Published:Updated:

ஓல்டு கார் இல்லை... கூல் கார்!

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

க்ளாஸிக் கார்னர் மஸ்டா ல்யூஸ் 929

ஓல்டு கார் இல்லை... கூல் கார்!

க்ளாஸிக் கார்னர் மஸ்டா ல்யூஸ் 929

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

``நடிகை சொப்பனசுந்தரிக்கு முன்னாலேயே, `கரகாட்டக்காரன்’ படத்துல வர்ற `இம்பாலா’ காரை வெச்சிருந்தது, எங்க தாத்தா ஆறுமுகச்சாமிதான் தெரியுமா?!’’ என்று கவுண்டமணி ஸ்டைலில் ஆரம்பித்தார் ஹரீஷ்குமார். திருப்பூரைச் சேர்ந்த இவர், வின்டேஜ் கார் பிரியர் அல்ல... வெறியர்.

``நான் சொல்றது நக்கல் இல்லைண்ணே... உண்மை. இம்பாலா 1960 மாடல் காரை முதன்முதலா வெச்சிருந்தார் எங்க தாத்தா. அது மட்டுமல்ல... ஹெரால்டு, ஸ்டாண்டர்டு வேன், அம்பாஸடர்னு ஏகப்பட்ட வின்டேஜ் கார்களோட உரிமையாளர் அவர். எல்லாத்தையும் வித்துட்டார். அதுல இம்பாலாவைத்தான் நாங்க ரொம்ப மிஸ் பண்ணினோம். இம்பாலாவைத் தேடி அலைஞ்சோம். யார்கிட்ட கொடுத்தார்னு தெரியலை..!’’ என்று நிஜமாகவே கவலைப்பட்டார் ஹரீஷ்குமார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அப்போ இந்த மஸ்டா?’’

``இம்பாலாவைத் தேடப்போய் எங்களுக்குப் பொக்கிஷமா கிடைச்சதுதான் இந்த மஸ்டா. கோவை - வடவள்ளினு நினைக்கிறேன். ஒரு வீட்டு வாசல்ல இந்த மஸ்டா, ரொம்ப அரதப்பழசா நின்னுக்கிட்டிருந்துச்சு. விசாரிச்சப்போ, தர முடியாதுன்னு சொன்னாங்க. நாங்க விடலையே!’’ என்று மஸ்டாவைச் செல்லமாக வருடுகிறார் ஹரீஷ்.

`நீ எங்கே விட்டுட்டுப் போனியோ... அங்கேயேதான் நிக்கிறேன் ஜானு’ என்று `96’ படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷாவுக்காகக் காத்துக் கிடந்ததுபோல, அந்த வீட்டு வாசலிலேயே காத்துக்கிடந்து விடாப்பிடியாக மஸ்டா காரை வாங்கிவிட்டார் ஹரீஷ்குமார். 80,000 ரூபாய்க்கு இந்த மஸ்டாவை வாங்கி, கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் செலவழித்து, 1989 மாடல் காரை மில்லினியம் கார்போல் மாற்றியிருக்கிறார்.

``அவங்க காரைத் தரும்போது `என் கண்ணையே ஒப்படைக்கிறோம்’னு மொத்தமா அழுதுட்டாங்க. இப்போ காரை ரெடி பண்ணி போட்டோலாம் எடுத்து அனுப்பினதும், அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அடிக்கடி வந்து காரைப் பார்த்துட்டுப் போவாங்க. என்கிட்ட ஸ்கோடா ரேபிட் ஒண்ணு இருக்கு. ஆனாலும் லாங் டிராவல்னு வந்தா மஸ்டாவைத்தான் ஸ்டார்ட் பண்ணுவேன்.

ஓல்டு கார் இல்லை... கூல் கார்!

`மைலேஜ் தராதேடா’னு வீட்ல சொன்னாலும் கேட்கமாட்டேன். உண்மைதான். சிட்டிக்குள் 6 அல்லது 7 கி.மீ-தான் மைலேஜ் வரும். ஆனா, டாப் ஸ்பீடு எவ்ளோ போவேன் தெரியுமா? 180 கி.மீ-லாம் தொட்டிருக்கேன். மஸ்டாவில் போறதே தனி சுகம்தான்’’ என்று புளகாங்கிதப்படுகிறார் ஹரீஷ்.

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான மஸ்டா, அந்தக் காலத்தில் தனவான்களின் கார். 2.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டது; 1980-களில் தயாரிக்கப்பட்ட மஸ்டா ல்யூஸ் காரை, புதிய கார்போல மேனுவல் புக், சர்வீஸ் ஹிஸ்டரி எல்லாம் ஃபாலோ செய்து, சிக்கெனப் பராமரிக்கிறார். மஸ்டாவிலும், அந்தக் கால லெக்ஸஸ் காரிலும்தான் முதன்முதலாக ஆஸிலேஷன் ஏ.சி (Oscilation) வசதி வந்தது. அதாவது நமது வீட்டு ஏ.சி போல வென்ட்கள் இடது வலமாக `ஸ்விங்’ ஆகிக்கொண்டே இருப்பதால், கேபின் சட்டென கூலிங் ஆகிவிடும்.

``இப்போதான் டொயோட்டாவில் க்ரௌன் காரில் இந்த ஏ.சி சிஸ்டம் கொண்டு வந்திருக்காங்க. மாடர்ன் கார்களைவிட செம கூல்! சர்வீஸிலும் பெருசா கையைக் கடிக்கலை. என் மெக்கானிக் அவிநாசி ராஜும், இந்த காரை சர்வீஸ் பண்ணணும்னா ஜாலியாகிடுவாரு. மொத்தத்தில் என் ஓல்டு மஸ்டா, செம கூல்!’’ என்று கூலாகச் சொல்கிறார் ஹரீஷ்குமார்.