Published:Updated:

சின்ன ஏரியாவில் யார் பெரிய கை?

S-Presso vs Kwid
பிரீமியம் ஸ்டோரி
S-Presso vs Kwid

போட்டி : எஸ்-ப்ரஸ்ஸோ vs க்விட்

சின்ன ஏரியாவில் யார் பெரிய கை?

போட்டி : எஸ்-ப்ரஸ்ஸோ vs க்விட்

Published:Updated:
S-Presso vs Kwid
பிரீமியம் ஸ்டோரி
S-Presso vs Kwid

ட்ஜெட் கார்கள் என்றால் அது ஹேட்ச்பேக் காராக மட்டும்தான் இருக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பிய முதல் கார் ரெனோ க்விட். டஸ்ட்டரின் இன்ஸ்பிரேஷனுடன் டச் ஸ்க்ரீன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் எனப் பல செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகளுடன் வந்த கார்.

சின்ன ஏரியாவில் யார் பெரிய கை?
சின்ன ஏரியாவில் யார் பெரிய கை?

இங்கே படத்தில் இருக்கும் க்விட், இந்த ஆண்டு விற்பனைக்கு வந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல். மாருதி சுஸூகி எஸ்-ப்ரஸ்ஸோவைக் களமிறக்கிய அடுத்த நாளே, ரெனோ இதை விற்பனைக்குக் கொண்டுவந்ததுவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எப்போது ஆல்ட்டோவின் மோகம் குறைய ஆரம்பித்ததோ, அப்போதே எஸ்-ப்ரெஸ்ஸோ ரூபத்தில் அடுத்த பட்ஜெட் காரைத் தயாரித்துவிட்டது மாருதி சுஸூகி. 2018-ல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் Future S என்ற கான்செப்ட் காராக வந்த எஸ்-ப்ரெஸ்ஸோ, இப்போது எல்லா ஷோரூம்களிலும் விற்பனையில் இருக்கிறது. இந்த இரண்டு சின்ன கார்களுக்கும் இடையே வித்தியாசம் பெருசா, சின்னதா? சிறந்த பட்ஜெட் கார் எது? போட்டி வைத்துப் பார்த்தோம்.

தோற்றம்

செங்குத்தான பில்லர்கள், ஃப்ளாட்டான பானெட், உயரமான ரூஃப் எனப் பார்த்தவுடனேயே எஸ்யூவி என்று நம்ப வைத்துவிடும் தோற்றம் எஸ்-ப்ரெஸ்ஸோவுக்கு உண்டு. ஆனால், டிசைன் பார்த்த உடனே ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

உயரத்துக்கு ஏற்ற அகலம் இல்லை, ஸ்டைலும் இன்னும் பேபி பூமர் காலம்போல அடிப்படையாகவே இருக்கிறது. கிரில்லைப் பார்த்தால், கீழே விழுந்து பல்லை உடைத்துக் கொண்ட சின்னப் பசங்க ஞாபகம் வருகிறது. முன் பக்க கிளாடிங் ஓகே! ஆனால், பக்கவாட்டிலும் பின்பக்கமும் கார் மொழு மொழு என இருப்பது நெருடல். சதுரமான வீல் ஆர்ச் கம்பீரமான லுக்கைக் கொடுத்தாலும், இது 14 இன்ச் வீல்களைச் சிறிதாகக் காட்டுகிறது. பாடி கிளாடிங், LED DRL, அலாய் வீல் எனச் சில விஷயங்களைச் சேர்த்திருக்கலாம். (இவையெல்லாமே ஆக்சஸரீஸாகக் கிடைக்கும்)

 1.இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் நடு ஏரியாவுக்கு வந்தது எவ்வளவு பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை.
2. எஸ்-ப்ரஸ்ஸோவின் ஓடோ மற்றும் ட்ரிப் மீட்டர், படிப்பதற்குக் கொஞ்சம் சிரமம்தான்.
3. அட, மாருதியில் பின் பக்கம்கூட பாட்டில் ஹோல்டர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
1.இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் நடு ஏரியாவுக்கு வந்தது எவ்வளவு பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. 2. எஸ்-ப்ரஸ்ஸோவின் ஓடோ மற்றும் ட்ரிப் மீட்டர், படிப்பதற்குக் கொஞ்சம் சிரமம்தான். 3. அட, மாருதியில் பின் பக்கம்கூட பாட்டில் ஹோல்டர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் கடந்தும் க்விட், இன்னும் தனித்துத் தெரியும் ஒரு காராகவே இருக்கிறது. ஹேட்ச்பேக் அளவு உயரம் இருந்தாலும், நீளம் மற்றும் அகல விகிதத்தில் எஸ்யூவியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. இதை இன்னும் வலுப்படுத்துகின்றன 14 இன்ச் வீல்கள். புது வீல்களால் லுக் மட்டுமில்லை, கிரவுண்ட் க்ளியரன்ஸும் 4 மிமீ கூடிவிட்டது. வீல் கிளாடிங், காரின் பக்கவாட்டில் வரும் அகலமான ரன்னர்ஸ், க்ளைம்பர் மாடலில் வரும் ரூஃப் ரெயில் போன்றவை க்விட்டுக்கு மேலும் எஸ்யூவி தோற்றத்தைத் தருகின்றன. இப்போதைய ஜென்-Z ட்ரெண்டுக்கு ஏற்ப ஹெட்லைட்டை கீழேயும், LED DRLஐ வழக்கமாக ஹெட்லைட் வரும் இடத்திலும் (ஸ்பிளிட் ஹெட்லைட்) கொடுத்திருப்பது காலத்துக்கேற்ற மாற்றம்.

ஹெட்லைட்டைச் சுற்றியிருக்கும் தடிமனான பிளாஸ்டிக் வேலைப்பாடுகளில் ஆரஞ்சு நிற டச் கொடுத்திருப்பது க்ளைம்பர் மாடல் எனக் காட்டிவிடுகிறது. எஸ்-ப்ரஸ்ஸோவில் இருக்கும் வீல்களைவிட க்விட்டில் வரும் ஸ்மோக்ட் கிரே வீல் கவர்கள் ஸ்டைலிங் டிப்பார்ட்மென்ட்டின் க்ரியேட்டிவ் டச். டெயில் பகுதியில் இருக்கும் LED லைட்ஸ் முன்பக்கத் தோற்றத்தோடு பொருந்துகிறது.

1.பார்த்தவுடனேயே அப்டேட்டட் மாடல் எனத் தெரிகிறது. க்விட்டின் MID ஸ்க்ரீன், செம ஸ்போர்ட்டி.  
2. பின் பக்கத்துக்கும் பவர் விண்டோஸ், க்விட்டில். இது ஆப்ஷன் வேரியன்ட்டில்தான்.
3. க்விட்டின் டேஷ்போர்டு, மொத்தமாக அப்டேட் ஆகியிருக்கிறது. அங்கங்கே ஆரஞ்சு நிற லைனிங், செம!
1.பார்த்தவுடனேயே அப்டேட்டட் மாடல் எனத் தெரிகிறது. க்விட்டின் MID ஸ்க்ரீன், செம ஸ்போர்ட்டி. 2. பின் பக்கத்துக்கும் பவர் விண்டோஸ், க்விட்டில். இது ஆப்ஷன் வேரியன்ட்டில்தான். 3. க்விட்டின் டேஷ்போர்டு, மொத்தமாக அப்டேட் ஆகியிருக்கிறது. அங்கங்கே ஆரஞ்சு நிற லைனிங், செம!

இடவசதி

இரண்டு கார்களிலுமே, வெளிப்பக்கம் இருக்கும் அம்சங்களுக்கு ஈடுகொடுக்கும் படியாக உள்ளேயும் சில புதுமைகள் உண்டு. எஸ்-ப்ரஸ்ஸோவில் டேஷ்போர்டின் நடுவில் வைக்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூ மென்ட் கன்ஸோல், மினி காரின் இன்ஸ்பிரேஷன். வட்டமான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கு காரின் நிறத்துக்கு ஏற்ப பார்டர் கொடுத்திருப்பதும், அருகில் இருக்கும் ஏர்வென்ட்டுக்கு இதே போல வண்ணம் பூசியிருப்பதும் உள்பக்கத்தைப் பளிச்செனக் காட்டுகிறது. சீட் உயரம் அதிகம்; பில்லர்களும் செங்குத்தாக இருப்பதால் டிரைவர் சீட்டில் உட்காரும்போது, அதிக இடம் இருப்பதுபோல் தெரிகிறது. க்விட்டின் உயரம் குறைவாக இருப்பது, சின்ன காரில் உட்காருவதுபோன்ற உணர்வைத் தருகிறது. டிரைவர் மற்றும் முன் சீட் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. ஹெட்ரூம் குறைவு. இதனால், எஸ்-ப்ரஸ்ஸோ அளவுக்கு க்விட்டின் கேபின் விசாலமாக இல்லை. ஆனால் க்விட்டின் கேபினில் இருக்கும் சில அம்சங்கள், நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. டேஷ்போர்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

க்ளோவ் பாக்ஸ் ஏரியாவில் இப்போது ஏர்பேக் கொடுத்துள்ளார்கள். டச் ஸ்கிரீன் முன்பை விடப் பெரிது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் டேக்கோமீட்டர் வந்துவிட்டது. சீட் டிசைனும், லெதர் வேலைப்பாடுகளோடு வரும் ஸ்டீயரிங்கும் செம ஸ்டைலிஷ்.

 எஸ்-ப்ரஸ்ஸோவில், மிரர்களை காருக்குள்ளிருந்தே இந்த லீவர் மூலம் அட்ஜஸ்ட் செய்யலாம்.
எஸ்-ப்ரஸ்ஸோவில், மிரர்களை காருக்குள்ளிருந்தே இந்த லீவர் மூலம் அட்ஜஸ்ட் செய்யலாம்.

டிசைன் மாறியிருந்தும், கேபின் தரம் அப்படியே இருப்பது பெரிய மைனஸ். க்விட்டின் பிளாஸ்டிக் தரமும், தொடு உணர்வும் எஸ்-ப்ரஸ்ஸோ அளவுக்குச் சிறப்பாக இல்லை.

பின்பக்க இடவசதி 2 நபர்களுக்குப் போதுமானதாக இருந்தாலும், ஹெட்ரூம் குறைபாடு அப்பட்டமாகத் தெரிகிறது. தாழ்வாக - கால்களை நெருக்கி வைத்து உட்காரும்படியாக இருக்கும் பின் பக்க சீட் பொசிஷன், நெடுந்தூரமான பயணங்களில் சோர்வை ஏற்படுத்தும். எஸ்-ப்ரஸ்ஸோ உயரமாக இருப்பதால், பின்பக்கம் 6 அடி உயரம் கொண்ட இரண்டு பேர் தாராளமாக கால்களை நீட்டி மடக்கி உட்கார முடிகிறது. ஷோல்டர் ரூம் ஓகே. லெக்ரூம் அருமை.

 க்விட்டில் 8 இன்ச் டச் ஸ்க்ரீனுக்கு அப்டேட் ஆகிவிட்டார்கள். எஸ்-ப்ரஸ்ஸோவில் 7 இன்ச்தான்!
க்விட்டில் 8 இன்ச் டச் ஸ்க்ரீனுக்கு அப்டேட் ஆகிவிட்டார்கள். எஸ்-ப்ரஸ்ஸோவில் 7 இன்ச்தான்!

க்ளைம்பர் மாடல் ரியர் சீட் ஆர்ம்ரெஸ்ட் உடன் வருவதால், கொஞ்சம் வசதியாக இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். இரண்டு கார்களிலும் ஹெட்ரெஸ்ட் சிறியதாக, `ஏதோ ஒன்ன சும்மா வச்சா போதும்’ என்ற மனநிலையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்களிலும் முன்பக்கக் கதவுகளில் பாட்டில் ஹோல்டர்கள் உண்டு. மொபைல் வைக்க டேஷ்போர்டில் சின்ன இடம் உண்டு. க்விட்டில் பெரிய க்ளோவ் பாக்ஸ் ஸ்பெஷல் என்றால், எஸ்-ப்ரஸ்ஸோவில் பின் சீட் பாட்டில் ஹோல்டர்கள் ஸ்பெஷல்.

எஸ்-ப்ரஸ்ஸோவின் 270 லிட்டர் பூட் ஸ்பேஸ், க்விட்டின் 279 லிட்டர் டிக்கியைவிட வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

இரண்டு கார்களின் டாப் வேரியன்ட்டிலும் பவர் ஸ்டீயரிங், ரிமோட் லாக் மற்றும் பவர் விண்டோஸ் ஆகிய வசதிகள் ஸ்டாண்டர்டாக வந்து விடுகின்றன. க்விட்டில் மட்டும்தான் ரியர் பவர் விண்டோஸ் மற்றும் பயணிகளுக்கான ஏர்பேக் ஆப்ஷன் உண்டு. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் இரண்டிலுமே இருந்தாலும், டேக்கோமீட்டர் க்விட்டில் மட்டும்தான்.

சின்ன ஏரியாவில் யார் பெரிய கை?

ரிவர்ஸ் கேமராவும்கூட. அதேபோல, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் மற்றும் இன்டர்னல் அட்ஜஸ்ட் மிரர்கள் எஸ்-ப்ரஸ்ஸோவில் மட்டும்தான். க்விட்டில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், எஸ்-ப்ரஸ்ஸோவில் 7 இன்ச் டச் ஸ்கிரீன். இரண்டிலும் ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ உண்டு. பயன்படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டு கார்களுமே இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்ட் எஸ்-ப்ரஸ்ஸோவில் இரண்டு காற்றுப்பை ஸ்டாண்டர்ட், க்விட்டில் 8,000 ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால் முன் பக்கப் பயணிக்கான ஏர்பேக் கிடைக்கும்.

பவர்

ரெனோ க்விட், 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் என இரண்டு இன்ஜின்களோடு வருகிறது. எஸ்-ப்ரஸ்ஸோவுக்கு நேரடிப் போட்டியாக இருக்கும் 1.0 லிட்டர் இன்ஜின் வேரியன்ட்டையே ஓட்டிப் பார்த்தேன். மாருதி சுஸூகி, ரெனோ இந்த இரண்டு கார்களிலுமே 68bhp பவர் தரும் 3 சிலிண்டர் இன்ஜினும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் உண்டு.

டார்க்கிலும் பெரிய வித்தியாசம் இல்லை (மாருதி சுஸூகி - 9kgm, ரெனோ - 9.1kgm). எடையை ஒப்பிட்டால், எஸ்-ப்ரஸ்ஸோ 763 கிலோ எடையிலும், க்விட் 8 கிலோ குறைவாக 755 கிலோ எடையோடும் இருக்கிறது.

சின்ன ஏரியாவில் யார் பெரிய கை?

எஸ்-ப்ரஸ்ஸோவின் BS-6 இன்ஜினில் நல்ல டிராக்‌ஷன் கிடைக்கிறது. ஆனால், குறைவான வேகங்களில் பவர் டெலிவரி ஸ்மூத்தாக இல்லை. இன்ஜின் ரிஃபைன்மென்ட், டிரைவிங்கைச் சிறப்பாக மாற்றுகிறது.

சத்தம் குறைவாக இருப்பது நல்ல விஷயம். வைப்ரேஷன் சுத்தமாகத் தெரியவில்லை. லைட்டான க்ளட்ச், ஸ்மூத்தான கியர்பாக்ஸ் இரண்டும் சிறப்பான சிட்டி டிரைவிங்கைக் கொடுக்கிறது. எஸ்-ப்ரஸ்ஸோவை டிரைவ் செய்துவிட்டு, க்விட்டை ஓட்டும்போது பெரிய வித்தியாசம் தெரிந்தது. க்விட்டின் இன்ஜின் சத்தமாகவும், குறைவான வேகங்களில் பவர் டெலிவரி கோளாறாகவும் இருக்கிறது. சிட்டியில் ஓட்டும்போது அடிக்கடி கியர்களை மாற்றவேண்டியுள்ளது. படிப்படியாக ரெவ்களை உயர்த்தினால், ரெனோவின் இன்ஜின் ரெஸ்பான்ஸ் அருமை.

ஆனால் சத்தமும் உயர்ந்துகொண்டே இருப்பது நெருடல். இதே இன்ஜின் BS-6 ஆக மாறும்போது, கொஞ்சம் ஸ்மூத்தாகும் என நம்பலாம். அராய் டெஸ்ட்டின் படி இரண்டு கார்களுமே, 21.7 கி.மீ மைலேஜ் கொடுக்கின்றன.

 1.ஷோல்டர் ரூம், லெக்ரூம் க்விட்டை விட வசதி., 2. ரியர் ஆர்ம் ரெஸ்ட் இருப்பது கொஞ்சம் சொகுசுதான்.
1.ஷோல்டர் ரூம், லெக்ரூம் க்விட்டை விட வசதி., 2. ரியர் ஆர்ம் ரெஸ்ட் இருப்பது கொஞ்சம் சொகுசுதான்.

தினசரிப் பயன்பாட்டுக்கு எப்படி?

அளவுகளில் சிறியதாக, லைட்டான ஸ்டீயரிங் மற்றும் க்ளட்ச் உடன் சிட்டியிலும், குறுகலான கிராமச் சாலைகளிலும் ஓட்டுவதற்கு இரண்டு கார்களுமே சுலபமாக இருக்கிறது. மாருதி சுஸூகியின் டர்னிங் ரேடியஸ் டைட்டாக இருப்பது, பார்க்கிங் செய்வதற்குச் சுலபமாக இருக்கிறது. குறைவான வேகங்களில் சஸ்பென்ஷன் சூப்பர்.

பெரிய வீல்களுக்கு மாறியிருப்பது க்விட்டின் சொகுசைக் கொஞ்சம் குறைத்திருக்கிறது. உயரம் குறைவாக இருக்கும் க்விட், நெடுஞ்சாலையில் தரமான டிரைவிங்கைத் தருகிறது. வேகமாகப் போகும்போது காரில் தேவையில்லாத அசைவுகள் தெரிவதில்லை. கார்னரிங் நம்பிக்கையைத் தருகிறது. எஸ்-ப்ரஸ்ஸோ நெடுஞ்சாலைகளில் கொஞ்சம் தேவையில்லாத அசைவுகளைக் கொடுத்தாலும், இதன் ஸ்டெபிலிட்டி ஒரு உயரமான காரைப் போல இல்லை. சிறிய காரைப்போலச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், உடனடித் திருப்பங்களின்போது கொஞ்சம் கஷ்டப்படுகிறது எஸ்-ப்ரஸ்ஸோ.

சின்ன ஏரியாவில் யார் பெரிய கை?

எதை வாங்கலாம்?

ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ரெனோ ஸ்டைலைத் தவிர்த்து, புதிதாக எதையும் மாற்றவில்லை. இன்னும் க்விட் அதன் பழைய பெருமையை மட்டுமே பேசி லயிக்கிறது. ஸ்டைல் மட்டும்தான் ஒரே போட்டி என்றால், இப்போதே வின்னர் க்விட் என அறிவித்துவிடலாம். ஆனால் இந்த இரண்டு கார்களை மொத்தமாக ஒப்பிடும்போது, எஸ்-ப்ரஸ்ஸோ ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறது. இடவசதி அதிகம், அருமையான இன்ட்டீரியர் ஃபினிஷ், சத்தமும் வைப்ரேஷனும் இல்லாத இன்ஜின் என டிரைவ் செய்ய சிறப்பான காராக இருக்கிறது எஸ்-ப்ரஸ்ஸோ. க்விட் அளவுக்கு ஸ்டைல் இல்லைதான். ஆனால் இரண்டில் ஒரு கார் தேர்வு செய்யவேண்டிய நிலை வந்தால் எஸ்-ப்ரஸ்ஸோ, எங்கள் சாய்ஸ்.