Published:Updated:

செம ஆஃப்ரோடர்களாக மாறிய ஃபோர்ஸ் ஒன்னும் பொலேரோவும்!

கார் மாடிஃபிகேஷன்
பிரீமியம் ஸ்டோரி
கார் மாடிஃபிகேஷன்

கார் மாடிஃபிகேஷன்: பாண்டிச்சேரி

செம ஆஃப்ரோடர்களாக மாறிய ஃபோர்ஸ் ஒன்னும் பொலேரோவும்!

கார் மாடிஃபிகேஷன்: பாண்டிச்சேரி

Published:Updated:
கார் மாடிஃபிகேஷன்
பிரீமியம் ஸ்டோரி
கார் மாடிஃபிகேஷன்
செம ஆஃப்ரோடர்களாக மாறிய
ஃபோர்ஸ் ஒன்னும் பொலேரோவும்!

பாண்டிச்சேரிக்கு வந்தீர்கள் என்றால்… கடற்கரை, ஆரோவில் போன்ற இடங்களில் செல்ஃபி எடுப்பவர்களைவிட, அந்த எஸ்யூவிக்கு முன்பு செல்ஃபி எடுப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

‘‘என்ன காருங்க இது! செமையா இருக்கு!’’

‘‘நம்மூருல இப்படி ஒரு காரைப் பார்த்ததே இல்லையே!’’

என்று அந்த காரின் முன் செல்ஃபி எடுக்கும் கூட்டம், பாண்டிச்சேரியில் இப்போது அதிகமாகிவிட்டது.

ஹைப்பை ஏற்ற விரும்பவில்லை; நீங்கள் நினைப்பதுபோல் அது ஹாலிவுட் படங்களில் வரும் எஸ்யூவியோ… பெரிய கோடி ரூபாய் ஹம்மரோ இல்லை பாஸ். நம் ஊர் சாதாரண ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவிதான். பார்ப்பதற்கு அப்படிப் பிரம்மாண்டமாக இருக்கிறது அந்த ஃபோர்ஸ் ஒன்.

பொதுவாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அப்புறம், பாண்டிச்சேரியில்தான் உலகின் விலை உயர்ந்த கார்கள் அனைத்தும் வலம் வரும். லேண்ட்க்ரூஸர், ஃபெராரி, பென்ட்லி, லம்போகினி என்று நானே ஏகப்பட்ட கார்கள் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என்று பறப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், மக்கள் அந்தக் கார்களுக்குக்கூட அவ்வளவு பரவசமாகிப் பார்த்ததில்லை. அந்த ஃபோர்ஸ் ஒன்னுக்கு மட்டும் அவ்வளவு பரவசம் ஏன்? அதே பரவசத்தோடு அந்த உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்தேன்.

அந்தக் கொடுப்பினைவாதி பெயர் அசோக் குமார். அவரது பண்ணை வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றபோது, அங்கு காண்டாமிருகத்தைப்போல் கம்பீரமான தோற்றத்துடன் கறுப்பு நிறத்தில் அந்த ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி மிரட்டலாக இருந்தது. உண்மையிலேயே அந்த காரின் 8 ஸ்லாட் கிரில் கொண்ட முன் பகுதியைப் பார்த்துப் பிரமித்து விட்டோம். F என்கிற லோகோவை வைத்துத்தான் அது ஃபோர்ஸ் என் கண்டுபிடிக்க முடியும். மற்றபடி எங்கேயும் பார்த்திராத ஒரு ஸ்டைல். நானும் செல்ஃபிகள் எடுத்தபடி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

செம ஆஃப்ரோடர்களாக மாறிய
ஃபோர்ஸ் ஒன்னும் பொலேரோவும்!
செம ஆஃப்ரோடர்களாக மாறிய
ஃபோர்ஸ் ஒன்னும் பொலேரோவும்!மிகவும் நேர்த்தியாக மாற்றியமைக்கப் பட்ட அந்தக் காரின் முன்பகுதியை வாகனச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வடிவமைத்ததாகக் கூறும் அசோக் குமார், பேச ஆரம்பித்தார்.

‘‘தூர்தர்ஷனில் கடந்த 40 ஆண்டுகளாகப் பணிபுரிந்தேன், அதற்கு முன்னர், சில ஆண்டுகள் இந்தியாவுக்கு வருகை தரும் முக்கியத் தலைவர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் பாதுகாப்புத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணியில் இருந்தேன். அப்போது பாதுகாப்புக்காக வாகனத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி, அவசரகால ஒலிப்பான்கள், பனி மூட்டம் மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்தும் முகப்புவிளக்குகள் என புது வாகனங்களை பல்வேறு வகையில் மாற்றி வடிவமைப்போம். எனவே, சாலைப் போக்குவரத்துச் சட்ட திட்டங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் முறைகள் எனக்குத் தெரியும். மேலும் எஸ்யூவிகளைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன். முதலில் டாடா சஃபாரி வைத்திருந்தேன். பின்னர் அதே எஸ்யூவி வகையில் பென்ஸ் இன்ஜின் பொருத்திய போர்ஸ் ஒன் காரை எனது சிறு வயது நண்பர் பத்மநாபன் வழியாக வாங்கினேன்.மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது இது கொஞ்சம் நீளமாக இருக்கும். இதனால் சில இடங்களில் பார்க்கிங் செய்வதில் பல சிக்கல்களை அனுபவித்துள்ளேன். புதிதாக நான் கட்டிய வீட்டில், பார்க்கிங் பகுதியைவிட ஒரு அடி நீளம் கார் வெளியே நிற்பதால் வாயில் கதவை முழுமையாக மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேறு ஏதாவது கார் வாங்கலாமா என்னும் முடிவுக்குக்கூட வந்தேன். ஆனால், இந்த ஒரு பிரச்னைக்காக மட்டும் இவ்வளவு வசதிகளைக் கொண்ட இந்த காரை எனக்கு விடவும் மனதில்லை.

அப்போது எனது நண்பர் பத்மநாபனின் அறிவுறுத்தலின் பேரில், காரின் முன் பகுதியை மாற்றியமைக்கலாம் என முடிவு செய்தோம். இதனால் வாகனச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மிக மிகக் குறைந்த செலவில் புல்லட்டின் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தி எனது காரின் முன்பகுதியை மாற்றியமைத்தோம். மேலும், வேகமாகச் செல்லும்போது ஏரோ டைனமிக்ஸ் குலையாத வண்ணம் காரின் முன் பகுதியை வடிவமைத்தோம். காரின் நீளமும் குறைந்ததால், பார்க்கிங் பிரச்சினை முற்றிலும் இல்லை! இப்போ நான் ரொம்ப ஹேப்பி!’’ என்றார்.

ஃபோர்ஸ் ஒன் தவிர, மஹிந்திரா பொலேரோவின் மாடிஃபைடு வெர்ஷன் வைத்திருக்கிறார் அசோக்கின் நண்பர் பத்மநாபன். பொலேரோ குறித்து பத்மநாபன் கூறும்போது, ‘‘கடந்த 13 ஆண்டுகளாக பொலேரோ காரைப் பயன்படுத்தி வருகிறேன். கிட்டதட்ட 3 லட்சம் கிமீ தாண்டி ஓடிவிட்டது. இரவு நேரப் பயணங்களில் ஃபாரஸ்ட் ட்ரிப் அதிகம் அடிப்பேன் என்பதால், அடிக்கடி காரின் முகப்பு விளக்கில் ஒளிரும் பகுதி பழுப்படைந்து விடும். இதனால் பல முறை முகப்பு விளக்கை மாற்றியுள்ளேன். ஒரு முறை மாற்றும்போது இரண்டு பக்கமும் சேர்த்து ரூ.9,000 வரை செலவாகும். எனவே காரின் முன் பகுதியை மிகக் குறைந்த விலையில் உள்ள வேறு வாகனத்தின் முகப்பு விளக்குகளை வைத்து வடிவமைக்கலாம் என முயற்சி செய்தேன். முடிவில் ஹீரோ, ஹோண்டா போன்ற இரு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தி மாற்றி அமைத்தேன். ஒரு பகுதிக்கு இரண்டு என மொத்தம் நான்கு முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளேன். எல்லாம் சேர்த்து அதிகபட்சமாக ரூபாய் ஆயிரத்தைத் தாண்டவில்லை. இப்போ என் பொலேரோவுக்குப் பாண்டிச்சேரியில் ரசிகர்கள் அதிகம்!’’ எனச் சிரிக்கிறார் பத்மநாபன்.