Published:Updated:

என்னாச்சு சிஆர்-விக்கு?

இந்த மாடல்தான் சிஆர்-வியின் 5-வது ஜெனரேஷன்.

பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ரெனோ டஸ்ட்டர் போன்ற சில கார்களில் டீசல் கிடையாது. இப்போது ஹோண்டாவும் தன் பங்குக்கு டீசலில் கை வைத்துவிட்டது. ஆம், இனி வரப்போகும் BS-6 சிஆர்-வியில் டீசல் இருக்காது; பெட்ரோல் மட்டும்தான் என்று சொல்லிவிட்டது ஹோண்டா.

என்னாச்சு ஹோண்டாவுக்கு? ``எங்கள் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பர்ஃபாமன்ஸில்தான் அலாதி திருப்தி அடைகிறார்கள். அதனால்தான் இந்த முடிவு’’ என்கிறார், ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் அதிகாரி ராஜேஷ் கோயல். இத்தனைக்கும் அக்டோபர், 2018-ல் சிஆர்-வி லாஞ்ச் ஆனதில் இருந்து, பெட்ரோல் மாடல் 638 கார்கள் விற்றிருக்கின்றன. ஆனால், டீசல் மாடல் 975 கார்கள் விற்பனை ஆகியிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த ஆண்டின் துவக்கத்தில், 154bhp பவருடன் 2.0லிட்டர் NA பெட்ரோல் மாடலில் லாஞ்ச் ஆனது BS-6 சிஆர்-வி. இந்த மாடல்தான் சிஆர்-வியின் 5-வது ஜெனரேஷன். பெட்ரோல் CVT ஆட்டோமேட்டிக், டீசல் ஆட்டோமேட்டிக், ஆல்வீல் டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் என்று மூன்று வெர்ஷன்களில் வந்த சிஆர்-வியில் இனி டீசலும் கிடையாது; 7 சீட்டரும் கிடையாது; ஆல்வீல் டிரைவும் கிடையாது என்று கைகளை ரொம்ப அகலமாக விரித்துவிட்டது ஹோண்டா.

என்னாச்சு சிஆர் - விக்கு?
என்னாச்சு சிஆர் - விக்கு?

என்னதான், பெட்ரோலில் 5 சீட்டர் இருந்தாலும், டீசலில் 7 சீட்டர் இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டார்கள். இனி பெட்ரோல் 5 சீட்டரை வைத்து மட்டும்தான் சந்தோஷப்பட வேண்டும் ஹோண்டா பிரியர்கள். ஆனால், இதற்கே எக்ஸ் ஷோரூம் விலையில் 28 லட்சம் கொடுக்க வேண்டும்.

ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல், சிஆர்-விக்குப் பதிலாக, இனி சிவிக்கில் BS-6 டீசல் வரும் என்று சொல்லி, செடான் டீசல் பிரியர்கள் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது ஹோண்டா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு