பிரீமியம் ஸ்டோரி

மோட்டார் விகடன் மற்றும் ஆயா டிசைன் அகாடமி இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆன் - லைன் கார் டிசைன் வொர்க்ஷாப் கடந்த மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஜூம் வாயிலாக நடைபெற்றது. கல்லூரி மாணவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு பள்ளி மாணவர்களும் இதில் அதிக அளவில் கலந்து கொண்டார்கள். அசோக் லேலாண்ட் டிசைன் பிரிவின் தலைவர் சத்தியசீலன் மாணவர்களுக்கான பயிலரங்கத்தைச் சுவையுடன் நடத்தினார்.

இது கிரிக்கெட் கொடுத்த ஐடியா!ஆட்டோமொபைல் துறையில் டிசைன் பிரிவில் எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும், நம் நாடு தேவை அதிகமுள்ள ஒரு சந்தையாக மட்டுமே இருக்கிறது. பொருட்களை நாம் வாங்கிக் குவிப்பதால் உற்பத்தியும் விற்பனையும் மட்டுமே நம் நாட்டில் நடைபெறுகிறது. ஆனால், அந்தப் பொருட்களின் வடிவமைப்பு என்று வரும்போது நாம் எப்படி பின்தங்கி விடுகிறோம் என்பது குறித்த விழிப்புஉணர்வை சத்தியசீலன் மாணவர்களுக்கு ஏற்படுத்தினார்.

பயிலரங்கத்தின்போது மாணவர்கள் ஆர்வமுடன் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை ஜூமின் சாட் பாக்ஸில் பகிர்ந்து கொண்டும், அதிலேயே கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தனர். அவர்களது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவர்களது கேள்விகளுக்கும் சத்தியசீலன் பதிலளித்தார். டிசைனிங்கில் ஆர்வம் உள்ளவர்கள் எந்தப் பாதையில் சென்றால், சிறந்த டிசைனர்களாக முடியும் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

இது கிரிக்கெட் கொடுத்த ஐடியா!
இது கிரிக்கெட் கொடுத்த ஐடியா!
இது கிரிக்கெட் கொடுத்த ஐடியா!


இந்தியாவில் இன்ஜினீயர்களுக்குத் தட்டுப்பாடு கிடையாது. வீட்டுக்கு ஒரு இன்ஜினீயர் இருப்பார். டிசைனராக விரும்புகிறவர்கள் இன்ஜினீயரிங் துறையைத் தேர்ந்தெடுப்பதால் பெரிய பலன் இல்லை. மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறையைத் தேர்ந்தெடுத்தால், டிசைனராக முடியாது. அவை தொழில்நுட்ப ரீதியில் ஒரு இன்ஜினின் பாகங்கள் எவை, அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்த தகவல்களை வேண்டுமானால் கற்றுத் தரும். ஆனால் வடிவமைப்பு என்பது வேறு. டிசைனிங் என்பது ஒரு கலை. அது உணர்வுப்பூர்வமானது. மேலும், டிசைனைப் பொருத்தவரை விலை உயர்ந்த பொருட்களுக்குத்தான் டிசைனிங் இருக்க வேண்டும் என்று கிடையாது. பென்சில் ஷார்ப்னரில்கூட விதவிதமான டிசைனை நம்மால் செய்ய முடியும். எனவே டிசைனிங் என்றால் என்ன என்பது குறித்த அடிப்படையை மாணவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இது கிரிக்கெட் கொடுத்த ஐடியா!நம் உடலில் இதயம், மூளை எனப் பல உறுப்புகள் இருந்தாலும், நாம் யார் என்ற அடையாளத்தைக் கொடுப்பது நம்முடைய முகம்தான். அது போலத்தான் டிசைனும். தொழில்நுட்ப ரீதியாக ஒரு வாகனத்தில் பல நூறு பாகங்கள் இருந்தாலும், ஒரு காரின் அடையாளம் என்பது அதன் தோற்றம் தான். அந்தத் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்வது டிசைனிங் தான்.

டிசைனிங் துறையில் பிரகாசிக்க வேண்டுமானால், ஏட்டறிவோடு பட்டறிவும் தேவை. அதற்குப் பயிற்சி அவசியம். அப்போதுதான் டிசைனிங் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். அதனால் இந்தப் பயிலரங்கத்தில் எப்படி ஒரு காரை டிசைன் செய்வது என்ற அடிப்பட்டைப் பயிற்சிகளை அளித்தார். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக தங்கள் கைவண்ணத்தில் கார்களை வரைந்து அசத்தியிருந்தார்கள். மாணவர்களின் கார்கள் அனைத்தையும் பார்வையிட்ட சத்தியசீலன், அதில் இருக்கும் குறை நிறைகளை எடுத்துக் கூறினார்.

சின்னச் சின்ன விஷயத்தில் இருந்தெல்லாம்கூட வடிவமைப்புக்கான ஐடியாவை நாம் பெற முடியும் எனக் கூறி, கிரிக்கெட்டர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்து உதித்த ஓர் ஐடியாவை வைத்து அசோக் லேலாண்ட் வாகனங்களின் முன்பக்கம் எப்படி டிசைன் செய்யப்பட்டது என அவர் விளக்கினார்.

பென்சில் துவங்கி மென்பொருட்கள் வரை டிசைனிங் செய்ய என்னென்ன தேவை? இதற்கான படிப்பை எங்கே படிக்கலாம்? எப்படிப்பட்ட வேலைகள் கிடைக்கும் போன்ற மாணவர்களின் கேள்விகள் பலவற்றுக்கும் இந்த இரண்டு நாள் வொர்க்ஷாப்பில் விடை கிடைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு