Published:Updated:

Bosch ஆட்டோமொபைலின் Boss... 100-வது பிறந்த நாள் கொண்டாடும் பாஷ் நிறுவனத்தின் தனிச்சிறப்பு என்ன?!

பாஷ் - Bosch
பாஷ் - Bosch

கார்கள் உள்ளவரை பாஷ்தான் பாஸ்! ஒரு காரில் கிட்டத்தட்ட 30,000 உதிரி பாகங்கள் உண்டு. இந்த உதிரி பாகங்கள் தயாரிப்புதான் ஆட்டோமோட்டிவ் தொழிலின் அடிப்படை ஆதாரமே... இதில் இதயமாக இயங்கும் நிறுவனம் பாஷ்.

ஏர் ஃபில்டர், ஃப்யூல் இன்ஜெக்டர், ரிலே, வைப்பர் பிளேடு, த்ராட்டில் சென்ஸார், ABS/ESP/Traction Control சிஸ்டம், ஸ்பார்க் பிளக், பேட்டரி, ஸ்டீயரிங் சிஸ்டம், ஆல்டர்நேட்டர், எலெக்ட்ரானிக் சிஸ்டம், பிரேக் பாகங்கள் என்று உங்கள் காரில் இருக்கும் ஏகப்பட்ட ஸ்பேர் பார்ட்ஸ்கள் பாஷ் நிறுவனம் தயாரித்ததாகத்தான் இருக்கும். ஆட்டோமொபைல் துறையில் பாஷுக்குப் போட்டி இல்லை என்றே சொல்லலாம்.

Bosch Spark Plug
Bosch Spark Plug
Bosch Factory
Bosch Factory

அப்படிப்பட்ட பாஷ் நிறுவனம், இப்போது தனது 100-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்பதுதான் ஸ்பெஷல். ஆட்டோமொபைல் துறையில் 100 ஆண்டுகளை எட்டிய வேறெந்த நிறுவனமும் இல்லை என்றே சொல்லலாம்.

1921-ல் தான் முதன் முதலில் ஜெர்மனியில் உள்ள ஹேம்பெர்க் நகரத்தில் பாஷ், தனது சர்வீஸ் சென்டருக்கான கதவைத் திறந்தது. இப்போது உலகின் தலைசிறந்த மல்ட்டி பிராண்ட் கார் சர்வீஸ் சென்டர்களில் பாஷ்-யைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. 150 நாடுகளில், 15,000 ஒர்க்ஷாப்கள் பாஷ் வசம் இருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையில் இன்ஜீனியர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதை பாஷ் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. பாஷில் மட்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது வேறெந்த நிறுவனமும் சாதிக்காத விஷயம். இது டிசம்பர் 2019 வரையான எண்ணிக்கை. இப்போது இன்னும் பல இன்ஜீனியர்கள் இருக்கலாம்.

Bosch Technology
Bosch Technology

கார் சர்வீஸ் என்று வரும்போது, நமக்கு ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். அதுவும் பழைய கார் உரிமையாளர்களுக்கு இந்தச் சந்தேகம் அதிகமாகவே இருக்கும். ‛‛நமது காரை கம்பெனி சர்வீஸிலேயே விடலாமா… தனியார் சர்வீஸில் விடலாமா?’’ என்பதுதான் அது. பாஷ் கார் சர்வீஸ் என்பது தனியார் மல்ட்டி பிராண்ட் சர்வீஸ் சென்டர்தான். ஆனால், கம்பெனி சர்வீஸுக்கே இதுதான் மூலம் என்பதுதான் ஸ்பெஷல். அதனால், பாஷ் சர்வீஸ் சென்டர்களில் காரை விடுவது, கம்பெனி சர்வீஸில் நம் காரைச் சரி செய்வதற்குச் சமம்தான்.BCS (Bosch Car Service) -ல் நமது கார் சர்வீஸ் செய்யப்படுவது நமக்குச் சாதகமே! இப்போது ஒவ்வொரு சர்வீஸ் சென்டர்களிலும் டிஜிட்டல் எக்கோ சிஸ்டத்திலும் கால் பதிக்க இருக்கிறது பாஷ்.

BCS (Bosch Car Service)
BCS (Bosch Car Service)

‛‛பேசஞ்ஜர் கார் சர்வீஸ் நெட்வொர்க்கில் 2020-ல் கோவிட் நிலைமையையும் தாண்டி நாங்கள் ஜெயித்துக் காட்டியிருக்கிறோம். பல OEM (Original Equipment Manufacturer) ஒர்க்ஷாப்கள், BCS ஒர்க்ஷாப் ஆக மாற்றுவதற்கு மிகப் பெரிய வழிகாட்டியாக இருக்கிறது பாஷ்!’’ என்கிறார், பாஷ் ஆட்டோமோட்டிவ் ஆஃப்டர் மார்க்கெட்டின் தலைவர் ரஞ்சன் குமார்.

கார்கள் உள்ளவரை பாஷ்தான் பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு