கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஆராவுக்கு கைகொடுக்குமா டர்போ?

ஹூண்டாய் ஆரா vs ஹோண்டா அமேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் ஆரா vs ஹோண்டா அமேஸ்

போட்டி: ஹூண்டாய் ஆரா vs ஹோண்டா அமேஸ்

இந்தியாவில் காம்பாக்ட் செடான் என்பது ஒரு குடும்பத்துக்கான சரியான கார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு, பெரிய எஸ்யூவிகளில் கிடைக்காத சௌகரியத்தை குறைந்த விலையில் இவை தருகின்றன.

புதிதாக இந்த செக்மென்ட்டில் ஹூண்டாய் ஆரா டர்போ பெட்ரோல் இன்ஜினோடு களமிறங்கியிருக்கிறது. இதன் 100bhp இன்ஜின், மற்ற காம்பேக்ட் செடான்களில் மிஸ் ஆகும் சுவாரஸ்யமான ஃபன் டு டிரைவ் பக்கம் நம்மைக் கூட்டிச் செல்கிறது.

ஹூண்டாய் ஆரா vs ஹோண்டா அமேஸ்
ஹூண்டாய் ஆரா vs ஹோண்டா அமேஸ்

இப்போது நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. இந்த செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா அமேஸ் மாடலை ஒப்பிடும்போது ஆரா டர்போ சிறந்ததா? டிரைவிங் மட்டுமில்லாமல், ஒரு குடும்பத்துக்கான சரியான கார் என்ற பேலன்ஸை இது தருகிறதா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக புது BS-6 அமேஸ் மற்றும் ஆரா டர்போவை ஓட்டிப் பார்த்தோம்.

டிரைவிங்

ஹூண்டாய் ஆராவில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருக்கிறது. 100bhp பவரை வெளிப்படுத்தும் இந்த BS-6 இன்ஜின் ஐடிலிங்கில் சைலன்ட் பார்ட்டி. 5,000rpm கடந்துவிட்டால் செம சவுண்டு பார்ட்டி. 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால் ஐடிலிங்கில் இருக்கும்போது ஸ்டீயரிங் வீல், பெடல் போன்ற இடங்களில் அதிர்வுகள் தெரிகின்றன.

1. டேஷ்போர்டு ஸ்போர்ட்டியாக இருக்கிறது. புது டிசைன்களை முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது2.ஆராவில் ப்ரொஜக்டர் ஹெட்லைட்ஸ் மற்றும் இரட்டை பூமராங் DRL செம ஸ்டைல்.
 3.பின்பக்கப் பயணிகளுக்கு ஏசி வென்ட் மற்றும் 12V DC சார்ஜர் ஆராவில் மட்டுமே!
1. டேஷ்போர்டு ஸ்போர்ட்டியாக இருக்கிறது. புது டிசைன்களை முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது2.ஆராவில் ப்ரொஜக்டர் ஹெட்லைட்ஸ் மற்றும் இரட்டை பூமராங் DRL செம ஸ்டைல். 3.பின்பக்கப் பயணிகளுக்கு ஏசி வென்ட் மற்றும் 12V DC சார்ஜர் ஆராவில் மட்டுமே!

காரை நகர்த்த ஆரம்பித்துவிட்டால் இந்த அதிர்வுகள் மறைந்துவிடும். குறைவான வேகங்களில் இன்ஜினின் ரெஸ்பான்ஸ் அருமை. இதனால், டிராஃபிக்கில் ஓட்டுவது சுலபமாக இருக்கிறது. 1,800 rpm கடந்ததும் பெரிய பவர் பூஸ்ட் கொடுக்கிறது டர்போசார்ஜர். 5,500rpm தாண்டும்போதுதான் இந்த பவர் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்குகிறது. அகலமான RPM ரேஞ்ச், லைட்டான கிளட்ச், மென்மையாக இயங்கக்கூடிய கியர்பாக்ஸ் என ஆரா ஓட்டுவதற்குச் சுலபமான கார் மட்டுமில்லை; ஸ்பீடு ஏற்றி ஹைவேயில் அதகளப்படுத்தவும் முடியும். இதற்காகவே ஹூண்டாய்க்கு லைக்ஸ்.

அமேஸில் 90bhp பவர் தரும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். சமீபத்தில்தான் இது BS-6 ஆக மாற்றப்பட்டது. இந்த அப்கிரேடில் பவர், பர்ஃபாமன்ஸ் எதுவும் குறையாதது நல்ல விஷயம். முன்பைவிட இன்ஜின் கொஞ்சம் ஸ்மூத் ஆகியிருக்கிறது. ஹூண்டாயின் 3 சிலிண்டர் இன்ஜினை ஒப்பிடும்போது, 4 சிலிண்டர் இன்ஜின் எப்போதுமே அதிர்வுகள் குறைவானவை.

டர்போ கிடையாது, நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் என்பதால் குறைவான வேகங்களிலும், மிட் ரேஞ்சிலும் டிரைவிங் அருமை. மிட் ரேஞ்சில் ஹூண்டாயின் டர்போ இன்ஜின் அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை. பவர் டெலிவரியும் விட்டுவிட்டுக் கிடைக்கிறது. ஆனால், 5,000rpm கடந்துவிட்டால் திடீரென ஓர் எழுச்சி. இந்த பவர் 6,500rpm - அதாவது ரெட்லைன் வரை நீடிக்கிறது.

 1.முன்பக்கம் நிறைய ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. சீட் தாழ்வாக இருப்பதால், டிரைவிங் பொசிஷன் செம ஸ்போர்ட்டி. 
 2.நெடுஞ்சாலையில் டிரைவிங்கைச் சுலபமாக்க, க்ரூஸ் கன்ட்ரோல் இருக்கிறது அமேஸில்.
 3. 15 இன்ச் டயர்களின் சைடு வால் பெரிதாக இருப்பதால், கேபினில் அதிர்வுகள் தெரியவில்லை.
1.முன்பக்கம் நிறைய ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. சீட் தாழ்வாக இருப்பதால், டிரைவிங் பொசிஷன் செம ஸ்போர்ட்டி. 2.நெடுஞ்சாலையில் டிரைவிங்கைச் சுலபமாக்க, க்ரூஸ் கன்ட்ரோல் இருக்கிறது அமேஸில். 3. 15 இன்ச் டயர்களின் சைடு வால் பெரிதாக இருப்பதால், கேபினில் அதிர்வுகள் தெரியவில்லை.

ஹோண்டா 100 கி.மீ வேகம் தொட 13.11 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது என்றால், ஹூண்டாய் அதை 10.63 நொடிகளிலேயே தொட்டுவிடுகிறது. மூன்றாவது கியரில் 20-80 கி.மீ வேகம் தொட ஆராவுக்கு 12.51 நொடிகள் போதும். அமேஸுக்கு 14.40 நொடிகள் தேவை. நான்காவது கியரில் 40-100 கி.மீ வேகத்தை 7.81 நொடிகளில் தொட்டு விடுகிறது ஆரா. பர்ஃபாமன்ஸில் ஆராவின் டர்போ இன்ஜின்தான் கெத்து.

ஹோண்டா அமேஸ், நகரச் சாலைகளில் ஓட்டுவதற்கும் அவ்வளவு சுலபமாக இல்லை. க்ளட்ச் டிராவல் அதிகமாக இருக்கிறது. க்ளட்ச்சை மிதித்தால் அது மீண்டும் பழைய பொசிஷனுக்கே திரும்பும் வேகம் அதிகமாக இருப்பதால், கிளட்ச் மீது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆனால், ஆராவைவிட அமேஸின் கியர்பாக்ஸ் மென்மையாக இருக்கிறது. ஆராவை குறைந்த வேகங்களில் இயக்கும்போது ரைடு குவாலிட்டி அருமை. சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருந்தாலும், சின்னச் சின்னப் பள்ளம் மேடுகளில் ஏறும்போது கேபினுக்குள் அசைவுகள் தெரியவில்லை. பெரிய பள்ளம் வந்தால் மட்டும் கேபின் ஆட்டம் காண்கிறது. வேகமாகச் செல்லும்போது காரில் தூக்கிப்போடும் உணர்வு தெரியவில்லை.

ஆராவுக்கு கைகொடுக்குமா டர்போ?

ஸ்டீயரிங் லைட்டாக இருப்பதால், கார்னர்களில் வேகமாகப் போக நம்பிக்கை கிடைக்கவில்லை. மற்றபடி பிரேக் ஃபீட்பேக் அருமை. அவசரத்துக்கு பிரேக்கை அழுத்தினாலும் பாதுகாப்பாக உணரலாம். அமேஸின் லாங் டிராவல் சஸ்பென்ஷன், மோசமான சாலைகளில் செல்லும்போதும் கேபினில் குறைவான அசைவுகளையே காட்டுகிறது. கைகள் திருப்புவது அப்படியே வீலுக்குப் போவதுபோன்ற நேரடி உணர்வைக் கொடுக்கிறது இதன் ஸ்டீயரிங். ஆனால், அதிக வேகங்களில் ஸ்டீயரிங் இன்னும் ஷார்ப்பாக இருக்கலாம். ஆராவைவிட வேகமாக ஓட்டுவதற்கு நம்பிக்கை தருகிறது அமேஸ். அந்த நம்பிக்கைக்கு பிரேக்கும் ஒரு காரணம்.

இன்டீரியர்

ஆரா டர்போ மாடலின் டேஷ்போர்டு கறுப்பு-வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற ஹை-லைட்ஸ் உடன் செம ஸ்போர்ட்டியாகத் தெரிகிறது. டேஷ்போர்டில் இருக்கும் ஹனிகோம்ப் டிசைன் கவர்கிறது. கேபினில் நிறையத் தரமான பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஸ்டோரேஜ் வசதியும் எக்கச்சக்கம். முன் சீட் அகலமாகவும், குஷனிங் அருமையாகவும் இருக்கிறது. ஆனால், பேக்ரெஸ்ட் குறுகலாக இருப்பதால், தோள்களுக்கு சப்போர்ட் போதுமான அளவு கிடைக்கவில்லை. அமேஸில் இருப்பதுபோன்ற அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்டும் இதில் இல்லை. பின்பக்கப் பயணிகளுக்கு வசதியான லெக்ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் இருக்கிறது. சீட் சாய்ந்திருக்கும் கோணமும், தொடைகளுக்கான சப்போர்ட்டும் ரிலாக்ஸாக உட்கார உதவுகிறது. ஹெட்ரூம், 6 அடி உயர ஆட்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

ஆராவுக்கு கைகொடுக்குமா டர்போ?

அமேஸின் இன்டீரியரில் பிளாக் மற்றும் பீஜ் டேஷ்போர்டு உண்டு. சில இடங்களில் பளபளப்பான பியானோ பிளாக் டச் கொடுத்து கேபினை ப்ரீமியமாகக் காட்டியுள்ளார்கள். டேஷ்போர்டு மெட்டீரியல்கள் ஹூண்டாய் அளவுக்கு மதிப்புடையதாக இல்லை. ஒட்டுமொத்த டேஷ்போர்டு டிசைன் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், எர்கானமிக்ஸ் வசதியாகவும் இருக்கிறது. சீட் பீஜ் நிறத்தில் வருவது கேபினை விசாலமாகக் காட்டுகிறது.

 1. முன் சீட்டில் ஷோல்டர்களுக்குப் போதுமான சப்போர்ட் கிடைக்கவில்லை ஆராவில். 
2. 8 இன்ச் டச்ஸ்கிரீனில் ஏகப்பட்ட வசதிகள். பயன்படுத்துவதற்கும் சுலபமாக இருக்கிறது.
 3. ஆராவின் பூட் ஸ்பேஸ் 402 லிட்டர். டிக்கி உயரமாக இருப்பதால் பொருட்களை ஏற்றி, இறக்குவது சிரமம்.
1. முன் சீட்டில் ஷோல்டர்களுக்குப் போதுமான சப்போர்ட் கிடைக்கவில்லை ஆராவில். 2. 8 இன்ச் டச்ஸ்கிரீனில் ஏகப்பட்ட வசதிகள். பயன்படுத்துவதற்கும் சுலபமாக இருக்கிறது. 3. ஆராவின் பூட் ஸ்பேஸ் 402 லிட்டர். டிக்கி உயரமாக இருப்பதால் பொருட்களை ஏற்றி, இறக்குவது சிரமம்.

சீட் உயரம் குறைவுதான்; ஆனால், சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். முன்பக்கம் இருக்கும் ஹெட்ரெஸ்ட்டையும் அட்ஜஸ்ட் செய்ய முடியும். முன்பக்க சீட்டின் வடிவமைப்பு முதுகுக்கு நல்ல சப்போர்ட்டைத் தருகிறது. பின்பக்கம் ஆராவைவிட லெக்ரூம் அதிகம். சீட் உடல் வாக்குக்கு ஏற்ப வளைந்து இருப்பதும், மெத்து மெத்தென இருப்பதும் பின் பக்கப் பயணிகளுக்கு வசதியைக் கூட்டுகிறது. சாய்க்கப்பட்டிருக்கும் கோணமும் அருமை. ஆனால் 6 அடி ஆட்களுக்கு அமேஸின் ஹெட்ரூம் குறைவு. ஆராவை ஒப்பிடும்போது, அமேஸில் இருக்கும் சிறப்பான விஷயம் இதன் 420 லிட்டர் பூட் ஸ்பேஸ். ஆராவில் 402 லிட்டர் மட்டுமே.

வசதிகள்

இரண்டு கார்களிலும் டூயல் ஏர்பேக், ABS, EBD, ஐசோஃபிக்ஸ் மவுன்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா, ரியர் ஆர்ம்ரெஸ்ட், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, கீலெஸ் என்ட்ரி, 15 இன்ச் அலாய் வீல் போன்ற வசதிகள் பொதுவானவை. கூடுதலாக ஆராவில் ரியர் ஏசி வென்ட், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன், ஒயர்லெஸ் சார்ஜிங், ப்ரொஜக்டர் ஹெட்லைட், அட்ஜஸ்டபிள் ரியர் ஹெட்ரெஸ்ட், LED DRL போன்ற வசதிகள் வருகின்றன. அமேஸில் இதெல்லாம் இல்லையென்றாலும், அதிலும் பிரத்தியேகமாக க்ரூஸ் கன்ட்ரோல், முன்பக்கம் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், இன்பில்ட் நேவிகேஷன் போன்ற வசதிகள் வருகின்றன.

எதை வாங்கலாம்?

ஹூண்டாய் ஆராவின் டர்போ பெட்ரோல் SX எனும் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் ஆன்ரோடு விலை ரூ.9.87 லட்சம். ஹோண்டா அமேஸ் மொத்தம் 4 வேரியன்ட்டில் கிடைக்கிறது. 6.90 லட்சத்தில் இருந்து ஆரம்பித்து 10.27 லட்சம் ரூபாய் வரை வாங்கலாம். ஹூண்டாயில் 3 ஆண்டு, ஒரு லட்சம் கி.மீ வாரன்ட்டி வருிறது. அதேபோல 3 ஆண்டு RSA இலவசம். ஹோண்டாவில் 3 ஆண்டு, அன்லிமிட்டட் கிலோமீட்டர் வாரன்ட்டி தருகிறார்கள். ஆனால், RSA இலவசம் கிடையாது.

 1. அமேஸில் முன் சீட் பெரிதாகவும், வசதியாகவும் இருக்கிறது. சீட் உயர அட்ஜஸ்ட் இருக்கிறது.
2.  7 இன்ச் டச் ஸ்கிரீனின் டிஸ்ப்ளே அருமை. ஆஃப்லைன் நேவிகேஷன் வசதியும் அமேஸில் இருப்பது செம!
 3. அமேஸின் 420 லிட்டர் பூட் ஸ்பேஸ் செக்மென்ட்டிலேயே பெருசு.
1. அமேஸில் முன் சீட் பெரிதாகவும், வசதியாகவும் இருக்கிறது. சீட் உயர அட்ஜஸ்ட் இருக்கிறது. 2. 7 இன்ச் டச் ஸ்கிரீனின் டிஸ்ப்ளே அருமை. ஆஃப்லைன் நேவிகேஷன் வசதியும் அமேஸில் இருப்பது செம! 3. அமேஸின் 420 லிட்டர் பூட் ஸ்பேஸ் செக்மென்ட்டிலேயே பெருசு.

இரண்டு செடான்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், சில சமரசம் செய்துதான் ஆகவேண்டும். ஹோண்டா அமேஸை இடவசதி, விலை மற்றும் வேகமாக ஓட்டுவதற்குக் கொடுக்கும் நம்பிக்கைக்காக வாங்கலாம். ஆராவை, பின்பக்க லெக்ரூம், வசதிகள் மற்றும் கேபின் தரத்துக்காக வாங்கலாம். ஆராவின் சீட் மற்றும் டிரைவிங்கில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் பரவாயில்லை என எக்ஸ்ட்ரா 62,000 ரூபாய் கொடுக்க வைக்கிறது இதன் டர்போ இன்ஜின். இந்த செக்மென்ட்டுக்கு டர்போ இதுவே முதல் முறை. இது டிரைவிங்கில் செம புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. ஃபன் என்ற ஒரே விஷயத்தினால் ஆரா இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறது.