கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

சிட்ரனின் எஸ்யூவி தோல் போர்த்திய ஹேட்ச்பேக்!

சிட்ரன் C3 பெட்ரோல்
பிரீமியம் ஸ்டோரி
News
சிட்ரன் C3 பெட்ரோல்

லாங் டெர்ம் ரிப்போர்ட்: சிட்ரன் C3 பெட்ரோல்

சிட்ரனின் எஸ்யூவி தோல் போர்த்திய ஹேட்ச்பேக்!

பிடித்தது: ரிஃபைன்மென்ட், சொகுசு, ஸ்டைல், ரோடு பிரசன்ஸ், நல்ல மைலேஜ், சூப்பரான சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்அப், 10 இன்ச் டச் ஸ்க்ரீன் நன்றாக இருக்கிறது, பூட் ஸ்பேஸ்.

பிடிக்காதது: காஸ்ட் கட்டிங் விஷயங்கள்; ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை; நிறைய வசதிகள் இல்லை (முக்கியமாக ரிவர்ஸ் கேமரா); ஹைவேஸில் சத்தம் போடும் 3 சிலிண்டர் இன்ஜின்

ஃபிரெஞ்சுக் கம்பெனியான சிட்ரன் பற்றி ஒரு ‘ப்ச்’ விஷயம் உண்டு. அது விலை. படா எஸ்யூவிகளின் விலையில் சிட்ரனின் C5 Aircross எஸ்யூவி… பெரிதாகச் சோபிக்கவில்லை. அதைப் போக்குவதற்காகவே நல்ல விலையில், அதே தரத்துடன் ஹேட்ச்பேக் காரை இறக்கியது சிட்ரன். அது C3. ஸ்விஃப்ட் வாங்க நினைப்பவர்களைக்கூட தன் பக்கம் இழுக்கக் கூடிய பெர்ஃபாமன்ஸ், சொகுசு, ரோடு பிரசன்ஸ் போன்ற பல அம்சங்களுடன் வந்திருக்கும் C3–ன் ஆரம்ப ஆன்ரோடு விலை ரூ.6.87 லட்சம். இதன் டாப் எண்டான Feel Vibe Pack-ன் விலை 8.10 லட்சம். டூயல் டோனின் டாப் எண்ட் விலைதான் 9.45 லட்சத்துக்குப் போகிறது. நம் அலுவலகத்துக்கு ஒரு வெள்ளை நிற C3, லாங் டெர்முக்காகக் காத்திருந்தது. சென்னை, ஈசிஆர் என்று பல வாரங்கள் அனுபவித்து ஓட்டினேன். நமக்கு என்ன தோணுதுன்னா?

முதலில் சிட்ரனுக்கு ஒரு கண்டனம் – ஏன் C3–ல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கொண்டு வரவில்லை சிட்ரன்? பெண் வாடிக்கையாளர்களை இழக்கும் தருணம் இது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

இன்டீரியர் எதிர்பார்த்ததைவிட தரம். 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சூப்பர். ஆனால், சில இடங்களில் காஸ்ட் கட்டிங் விஷயங்களைப் பார்க்க முடிகிறது. ரிவர்ஸ் கேமராவாச்சும் இருந்திருக்கலாம்.
இன்டீரியர் எதிர்பார்த்ததைவிட தரம். 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சூப்பர். ஆனால், சில இடங்களில் காஸ்ட் கட்டிங் விஷயங்களைப் பார்க்க முடிகிறது. ரிவர்ஸ் கேமராவாச்சும் இருந்திருக்கலாம்.

எஸ்யூவியா.. ஹேட்ச்பேக்கா?

C3–ல் ரொம்பப் பிடித்தது இதன் ரோடு பிரசன்ஸ்தான். காம்பேக்ட் கார் என்றாலும், ஏதோ பெரிய ஸ்விஃப்ட் நிற்பது மாதிரியே இருக்கிறது. ‘Hatchback with a Twist’ என்பதுபோல்… செம ஸ்டைலாகவே இருக்கிறது. ஒரு டாடா பஞ்ச் காருக்குப் பக்கத்தில் இதை பார்க் செய்ய வேண்டியிருந்தது. டாடா பஞ்ச்சின் இடத்தைத்தான் C3–ம் ஆக்ரமித்திருந்தது. பஞ்ச்சின் வடிவத்தைப்போலவே இதை ஒரு எஸ்யூவி என்றும் சொல்ல முடிகிறது என்பதற்காக இதைச் சொல்கிறேன். ஸ்போர்ட்டி பார்ட்டிகளுக்கு ஆரஞ்ச் நிற ஆக்ஸென்ட்களை ரெக்கமண்ட் செய்கிறேன். ஓவர்ஆலாக இதன் கட்டுமானம் அருமை. கதவை மூடும்போது ‘தட்’ சவுண்டு, பெரிய எஸ்யூவி போல் எனக்குத் தெரிந்தது. நிஜம்தான்; எஸ்யூவிகளைப்போல் இதன் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருந்ததால்… மகாபலிபுரம் பக்கத்தில் ஒரு குட்டி ஆஃப்ரோடும் செய்தோம். ஓவர்ஆலாகச் சொல்ல வேண்டுமென்றால், C5–ன் சின்னத்தம்பி போல்தான் இருக்கிறது C3.

இன்டீரியரும் பின் பக்கமும்!

எக்ஸ்டீரியரில் ஆரஞ்ச் இருந்தால்… உள்ளேயும் ஆரஞ்ச் இருக்கும். கிரே ஆப்ஷனும் செலெக்ட் செய்து கொள்ளலாம். பிளாஸ்டிக்குகளின் தரம் எதிர்பார்த்ததைவிடப் பக்காவாக இருந்தது. இருந்தாலும் கியர்லீவருக்கு அடியில்… கப் ஹோல்டர்கள் பக்கத்தில் கொஞ்சம் சுமாரான பிளாஸ்டிக்குகள் இருக்கின்றன. ஏசி வென்ட்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. பெரிய C5–ல் இருப்பவை மாதிரி இருக்கின்றன.

பிராக்டிக்காலிட்டியில் கலக்குகிறது C3. பொருட்கள் வைக்க நல்ல இடவசதி. அட, இதன் டிரைவர் சீட் பொசிஷன், கோ டிரைவர் சீட் சொகுசு எல்லாமே அற்புதம்! லாங் டிரைவ் போய்விட்டு வந்த களைப்பே தெரியவில்லை. இதன் பூட் வசதியும் 315 லிட்டர் என்பது சூப்பர்.

ஆனால், விலையைக் குறைப்பதற்காக காஸ்ட் கட்டிங்கில் சிட்ரன் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது. நமது முழங்கை வைக்கும் இடத்தில்… அதாவது கதவுகளில் கொஞ்சம் சாஃப்ட்னெஸ் மேம்பட்டிருக்கலாம். விங் மிரர்களை பழைய BS-4 கார்களைப்போல் அட்ஜஸ்ட் செய்யும் மேனுவல் ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் இருக்கின்றன. எலெக்ட்ரிக் ORVM இருந்திருக்கலாம். ஏ பில்லரில் இருக்கும் ஸ்பீக்கர்களுக்கு காலியான Shell–கள். ரூஃப் லைனரும் சாதாரணம்.

இதைவிட ஒரு காஸ்ட் கட்டிங்கான விஷயம் – ரியர் விண்டோக்களுக்கான பவர் பட்டன்கள், கதவுகளில் இல்லை. முன் சீட்களுக்கு நடுவே Common Pair ஸ்விட்ச்களாக வைத்திருக்கிறார்கள். இன்னும் நிறைய ‘கலாம்’களைச் சொல்லலாம். க்ளைமேட் கன்ட்ரோல் இருந்திருக்கலாம்; IRVM டிம்மர் இருந்திருக்கலாம்; ரியர் வைப்பர்– டிஃபாகர் இருந்திருக்கலாம்; பின் பக்கப் பயணிகளுக்கு அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட் இருந்திருக்கலாம். ரிவர்ஸ் கேமரா – அலாய்வீல்கள் (ஆப்ஷன்) – டேக்கோமீட்டர் இருந்திருக்கலாம். இதெல்லாம் காஸ்ட் கட்டிங்தானே!

ஆனால், எக்ஸ்ட்ரா காசு கொடுத்தால்.. C3–யை ஒரு அழகான குட்டித் தேர்போல ஆக்கிக் கொள்ளலாம்.

சிம்பிள் கிளஸ்ட்டர் டிசைன். டேக்கோ மீட்டர் இல்லை.
சிம்பிள் கிளஸ்ட்டர் டிசைன். டேக்கோ மீட்டர் இல்லை.
180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்... குட்டி ஆஃப்ரோடே செய்யலாம்.
180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்... குட்டி ஆஃப்ரோடே செய்யலாம்.
ஹாலோஜன் பல்புகள்தான். ஆனால் அருமை!
ஹாலோஜன் பல்புகள்தான். ஆனால் அருமை!

ஓட்டுதலும் ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கும் அடடா!

இதன் பின் பக்கம் – 3 ஒல்லியானவர்களை வைத்துக் கொண்டு ஒரு லாங் ட்ரிப் அடித்தேன். ‘முடியலைண்ணா’ என்று விட்டார்கள். ஆனால், 2 பேர் என்றால்… சூப்பராக இருக்கிறது சொகுசுப் பயணம். அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்களைத் தவிர, இதன் ஹெட்ரூமும் லெக்ரூமும் அடடா! காரணம், இதன் செமயான வீல்பேஸ் (2,540 மிமீ). இது பஞ்ச்சைவிட அதிகம்.

சிட்டியிலும் சரி; ஹைவேஸிலும் சரி – எஸ்வியூகளுக்கு ஏற்ப இதன் சாஃப்ட்டான சஸ்பென்ஷன் செட்அப்பை – ஓட்டுதலில் அடடா என்று புகழ வைக்கிறது. 15 வீல்கள் கொண்ட இதை எடுத்துக் கொண்டு மலைப் பயணம், மேடு பள்ளம், சேறு சகதிகளில்கூட குட்டி ஆஃப்ரோடு அடிக்க முடிகிறது. (டாடா பன்ச்சைவிட 10 மிமீ தான் குறைவு).

இன்ஜினும் பெர்ஃபாமன்ஸும்!

குட்டிக் கார்களில் டீசல் ரொம்பக் கம்மி! இதிலும் டீசல் கிடையாது. ஆனால், டர்போ இன்ஜின் உண்டு. அதேநேரம், C3–ன் 1.2லிட்டர் NA இன்ஜின்தான் எனக்குக் கிடைத்திருந்தது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இருக்கும். நான் டர்போ ஓட்டியிருக்கிறேன். ஹைவேஸில் ஜிர்ரெனப் பறக்கும் இது.

இந்த NA இன்ஜினும் ஓகேதான். (என்ன, ஆட்டோமேட்டிக்தான் இல்லை; 2023–ல் எதிர்பார்க்கலாம்). இந்த C3 NA-ன் 82bhp பவரும், 115Nm டார்க்கும் ஒரு அர்பன் காராக இதை மாற்றுகிறது. மற்றபடி இது டர்போ மாதிரி ரொம்ப என்டர்டெய்ன் பண்ணவில்லை. டேக்கோமீட்டர் வேறு இல்லை என்பதால்… எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ரிஃபைன்மென்ட் பக்காவாக இருந்தாலும், 3 சிலிண்டர் என்பதால்… ஹைவேஸில் கொஞ்சம் சத்தம் போடுகிறது.

ஆனால், இந்த 3 சிலிண்டர் பெட்ரோல் மைலேஜில் அடடா! 1000 கிலோவுக்குள் என்பதால், சூப்பரான மைலேஜ் கிடைத்தது. எனது ஓட்டுதலுக்கு, சிட்டிக்குள் சுமார் 13.5 கிமீ–யும், ஹைவேஸில் சுமார் 17.6 கிமீ-யும் மாறி மாறிக் கிடைத்தது. இது சூப்பர்தானே!

ஒரு வரித் தீர்ப்பு!

குட்டி ஆஃப்ரோடும், நல்ல மைலேஜும், கிண்ணென்ற கட்டுமானமும், சொகுசும், எஸ்யூவி தோல் போர்த்திய ஹேட்ச்பேக்கும் வேண்டுமென நினைப்பவர்கள்… 8 லட்சத்தை எடுத்துக் கொண்டு சிட்ரன் ஷோரூமுக்குப் போகலாம் – வசதிகளில் மட்டும் கொஞ்சம் காம்ப்ரமைஸும் செய்து கொண்டு!

சிட்ரனின் எஸ்யூவி தோல் போர்த்திய ஹேட்ச்பேக்!
சின்ன காரில் பெரிய பூட் ஸ்பேஸ்... 315 லிட்டர்.
சின்ன காரில் பெரிய பூட் ஸ்பேஸ்... 315 லிட்டர்.