கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

இந்த புகாட்டி காரின் விலை 75 கோடி!

ரொனால்டோவால்
பிரீமியம் ஸ்டோரி
News
ரொனால்டோவால்

ஆகஸ்ட் மாதம் வாங்கினதுக்கு இப்போ என்ன என்கிறீர்களா? ரொனால்டோவால் இதை 2021 வரை சாலையில் ஓட்ட முடியாதாம்.

போர்ச்சுகல் கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோவுக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு. ஒன்று கால்பந்து – மற்றொன்று – கார் வாங்குவது. அதுவும் கார்கள் என்றால், சூப்பர் கார்கள்கூட இல்லை; எல்லாமே ஹைப்பர் கார்கள். கால்பந்துப் போட்டியில் தனது Juventus டீம், கோப்பையை ஜெயிக்க ஜெயிக்க - ஃபெராரியோ, லம்போகினியோ, ரோல்ஸ்ராய்ஸோ, மெக்லாரனோ - ரொனால்டோவின் கராஜில் வந்து நின்று கொண்டே இருக்கும்.

அப்படித்தான் லேட்டஸ்ட்டாக நடந்த கால்பந்துப் போட்டியில் வெற்றியைக் கொண்டாடும்விதமாக, உலகின் விலை உயர்ந்த புகாட்டி கார் ஒன்று ரொனால்டோவின் கராஜில் வந்திறங்கியிருக்கிறது.

இந்த புகாட்டி காரின் விலை 75 கோடி!

தனது லேட்டஸ்ட் புகாட்டி காரின் பக்கவாட்டில் அமர்ந்தபடி ரொனால்டோ ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாவில் பதிவு செய்த, தனது சிக்ஸ்பேக் போட்டோதான் இப்போது உலகளவில் ட்ரெண்ட்.

இந்த புகாட்டி காரின் விலை 75 கோடி!

`கோடி கோடியா சம்பாதிக்கிறார்; புகாட்டி வாங்குறது பெருசு இல்லையே’ என்றாலும், இந்த புகாட்டி ட்ரெண்ட் ஆனதற்குக் காரணம் உண்டு. இந்த காரின் விலை, இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாய் என்பதுதான் ஸ்பெஷல். மேலும், ஃப்ரெஞ்ச் நிறுவனமான புகாட்டி, தனது La Voiture Noire எனும் இந்த மாடலை வெறும் 10 கார்கள்தான் தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது. தனது 110-வது அனிவெர்ஸரியைக் கொண்டாடும்விதமாக, இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணைத் தயாரித்திருக்கிறது புகாட்டி. அந்தப் பத்தில் ஒருவர்– ரொனால்டோ என்பதுதான் இங்கே ஸ்பெஷல். ஆனால், இந்த La Voiture Noire மாடலை முதலில் வாங்கியவர் – ஃபோக்ஸ்வாகன் குரூப்பின் முன்னாள் சேர்மன் Ferdinand Piech என்பவர்தான் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் ஸ்பானிஷ் மீடியாக்கள், ரொனால்டோதான் இந்த La Voiture Noire காரின் முதல் கஸ்டமர் என்று லேட்டஸ்ட்டாக லைம்லைட் செய்கின்றன. `CR7’ எனும் லோகோவுடன் ரொனால்டோவே இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் இதைப் பதிவு செய்திருப்பது வைரலாகி இருக்கிறது. ஆனால், புகாட்டி இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் நெருடல் வைரல்தான்.

இந்த புகாட்டி காரின் விலை 75 கோடி!

புகாட்டிக்கு ரொனால்டோ ஒன்றும் புது கஸ்டமர் அல்ல. ஏற்கெனவே சிரான், வெரான் என்று சில புகாட்டிகள் ரொனால்டோவிடம் உண்டு என்றாலும், இந்த புகாட்டி La Voiture Noire காரில் ஏகப்பட்ட ஸ்பெஷல் அம்சங்கள் உண்டு.

இந்த புகாட்டி காரின் விலை 75 கோடி!

இந்த புகாட்டி La Voiture Noire காருக்கு Centodieci என்றொரு பெயரும் உண்டு. 1936-1938 காலகட்டங்களில் தயாரான `புகாட்டி டைப் 57 SC’ காரின் மாடர்ன் வெர்ஷன்தான் இது. அதேபோல், 1991-களில் உலகின் வேகமான கார் என்று புகாட்டிக்குப் பெயர் வாங்கித் தந்த EB110 காருக்கு மரியாதை செய்யும் விதமாக இதைத் தயாரித்திருக்கிறதாம் புகாட்டி. சிரானில் இருக்கும் அதே 8.0 லிட்டர் குவாட் டர்போ W16 இன்ஜின்தான் இந்த La Voiture Noire காரிலும். ஆனால், பவர் மட்டும் 100bhp எக்ஸ்ட்ராவாக ட்யூன் செய்திருக்கிறார்கள். ரொம்ப இல்லை; சும்மா 1,577 bhpதான்.(!) இதன் டாப் ஸ்பீடு – 260mph. அதாவது, சுமார் 418 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த புகாட்டி. ஃபார்முலா-1 கார்களின் டாப் ஸ்பீடே 380 கி.மீதான் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 2.4 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டுமாம். 200 கி.மீ-க்கு 6 விநாடிகள்தானாம். 13.1 விநாடிகளில் 300 கி.மீ. மற்ற புகாட்டிகளைவிட எடை குறைவான, ஆனால் பாதுகாப்பான மெட்டீரியலால் தயார் செய்யப்பட்டிருக்கிறது La Voiture Noire.

இந்த புகாட்டி காரின் விலை 75 கோடி!

ஆகஸ்ட் மாதம் வாங்கினதுக்கு இப்போ என்ன என்கிறீர்களா? ரொனால்டோவால் இதை 2021 வரை சாலையில் ஓட்ட முடியாதாம். காரணம், ப்ரோட்டோ டைப் என்பதால், புகாட்டிக்கு இன்னும் இதில் டெக்னிக்கல் அம்சங்களில் வேலை இருக்கிறதாம். இதையெல்லாம் ஓகே செய்து அப்ரூவ் செய்த பிறகுதான், ரொனால்டோவால் இதன் ஸ்டீயரிங்கைப் பிடிக்க முடியும்.

அவ்வ்வ்வ்!