Published:Updated:

அளப்பறை ஹோண்டா... அசால்ட் ஹூண்டாய்! - எந்த செடான் பெஸ்ட்?

ஹூண்டாய் எலான்ட்ரா Vs ஹோண்டா சிவிக்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் எலான்ட்ரா Vs ஹோண்டா சிவிக்

போட்டி: ஹூண்டாய் எலான்ட்ரா Vs ஹோண்டா சிவிக்

அளப்பறை ஹோண்டா... அசால்ட் ஹூண்டாய்! - எந்த செடான் பெஸ்ட்?

போட்டி: ஹூண்டாய் எலான்ட்ரா Vs ஹோண்டா சிவிக்

Published:Updated:
ஹூண்டாய் எலான்ட்ரா Vs ஹோண்டா சிவிக்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் எலான்ட்ரா Vs ஹோண்டா சிவிக்

மல் – ரஜினி, விஜய் – அஜித் மாதிரி, எக்ஸிக்யூட்டிவ் செடான்களில் கடுமையாக போட்டி போடுவது சிவிக்கும் எலான்ட்ராவும்தான். சிவிக்... பார்க்கும்போதே ராயல் லுக்கில் மனசை அள்ளும். எலான்ட்ராவையும் சும்மா சொல்லக் கூடாது.

‘அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்று காஸ்ட்லியான ஸ்கோடாஃ/போக்ஸ்வாகன் வைத்திருப்பவர்களைக்கூட ஒரு நிமிடமாவது யோசிக்க வைத்துவிடும். காஸ்மெட்டிக் அப்டேட்டுகளுடன், BS-6 இன்ஜினுடன் வந்திருக்கும் எலான்ட்ராவையும், 10–வது தலைமுறையாகப் பிறந்து வந்திருக்கும் சிவிக்குக்கும் (BS-4 இன்ஜின்தான்) போட்டி வைத்தால், அப்ளாஸ் அள்ளும்தானே?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 1.இன்டீரியர் ப்ரீமியம். அங்கங்கே ப்ளாஸ்டிக் வாசம். லைட் வெயிட் ஸ்டீயரிங், சிட்டிக்குள் பார்க் செய்ய, ஓட்ட ஜாலி.
2. இந்த செக்மென்ட்டில் `வாவ்’ சொல்ல வைக்கும் விஷயம் - புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி.
3. வென்டிலேட்டட் சீட்கள் கோடைக் காலத்தில் டிரைவருக்கு வியர்க்காது.
1.இன்டீரியர் ப்ரீமியம். அங்கங்கே ப்ளாஸ்டிக் வாசம். லைட் வெயிட் ஸ்டீயரிங், சிட்டிக்குள் பார்க் செய்ய, ஓட்ட ஜாலி. 2. இந்த செக்மென்ட்டில் `வாவ்’ சொல்ல வைக்கும் விஷயம் - புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி. 3. வென்டிலேட்டட் சீட்கள் கோடைக் காலத்தில் டிரைவருக்கு வியர்க்காது.

வெளியே

எலான்ட்ரா: அறுங்கோண வடிவ கிரில்லுடன், பார்த்தவுடனே ‘கும்’மென்ற தோற்றத்தைத் தருகிறது எலான்ட்ரா. பானெட் லேசாக பல்க்கியாகி இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அருகே நீளமான வடிவில் ஹெட்லைட் டிசைன். உற்றுப் பார்த்தால், 4 புரொஜெக்டர் பல்புகள். LED DRL கீழே பாந்தமாய் இருந்தது. பின்பக்க டெயில் லைட் வரை அந்த ஷார்ப்னெஸ் தொடர்கிறது. அலாய் வீல்கள் புதுசு. பம்ப்பருக்கு அடியில் நம்பர் பிளேட் இருப்பதும்கூட ஸ்டைல்தான்.பூட் லிட் வரை டெயில் லைட்களை எக்ஸ்டெண்ட் செய்திருப்பதும் நச்! என்னைப் பொறுத்தவரை, சிவிக்கைவிட எலான்ட்ராவின் பின்பக்க டிசைன்தான், வால்வோ ரகத்தில் இருக்கிறது.

சிவிக்: பழைய சிவிக் ‘கொழுக் மொழுக்’ என குழந்தைபோல இருக்கும். புதுசு, கொஞ்சம் ஷார்ப் டிசைனுடன் மெச்சூர்டான ஜென்டில்மேன் போல் இருக்கிறது. தூரமாக நின்றுப் பார்த்தால், லிமோசின் எனச் சொல்லி விடுவார்கள்... அத்தனை நீளம் (4.6 மீட்டர்). கூபே போல மேற்கூரை அப்படியே அழகாகச் சரிந்து பின்னால் விழுவது, கவிதை!

நீளமான க்ரோம் கிரில்லிலேயே LED ஹெட்லைட்டைப் பொசிஷன் செய்திருக்கிறார்கள். பனி விளக்கும், ஏர்இன்டேக் ஏரியாவும் க்ரோம் ஃபினிஷில். 17 இன்ச் அலாய் வீலின் டிசைன் அற்புதம்.

அளப்பறை ஹோண்டா... அசால்ட் ஹூண்டாய்! - எந்த செடான் பெஸ்ட்?

சிவிக்கின் பின்புறம் யாரும் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். இதன் பூமராங் வடிவ டெயில் லைட்டுகள், டிக்கி கதவு வரை லேசாக இழுக்கப்பட்ட விதம் அருமை. ஸ்பாய்லரே தேவையில்லைபோல. அந்தளவு பின் பக்கம் செம ஷார்ப். சிவிக்கை நிச்சயம் நான் ஒரு கூபே என்றுதான் சொல்வேன். அந்தளவு ஸ்போர்ட்டி.

உள்ளே

எலான்ட்ரா: கறுப்பு பீஜ் என டூயல் டோன் கலரில் எலான்ட்ராவின் இன்டீரியர், ப்ரீமியம் ரகம். இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கு மேலே கார்பன் ஃபைபர் வேலைப்பாடுகளும், சில்வர் டச்சும் ஓகே! எல்லாமே சாஃப்ட் டச்சாக பூப்போன்று ஆப்பரேட் செய்ய வேண்டும். சில இடங்களில் பிளாஸ்டிக் வாசம். 8 இன்ச் டச் ஸ்க்ரீன், ஸ்லீக்கான டிசைனில் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. ஸ்டீயரிங் வீல் ஸ்மார்ட்டான டிசைன்; கைக்கு அடக்கமாக நச்சென்று இருக்கிறது. பழைய எலான்ட்ராவில் HVAC கன்ட்ரோல்களுக்கு, இரண்டு டயல்கள்தான் இருக்கும். இதில் மூன்று டயல்கள்.

சிவிக்: முன் பக்கம் டிரைவிங் பொசிஷன் செம ஸ்போர்ட்டி. எலான்ட்ராவைவிட இதன் டச் ஸ்க்ரீன் சிறுசுதான் (7 இன்ச்). ஸ்மூத்னெஸ்ஸிலும் ஹூண்டாய் அளவுக்கு இல்லை. சாஃப்ட்வேரிலும் முன்னேற்றம் வேண்டும். இன்டீரியரில் ஆல் பிளாக் தீம் அற்புதம். லாங் ஷாட்டில், பக்கத்தில், பக்கவாட்டில் என்று எப்படிப் பார்த்தாலும் ஸ்போர்ட்டினெஸ்தான்.

எலான்ட்ராவைவிட சிவிக்கின் சென்டர் கன்ஸோலில் தாராளமான இடம் இருந்தது. காரணம், இதன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக். இரண்டிலுமே எலெக்ட்ரானிக் சன்ரூஃப், இன்னொரு கவர்ச்சி.

சீட்

எலான்ட்ரா: முன் பக்க சீட்டின் குஷனிங், நல்ல கம்ஃபர்டபிள். டிரைவர் சீட்டை 10 வழிகளில் அட்ஜஸ்ட் செய்து, மெமரியில் ஸேவ் செய்து கொள்ளலாம். டிரைவிங் பொசிஷன் சூப்பர். டாப் எண்டில் கூல்டு முன் பக்க சீட் உண்டு. பின் பக்கம் தாவினால், லெக்ரூமும் ஹெட்ரூமும் டீஸன்ட்டாக இருக்கின்றன. பேக்ரெஸ்ட் கொஞ்சம் நிமிர்ந்திருந்தாலும், சொகுசாகவே இருக்கிறது. எலான்ட்ராவின் பூட் ஸ்பேஸ் – 458 லிட்டர். பெரிய டூருக்கு கேரன்ட்டி.

1. சைடு மிரரில் பாருங்கள்... லேன் வாட்ச் கேமரா. டிராஃபிக்கில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
2. ஜாலியாக மேனுவல் டிரைவில் ஓட்ட விரும்புபவர்களுக்கு பேடில் ஷிஃப்டர்கள் உண்டு. 
3. ஆல் பிளாக் தீம் சிவிக்கின் இன்டீரியர், ஸ்போர்ட்டி. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் என்பதால், நிறைய இடவசதி.
1. சைடு மிரரில் பாருங்கள்... லேன் வாட்ச் கேமரா. டிராஃபிக்கில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2. ஜாலியாக மேனுவல் டிரைவில் ஓட்ட விரும்புபவர்களுக்கு பேடில் ஷிஃப்டர்கள் உண்டு. 3. ஆல் பிளாக் தீம் சிவிக்கின் இன்டீரியர், ஸ்போர்ட்டி. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் என்பதால், நிறைய இடவசதி.

சிவிக்: இதிலும் பவர்டு டிரைவர் சீட்தான். ஆனால், முதுகுக்கான சப்போர்ட் கொடுக்கவில்லை. ஆனால், கம்ஃபர்ட்டான டிரைவிங் கேரன்ட்டி. லெக்ரூமும் ஹெட்ரூமும் அருமை. இதன் பூட் ஸ்பேஸ், எலான்ட்ராவை விடக் குறைவு. 430 லிட்டர்தான்.

டிரைவிங்

எலான்ட்ரா: இதில் 152 bhp பவரும், 19.2kgm டார்க்கும் கொண்ட, 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்தபிறகும், உள்ளே அத்தனை அமைதி. அட, BS-6 இன்ஜின் ஆச்சே! ஹை ரெவ்களில் – அதாவது, 6,500 ரெட்லைன் rpm வரைகூட கேபினுக்குள் பெரிதாக எந்தச் சத்தமும் இல்லை.

அளப்பறை ஹோண்டா... அசால்ட் ஹூண்டாய்! - எந்த செடான் பெஸ்ட்?

டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், செம ஸ்மூத். மேனுவல் விரும்பிகள், டிப்ட்ரானிக் மோடைப் பயன்படுத்திக் கொள்ளலாம். BS-4ல் இருக்கும் அதே பவர்தான் என்றாலும், த்ராட்டில் ஃபீலில் வித்தியாசத்தை உணர முடிகிறது. குறைந்த கியரில் ஓவர்டேக்கிங் ஈஸியாக இருக்கிறது. டிரைவிங்குக்கு 4 மோடுகள் உண்டு. வழக்கம்போல், ஸ்போர்ட்ஸ் மோடில்தான் சீற்றம் அதிகம். இதன் 0–100 கி.மீ ரெஸ்பான்ஸ் – 10.94 விநாடிகள். சிவிக்கைவிட கன்னாபின்னா வேகம். அப்படியென்றால், பழைய BS-4 எலான்ட்ராவின் வேகம் இன்னும் அதிகம் (10.46 விநாடிகள்தான்).

சிவிக்: எலான்ட்ராவைவிட குறைவான பவரும் டார்க்கும் சிவிக்கில். 141 bhp, 17.4kgm. அதில் 2,0 லிட்டர் என்றால், இதில் 1.8 லிட்டர். அதில் டார்க் கன்வெர்ட்டர் என்றால், இதில் CVT - (Continiously Variable Transmission). அதில் டிப்ட்ரானிக் மேனுவல் என்றால், இதில் பேடில் ஷிஃப்டர்கள். அதில் BS-6 என்றால், இதில் BS-4. எலான்ட்ரா அளவுக்கு சிவிக்கை அத்தனை ஸ்மூத்னெஸ் என்று சொல்லி விட முடியாது. ஆனால் ஹோண்டாவுக்கே உரிய ஸ்மூத்னெஸ்க்கு கேரன்ட்டி.

அளப்பறை ஹோண்டா... அசால்ட் ஹூண்டாய்! - எந்த செடான் பெஸ்ட்?

பவர் வேண்டும் என்று சிவிக்கிடம் கேட்டால், வீல்களுக்கு பவர் போவேனா என்கிறது. இதன் 0–100 கி.மீ பர்ஃபாமன்ஸ், எலான்ட்ராவைவிட ரொம்பப் பின்னால் இருக்கிறது. (11.48 விநாடிகள்). CVT என்றால், ரப்பர் பேண்டு எஃபெக்ட் இருக்கத்தானே செய்யும்? அதுதான் காரணமாக இருக்கலாம். அதாவது அதிக ரெவ்களில், ஃப்ளோர்போர்டு வரை ஆக்ஸிலரேட்டரை மிதியுங்கள். ஆர்பிஎம் முள் எகிறும்; ஆனால் கார் சீறாது. சிட்டிக்குள் கம்ஃபர்ட்டாக இருப்பதால், பேடில் ஷிஃப்டர்கள் மூலம் மேனுவலாகவும் கியர்களை கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.

சாலையில் ஆளுமை..

எலான்ட்ரா: எலான்ட்ராவின் சஸ்பென்ஷனை சாஃப்ட் ஆக ட்யூன் செய்திருக்கிறார்கள். ஓட்டை ஒடிசலான சாலைகளை அசால்ட்டாக ஹேண்டில் செய்கிறது எலான்ட்ரா. சிவிக்கைவிட சின்ன டயர்கள்தான்; 16 இன்ச். சைடு வால் பெரிது என்பதால், பள்ளங்களை நன்றாக அப்ஸார்ப் செய்கிறது. ஷார்ப்பான பள்ளங்களின் போது கேபினுக்குள் ஒரு தடக்! நெடுஞ்சாலைகளில் லேசாகத் தூக்கி மட்டும் போட்டது. கார்னரிங்கில் பாடி ரோலும் இருந்தது. காரணம், ஸ்டீயரிங் கனெக்டட் ஆக இல்லை. ஹூண்டாய்க்கே உள்ள பிரச்னை இது. பிரேக்குகள் இன்னும் ஷார்ப்னெஸ் வேண்டும்.

அளப்பறை ஹோண்டா... அசால்ட் ஹூண்டாய்! - எந்த செடான் பெஸ்ட்?

சிவிக்: சரியான ஆளுமைத் தன்மையோடு இருக்கிறது சிவிக். மிகத் துல்லியமான ஸ்டீயரிங், ஹோண்டாவின் ப்ளஸ். இதில் சஸ்பென்ஷனைக் கொஞ்சம் ஸ்டிஃப் ஆகவே செட் செய்துள்ளார்கள். மேடு பள்ளங்களில் கொஞ்சம் கம்ஃபர்ட்டபிள் கிடைக்காது. இதுவே நெடுஞ்சாலை காலியாக இருந்தால், சிவிக் ஜாலியாகிறது. பறக்கவில்லை; மிதக்கிறது. கார்னரிங்கில் பாடி ரோலும் அவ்வளவாக இல்லை. பிரேக்கிங்கும் இன்னொரு இன்ஸ்பிரேஷன். டயர் சைஸும் அதிகம்; 17 இன்ச். கிரவுண்ட் கிளியரன்ஸ், இரண்டிலுமே இன்னும் வேண்டும். ஸ்பீடு பிரேக்கர்களில்... அவ்வ்!

வசதிகள்

எலான்ட்ரா: புது ஃபேஸ்லிஃப்ட்டில் ஹூண்டாயின் ஃபேவரைட்டான புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி உண்டு. ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், ஜியோஃபென்ஸிங் அலெர்ட், (கார் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அலெர்ட் செய்யும் சிஸ்டம்) வாய்ஸ் ரெகக்னைஸன் என்று அசத்தல் தொழில்நுட்பங்கள். மேலும் வயர்லெஸ் சார்ஜிங், டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு/ஆப்பிள் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம், 10–வே டிரைவர் மெமரி சீட், முன் பக்க வென்டிலேட்டட் சீட்கள், தானாகத் திறக்கும் பூட் வசதி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் என்று பிராக்கடிக்கலாகவும் கலக்குகிறது எலான்ட்ரா. 6 காற்றுப்பைகள், ABS உடன் EBD, டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல், முன்/பின் பார்க்கிங் சென்ஸார், ISOFIX குழந்தைகளுக்கான மவுன்டட் சீட்கள்... அடடா!

சிவிக்: எலான்ட்ரா அளவுக்கு சிவிக்கும் தர்மபிரபுதான். நிறைய வசதிகள் சிவிக்கில் மிஸ்ஸிங். கனெக்ட்டட் தொழில்நுட்பம், முன் பார்க்கிங் சென்ஸார், வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங் போன்றவை காணோம்.

அளப்பறை ஹோண்டா... அசால்ட் ஹூண்டாய்! - எந்த செடான் பெஸ்ட்?

டச் ஸ்க்ரீனும் 1 இன்ச் சிறுசு. பாதுகாப்பில் எலான்ட்ரா போல் எல்லா வசதிகளும் சிவிக்கில் உண்டு. லேன் வாட்ச் கேமரா, ரிவர்ஸ் கேமராவுக்கு பல வியூக்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர் இதெல்லாம் சிவிக்கில் தனித்துவமான வசதிகள்.

எது ஓகே?

BS-6 இன்ஜினுக்காகவே எலான்ட்ராவுக்கு லைக் போடலாம். ஸ்மூத்தான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், நல்ல பர்ஃபாமென்ஸ், தாராளமான கி.கிளியரன்ஸ் என்று ஹூண்டாய் கலக்குகிறது. அதிலும் வசதிகள்... அம்மாடியோவ்! ஆனால், டிரைவிங்கில் சிவிக் அளவுக்கு ஃபன் இல்லையே ஹூண்டாய்? நெடுஞ்சாலைகளிலும் பிரேக்கிங்கிலும் இன்னும் ஷார்ப்னெஸ் வேண்டும்.

ஹூண்டாய் அளவுக்கு ரிஃபைண்டு இல்லை; ஆனால் சொகுசான ரைடு, சூப்பரான ஹேண்ட்லிங், ஜாலியான டிரைவிங், துல்லியமான ஸ்டீயரிங் என்று சிவிக் முன்னேறிச் செல்கிறது. சீட் இடவசதியிலும், கட்டுமானத் தரத்திலும் சிவிக் அற்புதம் காட்டுகிறது. ஆனால், இதற்கெல்லாம் எலான்ட்ராவைவிட 2 லட்சம் அதிகமாகச் செலவழிக்க வேண்டும். ஓகேவா?