Published:Updated:

இங்கிலாந்தும் இந்தியாவும்! எது ஜெயிக்குது?

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

போட்டி எம்ஜி ஹெக்டர் vs டாடா ஹேரியர்

இங்கிலாந்தும் இந்தியாவும்! எது ஜெயிக்குது?

போட்டி எம்ஜி ஹெக்டர் vs டாடா ஹேரியர்

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

போன மாதம் ரிலீஸான எம்ஜி ஹெக்டரை ஊட்டி முழுதும் ஓட்டியபோது, எல்லோரும் கேட்ட முதல் கேள்வி: ‘‘இது 7 சீட்டர் கார் இல்லையா? இது எந்த காருக்குப் போட்டி?’’

இங்கிலாந்தும் இந்தியாவும்!  எது ஜெயிக்குது?

4 மீட்டருக்குள்ளே 7 சீட்டர் காரையும் வடிவமைக்கிறார்கள். 4 மீட்டருக்கும் பெரிதாக சொகுசான 5 சீட்டர் காரையும் உருவாக்குகிறார்கள். இதில் எம்ஜி ஹெக்டர், இரண்டாவது ரகம். இந்தியாவுக்குப் புத்தம் புதிதாக வந்திருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர், ஜீப்பின் காம்பஸுக்கும் - டாடாவின் ஹேரியருக்கும்தான் சரியான போட்டி. மூன்றிலும் இருப்பது ஒரே 2 லிட்டர் இன்ஜின்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காம்பஸின் எக்குத்தப்பான விலை, கட்டுப்படியாகாததால், கட்டுமஸ்தான லேண்ட்ரோவரின் சோர்ஸில் தயாராகும் ஹேரியர்தான் ஹெக்டருக்கு நேரெதிரே நிற்கிறது. இரண்டையும் சேர்த்து உறுமவிட்டால் எப்படி இருக்கும்?

இங்கிலாந்தும் இந்தியாவும்!  எது ஜெயிக்குது?

1. எம்ஜியின் டயல்கள் வெயிலில் படிக்க முடியவில்லை.

2. ஹெக்டரின் டச் ஸ்க்ரீனில் 360 டிகிரி கேமரா அருமை.

3. ஹேரியரின் டயல்களில் ஏகப்பட்ட தகவல்கள்

4. ஹேரியரில் சாஃப்ட்ரோடு/ஆஃப்ரோடுக்கான மோடுகள்...

எது ஸ்மார்ட்?

F-35 என்ற போர் விமானத்தின் இன்ஸ்பிரேஷன்தான் ஹெக்டரின் டிசைன். போல்டாகவும் ஷார்ப்பாகவும் அழகில் அசத்துகிறது எம்ஜி ஹெக்டர். 17 இன்ச் டயர்களும், மெஷின் கட் அலாய் வீல்களும் நல்ல ரோடு பிரசென்ஸைக் கொடுக்கின்றன. க்ரோம் வேலைப்பாடுகள் இன்னும் பளபளப்பு. ஹெக்டரின் டெயில் லைட் டிசைன், ஆடி Q5-யை நினைவுப்படுத்துகிறது. அதிலும் அந்த ஃப்ளோட்டிங் டைப் இண்டிகேட்டர் யாருக்குத்தான் பிடிக்காது?

‘டாடா காரா இது’ என்று வழக்கம்போல வியக்க வைக்கிறது ஹெக்டர். லேண்ட்ரோவரின் டச் தெரிகிறது. மெலிதான இண்டிகேட்டர், அதற்குக் கீழே ஹெட்லைட், அதற்குக் கீழே ஃபாக் லேம்ப்ஸ். இப்போதெல்லாம் இண்டிகேட்டருக்குக் கீழே ஹெட்லைட் இருப்பதுதான் ட்ரெண்ட். ஹெக்டர், ஹேரியர் இரண்டுமே அதே ட்ரெண்டில் கலக்குகின்றன. ஹேரியர், ஹெக்டரைவிட ஒரு படி மேலே போய் ஸெனான் லைட்களுடன் பளிச்சிடுகிறது. இரண்டையும் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தால் ஒரு விஷயம் கண்டுபிடிக்கலாம். ஹெக்டரைவிட ஹேரியர் 57 மிமீ நீளம் குறைவு. தூரமாகப் பார்த்தால் தெரியவில்லை. பின் பக்கமும் ஸ்போர்ட்டியாகக் கலக்குகிறது ஹேரியர். ஹெக்டர்போலவே 17 இன்ச் வீல்கள்தான். ஆனால் டயர் பெருசு. ஹேரியரில் நான் ரசிக்காத விஷயம் - இதன் சாதாரண அலாய் வீல்கள்தான்.

அகத்தின் வழியே எது அழகு?

உள்ளே - சாக்லேட் பிரவுன் நிற சீட்டுகள், ஹேரியரைச் சட்டெனக் கவனிக்க வைக்கின்றன. டேஷ்போர்டிலும் அதே நிறத்தில் மர வேலைப்பாடு. ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆங்காங்கே ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில் வைக்க இடம் என பிராக்கடிக்கலாகவும் இருக்கிறது ஹேரியரின் இன்டீரியர். செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலின் டிசைனும் ட்ரெண்டி; தகவல்களும் எக்கச்சக்கம். மாடர்னான கேபினில் ஸ்டீயரிங் வீல்தான் பழசாகத் தெரிகிறது. யூனிக்காக இருக்க வேண்டும் என்று ஹேண்ட் பிரேக்கை டிசைன் செய்திருக்கிறார்கள். தனித்துவமாய் இருக்கிறது; ஆனால் பயன்படுத்த கஷ்டமாய் இருக்கிறது. அந்த யுஎஸ்பி போர்ட்டை ஒளித்து வைத்ததுபோல் இருக்கிறது.

இங்கிலாந்தும் இந்தியாவும்!  எது ஜெயிக்குது?

ஹெக்டரின் விஷயமே வேறு. முழுக்க முழுக்க கறுப்பு நிற இன்டீரியரில் இதுவும் ஒரு வகையாக நம்மை இம்ப்ரஸ் செய்கிறது. அந்த 10.4 இன்ச் டச் ஸ்க்ரீன், அத்தனை பெருசு. ஏகப்பட்ட வசதிகள் வேறு. தடவித் தடவி விளையாடலாம். டச் ஸ்க்ரீனை ஒட்டியே ஏர் வென்ட்டுகள். சிங்கிள் ஸோன்தான். ஒட்டுமொத்தத் தரம் ஓகே. ஆனால் உற்றுப் பார்த்தால், ஹேரியர்போலவே சில இடங்களில் பேனல்களில் இடைவெளி தெரிந்தது.

இங்கிலாந்தும் இந்தியாவும்!  எது ஜெயிக்குது?

1. எம்ஜி ஹெக்டரின் கேபின் தரம் சூப்பர். ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இன்னும் கொஞ்சம் தேவை.

2. ஹெக்டரின் சின்ன வீல்கள், காரின் அழகுக்கு சுமார்தான். ஆனால் டைமண்ட் கட் அலாய் அருமை.

3. ஹெக்டரின் டிரைவர் சீட்டை 6 வழிகளில் மெமரி அட்ஜஸ்ட் செய்யலாம்.

தொழில்நுட்பப் புலி?

இங்கே, எம்ஜி-யை கனெக்ட்டட் கார் என்கிறார்கள். ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய சிம் கார்டு கொண்ட ஆன்-போர்டு இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது ஹெக்டரில். ஜியோ-ஃபென்ஸிங், ரிமோட் லாக்கிங், கதவை மூடுவது/திறப்பது என்று எல்லாமே நம் மொபைல் மூலமாகவே செய்து கொள்ளலாம். இது தவிர வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் வேறு. ‘‘ஹலோ எம்ஜி’’ என்று சொன்னால் போதும்; எல்லாம் தானாகவே நடக்கும்.

ஹேரியரில் இருப்பது சின்ன 8.8 டச் ஸ்க்ரீன்தான். இதில் அடிப்படைத் தேவையான ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளேதான் உச்சபட்ச வசதி. ஹேரியரிலும் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் உண்டு. இரண்டு கார்களிலுமே டச் ஸ்க்ரீனில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சொகுசு... எது ரவுசு?

இரண்டிலுமே பெரிய சொகுசான சீட்கள் உண்டு. ஹெக்டரில் டிரைவர் சீட்டை (6 வே மெமரி) பவர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். பெரிய விண்டோ, விண்ட்ஷீல்டு, உயரமான சீட்கள், தாழ்வான டேஷ்போர்டு, ஸ்லிம்மான ‘ஏ’ பில்லர்கள் என ஒரு பெரிய கார் ஓட்டும் பயமே ஹெக்டரில் ஏற்படாது. ஸ்டீயரிங்கிலும் ரீச் அண்ட் ரேக் ஆப்ஷன் இருப்பதால், ஓட்டுநர்களுக்கு வசதிதான்.

ஹேரியரிலும் சொகுசான முன் சீட்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால், பவர்டு ஆப்ஷன் கிடையாது. லம்பர் சப்போர்ட் ஹெக்டரைவிட பிரமாதம். நீண்ட தூரப் பயணங்களில் ஹெக்டர் ஒத்துவருமா என்று தெரியவில்லை. ஹேரியரில் லம்பர் சப்போர்ட்டைக்கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பது வரம். ஹேரியரில் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விஷயம் - சைடு விங் மிரர்கள். அத்தனை பெரிதாகவா இதை வடிவமைப்பார்கள்? டிரைவிங்கில் பெரிய பிளைண்ட் ஸ்பாட்டை இவை ஏற்படுத்துகின்றன. பின் பக்கத்தைப் பொறுத்தவரையும், இரண்டிலுமே நல்ல இடவசதி. ஹெக்டரில் ஃப்ளாட்டான தரை, ரெக்லைன் செய்துகொள்ளக் கூடிய பேக்ரெஸ்ட் - இவை டாடாவில் மிஸ்ஸிங். பெரிய விண்டோ, சன் ரூஃப் என்று ஒரு காருக்குள் அடைந்து கிடக்கும் உணர்வு இல்லாமல், வெளிஉலகத் தொடர்புடனேயே பயணிக்கலாம். ஹேரியரில் தொடைக்கான சப்போர்ட் அருமை. ஆனால், சன் ரூஃப் இல்லாதது மிகப் பெரிய மைனஸ்தான். மற்றபடி இரண்டிலுமே நல்ல பூட் ஸ்பேஸ்.

இங்கிலாந்தும் இந்தியாவும்!  எது ஜெயிக்குது?

1. ஹேரியரின் பெரிய சைடு மிரர்கள், பிளைண்ட் ஸ்பாட்டை ஏற்படுத்துகின்றன.

2. ஹேண்ட்பிரேக் அழகாய் இருக்கிறது. ஆனால் கஷ்டமாய் இருக்கிறது.

3. டாடாவின் இன்டீரியர் நைஸ். சில எர்கானமிக்ஸ் குறைகள் இருக்கின்றன.

பற பற.. பர்ஃபாமென்ஸ்...

இரண்டிலுமே 2 லிட்டர் ‘மல்ட்டி ஜெட்-II’ டீசல் இன்ஜின், ஃப்ரன்ட் வீல் டிரைவ். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டையும் ஓட்டும்போது ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது.

ஹெக்டரின் பவர் 170 bhp. பவர் டெலிவரி, சீராகக் கிடைக்கிறது. ஆனால், இரண்டிலுமே டார்க் ஒரே அளவுதான். 35kgm டார்க், 1,750-ல் இருந்து 2,500 rpm வரை கிடைக்கும் என்கிறது டெக்னிக்கல் விவரம். இந்த நம்பர்கள் சொல்வதுபோல், எம்ஜியில் பவர் அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், வேகங்களில் ‘பவரே வா’ என்று போராட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இரண்டிலுமே டர்போ லேக் தெரிந்தது. ஹெக்டரில் டாலர் கியர் ரேஷியோ செட் செய்திருந்தார்கள். அதனால், கியர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. நெடுஞ்சாலைக்கு நன்றாக இருக்கும். எம்ஜியின் இன்ஜின் நல்ல ஸ்மூத்.

ஹேரியரின் சத்தம்... டீசல் இன்ஜின் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஏதாவது காற்று அல்லது சாலைச் சத்தமா என்றால் இல்லை... நிச்சயம் இது இன்ஜின் சத்தம்தான். ஏனென்றால், எம்ஜியைவிட ஹேரியரில்தான் இன்சுலேஷன் சூப்பர். ஃபியட் இன்ஜின்தானே? டர்போ லேக் பற்றிச் சொல்லவே வேண்டாம்... 2,000 rpm-க்கு உள்ளே பவர் வருவேனா என்கிறது. ஆனால், மிட் ரேஞ்ச் பன்ச், ஃபியட் இன்ஜின்களைப் போல் வேறெதிலும் கிடைக்காது. கியர் ஷிஃப்ட்டிங்கில் வேலை வாங்குகிறது ஹேரியர். நமது பெர்ஃபாமென்ஸ் டெஸ்ட்டில் ஹேரியர்தான் வேகம் குறைவான காராக இருந்தது. 0-100 கி.மீ-க்கு 12.24 விநாடிகள் ஆனது. இதுவே ஹெக்டருக்கு 11.16 விநாடிகள்தான்.

ஓட்டுதல், கையாளுமை!

லேண்ட்ரோவரின் ப்ளாட்ஃபார்மில் தயாரான ஹேரியர், ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கில் அவுட்ஸ்டாண்டிங் மாணவனாகத் திகழ்கிறது. இத்தனைக்கும் பின் பக்க சஸ்பென்ஷன் டாடாவின் சொந்தச் சரக்கு. வேகங்களில் நல்ல நிலைத்தன்மை. கார்னரிங்கில் பாடி ரோல் அதிகம் இல்லை. இதன் லைட்டான ஸ்டீயரிங்கும் துல்லியமாகவும் வேகமாகவும் வேலை செய்கிறது. குறைந்த வேகங்களில் மட்டும் கொஞ்சம் இறுக்கமாகப் பயணிக்க வேண்டியிருக்கிறது. பின் பக்கம் டிஸ்க் இல்லை; டிரம்தான். மற்றபடி ஹேரியர் ஃபன் டு டிரைவில் பாஸ்மார்க் வாங்கிவிட்டது.

இங்கிலாந்தும் இந்தியாவும்!  எது ஜெயிக்குது?

ஹெக்டர், ஹேரியருக்கு நேரெதிர். சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப் என்பதால், குறைந்த வேகங்களில் உட்கார்ந்து வர ஜாலியாக இருக்கும். ஆனால், வேகமாகப் போகும்போது கார்னரிங்கில் பாடி ரோல் தெரிகிறதே... வேகத்தின்போது, லேன் மாறும்போது இன்னும் நம்பிக்கையை வரவழைக்க வேண்டும் எம்ஜி! மேடு பள்ளங்களில் ஸ்டீயரிங்கும் டிரைவருடன் இன்னும் கொஞ்சம் கனெக்ட் ஆக வேண்டும். சிட்டி டிராஃபிக்குக்கு மட்டும் என்றால், எம்ஜி-யை ஜாலியாக ஓட்டலாம்.

இங்கிலாந்தும் இந்தியாவும்!  எது ஜெயிக்குது?

ரடுமுரடான எஸ்யூவி ஃபீல், ஜாலியான டிரைவிங், குட்டி ஆஃப்ரோடிங், நெடுஞ்சாலையில் தன்னம்பிக்கையான ஓட்டுதல் என்று ஹேரியர் சூப்பர் சாய்ஸ். அதிலும் அந்த லேண்ட்ரோவர் ப்ளாட்ஃபார்முக்காக மட்டுமே ஹேரியருக்கு ‘பச்சக்’ என ஒரு லைக் பட்டன் குத்தலாம். ஆனால் இன்ஜின் ரிஃபைன்மென்ட், சிறப்பம்சங்கள், சில எர்கனாமிக்ஸ் குறைகள், அந்த பிளைண்ட் ஸ்பாட் ஏற்படுத்தும் மிரர்கள் என்று சில விஷயங்களில் ஹேரியர்... ப்ச்! அதற்காக ஹேரியர் வாங்குவது தவறான சாய்ஸ் என்று அர்த்தம் இல்லை.

ரோடு பிரசென்ஸில் ஆரம்பித்து தொழில்நுட்பம், இடவசதி, சொகுசு, இன்ஜின் ரிஃபைன்மென்ட் வரை எம்ஜி ஹெக்டர் வேற லெவல். முக்கியமாக அந்த சன் ரூஃப், சாய்த்துக் கொள்ளக்கூடிய பின் சீட்கள், 6 வே மெமரி அட்ஜஸ்ட், 10.4 இன்ச் டச் ஸ்க்ரீன், இன்டர்நெட் கனெக்டட் வசதி, ரியர் டிஸ்க் என்று ஹெக்டர் எல்லாவற்றிலும் அசத்தல். அதற்காக குறைகள் இல்லாமலும் இல்லை. ஹேரியர் போன்ற உறுதியான கட்டுமானம் ஹெக்டரில் மிஸ்ஸிங். இதுதான் அதிவேகங்களில் நம்பிக்கையை இழக்க வைக்கிறது. அங்கங்கே பேனல்களுக்கிடையே இடைவெளி, டைனமிக்ஸ் என்று சில இடங்களில் கொட்டு வாங்கினாலும், ஹேரியரைவிட ஒரு படி மேலே நிற்கிறது ஹெக்டர்.