கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

காரில் இந்த வார்னிங் லைட் வந்தால் பெரிய செலவு இருக்கு!

petrol bunk
பிரீமியம் ஸ்டோரி
News
petrol bunk

தொடர்: கார் சர்வீஸ் அனுபவம்

நான் இந்த முறை பேசப்போவது இது ரொம்பவும் அரிதான விஷயம். ஆனால் மழைக்காலங்களில் அடிக்கடி நடக்கக் கூடிய விஷயம். இது உங்களுக்கு நடந்திருந்தால் நீங்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிதான். நீண்ட நாட்களுக்கு முன்பு செய்தியில் கேள்விப்பட்ட விஷயத்தைச் சொல்கிறேன். அது ஒரு நல்ல மழைக்காலம். மும்பையைச் சேர்ந்த தன்வத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், தனது ஸ்கோடா யெட்டி காரில் போய்க் கொண்டிருந்தபோது, திடீரென்று காரின் எக்ஸாஸ்ட்டில் இருந்து வெள்ளைப் புகை வர ஆரம்பித்திருக்கிறது. சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுபோனபோது, ‘மாலிக்யூலர் ஃபில்டர்’ என்றொரு அம்சம்தான் மிஸ் ஆனதாகச் சொல்லி அதைப் பொருத்தியிருக்கிறார். இது ஃப்யூல் டேங்க்கில் இருந்து இன்ஜெக்டருக்கும் இன்ஜின் பிஸ்டனுக்கும் உள்ளே கொண்டு செல்லப்படும் அசுத்தமான மெட்டீரியல்களை ஃபில்ட்டர் செய்யும் ஃப்யூல் ஃபில்ட்டர்.

திரும்பவும் அதே நவம்பர் மாத இறுதியில் அந்தேரியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது எஸ்யூவிக்கு டீசல் நிரப்பியிருக்கிறார் அவர். JVLR எனும் சாலையைக் கடக்கும்போது, கார் லேசாக Choke ஆகியிருக்கிறது. அதாவது, கார் க்ரீப் ஆக முடியாமல் ஸ்லோ டவுன் ஆகி திணறியிருக்கிறது. ஃப்யூல் பைப்பில் ஏர் பபுள்கள் ஏதாவது அடைத்திருக்கலாம் என்று நினைத்திருக்கிறார் தன்வத். ஆனால், சாலையில் போனவர்கள் தன்வத்தை ஏதோ சொல்லி எச்சரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கார் ஆக்ஸிலரேட் ஆகவே இல்லை. சட்டென காரில் இருந்து கீழே இறங்கிப் பார்த்தால், சைலன்ஸர் முழுக்க ஒரே வெள்ளைப் புகை மண்டலம். ‘இப்போதானே `Molecular Filter’ மாற்றினோம்’ என்று கடுப்பானவர், தனது சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து `Tow’ செய்து கிளம்பியிருக் கிறார்.

இரண்டு நாட்கள் கழித்துத்தான் அந்த விஷயமே கண்டுபிடிக்கப் பட்டது. மற்ற எல்லாமே ஓகே! அவர் நிரப்பிய டீசலில்தான் பிரச்னையே இருந்திருக்கிறது. காரில் உள்ள டீசலைச் சோதனையிட்டபோது, அதில் தண்ணீர் Adulterated ஆகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. தண்ணீர் லேசாகத்தான் கலந்திருக்கிறது; ஆனால் பாதிப்பு கொஞ்சம் இல்லை… ரொம்பவே அதிகமாக இருந்திருக்கிறது. காரணம், அவர் நீண்ட நேரமாக ஓட்டியிருக்கிறார். அதாவது, இன்ஜினில் 23 பாகங்கள் பழுதாகியிருந்தன. அதேபோல் மொத்த ஃப்யூல் சிஸ்டம் மற்றும் லைனிங்கையும் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இதற்கு ஆன செலவு 3.35 லட்சம்.

அதற்குப் பிறகு அந்த பெட்ரோல் நிறுவனத்தின் மேல் வழக்குத் தொடர்ந்து, நஷ்டஈடு கேட்டு, அவர் தனது காரைத் திரும்ப ஓட்டுவதற்குப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆட்டோ மொபைலில் என்ன வேண்டு மானாலும் நடக்கலாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

காரில் இந்த வார்னிங் லைட் வந்தால் பெரிய செலவு இருக்கு!
காரில் இந்த வார்னிங் லைட் வந்தால் பெரிய செலவு இருக்கு!
காரில் இந்த வார்னிங் லைட் வந்தால் பெரிய செலவு இருக்கு!

என்னுடைய கேள்வி என்னவென்றால்… இதில் அவருடைய தவறும் உண்டு என்றுதான் நான் சொல்வேன். எரிபொருளில் தண்ணீர் கலந்தால், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் வார்னிங் லைட் எரியும். அதை அவர் கவனித்தாரா என்பதற்கான எந்தப் பதிலும் இல்லை.

‘இதற்கு எப்படி வார்னிங் லைட் இருக்கும்’ என்று நீங்கள் கேட்கலாம். இதைப் பெரிதாகப் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக, க்ளஸ்ட்டரில் எரிபொருள் குறையும்போது, மஞ்சள் கலரில் ஃப்யூல் பம்ப் எரியும்தானே! அதாவது, எரிபொருள் ரிஸர்வ்டு ஆகிவிட்டது என்பதற்கான அடையாளம் அது. ஆனால், அதே ஃப்யூல் சிம்பலில் கீழே மஞ்சள் நிறத்தில் Dotted Lineகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். அதாவது, இதுதான் வாட்டர் அடல்ட்டரேஷனுக்கான வார்னிங் லைட். ஃப்யூல் ஃபில்ட்டருக்கான வார்னிங் லைட்டும் இதே சிம்பலில்தான் இருக்கும். இதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இந்த சிம்பல் தொடர்ச்சியாக எரிந்து கொண்டே இருந்தால்… ஃப்யூல் ஃபில்ட்டர் சோக் ஆகிவிட்டது என்று அர்த்தம். இதுவே விட்டு விட்டு எரிந்தால், டீசலில் தண்ணீர் கலந்துள்ளது என்று அர்த்தம். இந்த வார்னிங் சிம்பல்தான் காரில் மிகப் பெரிய எச்சரிக்கை அலெர்ட். இது எரிந்தால், அடுத்த விநாடியே காரை நிறுத்திவிடுவது நல்லது.

எரிபொருள் டேங்க்கில் இருந்து சப்ளை டேங்க், ஃப்யூல் ஃபில்ட்டருக்குத்தான் எரிபொருளை அனுப்பும். இந்த ஃபில்ட்டரில் வடிகட்டப்பட்ட பிறகுதான் இன்ஜெக்ட ருக்கோ பிஸ்டன்களுக்கோ அந்த எரிபொருள் பயணம் போகும். சப்ளை பம்ப்பும் இதை இண்டிகேட் செய்யும். ஃப்யூல் ஃபில்ட்டரில் உள்ள சென்ஸார், ‘டீசல்ல ஏதோ கலப்படம் தெரியுதுடோய்’ என்று நம்மை அலெர்ட் செய்யும். இதுதான் ECM மூலம் டிஸ்ப்ளேவில் தெரியும். ஆரம்பத்தில் விட்டு விட்டு எரியும் இந்த வார்னிங் லைட், தொடர்ச்சியாக எரிந்தால்தான் பெரிய ஆபத்து. அதாவது, டீசல் ஃபில்ட்டரில் டஸ்ட் நிறையச் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு, ஃப்யூல் சப்ளை ஒழுங்காக நடக்காமல் ஃபில்ட்டரே காலியாகப் போகிறது என்று அர்த்தம்.

பொதுவாக, டொயோட்டா கார்களைப் பொருத்தவரை ஒவ்வொரு 80,000 கிமீ–க்கும் ஒருமுறை ஃப்யூல் ஃபில்ட்டரை மாற்றினால் போதும். இது மற்ற வாகனங்களுக்குக் கொஞ்சம் வேறுபடும். அதைத் தாண்டி, ஒவ்வொரு முறை எரிபொருள் நிரப்பும்போதும் தயவுசெய்து உங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் கண் வையுங்கள். அதுவும் எரிபொருள் நிரப்பும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், பெட்ரோல் பங்க்குகளில் அண்டர்கிரவுண்ட் சம்ப்பில்தான் எரிபொருள் சேகரிக்கப் பட்டிருக்கும். அதனால், இங்கே தண்ணீர் கலந்துவிட வாய்ப்பு அதிகம். அதுவும் பள்ளமான இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் இதற்கு வாய்ப்பு உண்டு.

எரிபொருளில் எப்படித் தண்ணீர் கலக்கும்?

உங்கள் காரில் தண்ணீர் கலந்த எரிபொருள் நிரப்ப இரண்டு வகைகளில் வழி உண்டு.

முதல் வழி – டீசலும் பெட்ரோலும் ஆவியாகக் கூடிய தன்மை கொண்டவை. அதை மூடி வைக்கும்போது மாய்ச்சரைஸர் உருவாகி, அதிலிருந்தும் தண்ணீர் சொட்டுகள் கலக்க ஆரம்பிக்கலாம். எரிபொருளைவிட தண்ணீரின் அடர்த்தி அதிகம் என்பதால், அது சம்ப்பின் அடியில் போய்த் தங்கிவிடும். மேலே உள்ள எரிபொருள் காலியாக ஆக, கீழே உள்ள தண்ணீரில் கலந்த எரிபொருள் உங்கள் காருக்கு ஏறலாம்.

இன்னொரு வழி – சம்ப்பில் உள்ள எரிபொருள் காலியாகும்போது மறுபடியும் கன்டெய்னர் கொண்டு வந்து ரீஃபில் செய்வார்கள் பெட்ரோல் பங்க்கில். ஊற்றும்போது ஏற்படும் ப்ரஷரில் தண்ணீர் மேலெழும்பி எரிபொருளில் மிக்ஸ் ஆகும். அப்போது நீங்கள் பெட்ரோல் போட வரிசையில் நின்றால், உங்கள் வாகனத்தில் அது ஏறலாம். தண்ணீர் அதிகம் கலப்பது பெரும்பாலும் டீசலுக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கும். காரணம், பெட்ரோலைவிட இது லைட் ஆயில் தன்மையும், அடர்த்தி, ஃப்ளேமபிள் தன்மை குறைவானதும் தான்.

நீங்கள் எரிபொருள் நிரப்பிவிட்டு, ஸ்டார்ட் செய்த உடனேயே இந்த வார்னிங் லைட் எரிய ஆரம்பித்துவிடும். இது தெரிந்தவுடனேயே காரின் இன்ஜினை நிறுத்திவிடுங்கள். இது தெரியாமலோ, தெரிந்தோ காரை ஓட்டிக் கொண்டிருந்தால்… தானாகவே உங்கள் கார் சோக் ஆகி பிரேக்டவுன் ஆகிவிடும். பிறகென்ன, மும்பை தன்வத் கதைதான்!

அதனால்தான் சொல்கிறேன் – எப்போதுமே காரை ஓட்டும்போது, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் கண் வைத்துக் கொண்டே இருங்கள்!

– (தொகுப்பு: தமிழ்)

காரில் இந்த வார்னிங் லைட் வந்தால் பெரிய செலவு இருக்கு!

எரிபொருளில் தண்ணீர் கலக்குமா? எப்போது ஃப்யூல் நிரப்ப வேண்டும்?

பொதுவாக, பெட்ரோலைவிட டீசலில்தான் தண்ணீர் நன்றாகக் கலக்க வாய்ப்பு அதிகம். மழை நேரங்களில் மட்டுமல்ல; எல்லா நேரங்களிலும் இதில் கவனம் தேவை. பள்ளமான இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பும்போது, தண்ணீர் கலந்த எரிபொருள் நிரப்ப அதிகம் வாய்ப்பு இருக்கிறது. அண்டர்கிரவுண்ட் சம்ப்பில்தான் எரிபொருளைச் சேமித்து வைத்திருப்பார்கள் பெட்ரோல் பங்க்கில். இங்கே உள்ள எரிபொருள் ஆவியாக முடியாமல் திணறி, மேலே மாய்ஸ்ச்சரைஸர் ஏற்பட்டு, நீர்த்துளிகள் எரிபொருளில் கலந்து, அடியில் போய்த் தங்கும். இப்போது எரிபொருள் காலியாகும் நேரத்தில் டீசலை நிரப்புபவர்கள், தண்ணீர் கலந்த கடைசிக் கட்ட டீசலை நிரப்ப சான்ஸ் உண்டு. அதேபோல், எரிபொருள் காலியானபிறகு, பெட்ரோல் பங்க்கில் கன்டெய்னர் வைத்து அண்டர்கிரவுண்ட் சம்ப்பில் எரிபொருள் ஊற்றி நிரப்புவார்களே… அப்போது ஏற்படும் அழுத்தத்தில் தண்ணீர் மேலெழும்பி எரிபொருளுடன் நன்றாகக் கலக்கும். அப்போது முதலாவது ஆளாக எரிபொருள் நிரப்புபவர்களும் துரதிர்ஷ்டசாலி. டீசல் கார் வைத்திருப்பவர்கள் கவனம் பாஸ்!