Published:Updated:

சின்ன டீசல்.... எது ஓகே?

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

போட்டி - வென்யூ VS XUV 3OO (டீசல்)

சின்ன டீசல்.... எது ஓகே?

போட்டி - வென்யூ VS XUV 3OO (டீசல்)

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

XUV 3OO.... பவர்ஃபுல் டீசல் காம்பேக்ட் எஸ்யூவி வேண்டும் என்பவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது, மஹிந்திராவின் இந்த கார்தான். விலை அதிகம்தான்... ஆனாலும், முக்கியமான ஏரியாக்களில் டிஸ்டிங்ஷன் வாங்கியதே இதற்கான காரணம். மேலும் மராத்ஸோவைத் தொடர்ந்து, கார் தயாரிப்பில் இந்த நிறுவனத்தின் மற்றுமொரு உச்சம்தான் XUV 3OO.

சின்ன டீசல்....
எது ஓகே?

1. டேஷ்போர்டு டிசைன் நீட் ரகம். மெட்டீரியல் தரமும் செம. 2. போன் மூலமாகவே இன்ஜினை ஸ்டார்ட் செய்யலாம்! 3. பின்பக்கத்தில் டிஸ்க் பிரேக் கிடையாது.

ஆனால் இது அடிப்படையில் ஸாங்யாங் டிவோலிதான் என்றாலும், நம் நாட்டுக்கு ஏற்றபடி காரை மாற்றியமைத்தத்தில் மஹிந்திராவின் பங்கு அதிகம். தென் கொரியாவில் விற்பனை செய்யப்படும் டிவோலிக்கு, அந்த ஊரில் பெரும் சவாலாக இருப்பது, மற்றுமொரு உள்நாட்டு நிறுவனமான ஹூண்டாயின் கார்களே! ஏறக்குறைய அதே சூழல், தற்போது இந்தியாவிலும் வந்துவிட்டது. ஆம், XUV 3OO--க்குப் போட்டியாக வென்யூ வந்துவிட்டது. இதன் டீசல் மாடல்களில் எது பெஸ்ட் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான நேரம் இது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிசைன்

4 மீட்டருக்குட்பட்ட காரை, கச்சிதமான அளவுகளில் வடிவமைப்பது பெரும் சவால்தான். அந்த ரீதியில் பார்த்தால், வென்யூ விஷயத்தில் ஹூண்டாயின் டிசைனர்கள் குழு நன்கு வேலை பார்த்திருக்கிறது. தேவையான உயரம் - கரெக்ட்டான பின்பக்கம் என இருப்பதால், அசப்பில் பார்ப்பதற்கு மினி க்ரெட்டா போலவே இது இருக்கிறது. ஆனால் காரும் மினி சைஸில்தான் உள்ளது.

சின்ன டீசல்....
எது ஓகே?

பெரிய க்ரோம் கிரில் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ் செம ஸ்டைல். இவையெல்லாம் ஒன்றுசேரும்போது, சாலையில் பலரது கவனத்தை எளிதாகக் கவர்கிறது வென்யூ.

XUV 3OO, வென்யூவுக்குச் சமமான நீளத்தில் இருந்தாலும், அகலம் மற்றும் வீல்பேஸில் அதிரடித்துவிடுகிறது! அளவில் பெரிய காரை (ஸாங்யாங் டிவோலியின் நீளம்: 4.2 மீட்டர்) சிறிதாக்கியதே இதற்கான காரணம். இதனால் காரில் அழகான LED டெயில் லைட் இருப்பினும், பின்பக்கம் சட்டென முடிந்துவிடுவது போல இருக்கிறது. ஆனால் முன்பக்கத்தில் நீட்டான கிரில், ஹெட்லைட் மற்றும் பனி விளக்குகளை இணைக்கும் LED DRL என வித்தியாசமான டிசைன் அம்சங்கள், அந்தக் குறையை தெரியாமல் செய்கின்றன.

கேபின்

வென்யூவின் முழு கறுப்பு வண்ண இன்டீரியர் ஆரம்பத்தில் டல்லாகத் தெரிந்தாலும், டேஷ்போர்ட்டின் டிசைன் அதைச் சரிக்கட்டிவிடுகிறது. தரமான பிளாஸ்டிக்ஸ் மற்றும் பட்டன்கள் இருப்பதுடன், எர்கனாமிக்ஸும் பக்கா. அதுவும் அந்த ஸ்டீயரிங் வீல்... விலை அதிகமான காரில் இருப்பதுபோல உள்ளது! 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டேஷ்போர்டுடன் இணைந்திருக்கும் விதம் அழகு.

சின்ன டீசல்....
எது ஓகே?

ஹூண்டாய்க்குச் சமமான தரத்தில் ஈர்க்கிறது XUV 3OO-ன் இன்டீரியர். பட்டன்கள் மற்றும் பிளாஸ்டிக்ஸ் அதற்கான உதாரணம். அகலமான கேபினுடன் லைட்டான பீஜ் நீறம் சேரும்போது, இன்னும் அதிக இடவசதி இருப்பதுபோலத் தோன்ற வைக்கிறது. ஆனால் ஏசி கன்ட்ரோல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டன்கள், டேஷ்போர்டின் மாடர்ன் டிசைனுடன் சுத்தமாகப் பொருந்தவில்லை.

சிறப்பம்சங்கள்

இரு காம்பேக்ட் எஸ்யூவிகளிலும் அதிக பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. ESP, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ABS, EBD, ISOFIX, 6 காற்றுப்பைகள், பின்பக்க பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா ஆகியவை இரண்டுக்கும் பொதுவானவை. XUV 3OO-ன் W8 (O) வேரியன்ட் இன்னும் ஒரு படி மேலே போய், முன்பக்க பார்க்கிங் சென்சார் - 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ் - ஓட்டுனரின் முழங்காலுக்குக் காற்றுப்பை என அசத்துகிறது. சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை ஆட்டோ ஹெட்லைட்ஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம், வென்யூ மற்றும் XUV 3OO ஆகியவற்றில் இருக்கின்றன.

சின்ன டீசல்....
எது ஓகே?

ஹூண்டாயில் சிம் கார்டு உதவியுடன் இயங்கும் ப்ளூலிங்க் கனெக்ட்டட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவைதான் துருப்புச்சீட்டு. இங்கேயும் ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ், ஆட்டோ Dimming Inside மிரர், Heated ரியர் வியூ மிரர்கள், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் என மஹிந்திரா வேற லெவலில் போய்விட்டது!

இடவசதி

Part Leatherette சீட்களைக் கொண்டிருக்கும் வென்யூவின் இருக்கைகள் மென்மையாக உள்ளன. முன்பக்க இருக்கைகள் முதுகுக்குத் தேவையான சப்போர்ட்டைத் தருவதுடன், அங்கிருந்து வெளிச்சாலை தெளிவாகவும் தெரிகிறது. பின்பக்க இருக்கை வழங்கும் சப்போர்ட் ஓகே ரகம்தான் என்றாலும், ரியர் ஏசி வென்ட் இருப்பது பெரிய ப்ளஸ். ஆனால் சீட்டின் பேக்ரெஸ்ட் கொஞ்சம் மேல்நோக்கி இருப்பதுபோலத் தோன்றுகிறது. போதுமான ஹெட்ரூம் இருந்தாலும், XUV 300 உடன் ஒப்பிடும்போது அகலம் மற்றும் வீல்பேஸ் குறைவு என்பதால், உயரமான நபர்கள் பின்னால் கொஞ்சம் முடங்கித்தான் உட்கார நேரிடும். ஆனால் லெக்ரூமில் விட்டதை, பூட் ஸ்பேஸில் பிடித்துவிட்டது வென்யூ. இதன் 350 லிட்டர் பூட் ஸ்பேஸ், மஹிந்திராவைவிட 93 லிட்டர்கள் அதிகம்.

தனது வகையிலே அதிக இடவசதி கொண்ட பின்பக்க இருக்கை என XUV 3OO காரை நிச்சயமாகச் சொல்லலாம். வென்யூவைவிட இதன் வீல்பேஸ் 100மிமீ அதிகம் என்பதே பிரதான காரணி! ஆனால் தொடைகளுக்கான சப்போர்ட் கொஞ்சம் குறைவுதான். ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யமுடியும் என்பதுடன், நடுப்புறத்தில் 3 பாயின்ட் சீட் பெல்ட் இருப்பது வரவேற்கத்தக்கது. முன்பக்க இருக்கைகள் அகலமாக இருப்பதுடன், அதை வேண்டுமளவுக்கு அட்ஜஸ்ட் செய்யவும் முடிகிறது. Full Leatherette அப்ஹோல்சரி இருப்பது ப்ரீமியம் டச். ஆனால் பூட் ஸ்பேஸில் கோட்டை விட்டுவிட்டது XUV 3OO (257 லிட்டர்). இன்னும் சொல்லப்போனால், சில ஹேட்ச்பேக்குகளே இதைவிட அதிக பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கின்றன.

சின்ன டீசல்....
எது ஓகே?

1. ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், மைலேஜுக்காக. 2. குறைவான பூட் ஸ்பேஸ்தான் (257லி) XUV-க்கு திருஷ்டி. 3. மஹிந்திராவின் கேபின் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

வென்யூவின் டீசல் இன்ஜினை ஸ்டார்ட் செய்த மாத்திரத்திலேயே, அதன் ஸ்மூத்னெஸ் தெரிந்துவிடுகிறது. ஆனால் அதிக ஆர்பிஎம்மை நோக்கிச் செல்லும்போது, அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பொய்த்துவிடுகிறது. XUV 3OO தவிர்த்து மற்ற கார்களுடன் ஒப்பிட்டால், இது ரிஃபைண்டான டீசல் இன்ஜின்தான். மஹிந்திராவின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆரம்பத்தில் கொஞ்சம் கடுமையாக இருந்தாலும், வேகம் செல்லச் செல்ல சைலன்ட்டாகி விடுகிறது. க்ரெட்டாவில் உள்ள் அதே 1.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் என்றாலும், இந்த 90bhp இன்ஜின் அந்த காரைவிட வென்யூவுக்குப் பக்காவாக செட் ஆகியிருக்கிறது. பெரிதாக டர்போ லேக் தெரியாவிட்டாலும், 2,000 ஆர்பிஎம்மைத் தாண்டிய பிறகுதான் பவர் வருகிறது. 5,000 ஆர்பிஎம் வரை ரெவ் ஆனாலும், மற்ற சிறிய டீசல் இன்ஜின்களைப் போலவே 3,500 ஆர்பிஎம்முக்குப் பிறகு சுணங்கிவிடுகிறது. எனவே அடிக்கடி கியர்களை மாற்றிக்கொண்டே இருப்பதும் நடக்கலாம். க்ளட்ச்சின் எடை குறைவு என்பதுடன், கியர்பாக்ஸும் துல்லியமாக இருப்பதும் ஆறுதல்.

XUV 3OO-ன் க்ளட்ச்சும் குறைவான எடையில் இருந்தாலும், க்ளட்ச் பெடல் அதிக டிராவலைக் கொண்டுள்ளது. எனவே இது சிலருக்கு அசெளகரியத்தைத் தரலாம். அதேபோலவே கியர்பாக்ஸில் கியர்களை மாற்றுவது சுலபமாக இருந்தாலும், கியர் லீவர் Long Throw பாணியில் இருப்பது மைனஸ். காம்பேக்ட் எஸ்யூவிகளிலே பவர்ஃபுல் டீசல் இன்ஜின் இருப்பதால் (117bhp பவர் மற்றும் 30kgm டார்க்), எதிர்பார்த்தபடியே XUV 3OO-ன் பர்ஃபாமன்ஸ் அதிரடியாக இருக்கிறது. கிட்டத்தட்ட டர்போ லேக்கே தெரியவில்லை என்பதுடன், 1,500 ஆர்பிஎம் முதலே பவர் கிடைக்கத் தொடங்கிவிடுகிறது. ஆனால் இதுவும் வென்யூ போலவே குறைவான Powerband-ல் இயங்குவதுடன், அடிக்கடி கியர்களை மாற்ற வேண்டிய சூழலும் நிலவுகிறது. 0 - 100 கிமீ வேகத்தை 11.85 விநாடிகளில் கடக்கிறது மஹிந்திரா. இது ஹூண்டாயைவிட 1 விநாடி குறைவு!

ஓட்டுதல் அனுபவம்

காரை ஓட்டும்போதே, வென்யூவின் சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக இருப்பது தெரிகிறது. குறைவான வேகத்தில் செல்லும்போது, சாலை இடர்பாடுகளை இது அமைதியாகச் சமாளித்துவிடுகிறது. 16 இன்ச் அலாய் வீல்கள் அதற்குத் துணைநிற்கின்றன. மேலும் மிதமான வேகத்தில் செல்லும்போதும், கார் நிலையாகவே செல்கிறது. ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது, காரின் பின்பக்கம் கொஞ்சம் தூக்கிப் போடுகிறது. ஸ்டீயரிங் எடை குறைவாக இருப்பது, குறைவான வேகத்தில் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது, இது டிரைவருக்குத் தேவையான நம்பிக்கையைத் தரவில்லை. தவிர காரின் சிறிய சைஸும், நெடுஞ்சாலையில் ஒரு பிரச்னையாக அமையலாம்.

XUV 3OO-ன் ஸ்டீயரிங்குக்கு மோடுகள் வழங்கியிருக்கிறது மஹிந்திரா. இதனால் இது வென்யூவைவிடக் கொஞ்சம் பெட்டராக இருக்கிறது என வேண்டுமானால் சொல்லலாம். மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் இருப்பதால், பெரிய 17 இன்ச் அலாய் வீல்கள் இருந்தாலுமே ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கிறது. குறைவான வேகத்தில் மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையில் செல்லும்போது, கார் கொஞ்சம் அலைபாய்கிறது. மற்றபடி கரடுமுரடான சாலைகளில் கூட XUV 3OO-ன் நிலைத்தன்மை அருமை. எனவே தேவைபட்டால், கொஞ்சம் அதிக வேகத்திலும் கூட செல்லமுடிகிறது. அதிக Track காரணமாக, நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்திலும் கார் எந்தவிதமான ஆட்டமும் இல்லாமல் பயணிக்கிறது.

சின்ன டீசல்....
எது ஓகே?

ற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே, வென்யூவும் ஒரு ஆல் ரவுண்டர்தான்; கச்சிதமான பர்ஃபாமன்ஸ், எளிதான ஓட்டுதல், அதிகப்படியான சிறப்பம்சங்கள், சிறப்பான டிசைன், தரமான கேபின் எனச் சொல்லியடிக்கிறது. பின்பக்க இடவசதி மற்றும் ஓட்டுதல் அனுபவம் ஆகியவை இதன் மைனஸ்கள். இதனுடன் ஒப்பிடும்போது, XUV 3OO அனைத்து ஏரியாக்களிலும் முன்னேற்றம் காட்டுகிறது. அட்டகாசமான பர்ஃபாமன்ஸ், நீளும் சிறப்பம்சங்களின் பட்டியல், அதிக இடவசதியைக் கொண்ட பின்பக்கம் என அசத்துகிறது. ஆனால் இதன் சிறிய பூட்தான் திருஷ்டி.

மேலும் XUV 3OO-ன் டாப் வேரியன்ட்டான W8 (O), வென்யூவின் டாப் வேரியன்ட்டான SX (O) விடச் சுமார் 1.5 லட்ச ரூபாய் அதிக விலையைக் கொண்டிருக்கிறது. ஒருவேளை மஹிந்திராவின் W8 வேரியன்ட்டைக் கருத்தில் கொண்டாலும், அதுவும் ஹூண்டாயின் SX (O) வேரியன்ட்டைவிடத் தோராயமாக 15 ஆயிரம் ரூபாய் அதிகம் என்பதுடன், சிறப்பம்சங்களிலும் பின்தங்கிவிடுகிறது. எனவே XUV 3OO பல விஷயங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும், வென்யூதான் ஒரு பக்காவான காம்பேக்ட் எஸ்யூவியாகத் தெரிகிறது. கொடுக்கும் காசுக்கு மதிப்பு என்ற ரீதியில் பார்த்தால், ஹூண்டாய்தான் இந்த ஒப்பீட்டின் வெற்றியாளர்.