Published:Updated:

கார் டிசைனர் ஆகுறதுதான் லட்சியமா?

கார் டிசைன்
பிரீமியம் ஸ்டோரி
News
கார் டிசைன்

கார் டிசைன்: ஆன்லைன் பயிலரங்கம்

நாம் சாப்பிடும் இட்லி முதல், கூப்பிடும் போன் வரை எல்லாவற்றுக்குமே அடிப்படை டிசைன் - உருவாக்கக் கோட்பாடு.

வட்டமாக இருந்தால்தான் இட்லி; செவ்வகமாக இருந்தால்தான் டி.வி என்று எல்லாவற்றுக்கும் ஒரு டிசைன் கோட்பாடு உண்டு. சில நிமிடங்களில் செரிமாணமாகி விடும் இட்லிக்கே இப்படி என்றால், கார்களுக்கு டிசைன் எவ்வளவு முக்கியம்?

க. சத்தியசீலன்
க. சத்தியசீலன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கார் டிசைன் மீது பலருக்கு மோகமும் உண்டு என்பதால், மோட்டார் விகடனும், ஆயா டிசைன் அகாடமியும் இணைந்து `ஒரு கார்; ஒரு கனவு’ என்ற பெயரில் தொடர்ந்து பல பயிலரங்கங்களைப் பல கல்லூரிகளிலும், ஜூம் செயலி மூலமாகவும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 5 நாள்கள் ஆன்லைன் வகுப்பில் பேராசிரியர்கள், குடும்பத் தலைவர்கள், குடும்பத் தலைவிகள், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் என்று பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந் தார்கள். பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் பெற்றோர்களோடு கலந்துகொண்டு இதை ஒரு குடும்ப நிகழ்ச்சியாகவே மாற்றினார்கள்.

ஆட்டொமொபைல் இன்ஜீனியரிங் படிக்காமலேயே டிசைனர் ஆக முடியுமா? டிசைனர் ஆக என்ன படிக்க வேண்டும்? எங்கே படிக்க வேண்டும்? எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்? எவ்வளவு செலவு செய்து படிக்க வேண்டும்... என்பது போன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தார் பயிலரங்கத்தை நடத்திய க.சத்தியசீலன். அசோக் லேலாண்டில் டிசைன் துறையின் தலைவராக இருக்கும் இவர், தோஸ்த் என்கிற கமர்ஷியல் வாகனம் முதல் சன்ஷைன் போன்ற பள்ளிப் பேருந்துகள் வரை பல வாகனங்களின் வடிவமைப்பில் பங்கேற்றவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``கார்களின் தரம், எடை, கட்டுறுதி ஆகியவற்றைப் போலவே, ஏரோடைனமிக்ஸும் உயிர்ப்பும் முக்கியம். அதனால்தான், சுறா மீன்கள், சிறுத்தை, குதிரை ஆகியவற்றை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு கார்கள் உருவாக்கப்படுகின்றன’’ என்று சத்தியசீலன் பல உதாரணங்களைக் காட்டி விளக்கினார்.

கார் டிசைன்
கார் டிசைன்

அவர் சொல்வது எந்த அளவுக்கு நிஜம் என்பது சுறா மீனை நினைவுபடுத்தும் டிசைனில் இருக்கும் மஹிந்திரா மராத்ஸோ வையும், அப்பாச்சி RR310 பைக்கையும் பார்த்தால் தெரியும்.

டிசைன் கோட்பாடுகளான ரூல் ஆஃப் தேர்டு… 1 பாயின்ட் - 2 பாயின்ட் - 3 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ் என்று பல டிசைன் உத்திகளை அவர் சொன்னபோது, கமென்ட்ஸ் பகுதியில் கைத்தட்டல்கள் குவிந்தன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் உலக அழகி ஐஸ்வர்யாராய் வரை பலரையும் உதாரணமாகக் காட்டி இவர் கொடுத்த கோல்டன் ரேஷியோ பற்றிய விளக்கம் வேற லெவல். ஒரு டி.வி சதுரமாக ஏன் இல்லை; செவ்வகமாக இருக்கிறது என்பது தொடங்கி, தங்க விகிதத்தைப் பற்றி சத்தியசீலன் விளக்கிய விதம், வாவ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ஆர்த்தி, ‘`இந்த வொர்க்‌ஷாப்பில் பங்கேற்ற பிறகு எனக்குக் கார்களைப் பற்றிய பார்வையே மாறிவிட்டது!’’ என்று சிலாகித்தார்.

ஆன்லைன் பயிலரங்கம்
ஆன்லைன் பயிலரங்கம்

கோவையைச் சேர்ந்த ஷனாஸ், ஜீப் கஸ்டமைசேஷன் செய்பவர். ‘‘எனக்கு இப்போ கார் டிசைனைப் பத்தி ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது’’ என்று நெகிழ்ந்தார்.

‘‘என் மகனுக்கு கார், பைக்ஸ்னா உயிர். இதைப் பற்றி மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகமாயிடுச்சு’’ என்றார் 12 வயதுச் சிறுவன் ப்ரணவ் கிருஷ்ணாவின் தந்தையான பல்மருத்துவர் சுரேஷ்குமார்.

ஷனாஸ், ஆர்த்தி, ப்ரணவ்
ஷனாஸ், ஆர்த்தி, ப்ரணவ்

கடந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட ஒரு சிலர் மீண்டும் இதில் கலந்து கொண்டது ஆச்சர்யம். கல்லூரி மாணவர்களுக்கு இணையாக பள்ளி மாணவ-மாணவியர்களுக்கும் இதில் ஆர்வம் இருக்கிறது என்பதை நடந்து முடிந்த பயிலரங்கம் சத்தமாகச் சொல்லியிருக்கிறது. அதனால்... அவர்களுக்கான சிறப்பு கார் டிசைன் பயிலரங்கம் ஒன்றை மோட்டார் விகடனும் ஆயா அகாடமியும் ஏற்பாடு செய்துவிட்டது.

உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்தப் பயிலரங்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள். ஒரு புத்தம் புதிய உலகத்தின் கதவுகள் அவர்களுக்காகத் திறக்கவிருக்கின்றன.

பதிவு செய்ய: https://bit.ly/StudentsCarDesign