கிராஃபிக் டிசைன் செய்பவர்களுக்குத்தான் தெரியும்; அதன் மகிமை! பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு செட்டை, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வெறும் டீ–காபி செலவில் ஒரு மேக் சிஸ்டத்திலோ, விண்டோஸிலோ செய்துவிட்டுப் போய்விடலாம்.
3D Max, Maya, Coreldraw Lunacy, Adobe Photoshop என்று பல சாஃப்ட்வேர்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். Blender சாஃப்ட்வேரும் இதில் முக்கியமான ஒன்று. இந்த Blender சாஃப்ட்வேரில் 3D மாடலிங் செய்வது செம இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம். அதிலும் கார் போன்ற மொபிலிட்டி வாகனங்களை 3D–யில் செய்வது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும். அதையும் தாண்டி ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் செய்த காரை நீங்களே இந்த பிளெண்டர் மென்பொருளில் 3D–யில் டிசைன் செய்வது பேரானந்தமாக இருக்கும். இது ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு ரொம்பவே பிடித்தமான விஷயமாக இருக்கும்.

சொல்லப்போனால், இந்த 3D Blender சாஃப்ட்வேர் தெரிந்திருந்தால்… பல நிறுவனங்களில் உங்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கும். ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு கிராஃபிக் டிசைனிங் தெரிந்திருக்காது; கிராஃபிக் டிசைன் தெரிந்தவர்களுக்கு வாகனங்களைப் பற்றிப் பெரிதாகப் பரிச்சயம் இருக்காது. அப்படி ஆட்டோமொபைல் ஆர்வலர்களையும் கிராஃபிக் டிசைனர்களையும் இணைக்கும் புள்ளிதான் மோட்டார் விகடன் நடத்தும் ஒரு கார் டிசைனிங் ஒர்க்ஷாப்.
இதை நடத்த இருப்பவர், அசோக் லேலாண்டின் தலைமை வடிவமைப்பாளர் சத்தியசீலன். இப்போது நீங்கள் சாலைகளில் பார்க்கும் பல பேருந்துகள், ட்ரக்குகள், ஆட்டோக்கள், கார்கள் எனப் பல வாகனங்கள் இவரின் கை வண்ணத்தில் உருவானவையே!
‘புரியலையே’ என்பவர்களுக்கு லேசான முன்னுரை. மோட்டார் விகடனும் ஆயா அகாடமி எனும் நிறுவனமும் இணைந்து, அடிக்கடி ஒரு பயிலரங்கத்தை நடத்துகிறது. இது முழுக்க முழுக்க கார் டிசைன் ஒர்க்ஷாப். அதாவது, ஒரு காரை நீங்களாகவே உங்கள் கற்பனையில் வரைந்து, அதை க்ளே மாடலிங் செய்வது எப்படி என்பது வரை இந்தப் பயிலரங்கத்தில் சொல்லித் தருகிறார்கள். இதில் அழிரப்பரே இல்லாமல் ஒரு பொருளை வரைவது எப்படி; வெறும் ஒரு புள்ளி – இரண்டு புள்ளிகளை இணைத்து நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்தை வரைவது எப்படி; கார்களின் டயர்களுக்கு எவ்வளவு இடைவெளி இருந்தால் ஒரு கார் பார்க்க நன்றாக இருக்கும்; ஒரு பூனைக்குக்கூட Golden Proportion விதி இருப்பதால்தான் அது பூனை என்பது மாதிரி பல விஷயங்கள் இதில் கற்றுத் தேரலாம்.
இதைத் தாண்டி, இந்த ஒர்க்ஷாப் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது என்பது நிறைவு. இதில் கலந்து கொண்ட சில மாணவர்கள் இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் சில கார் நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் ஸ்பெஷல். இதில் கலந்து கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த ஷரோன் எனும் மாணவர், தமிழர்கள் நுழைய முடியாத எம்ஜி கார் நிறுவனத்தில் ஸ்டைஃபண்ட் தொகையுடன் இன்டர்ன்ஷிப் செய்திருக்கிறார்.

இந்த 3D மாடலிங் கார் ஒர்க்ஷாப்பில், Blender எனும் சாஃப்ட்வேர்தான் பிரதானம். இதில் கமல்–ரஜினி போன்ற உருவங்களைக்கூட 3D –யில் ரெடி செய்வது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித்தை 3D மாடலிங் செய்திருக்கிறார் ஒரு மாணவர். (பார்க்க: படம்) இதில் கார்களை 3D மாடலிங் செய்வது இன்னும் இன்ட்ரஸ்டிங்கான விஷயமாக இருக்கும்.
இப்படி வழக்கமான கேரக்டர்களைத் தாண்டி – பொருள்களைத் தாண்டி கார், அவற்றின் கலை உருவங்கள், உதிரி பாகங்கள் என்று பல விஷயங்களை 3D மாடலிங் செய்வது எப்படி என்பதை மவுஸ்நுனியில் நமக்குக் கற்றுத் தரப் போகின்றன மோட்டார் விகடனும் ஆயா அகாடமியும். இந்த சாஃப்ட்வேர் பயன்படுத்தித்தான் ரெனோ போன்ற நிறுவனங்கள், தங்கள் கார்களை 3D மாடலிங் செய்கின்றன. இந்த 3D Blender சாஃப்ட்வேர் கற்றுத் தெரிந்தால்… ரெனோ போன்ற கார் நிறுவனங்களில்கூட வேலை வாய்ப்புப் பெறலாம் என்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொல்கிறார் சத்தியசீலன்.
இதில் கார்களின் Thumbnail Sketches, Professional Approach on Car design, Composition Techniques, Speed forms போன்ற கார் டிசைன் அடிப்படைகளைச் சொல்லித் தர இருக்கிறார் சத்தியசீலன்.

இது கிராஃபிக் டிசைன் பயில விரும்பும் மாணவர்களுக்கு, போட்டோஷாப் – கோரல்டிரா போன்ற மென்பொருள்களில் இருந்து அடுத்த நிலைக்குத் தாவ விரும்பும் கிராஃபிக் டிசைனர்களுக்கு – கார் டிசைனிங்கில் பணிக்குச் சேர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டணப்பயிலரங்கம் நிச்சயம் ஒரு நல்ல ஓப்பனிங்காக இருக்கலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது – உங்கள் லேப்டாப்பில் பிளெண்டர் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிட்டு, வரும் டிசம்பர் 2022, 17–18–ம் தேதிகளில் ஆனந்த விகடன் 757, அண்ணா சாலை அலுவலகத்துக்கு வருவதுதான். அதற்கு முதலில் கீழே இருக்கும் லிங்க்கில் கட்டணம் கட்டி உங்கள் பெயரைப் பதிவு செய்து விடுங்கள். ‘உங்களில் யார் அடுத்த கார் டிசைனர்?’ என்பது தெரிய வரும்.