Published:Updated:

ஆல்ரவுண்டர் ஹேட்ச்பேக் எது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிராண்ட் i10 நியோஸ் vs ஸ்விஃப்ட் vs ஃபிகோ
கிராண்ட் i10 நியோஸ் vs ஸ்விஃப்ட் vs ஃபிகோ

போட்டி: கிராண்ட் i10 நியோஸ் vs ஸ்விஃப்ட் vs ஃபிகோ

பிரீமியம் ஸ்டோரி

க்ராஸ்ஓவர்களும் எஸ்யூவிகளும் கூட்டம் கூட்டமாக வந்து, இந்தியக் கார் சந்தையை வேட்டையாடும் நேரத்தில், கிராண்ட் i10 நியோஸின் வருகை கொஞ்சம் புத்துணர்ச்சியைத் தருகிறது. பெயர் அளவுக்கு கார் பெரிதாக இல்லையென்றாலும், i10-ஐ விட இது கொஞ்சம் பெருசுதான்.

இதே செக்மென்ட்டில், ‘எனக்கு ஒரு கார் தேவை’ எனும் முதல் கார் ஓனர்களுக்கு மாருதி ஸ்விஃப்ட்டும், `கார் மட்டும்தான் என் தேவை’ எனும் கார் ஆர்வலர் ப்ளஸ் டிரைவர்களுக்கு ஃபிகோவும் ஆஸ்தான தேர்வாக இருந்து வருகிறது. ஃபிகோ பழைய காராக இருந்தாலும், இதன் ஓட்டுதல் அனுபவம், இன்றுமே செக்மென்ட் பெஸ்ட்.

ஆல்ரவுண்டர் ஹேட்ச்பேக் எது?

ஸ்விஃப்ட் பற்றிச் சொல்லவே தேவையில்லை. சேல்ஸ் சார்ட்டின் ராக்கெட். ஸ்விஃப்ட்டுக்கு எப்போதுமே ஏறுமுகம்தான். சரிக்குச் சமமாக மோதும் மூன்று கார்களில் எது நல்ல ஆல்ரவுண்டர் என பார்ப்போம்.

இன்ட்டீரியர் அனுபவம்

ஹூண்டாயின் பலம் அதன் இன்ட்டீரியர் என்பது நியோஸில் தெளிவாகத் தெரிகிறது. தரமான டேஷ்போர்டு ப்ளாஸ்டிக்ஸ், வியக்க வைக்கும் டிசைன், பளிச் நிறங்கள் மற்றும் அழகான Textured Finish என எல்லாமே அருமை. இது இந்த காருக்கு விலை உயர்ந்த தோற்றத்தைத் தருகிறது. ரோட்டரி ஏர்வென்ட், ஒரே கூட்டுக்குள் இருக்கும் டச் ஸ்கிரீன் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சாஃப்ட்டான சீட் என நம் அனுபவத்தைச் சிறப்பாக்குகிறது கேபின். டால் பாய் டிசைன் என்பதால், டிரைவர் சீட் உயரமாக இருக்கிறது.

1. டிசைன், தரம் மற்ற இரண்டையும்விட சூப்பர். பென்ஸ் ஸ்டைல் ஏர் வென்ட்டுகள், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் அருமை.
2. இந்தப் போட்டியில் ரியர் ஏ.சி வென்ட் கொண்ட ஒரே கார் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்தான். 
3. டச் ஸ்க்ரீன் பயன்படுத்த செம ரெஸ்பான்ஸிவ். ஆனால், வென்யூ போல கனெக்டட் வசதிகள் மிஸ்ஸிங்.
1. டிசைன், தரம் மற்ற இரண்டையும்விட சூப்பர். பென்ஸ் ஸ்டைல் ஏர் வென்ட்டுகள், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் அருமை. 2. இந்தப் போட்டியில் ரியர் ஏ.சி வென்ட் கொண்ட ஒரே கார் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்தான். 3. டச் ஸ்க்ரீன் பயன்படுத்த செம ரெஸ்பான்ஸிவ். ஆனால், வென்யூ போல கனெக்டட் வசதிகள் மிஸ்ஸிங்.

ஸ்விஃப்ட்டின் சீட்டில் உட்கார்ந்தால், நமக்குத் தெரிவதெல்லாம் Hooded டயல்கள், ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், உயரம் குறைவான சீட் (உயரத்தை அட்ஜஸ்ட் செய்யலாம்). எல்லாமே ஸ்போர்ட்டிதான். கறுப்பு நிற டேஷ்போர்டின் பிளாஸ்ட்டிக் தரம் ஓகே ரகம். டிசைனில் ஆச்சரியப்படும் வகையில் எதுவும் இல்லை. எனினும் சீட் அகலமாகவும், நியோஸைவிட சாஃப்ட்டாகவும், பக்கவாட்டில் நல்ல க்ரிப்புடனும் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1.  கேபின் ஸ்போர்ட்டியான டிசைனைக் கொண்டிருப்பதுடன், பிராக்கடிக்கலாகவும் உள்ளது. 
2.  ஸ்மார்ட் ப்ளே சிஸ்டம், மற்ற மாருதி கார்களில் இருப்பதுதான். கொஞ்சம் லேக் தெரிகிறது.  
3. முன்பக்க சீட்கள் அகலமாகவும் சொகுசாகவும் உள்ளன.
1. கேபின் ஸ்போர்ட்டியான டிசைனைக் கொண்டிருப்பதுடன், பிராக்கடிக்கலாகவும் உள்ளது. 2. ஸ்மார்ட் ப்ளே சிஸ்டம், மற்ற மாருதி கார்களில் இருப்பதுதான். கொஞ்சம் லேக் தெரிகிறது. 3. முன்பக்க சீட்கள் அகலமாகவும் சொகுசாகவும் உள்ளன.

ஃபிகோவின் கேபினிலும் முழுக்க கறுப்பு நிறம்தான் வியாபித்திருக்கிறது. ஆனால் டைட்டானியம் புளூ வேரியன்ட்டில், ஆங்காங்கே நீல நிறமும், க்ரோம் வேலைப்பாடுகளும் பளிச்சிடுகின்றன. டிரைவிங் பொசிஷன் இங்கேயும் ஸ்போர்ட்டி. ஸ்டீயரிங் வீல் சின்னதாகவும், சீட் போதுமான அளவுக்கு சப்போர்ட் இல்லாமலும் இருக்கிறது. இந்த பேஸ்லிஃப்ட் மாடலில், டச்ஸ்கிரீனை டேஷ்போர்ட்டில் இணைத்திருக்கும் விதம் அருமை. மொபைல் வைக்க டேஷ்போர்டில் தனி இடம் இதில் மட்டுமே உண்டு. பிளாஸ்டிக் தரம், இன்டீரியர் டிசைன், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிசைன் என எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

குடும்ப கார்

ஃபிகோவில் இடவசதி அதிகம். பின்பக்க சீட் தட்டையாக இருந்தாலும், மூன்று பேர் உட்காரலாம். பின்பக்கக் கதவுகளில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் என்பதே இல்லை. 3 பேருக்குப் போதுமான அளவு இடவசதி இருந்தாலும், மற்ற இரண்டு கார்களில் இதை விட அதிக இடம் இருக்கிறது. இந்தப் போட்டியிலேயே அகலமான கார் ஸ்விஃப்ட்தான். கால்களை நீட்டி-மடக்கி உட்கார பின்பக்கத்தில் ஃபிகோவைவிட அதிக இடம் உண்டு. சிறிய ஜன்னல்களும், குவாட்டர் பேனல் இல்லாததும், கறுப்பு நிற இன்டீரியரும், இருட்டு அறையில் அடைத்து வைத்த உணர்வைத் தரலாம். பின்சீட்டில் தொடைகளுக்கு சப்போர்ட் குறைவு.

1.  இங்கிருக்கும் கார்களிலேயே 6 காற்றுப்பைகள் கொண்ட ஒரே கார், ஃபிகோதான். 
2. டச் ஸ்க்ரீன் ஸ்மூத்தாக இயங்கினாலும், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி மிஸ்ஸிங். 
3.  கேபின் வடிவமைப்பு பழைய ஸ்டைலில் இருப்பதுடன், தரமும் கொஞ்சம் சுமார் ரகம்தான்.
1. இங்கிருக்கும் கார்களிலேயே 6 காற்றுப்பைகள் கொண்ட ஒரே கார், ஃபிகோதான். 2. டச் ஸ்க்ரீன் ஸ்மூத்தாக இயங்கினாலும், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி மிஸ்ஸிங். 3. கேபின் வடிவமைப்பு பழைய ஸ்டைலில் இருப்பதுடன், தரமும் கொஞ்சம் சுமார் ரகம்தான்.

நியோஸ் வெளியே பார்க்க சின்ன காராக இருந்தாலும், குடும்பஸ்தர்களுக்கு ஏற்ற கார். பின் சீட்டில் நிறைய இடம் உண்டு. பேக்ரெஸ்ட் கொஞ்சம் ஓவராகச் சாய்ந்திருப்பது, சிலருக்குச் சிரமத்தைத் தரலாம். உயரமானவர்களுக்கு மற்ற இரண்டு கார்களையும் விட நியோஸ் அதிக வசதியாக இருக்கும். தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் உண்டு. பெரிய டோர் பாக்கெட்டுகள் பிராக்டிக்கலாக இருக்கின்றன. லைட்டான இன்டீரியர், பெரிய ஜன்னல்கள் பின்பக்கத்தில் சொகுசான அனுபவத்தைத் தருகின்றன. இந்த மூன்றில் நியோஸில் மட்டும்தான் ரியர் ஏ.சி வென்ட் இருந்தது.

ஃபிகோவில் இருக்கும் 257 லிட்டர் பூட் ஸ்பேஸை விட, நியோஸின் 260 லிட்டர் பூட் ஸ்பேஸ் பெருசு. ஸ்விஃப்ட்டின் 268 லிட்டர் அதைவிடப் பெருசு. மூன்று கார்களிலும் பூட் உயரமாகவே இருக்கிறது. ஃபோர்டில் உயரமாக மட்டுமில்லாது, குறுகலாகவும் இருக்கிறது.

சிறப்பம்சங்களும் வசதிகளும்...

வசதிகளை முந்திக்கொண்டு தருவதில் ஹூண்டாய் எக்ஸ்பெர்ட் என எல்லோருக்குமே தெரியும். ஆனால் இந்தப் போட்டியில், மூன்று கார்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு வசதிகளுடனேயே வருகின்றன. ஒவ்வொரு காரும், ஒவ்வொரு விதத்தில் சிறப்பானதாக இருக்கிறது.

ஆல்ரவுண்டர் ஹேட்ச்பேக் எது?

ஃபிகோவை எடுத்துக்கொண்டால் இங்கிருப்பதிலேயே 6 காற்றுப்பைகள், ஆட்டோ டிம்மிங் மிரர் இருக்கும் ஒரே கார் இதுதான். ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் இருப்பது ப்ளஸ். ஆனால், இதில் மட்டும்தான் ஆண்ட்ராய்டு ஆட்டோ /ஆப்பிள் கார்பிளே இல்லை என்பது மைனஸ். LED ஹெட்லைட் மற்றும் மடித்துக் கொள்ளக்கூடிய 60:40 ஸ்பிளிட் சீட் ஸ்விஃப்ட்டின் தனித்தன்மை. நியோஸின் 8 இன்ச் டச் ஸ்கிரீன்தான், இங்கிருப்பதிலேயே பெரிது. வென்யூபோல கனெக்டட் தொழில்நுட்பம் இல்லையென்றாலும், இதுதான் மற்ற இரண்டு கார்களையும் ஒப்பிடும்போது அதிக வசதிகளைக் கொண்டிருக்கிறது. வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், ரியர் ஏசி வென்ட், டிஜிட்டல் ரியர் வியூ மிரர் என இங்கேயும் சில தனித்துவமான வசதிகள் இருக்கின்றன. மற்ற இரு கார்களிலும் உள்ள ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் நியோஸில் இல்லை.

ஆல்ரவுண்டர் ஹேட்ச்பேக் எது?

இன்ஜின்

மூன்றிலும் இருப்பது, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். ஃபிகோ மட்டும் இங்கே 3 சிலிண்டர்; மற்றவை 4 சிலிண்டர் இன்ஜின்கள். ஸ்விஃப்ட் மற்றும் நியோஸில் வருவது BS-6 இன்ஜின். ஃபிகோவில் இன்னும் BS-4 மட்டுமே.

மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய், 83bhp பவரை வெளிப்படுத்துகின்றன. ஃபோர்டு 96bhp பவரைத் தருகிறது. டார்க்கில் பெரிய வித்தியாசம் இல்லை. நியோஸ் - 11.4Kgm, ஸ்விஃப்ட் - 11.3kgm, ஃபிகோ - 12kgm. ஸ்விஃப்ட்டின் எடை 885 கிலோ மட்டுமே என்பதால், கிட்டத்தட்ட ஃபிகோவுக்கு இணையான பவர் to வெயிட் ரேஷியோ இதில் உள்ளது.

BS-4 ஆக இருக்கும்போதே, ஹூண்டாயின் Kappa 2 இன்ஜின் கொஞ்சம் மந்தமாக இருக்கும். BS-6 ஆக மாறிய பின் சோம்பேறித்தனம் இன்னும் அதிகரித்திருப்பதுபோல் தோன்றுகிறது. இதன் டால் கியரிங் ரேஷியோ, மைலேஜூக்கு உதவினாலும் ஓவர்டேக் செய்யத் தடை போடுகிறது. 3000rpm தாண்டிவிட்டால் வரும் இன்ஜினின் உறுமல், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.ஸ்விஃப்ட்டின் K12 இன்ஜின் சுறுசுறுப்பானது. குறைந்த ஆர்பிஎம்மில் வலுவாகவும், அதிக ஆர்பிஎம்மில் உற்சாகம் தருவதாகவும் இருக்கிறது. BS-6க்கு மாறும்போது பவர் டெலிவரி கொஞ்சம் பின்தங்கிவிட்டது.

ஆரம்பிக்கும்போது பாந்தமாகவும், மிட் ஆர்பிஎம்மில் ஆங்காங்கே உணர்ச்சியே இல்லாமல் தட்டையாகவும் பவர் வெளிப்படுகிறது. டைமிங்கை எடுத்துப் பார்க்கும்போது கிட்டத்தட்ட மூன்று கார்களின் ஆக்ஸிலரேஷனும் ஒன்று போலவே இருக்கின்றன. ஒரு நல்ல விஷயம், பழைய இன்ஜினை விட இந்த இன்ஜின் அமைதியோ அமைதி.

 நியோஸ் கிரில்லில், பூமராங் ஸ்டைல் DRL அழகு..!,  ஸ்விஃப்ட்டின் ஃபுல் LED ஹெட்லைட் செம பவர்..! ,  ஃபிகோவில் புளூ வேலைப்பாடுகள் ஸ்போர்ட்டி..!
நியோஸ் கிரில்லில், பூமராங் ஸ்டைல் DRL அழகு..!, ஸ்விஃப்ட்டின் ஃபுல் LED ஹெட்லைட் செம பவர்..! , ஃபிகோவில் புளூ வேலைப்பாடுகள் ஸ்போர்ட்டி..!

எக்கோஸ்போர்ட்டின் 1.5 லிட்டர் டிராகன் இன்ஜினை ஓட்டியபிறகு, ஃபிகோவின் 1.2 லிட்டர் இன்ஜினில் கை வைத்தால் இன்ஜினில் ஏற்பட்டிருக்கும் தொய்வு தெரிகிறது. அதுவும் குறைவான வேகங்களில், நியோஸ்போல இன்ஜினில் கொஞ்சமும் உணர்ச்சியே இல்லை.

இதனால் சிட்டி டிரைவிங்கில் அடிக்கடி கியர் மாற்ற வேண்டியிருக்கிறது. மிட்ரேஞ்ச் மற்றும் டாப் கியரில்தான் இது ஃபோர்டு இன்ஜின் என்பதே தெரிகிறது. அதுவும் அந்த 3 சிலிண்டரின் சவுண்டு, இன்னும் ரெவ் செய்யத் தூண்டும். ஒரு நல்ல சாலை கிடைத்தால் பிகில் அடிக்கிறது, இல்லையென்றால் டல் அடிக்கிறது. இதுதான் ஃபிகோ.

டிரைவிங்

`கார்னர்களை வேகமாகக் கடக்க வேண்டும்' என்றால், வேண்டாம் என்கிறது நியோஸ். டால்பாய் சீட்டிங் பொசிஷன், ஃபீட்பேக் குறைவாக இருக்கும் ஸ்டீயரிங், திருப்பங்களில் பாடிரோல் இவைதான் பிரச்னை. ஆனால் கிராண்ட் i10 உடன் ஒப்பிடும் போது, ஸ்டீயரிங்கின் ஃபீட்பேக்கில் முன்னேற்றம் தெரிகிறது. இருந்தாலும் இது போதவில்லை. கார்னர் முடிந்த பின்பு, பழைய பொசிஷனுக்கு ஸ்டீயரிங் வீல் உடனே திரும்புவது சூப்பர். நியோஸின் சஸ்பென்ஷன் சாஃப்ட் செட்டப் என்பதால், பெரிய பள்ளங்களிலும் சாலையின் அதிர்வுகள் கேபினுக்குள் தெரிவதில்லை. அதிக வேகத்தில் போகும்போது மட்டும், சின்னப் பள்ளங்களுக்கே கார் தூக்கிப்போடுகிறது.

ஆல்ரவுண்டர் ஹேட்ச்பேக் எது?

ஸ்விஃப்ட்டின் ரைடிங்கில் இருக்கும் பெரிய குறை - ஸ்டீயரிங் பழைய பொசிஷனுக்குத் திரும்பிவர மறுப்பதுதான். மற்றபடி காரின் ஹேண்ட்லிங் அருமை. சஸ்பென்ஷன் சாஃப்ட்டாகவும், காரின் கன்ட்ரோல்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் செம. குறைவான வேகங்களில் கார் எடையில்லாததுபோலத் தெரிகிறது. இதனால் டிராஃபிக்கில் காரைக் கையாள்வது சுலபம். வேகம் கூடும்போது எடை கூடுவதுபோல இருக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் நிலைத்தன்மை, நம்பிக்கை தரும்படியாக இருக்கிறது.

ஃபோர்டு என்றால் டிரைவர்களின் கார் என முத்திரை குத்திவிடலாம். ஸ்டீயரிங் சுறுசுறுப்பாகவும், துல்லியமாகவும் இருக்கிறது. முன்பக்க வீல்களை விரல்களால் உணர முடிவது சிறப்பு. குறைவான வேகங்களில் ஸ்டீயரிங்கைப் பயன்படுத்தச் சுலபமாகவே இருக்கிறது. ஃபிகோவின் அருமையான சஸ்பென்ஷன் டியூனிங் சாஃப்ட்டா, ஹார்டா...எந்த ரகம் என்பதே தெரியவில்லை. ஆனால் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. எல்லா வேகங்களிலும் ஓட்டுதல் என்பது சொகுசாகவும், ஸ்டேபிளாகவும் இருப்பது, காரின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.

பாக்கெட்டுக்கு வேட்டு வைக்காத கார்

தினசரிப் பயன்பாட்டுக்கு ஏற்ற பட்ஜெட் கார் எது என்ற கேள்வி இப்போது நம் முன் இருக்கிறது. ஜாலி ரைடிங் என்றால் வெற்றியாளர் ஃபிகோதான். ஆனால், இந்தப் போட்டியின் முன்னுரிமை ஒரு ஆல்ரவுண்டரைத் தேர்ந்தெடுப்பதுதான். 7.68 லட்ச ரூபாய்க்கு இடவசதி மற்றும் ஒரு குடும்ப ஹேட்ச்பேக்குக்கான நடைமுறைத் தேவைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, ஃபன் டிரைவிங் மட்டும் போதும் என விருப்பப்படும் டிரைவிங் பிரியர்களுக்குத்தான் ஃபிகோ.

 நியோஸில் பின்பக்க இடவசதி சிறப்பு. ,  ஸ்விஃப்டில் சிறிய கதவுக் கண்ணாடிகள், அடைசல். ,  ஃபிகோவில் இடவசதி ஓகே; ஸ்டோரேஜ் 
ஸ்பேஸ் மிஸ்ஸிங்.
நியோஸில் பின்பக்க இடவசதி சிறப்பு. , ஸ்விஃப்டில் சிறிய கதவுக் கண்ணாடிகள், அடைசல். , ஃபிகோவில் இடவசதி ஓகே; ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மிஸ்ஸிங்.

ஸ்விஃப்ட் இப்போது மட்டுமில்லை எப்போதுமே குடும்பஸ்தர்களுக்கு ஏற்ற கார். இளைஞர்கள் எதிர்பார்க்கும் ஃபன் டிரைவிங் என்ற அந்த பாக்ஸையும் இது டிக் அடித்துவிடுகிறது. வலுவான இன்ஜின் பர்ஃபாமன்ஸும் வைத்திருக்கிறது. இந்தப் போட்டியில் கவனம் ஈர்க்கும் அளவு அழகான கார் ஸ்விஃப்ட். விலையைத் தவிர, ஸ்விஃப்ட்டில் பெரிய பிரச்னை என எதுவும் இல்லை. இங்கே விலை உயர்ந்த காரும் இதுதான், ரூ.9.15 லட்சம்.

கிராண்ட் i10 நியோஸ் பல விஷயங்களில் பெட்டராக இருக்கிறது. ஃபன் டிரைவிங் இல்லை. ஆனால் சிட்டியில் பயன்படுத்துவதற்கு ஏற்ற கார் இது. இடவசதியிலும் மற்ற இரண்டையும் விட ஒருபடி மேலே. நவீனமான இன்ட்டீரியரும், வசதிகளும் கூடுதல் ப்ளஸ். ரூ.8.28 லட்சம் ரூபாய் செலவு செய்வதால் இதில் கிடைக்கும் ப்ரீமியம் தன்மை உங்களுக்குச் சந்தோஷத்தை தரும் என்றால் நியோஸ் வாங்கலாம். மற்ற இரண்டு கார்களையும் விட நிச்சயம் இது சிறந்த ஆல்ரவுண்டர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு