறுவியதற்குப் பிறகு, ஒரு ஸ்மார்ட் கேம்பஸுடன் பெங்களூருவில் மறுபடியும் கால் தடம் பதித்திருக்கிறது பாஷ். அந்த ஸ்மார்ட் கேம்பஸின் விசிட்டுக்கு நம்மைப் பாசமாக அழைத்திருந்தது பாஷ்.

‘ஸ்மார்ட் கேம்பஸ்’ என்பது பெயரளவில் இல்லை; எல்லாமே டிஜிட்டல் மயமாக செம ஸ்மார்ட்டாக இருந்தது. இதைத் திறந்து வைக்க, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரிலும், நம் இந்தியப் பிரதமர் விர்ச்சுவலாகவும் வந்து பாஷ் நிறுவனத்தை வாழ்த்திப் பேசினர். ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 75–வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக் கிறது. பாஷ், இந்தியாவுக்கு வந்து 100 ஆண்டுகளைக் கொண்டாடிக் கொண்டிருக் கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மன் கம்பெனியாக நம் இந்தியத் திருநாட்டுக்குள் நுழைந்தது பாஷ். இப்போது இந்திய நிறுவனமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது ஜெர்மன் இன்ஜீனியரிங்கும் இந்திய ஆற்றலும் இணைந்தால் எப்படி ஒரு நாட்டுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்பதற்கு உதாரணம். இந்தியாவின் எதிர்காலத்துக் கான தயாரிப்புகளும், அதற்கான முன்னெடுப்புகளும் இந்த ஸ்மார்ட் கேம்பஸில் இருந்துதான் உருவாகப் போகின்றன!’’ என்று பெரிய டிவி திரையில் தோன்றிப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

800 கோடி ரூபாய் செலவில் உருவான பாஷின் ஸ்மார்ட் கேம்பஸ்!
800 கோடி ரூபாய் செலவில் உருவான பாஷின் ஸ்மார்ட் கேம்பஸ்!

இந்தக் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 800 கோடி ரூபாயை இந்த கேம்பஸுக்காக முதலீடு செய்திருக்கிறது பாஷ். இந்த 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட கேம்பஸில் கிட்டத்தட்ட 10,000–க்கும் மேற்பட்ட இணை அலுவலகங்கள் இயங்கக் காத்திருக்கிறது. இதற்கு Spark.NXT Campus என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

செக்யூரிட்டி ஆபீஸரில் இருந்து ஊழியர்கள், டெக்னீஷியன்கள்… அட இவ்வளவு ஏன்… பார்வையாளர்கள் வரை எல்லோருக்குமே டிஜிட்டல் ஆக்ஸஸில்தான் உள்ளே நுழைய முடியும். தொழில்நுட்பத்தைக் கொட்டி இந்த கேம்பஸைக் கட்டியிருக்கிறது பாஷ். பெங்களூருவின் மாசுக் கட்டுப்பாட்டில் ஆரம்பித்து காலநிலை, டிராஃபிக், மொபிலிட்டி, எக்கோசிஸ்டம் வரை கர்நாடக அரசுக்கு இங்கிருந்தே உதவவும் காத்திருக்கிறது பாஷ். அதாவது, ஒரு கட்டுப்பாட்டு அறைபோல் இயங்குகிறது.

பாஷின் ஆட்டோமோட்டிவ் சம்பந்தமான தயாரிப்புகள், நான்–ஆட்டோமோட்டிவ் துறை தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றுக்குமே இதுதான் R&D ஆகவும் செயல்படப் போகிறதாம்.

100… 200… 300… 400.. ஆண்டுகள் என்று இன்னும் ஆயுசுகள் உச்சம் தொட வாழ்த்துகள் பாஷ்!